-
2nd May 2014, 11:01 AM
#2601
Senior Member
Senior Hubber
சிரிப்பு பாதி அழுகை பாதி…
(திடீர் தொடர் கட்டுரை..- திடீர் என்று நின்றாலும் நிற்கும்!)
அத்தியாயம் ஒன்று..
*
நடிகர் திலகமும், டைரக்டர் ஸ்ரீதரும் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்..
சீனப் போருக்கான நிதிக்காக ஸ்டார் நைட் ஏற்பாடு பண்ண கவர்ன்மெண்ட் நம்மளைக் கேட்டிருக்கு சார்.. என்ன செய்யலாம்..
ஸ்ரீதர் ந.தி யைக் கேட்க நடிகர் திலகம்..”ஒங்கூட ஒரு பையன் இருப்பானே..சிவப்பா ஒல்லியா வெடவெடன்னு..”
“கோபுவா”
“ஆமாம் அவனைக் கூப்பிடு”
கோபு வந்தான்.. சிவாஜியையும் பார்த்தவுடன் கொஞ்சம் படபடப்பு கூடியது அவனிடம்..
சிவாஜிக்கு சலாம் வைத்து ஸ்ரீதரிடம் “சொல்லுங்க்ணா”
ஸ்ரீதர் சிவாஜியைப் பார்க்க, ந.தி..
“இந்தாப்பா கோபு.. ஸ்டார் நைட் நடத்தப் போறோம்.. நிறைய நட்சத்திரங்கள் கலந்துக்குவாங்க..ச்சும்மா இண்ட்ரோ பண்ணினால்லாம் நல்லா இருக்காது.. நீ என்ன பண்றே.. ஒரு ஒண்ணவர் டிராமாவா எழுதிக்கிட்டு வா.. எல்லாருக்கும் ஸ்கோப் இருக்கறா மாதிரி”
” தல..இப்படிச் சொல்றீங்களே.. நானா.. ஒண்ணவர் டிராமா வித் நிறைய கேரக்டர்ஸா.. என்னால முடியுமா”
”இந்த பாரு..ஒன்னால முடியும்..ஒன் திறமை உனக்குத் தெரியாது.. நீ ஆஞ்சநேயர் மாதிரி… நீ என்ன பண்ற.. நேர ஒன்னோட திருவல்லிக் கேணி வீட்டுக்குப் போ..மொட்டை மாடியில லைட் போட்டு டேபிள்ளாம் இருக்கோன்னோ.. அங்க ஒக்காந்து மேல இருக்கற ஸ்டார்ஸ் பார்த்து எழுது..சரியா… ஸ்ரீ… ஒருமணி நேரம் ப்ரோக்ராம் ரெடி. அப்புறம் மிச்ச டயத்துக்கு பத்மினி டான்ஸ், எம்.எஸ்.வி கச்சேரி..அப்புறம் ஜெமினி சாவித்ரிக்கு ஒரு சின்ன ட்ராமா..கோபு.. அந்த ஒன்னவர் டிராமா எழுதி முடிச்சதும் இந்த சின்ன ட்ராமாவையும் நீயே எழுதிடு..” என்று ந.தி சொல்ல கோபு பே என முழிக்க ஆரம்பித்தான்..
ஸ்ரீதரும் சிவாஜியும் கவலையே இல்லாமல் வேறு சங்கதிகள் பேச ஆரம்பிக்க கோபு தன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து லைட் போட்டு நாற்காலியில் அமர்ந்து யோசித்து பேனாவை எடுத்து உதறினால் கற்பனை வரவில்லை..இங்க் தான் வந்தது..
சிவாஜி என்ன சொன்னார்..எல்லாரும் நடிக்கணும்..அப்படித் தானே..என்ன செய்யலாம்.. ஒரு அப்பா அம்மா ஒரு ஹீரோ ஹீரோயின்..ம்ம் நாலு பேர் தான் தேறுது… இப்படிச் செஞ்சா என்ன
ஒரு அப்பா அம்மா அவங்களுக்கு நாலு பொண்ணு.. நாலு மாப்பிள்ளைகள்..ஆஹா பத்து பேரு தேறிட்டாங்களே..எப்படி இவங்களை இணைக்கறது..
யெஸ்.. அந்த அப்பாவுக்கு ஒரு ஆசை ஒரே நாள்ல நாலு பொண்ணுக்கும் ஒரே மேடையில கல்யாணம் செஞ்சு வெக்கணும்..ஹை.. நல்லா இருக்கே..
கற்பனைப் பஞ்சு மெல்ல மெல்ல நூலாகி.. பல நூற்களாகி அழகான நகைச்சுவை நாடகமாக வடிவெடுக்கும் போது அதிகாலை நான்கு மணி..
கொஞ்சூண்டு தூங்கி எட்டுமணிக்கு ந.தி ஸ்ரீதரை பார்த்து கதையின் சினாப்சிஸையும் நாடக வசன பேப்பர்களையும் கொடுத்தால்.. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.. பாத்தியா சொன்னேன்ல என சிவாஜி பெருமிதத்துடன் பார்க்க கோபுவின் மனத்தில் மகிழ்ச்சி அருவி..
சிவாஜி நாடகத்தை ரசித்து, அவரது நாடக அனுபவம் அதிகம் என்பதால் சக நடிக நடிகைகளை நன்கு வேலை வாங்கி ஒத்திகையில் நடிக்க வைத்தார்…
பின் அந்த நாடகம் நட்சத்திர இரவில் அரங்கேற்றப் பட.. பார்த்தவர்கள் எல்லாம் கைதட்டிப் பாராட்டினார்கள்..அதே நாடகத்தை கடலூர் திருச்சி சேலம் எனப் போட எங்கும் பாராட்டு மழை தான்..
ஒரு சுபயோக சுபதினத்தில் கோபுவிடம் சிவாஜி .” ஏண்டாப்பா..இந்த டிராமாவ நம்ம புரொடக்*ஷனே எடுக்கட்டும்.. வேற யாருக்கும் கொடுத்துடாதே..”
“பெரியவா பேச்சுக்கு மறு பேச்சு சொல்ல முடியமா சார்..”
”சரி.. அப்ப என்னபண்ணலாம் நம்ம மாதவனை டைரக்ட் பண்ணச் சொல்லலாம்..என்னாங்கற..
“சார்..ஒரு சின்ன ஸஜெஷன்..”
“என்னப்பா”
“சி.வி ராஜேந்திரனும் நானும் ரெண்டு படம் செஞ்சுருக்கோம்.. ஸோ..இதையும் அவனே டைரக்ட் பண்ணா நல்லா இருக்கும்னு என் அபிப்ராயம்..திரைக்கதை நானே எழுதறேன்..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..
“ஹெல்ப்பா.. நானும் அவர் படம் பார்த்திருக்கேன்..அதுக்கென்ன..அவரே பண்ணட்டும்” என சிவாஜி சொல்லிவிட கோபுவுக்கு மட் மட்..மட்டற்ற மகிழ்ச்சி..
அப்படி எடுக்கப் பட்ட படம் தான் என்றென்றும் பசுமையான நகைச்சுவை கொண்ட “கலாட்டா கல்யாணம்..”சிவாஜி ஃபிலிம்ஸ் கண்காணிப்பில் ராம்குமார் ஃபிலிம்ஸ் தயாரித்தார்கள்
(மேற்கண்ட விஷயம் சித்ராலயா கோபு எழுதியிருந்த ஞாபகம் வருதே புத்தகத்தில் வருகிறது..தன்மை ஒருமையில் அவர் எழுதியிருந்ததை காப்பிரைட் ப்ராப்ளம் வரக்கூடாது என்று படர்க்கையில் நான் கொஞ்சம் இட்டுக் கட்டி எழுதியிருக்கிறேன் (ராகுலும் ரவியும் பே என முழிக்கப் போகிறார்கள்!))
*
கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,
”எவனோ எக்ஸ் அண்ட் கோ மேனஜராம் ஏதோஃப்ராட் பண்ணிட்டானாம் பொறுக்கிப் பய..இடியட் அவனப் போய் நான் பாக்கணுமாம்..ஆமா நீங்க யாரு சார்..” “ நீங்க சொன்னீங்களே அந்த எக்ஸ் அண்ட்கோ மேனேஜர் அது நான் தான்” கேட்டதும் ந.தியின் திரு திரு முழி.. நன்றாக இருக்கும்..
முரளிசாரின் காப்பிரைட் பாடலான நல்ல இடம் நீவந்த இடம் பாடலில் ரொமான்ஸ் நன்று.. மேலும் இந்தப் படத்தைப் பற்றி நிறைய இங்கு சொல்லியிருப்பார்கள் எனில் நான் அதிகம் சொல்லவில்லை..
சிவாஜியின் நகைச்சுவைக்கு அடுத்தபடி என்றால் சோ (நீங்க சென்ஸஸா..இன்கம்டாக்ஸ் இல்லயா..இல்ல அவங்க வேற டிபார்ட்மெண்ட்.. அப்ப நீங்க போய் அவங்கள அனுப்புங்க!), நாகேஷ் எனப் போகும்.. ம்ம் உதட்டினில் ஃபிப்டி பாட்டு ஹண்ட்ரட் பெர்சண்ட் காதுகளில் ஒலிக்கும்..
எனக்கு மிகமிகப் பிடித்த ந.தியின் நகைச்சுவைப் படங்களில் இது ஒன்று..
*
அப்பப்பா நான் அப்பனல்லடா வைப் போலவே இன்னொரு ஸோலோ பாட்டு..இன்னொருபடம் அதிலும் ந.தி தான்..
அது…..
லெட் அஸ் வெய்ட் அண்ட் ஸீ
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd May 2014 11:01 AM
# ADS
Circuit advertisement
-
2nd May 2014, 11:13 AM
#2602
Senior Member
Seasoned Hubber
அப்பப்பா நான் அப்பனல்லடா வைப் போலவே இன்னொரு ஸோலோ பாட்டு..இன்னொருபடம் அதிலும் ந.தி தான்..
அது…..
ச.சு....?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd May 2014, 12:14 PM
#2603
Senior Member
Senior Hubber
yes
-
2nd May 2014, 01:55 PM
#2604
Senior Member
Senior Hubber
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
(திடீர் தொடர் கட்டுரை..-)
*
அத்தியாயம் இரண்டு..
*
புன்னகை அரசி என்று அந்தக் காலத்தில் அழைக்கப் பட்ட- தனது பதினைந்து வயதில் கற்பகத்தில் அறிமுகமான கே.ஆர்.விஜயா நமது ந.தியுடன் பல படங்களில் உடன் நடித்திருக்கிறார்.
.எத்தனை என்று கோபாலைக் கேட்டால் சொல்லிவிடுவார்..
*
பல படங்களில் ஒரு போட்டியே இருக்கும்..எப்படியும் ந.தியை மிஞ்சி விடுவது என்று நடித்துப் பார்த்திருப்பார்.. அவர் ந.தியைப் பற்றி எப்படி இருக்கீங்க என்ற சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரையில் என்ன சொல்கிறார் என்றால்….
*
சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும்போது நடிப்பைப்பற்றி மட்டுமல்ல வாழ்க்கைக்குத் தேவையான வேறு பல விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம். சிவாஜி படப்பிடிக்குத் தாமதாக வரமாட்டார்-குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வருவதுதான் அவர் வழக்கம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
*
ஆனால் படப்பிடிப்பு என்றில்லை. எங்கேயுமே தாமதமாகப் போகும் வழக்கம் அவருக்கு இல்லை. திருமணம் என்றாலும் சரி, பொது நிகழ்ச்சி என்றாலும் சரி குறிப்பிட்ட நேரத்திற்குள் தாமதமின்றி செல்ல வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.”
*
நாம் ந.தியிடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது\..ம்ம்
*
அது சரி..எதற்காக கே.ஆர்.வி என்றால்..
*
மனவாசலில் முப்பத்திரண்டு புள்ளி வைத்து அழகாய்க் கோலம் போட்டுக்கொண்டே பின்னால் சென்றால்…….
*
வழக்கம் போல அழகான கல்லூரி மாணவ சின்னக் கண்ணன் (ம்க்கும்)..
*
ஒரு சனிக்கிழமை நாளில் கல்லூரிக்கு கனகாரியமாக வெட்டி விட்டு(கட்டடிப்பதற்குத் தமிழ்) சென் ட்ரல் சினிமா காலைக் காட்சி சில நண்பர்களுடன் தயங்கியவாறே சென்றால்…. வெய்ட் ஏன் தயங்கியபடியே..
*
காரணம் இருக்கிறது.. படம் புதுசு..சிவாஜி படம் வேறு..அதிக விளம்பரம் பார்த்த நினைவு இல்லை.. கிடைக்குமா..
*
கிடைத்தது 145 டிக்கட் (மாடி).. போனால் கொஞ்சம் பயம் தான்..கூட்டம் இருந்தது..இருந்தாலும் மனசுக்குள் ஒரு சின்னப் பிறாண்டல்..
*
எல்லாம் படம் ஆரம்பிக்கும் வரை தான்..
**
ஊருக்கு நல்லதொரு உபதேசம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் எனப் பாடிக்கொண்டே ந.தி கே.ஆர்வி நடுத்தர வயது கெட்டப்பில்..கொஞ்சம் வித்தியாசமாய் கலகலப்பாய் நடித்திருந்தார்கள்..
*
கதை- அவ்வளவாய் நினைவிலில்லை..கொஞ்சம்பழைய கதை தான்..இரண்டு குடும்பங்களுக்கு இந்தத்தம்பதி உதவி செய்வதாய் நினைவு..மாதவி ஜெய்கணேஷ் என நினைவு..
*
மாதவி மேலை நாட்டு நாகரீகம் என தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட.. உற்சாகமாய்க் குழந்தையை எடுத்து..”அட ஒங்கப்பன் மவனே மம்மி உனக்கு டம்மி தானப்பா – எனப் பாடி ஆடுவது பிடித்திருந்தது..(அப்பப்பா நான் அப்பனல்லடா இளமை வயது..இதுகொஞ்சம் நடுத்தர வயது டான்ஸ்)
*
கொஞ்சம் சுவாரஸ்யமாய்த் தான் இருந்த நினைவு..இரண்டுகுடும்பங்களும் சிவாஜி கேஆர்விக்கு தாங்க்ஸ் சொல்லி எண்ட் கார்ட் போட்டிருந்தால் இன்னொரு முறை பார்த்திருப்பேன்.. கதையைப் பற்றியும் விலாவாரியாக இவ்வளவு வருடங்களுக்கு ப் பிறகு சொல்லியிருக்க முடியும்.. ஆனால் டைரக்டர் விடவில்லை..
*
அந்தக் காலப் படங்களின் செண்டிமெண்ட் படி ந.தியின் அழுகை நடிப்பும் வேண்டும் என நினைத்தாரோ என்னவோ..
*
எல்லாம் முடிந்த பின் ந.தி யும் கே.ஆர்.வி யும் ஏன் தாங்கள் இப்படிச் செய்தார்கள் என்பதற்கு ஒரு சோ ஓஓகமான ஃப்ளாஷ் பேக்..மகள் இறந்துவிடுவதாகவோ என்னவோ..
*
ந.தியின் நடிப்பு பிரமிப்பாகத் தான் இருந்தது..பட் படம் முடிந்து வெளியே மதுரை வெயிலில் சைக்கிள் எடுக்கும் போது மனம் முழுக்க கனத்து கொஞ்சம் வெறுப்பாகத் தான் இருந்தது..டைரக்டரின் மேல் திரைக்கதையாளரின் மேல்,..ஓ சொல்ல மறந்து விட்டேன் படத்தின் பெயர் சத்திய சுந்தரம்.
*
இன்று வரை இந்தப்படத்தைமறுபடி பார்க்கச் சந்தர்ப்பம் வரவில்லை.. ஹிட் படம் என்பது வாசு சார் தனது ஹிட்லர் உமா நாத் ரிவ்யூவில் எழுதியிருந்தார்..
*
சுருளி ராஜன் இறந்த பிறகு வெளிவந்த படமாம் இது..சுருளி ரோல் சுத்தமாக நினைவிலில்லை..
*
ம்ம்..அழுகை பற்றி எழுதியாகிவிட்டது…இனி அடுத்த ரவுண்டிற்குப் போகலாமா..
*
எல்லாருமே ரசித்துப் பார்த்த படம் தான் இது..முழு நீள நகைச்சுவைப் படமும் அல்ல.. கொஞ்சம் சீரியஸ் தான்..ஆனால் ந.தி..இளமையில் இருக்கும் போது எடுத்த படம்..ஜோடியாக என்னுடைய ஃபேவரிட் நடிகை என்று சொல்ல முடியாது..(ஆக்சுவல் ஜோடி bangalore bird ! )
*
ஆனால் அவரும் இருக்கிறார்..அவருடன் என்.டி யின் பாடி லேங்க்வேஜ் இருக்கிறதே..குறும்பு தான்.. எ ந எ ந அ எ மு யா அ..
*
எனில் பை சொல்லிக்கட்டா..
(தொடரும்..).
*
(ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க..)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd May 2014, 12:17 AM
#2605
ஒரு சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பது நடக்காமல் இருக்கும். எதிர்பாராதது நடக்கும். அன்றும் இன்றும் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட எத்தனை சிக்கல்களை ஏற்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் சிலர் செய்துக் கொண்டேயிருக்கின்றனர். லோக்கல் விநியோகஸ்தர்கள் அவர்களின் தயவில் காலத்தை ஓட்டும் சில திரையரங்க உரிமையாளர்கள், சில மீடியேட்டர்கள் என்ற ஒரு குழு இன்றைக்கு சில ஊர்களில் பாசமலர் படத்தின் ரிலீசை தள்ளிப் போட வைத்திருக்கிறார்கள். எத்தனை நாட்களுக்கு இப்படி செய்வார்கள்? நிலைமை விரைவில் மாறும்.
ஆனால் இங்கே எதிர்பார்த்த ஒன்று நிகழாமல் போனாலும் எதிர்பாராமல் ஒரு நிகழ்வு. தூங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவை தட்டி எழுப்பிய குணசேகரன் இன்று முதல் நெல்லை சென்ட்ரலுக்கு விஜயம் செய்திருக்கிறார். தினசரி 4 காட்சிகளாக இன்று முதல் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி வெளியாகியிருக்கிறது.
அன்புடன்
கண்ணா கலக்குங்க!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd May 2014, 12:43 AM
#2606
Last edited by Murali Srinivas; 3rd May 2014 at 12:46 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd May 2014, 07:57 AM
#2607
Junior Member
Junior Hubber
தங்கள் விளக்கத்திற்கு நன்றி முரளி அவர்களே! நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். பொறுத்தருள்க. தங்களின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகம் படங்கள் பற்றிய விமர்சனங்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு பசுமரத்தில் பாய்வது போல அப்படி மனதுக்குள்ளே பாய்ந்து ஆழமாக பதிந்து விட்டதே! என்னே ஒரு நினைவாற்றல்! என்னே ஒரு கையாளும் திறன்! என்னே ஒரு அபார எழுத்தாற்றல்! பெருமூச்சு விடுவதைத் தவிர வேறென்ன நான் செய்ய? இறைவன் தங்களுக்கு அருளாசி புரியட்டும்.
-
3rd May 2014, 08:03 AM
#2608
Junior Member
Junior Hubber
சின்னக் கண்ணனே! நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது ந.தியைப் பற்றிய தங்கள் கட்டுரைகளை அழகு தமிழில் சுவைத்துப் பார்த்து. (தங்கள் கட்டுரையின் இறுதி பகுதிகள் மட்டும் சற்று குழப்பமடைய வைத்தன)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd May 2014, 09:10 AM
#2609
Senior Member
Senior Hubber
முரளி சார், ராம்தாஸ் ஐயா நன்றி..
ராமதாஸ் ஐயா, தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.. எனக்குத் தமிழாசிரியர்கள் என்றால் கொஞ்சம் உதறல் தான்..எனக்குத்தெரிந்த தமிழ் வெகு சொற்பமே.. தாங்கள் தான் அவ்வப்போது வழிகாட்ட வேண்டும்..(இருந்தாலும் அம்பிகாபதியில் கடைசி ப் பாட்டைப் பற்றி நீங்கள் சொல்லாதது எனக்கு வருத்தம் தான்!
)..
கடைசியில் - கொஞ்சம் சஸ்பென்ஸ் வைப்பதற்காக அப்படி எழுதியிருந்தேன்.. என்னுடைய ஃபேவரிட் ஹீரோயின் - தேவிகா என்று இவ்விழையில் அனைவரும் அறிவார்கள்..அவர் பாடிய ஒரு பாடலின் ஒரு வரியைச் சுருக்கி எழுதியிருந்தேன்..அதைச் சொன்னால் என்ன படம் எனத் தெரிந்து விடும்.ம்ம்..சரி..சொல்கிறேன்..எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யார் அறிவார்..அச்சோ..சொல்லிட்டேனே..எழுதிவிட்டு இடுகிறேன்
-
3rd May 2014, 09:40 AM
#2610
Junior Member
Junior Hubber
நடிகர் திலகம் என்று உச்சரிக்கும் போதே அறுசுவையும் நாவில் நர்த்தனமாடுகிறதே! எத்தனை எத்தனை வேடங்கள்! அதில் எத்தனை எத்தனை எத்தனை பாடங்கள்! முத்தமிழை கற்பித்த நடிப்பின் வித்தகருக்கு எப்படி புகழ்மாலை நான் சூட? அகர முதல எழுத்தை அறிய வைத்த தேவி, ஆதிபகவன் முதலென்று உணர வைத்த தேவி நடிப்பை இந்நாயகன் மூலம் இந்நானிலத்திற்கு உணர வைத்தாளே!
வேத நாயகர்களின் வேடங்கள் தரித்த
இந்த நடிப்புப் பாட நாயகனின்
பராக்கிரமங்களை எப்படிப் பாட!
பஞ்சையாய், பராரியாய், பணக்காரனாய், பாசமிகு கணவனாய், பொறுப்புள்ள தந்தையாய், மிடுக்கான கனவானாய், மில் தொழிலாளியாய், கைரிக்ஷா இழுத்தவனாய், சரித்திய புருஷர்களாய், வரலாற்று நாயகர்களாய், காவல் அதிகாரியாய், காட்டு வேட்டைக்காரனாய், படித்த அறிவாளியாய், படிக்காத மேதையாய், உளவுத்துறை நிபுணனாய், கட்டிளங் காளையாய், ராணுவ வீரனாய், நாடக நடிகனாய், சினிமா நடிகனாய், சாப்பாட்டு ராமனாய், நகைச்சுவை பாண்டியனாய், நவரச நாயகனாய், முரடன் முத்துவாய், கிறித்துவப் பாதிரியாய், எல்லோரும் கொண்டாடும் ரஹீம் பாயாய், பாரிஸ்டராய், வக்கீலாய், நீதிபதியாய், நிறை குடமாய், விமான ஓட்டியாய், கழைக் கூத்தாடியாய், நாதஸ்வரச் சக்கரவர்த்தியாய், பாப் இசைப் பாடகனாய், புத்தனாய், திருவிளையாடல் புரிந்த சிவனாய், திருமாலாய், முருகனாய், வீரபாகுவாய், காத்தவராயனாய், டார்ஜானாய், இசை மேதையாய், மிருதங்க சக்கரவர்த்தியாய், மிட்டா மிராசுவாய், தேவராய், தேவராட்டக் கலைஞராய், எழுத்தாளனாய், ஏகபோகச் சக்கரவர்த்தியாய், திருமங்கை மன்னனாய், கட்டபொம்மனாய், கப்பலோட்டிய தமிழனாய், நக்கீரனாய், நாரதரனாய், சுந்தரனாய், சுந்தர புருஷனாய், நகைச்சுவை இளவலாய், நாகரீக இளைஞனாய், பரதனாய், பரத நாட்டியக் கலைஞனாய், காஞ்சிப் பெரியவராய், கொடுங்கோல் மன்னனாய், கொடிய மிருகமாய், சிற்றின்பப் பிரியனாய், பேரின்ப ஊற்றாய், பாசமான அண்ணனாய், பாரதியாய், மலையாளியாய், திருடனாய், தீர்க்கதரிசியாய், ஞானியாய், தொண்டுக்கிழமாய், மராட்டிய சிங்கமாய், வில்லனாய், விஜயனாய், வீரனாய், கர்ணனாய், காமுகனாய், சண்டியாய், சன்மார்க்க நெறியனாய், ஹரிச்சந்திரனாய், பனை ஏறியாய், பகட்டாளனாய், மருத்துவனாய், மன்னனாய், வீரனாய், தீரனாய், சூரனாய், விவேகியாய், விவேகானந்தனாய், வேலவனாய், குருவாய், சிஷ்யனாய், தமிழ் ஆசானாய், ஆத்திரக்காரனாய், சிறுவனாய், சூதாடியாய், சூத்திரதாரியாய், பிரஸ்டீஜ் பத்மனாபனாய், பைத்தியக்காரனாய், பட்டாளத்தானாய், குடிகேடியாய், குறும்புக்காரனாய், மகனாய், பேரனாய், தாத்தாவாய், கிறுக்கு மன்னனாய், கிறுக்கு மருத்துவனாய், நங்கையாய், பெண்மணியாய், நூர்ஜஹானாய், சீதையாய், மச்சினனாய், மாமனாய், பரதேசியாய், மனோகரனாய், நண்பனாய், பகைவனாய், ஆவியாய், பெரியாராய், சாக்ரடீஸாய், சீசராய், சேரன் செங்குட்டவனாய், கழைக் கூத்தாடியாய், கள்வனாய், மேஸ்திராய், மேனாட்டுக் குடிமகனாய், தாழ்மை உணர்வு கொண்டவனாய், விறகு வெட்டியாய், விவசாயியாய், வியாபாரியாய், வணங்காமுடியாய், விஞ்ஞானியாய், அம்பிகாபதியாய், விளையாட்டுப் பிள்ளையாய், வெற்றி வீரனாய், கலெக்டராய், சாம்ராட்டாய், கல்லூரி மாணவனாய், கல்லூரி பேராசிரியராய், கட்டழகு மன்மதனாய், சர்க்கஸ்காரனாய், எங்க மாமாவாய், ஸ்டேஷன் மாஸ்டராய், அலுவலக பணியாளனாய், பியூனாய், அதிகாரியாய், உயர்ந்த மனிதனாய், பட்டதாரியாய், பட்டிக்காட்டானாய், பைரவனாய், குரூபியாய், குருடனாய், செவிடனாய், குரூரனாய், ஏழையாய், பிச்சைக்காரனாய், சிற்பியாய், சிவந்தமண் காத்த போராளியாய், மலை வீரனாய், மனநலம் பாதித்தவனாய், மல்யுத்தக் காரனாய், ஏட்டுவாய், கான்ஸ்டபிளாய், பைலட்டாய், ஜஸ்டிஸாய், தனவந்தனாய், தரித்திரