-
30th April 2014, 10:15 PM
#2541
Junior Member
Seasoned Hubber
கல்நாயக் சார் ,
சிவாஜி செந்தில் , யாரையும் புண் படுத்தவேண்டும் என்று பதிவை போடவில்லை - it was unintentional . என்னுடைய பதில் பதிவிலேயும் நான் திரிக்கு கடுமையாக உழைக்கும் மற்றும் பல பெயர்களை விட்டிருக்கலாம் - பாருங்கள் , சிவாவையும் , goldstar சதீஸ் யையும் குறுப்பிட மறந்துவிட்டேன் - அவர்கள் உழைப்பும் எந்த வகைகளிலும் குறைந்தது அல்ல - சதீஸ் NT யின் தெலுங்கு பட விளம்பரங்கள் 150க்கும் மேலாக ஒரே மூச்சில் பதிவு செய்தார் - சிவா சார் இல்லையென்றால் , ஸ்ரீலங்காவில் புதைக்க பட்ட பல உண்மைகள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை .... இந்த திரியில் எல்லோரும் வர வேண்டும் , பதிவுகளை போட வேண்டும் - திரியின் வேகம் intellectual ஆக இருக்கவேண்டும் , வெறும் videos மூலமோ , பொய் , பித்தலாட்டங்கள் மூலமோ திரியை ரொப்ப கூடாது என்பதுதான் இங்கு இருக்கும் பலருக்கும் ஒருமித்த கருத்தாக இருக்கமுடியும்
பதிவு போடுபவர்கள் மட்டுமே இந்த திரியில் இருந்தால் , அவைகளை படிப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் - படிப்பவர்கள் வேண்டும் , பதிவுகளை போடுபவர்களும் வேண்டும் - திரி அப்பொழுதுதான் balance ஆக முன்னேறும் . எல்லோருக்கும் எல்லோருடைய பதிவுகளும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது - சிவாஜி செந்தில் போன்ற சிலருக்கு என் பதிவுகள் பிடிக்காமல் இருக்கலாம் - அந்த குறைகளை நிவர்த்தி செய்யத்தான் நான் இன்னும் பாடு படனுமே தவிர அவர் பதிவை தவறாக எடுத்துகொள்வது எந்த விதத்தில் நியாயம் ??
அவர் சில சிறந்த பெயர்களை மட்டும் குறுப்பிட்டு சொல்லிவிட்டு , நிறுத்தி விட்டதால் , கடுமையாக உழைத்து இந்த திரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் மற்றும் சிலரின் பெயர்களை அவருக்கு நினைவு படுத்தினேன் - அவ்வளவே - இதை வளர்க்க எனக்கு சற்றும் விருப்பம் இல்லை
-
30th April 2014 10:15 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2014, 10:58 PM
#2542
Junior Member
Veteran Hubber
Ravi g.I enjoy every one's contribution in this thread.As an ardent NT fan all NT fans are equal for me. Please do not mistake. I have not made much contributions but I admire all of you for your writings in this thread. I am awaiting to see all the stalwarts of this thread in a common forum as an ordinary hubber with NT in heart and mind.
-
30th April 2014, 11:21 PM
#2543
Junior Member
Veteran Hubber
Dear Ravi/ Kalnayak sir. I really felt sorry. I didnot omit anyone but I just indicated ...... as an endless list of contributors. At times I went emotional when derogatory remarks or criticisms are made on our NT, not with an intention to hurt but to retaliate and to show our strength against them. But, I always enjoyed the writings of everyone in this thread. Kindly bear with me if I have hurt your feelings.
-
1st May 2014, 12:49 AM
#2544
பாகப் பிரிவினை பாடல் பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
திரியின் அனைத்து பங்களிப்பாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
ராஜபார்ட் ரங்கதுரை என்ற காவியத்தின் டிஜிட்டல் பதிப்பு வரப் போகும் தேனினும் இனிய செய்தியை பகிர்ந்துக் கொண்ட திருச்சி ராமச்சந்திரன் சாருக்கு நன்றிகள் பல.
ராமச்சந்திரன் சர் சொன்னது போல மலைக்கோட்டை மாநகரில் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய மவுசு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் திருச்சி மாநகரில் வலம் வரப் போகின்றன.
மே 2 முதல் திருச்சி முருகன் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கராஜா அரங்குகளில் பாசமலர். மே 9 முதல் திருச்சி கெயிட்டியில் உயர்ந்த மனிதன். If all goes well, மே 16 முதல் திருச்சி அருணாவில் எங்கள் தங்க ராஜா வெளியாக இருக்கிறது.
திருச்சி நண்பர்களே enjoy!
அன்புடன்
-
1st May 2014, 12:51 AM
#2545
ஒரு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நமது திரியைப் பற்றி பேச்சு வந்தது. அவர்கள் நமது திரியின் silent readers. அவர்களில் சிலர் நமது மெயின் திரியை மட்டும் படிப்பவர்களாகவே இருப்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. Book Mark போல ஒன்றை வைத்துக் கொண்டு மெயின் திரிக்கு மட்டுமே வந்து செல்கிறார்கள். அவர்களிடம் ஏனைய திரிகளைப் பற்றி சொல்லும்போது அதைப் பற்றிய awareness இல்லை என்பது புரிந்தது. அவர்களிடம் மற்ற திரிகளைப் பற்றி சொல்லி விட்டு எப்படி அதை பார்ப்பது என்பது பற்றியும் விளக்கினேன். இனி அதன்படி செய்கிறேன் என்று சொன்னவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக தொடராக வந்துக் கொண்டிருக்கும் அந்த நாள் ஞாபகம் [பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற தலைப்பிலுள்ள திரியில் பதிவு செய்யப்படுவது] தொடரில் இதுவரை பதிவு செய்தவற்றையும் இனி மேல் செய்யப் போவதையும் மெயின் திரியிலும் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டனர். சிறிது காலத்திற்கு மட்டும் இப்படி செய்யும்படியும் பிறகு தனி தனி திரிகளில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். ஒரே பதிவை பல திரிகளில் பதிவிடுவதை நான் விரும்பவில்லை எனும் போதிலும் நண்பர்களின் அன்புக் கட்டளைக்கேற்ப அங்கே எழுதியவற்றை மீள் பதிவு செய்திருக்கிறேன். அதே தலைப்பில் நடிகர் திலகத்தின் படங்களின் முதல் வெளியீட்டு அனுபவ தொடரில் இன்று புதிதாக எழுதிய ஒரு பதிவும் இங்கே பதிவு செய்திருக்கிறேன். ஒரே பதிவு இரண்டு திரிகளில் இடம் பெற்றதற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.
அன்புடன்
-
1st May 2014, 12:52 AM
#2546
2009-ல் எழுதியது.
அந்த நாள் ஞாபகம்
இன்றைக்கு சரியாக 37 வருடங்களுக்கு முன் [1972] இதே நாளில் ராஜா திரைப்படம் வெளியானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த நாளில் ஜனவரி 26 அன்று [26.01.1972] நான் இந்த படம் மதுரை சென்ட்ரலில் ஓபனிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதை பற்றி சிந்திக்கும் போது நண்பர் tacinema அவர்கள் நினைவு வந்தது
நண்பர் tacinema என்னிடம் பல முறை அந்த நாட்களில் நான் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களின் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளை எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது எழுதலாம் என்று ஒரு எண்ணம். எந்தளவுக்கு நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை. அந்த ஞாபக நதிக் கரையோரமாக நடந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது.
அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை". அவர்கள் கேட்ட கேள்வியின் பின்னணியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதாவது சிறு வயதில் அனேகமாக எல்லா பாய்ஸும் சண்டை, காமெடி என்ற விஷயங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி மாறுபட்டு போனீர்கள் என்ற அர்த்தத்தில் கேட்டார்கள். இதைப் பற்றி யோசித்த போது இரண்டு காரணங்கள் புலப்பட்டன. External and Internal influences. அக மற்றும் புற காரணங்கள் என்று சொல்லலாம். புற காரணம், சிறு வயதில் நான் பார்த்த அல்லது நான் பார்க்க அழைத்து செல்லப்பட்ட படங்கள் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. வாழ்க்கையில் முதலில் பார்த்த படம் தெய்வப்பிறவி (அம்மா சொல்லி தெரிந்துக்கொண்டது). பின்னர் நினைவு இடுக்குகளின் சேகரத்தில் முதலில் ஞாபகம் இருப்பது அன்னை இல்லம் பார்த்தது. [நடையா இது நடையா பாடல் ஞாபகம் இருக்கிறது], பிறகு மதுரை தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அம்மா கையை பிடித்துக்கொண்டு கர்ணன் பார்க்க போனது, முரடன் முத்து பார்த்தது [சிவாஜி கோபித்து கொள்ளும் ஒரு காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது], அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது, கல்பனா திரையரங்கில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தது, பிறகு சரஸ்வதி சபதம், செல்வம், கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர் என்று பார்த்ததில் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த ஒரே எம்.ஜி.ஆர் படம் எங்க வீட்டு பிள்ளை. அக காரணம் என்று நான் குறிப்பிட்டது என்னை சுற்றி இருந்த சுற்றத்தார். அது தந்தை வழியாக இருந்தாலும் சரி, தாய்வழி சுற்றமானாலும் சரி, பெரும்பான்மையோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நடிகர் திலகத்தின் பழைய படங்களை பற்றி, அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப்பற்றி, அவரின் ஸ்டைல் பற்றி நிறைய சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு மனதில் அவரின் ஆளுமை பதிந்து போனது. ஆக, இது போன்ற அகம் மற்றும் புற காரணங்களால் நடிகர் திலகம் ரசிகனாகி விட்டேன். இந்த விஷயங்களுக்கும் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருகிறேன்.
இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. பக்கத்தில் நியூ சினிமாவில் இரு மலர்கள் அங்கே போகலாம் என்று ஒருவர் சொல்ல அங்கே செல்கிறோம். அங்கே ஏற்கனவே ஹவுஸ் புல். கடைசியில் கல்பனா தியேட்டருக்கு போய் "நான்" திரைப்படம் பார்த்தோம். ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் படத்திற்கு வந்த கூட்டம் என் மனதில் முதல் நாள் முதல் ஷோ ஆசையை விதைத்து விட்டது. ஆனால் அதை அப்போது நான் உணரவில்லை.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 12:54 AM
#2547
மீள் பதிவு தொடர்
அந்த நாள் ஞாபகம்
அதற்கு பிறகு வரிசையாக நடிகர் திலகம் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம் போன்றவைக்கு பிறகு பார்த்த என் தம்பி அந்த அடி மனதில் இருந்த ஆசையை வெளிக்கொண்டு வந்தது. காரணம் அதில் இடம் பெற்ற தெருக்கூத்து பாடல். அதில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் பாடுவதாக அமையும்
தெற்கத்தி கள்ளனடா
தென் மதுரை பாண்டியனடா
தென்னாட்டு சிங்கம்டா
சிவாஜி கணேசனடா !
நான் பார்த்தது மூன்றாவது நாள். அப்போதே தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அளவிட முடியாதது. அப்படியென்றால் ஓபனிங் ஷோ எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணம் தோன்றியவுடன், அப்படிப்பட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட ஆரம்பித்தது. அடுத்தது தில்லானா முதல் நாள் கூட்டம் அந்த ஆசையை அதிகரித்தது. அடுத்து வந்த எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன் இவை எல்லாமே முதல் வாரத்தில் பார்த்தேன் என்றாலும் ஓபனிங் ஷோ ஆசை நடக்கவில்லை. இவ்வளவு ஏன் ஓபனிங் டே கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறு வயது + கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வேண்டாம் என்ற வீட்டார் முடிவு.
அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.
இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 12:55 AM
#2548
அந்த நாள் ஞாபகம்
இப்படியாக 1969 முடிந்து 1970 ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த ஆசையும் அதிகரித்தது. பொங்கலன்று (ஜனவரி 14 ) எங்க மாமா ரிலீஸ். இந்த படத்தையாவது முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நானும் என் கஸினும் முடிவு செய்தோம். எங்களுக்கு வசதியாக எங்க மாமா தங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆசியாவின் மிகப பெரிய அரங்கமானதால் டிக்கெட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி, சொல்லி ஒரு சின்ன வாக்குறுதி வாங்கினோம். முதல் நாள் இரவு மறுபடியும் தடை. "பொங்கலன்னிக்கு சினிமா தியேட்டருக்கு போய் உட்காருவாங்களா? வேண்டாம்". மறுபடியும் பேசி, பேசி ஒரு வழியாக நைட் ஷோ போகலாம் என்று முடிவானது. பொங்கலை விட டைம் எப்போது நைட் ஆகும் என்பதிலேயே இருந்தது. ஒரு வழியாக போய் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் வரை நம்பிக்கை இல்லை.
தியேட்டருக்குள் நுழைந்து காலை உள்ளே வைத்தால் ஏதோ குவியலுக்குள் கால் வைப்பது போல தோன்றியது. குனிந்து பார்த்தால் காகித குவியல். ஒரு வழியாக உள்ளே போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த போது பயங்கர த்ரில் மனதில். பொதுவாக முதலில் படத்தில் டைட்டில் வரும். பிறகு நடிகர் திலகத்தை காட்டுவார்கள். ஆனால் எங்க மாமா படத்தில் முதலில் நடிகர் திலகம் வருவார். அதன் பிறகே டைட்டில் ஓட ஆரம்பிக்கும் அவர் முகத்தை திரையில் காண்பித்தவுடன் திரையே தெரியாத அளவுக்கு பேப்பர்மாரி பொழிந்தது. கைதட்டல் காதை கிழித்தது. ஒரு விதமான பிரமிப்புடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தன்னந்தனி காட்டு ராஜா. சொர்க்கம் பக்கத்தில் பாடல்களில் வரும் ஸ்டைல்களுக்கு ஆரவாரம் என்றால், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாடலில் அந்த இந்த இளமையான க்ளோஸ் அப் காட்சிக்கு செம அப்ளாஸ்.
என்னங்க சொல்லுங்க பாட்டுக்கு மறுபடியும் அலப்பறை. ஆனால் மொத்த தியேட்டரும் ஆர்ப்பரித்தது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் பாடலில் நடிகர் திலகம் கண்களில் கண்ணீரை அடக்கி கொண்டு பாடும் அந்த நடிப்புக்கே. இது தவிர அன்றைய சூழலை ஒட்டி எழுதப்பட்ட சில வசனங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சண்டைக் காட்சிகளுக்கும் அது போல ஆரவாரம். மொத்தத்தில் படம் முடிந்து வரும் போது எதோ பெரிதாக சாதித்து விட்டது போல ஒரு பீலிங்.
அடுத்து விளையாட்டு பிள்ளை பிப் 6 வெள்ளிக்கிழமை ரிலீஸ். எனவே மறு நாள் நைட் ஷோ தான் பார்க்க முடிந்தது. வியட்நாம் வீடு ஏப்ரல் 11 அன்று ரிலீஸ். எக்ஸாம் நேரம். முதல் வாரம் தான் பார்த்தேன். அடுத்த படம் எதிரொலி ஜூன் 27 சனிக்கிழமை ரிலீஸ், அதே தங்கத்தில். அதற்கு நைசாக பேசி பெர்மிஷன் வாங்கி முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். ஆனால் படமே சீரியஸ் கதை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. உங்க நல்ல மனதுக்கு ஒரு குறையுமில்லே பாடலுக்கு மட்டுமே ஆரவாரமான கைதட்டல்.
அடுத்த படம் ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15 நியூசினிமாவில் வெளியானது. ஆனால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திங்களன்று [என் நினைவு சரியாக இருக்குமானால் அன்று கோகுலாஷ்டமி அதனால் ஸ்கூல் லீவ்] பார்த்தேன். மூன்றாவது நாள் பார்க்கும் போதே முதல் நாள் போல தியேட்டர் சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு ராமன் விஜயகுமாராக மாறும் சீன் தொட்டு அரங்கமே அதிர ஆரம்பித்தது. சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் வசனம் பேசும் போது உச்சக்கட்ட அலப்பறை. அதிலும் "நான் அரசியல் தெரியாதவனா? அரசு வித்தைகள் புரியாதவனா?" என்ற வரிகளை பேசும் போது தியேட்டரில் எழுந்த உணர்ச்சிமயமான வாழ்க கோஷங்களும் (வேறு சில கோஷங்களும் எழுந்தன) இன்றும் நினைவில் நிற்கிறது.
இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.
இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 12:55 AM
#2549
அந்த நாள் ஞாபகம் iv
மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சேலம் மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.
படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி ev பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்]. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.
அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். இந்த படங்கள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாக நவம்பர் 27 வெள்ளி அன்று பாதுகாப்பு தங்கம் தியேட்டரில் வெளியானது. அதை வழக்கம் போல் மூன்றாவது நாள் பார்த்தேன்.
1970-ல் முதல் நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஆகவே அடுத்த வருஷம் ஓபனிங் ஷோ பார்த்து விடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் விதி சதி செய்தது.1971 -ல் முதல் படம் இரு துருவம். பொங்கலன்று நியூசினிமாவில் வெளியானது. பொங்கல் என்பதால் போக முடியவில்லை. மூன்றாவது நாள் தியேட்டர் விஜயம். அடுத்த படம் தங்கைக்காக. பிப் 6 அன்று ஸ்ரீதேவியில் ரிலீஸ். உடல் நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. அந்த வருடத்தின் மூன்றாவது படம் அருணோதயம். மார்ச் 5 வெள்ளியன்று நியூசினிமாவில் வெளியானது. அன்று தமிழக சட்டசபைக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல். எனவே போகவில்லை. ஞாயிறன்று சென்றேன். அந்த மாதத்திலே 26ந் தேதி ஸ்ரீதேவியில் குலமா குணமா ரிலீஸ். ஆனால் பரீட்சை. பதினைந்து நாட்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. லீவ் விட்டவுடன் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 14 அன்று இரண்டு படங்கள் வெளியாகியும் எதுவுமே பார்க்க முடியவில்லை. சுமதி என் சுந்தரி அலங்கார் தியேட்டரிலும், பிராப்தம் (சென்ட்ரல் சினிமா) இரண்டு படங்களையும் முதல் வாரத்தில் பார்த்தேன்.
இப்படியிருக்க நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி ஸ்ரீதேவியில் ஜூலை 3 சனிக்கிழமை வெளியாகிறது. ஓபனிங் ஷோ பார்க்கவேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுத்தும் ஸ்கூல் இருந்ததால் போக முடியவில்லை. முதல் வாரம் பார்த்தேன். அடுத்த படம் தேனும் பாலும் அதே மாதம் (ஜூலை) 22 அன்று சிந்தாமணியில் வெளியானது. இந்த படம் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் ரிலீஸ் தியேட்டரில் படம் பார்க்கவில்லை. ஷிப்டிங் தியேட்டரில் தான் பார்த்தேன். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 12:56 AM
#2550
அந்த நாள் ஞாபகம் - V
மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.
அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.
ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.
சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.
ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].
முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.
10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].
அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது
முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks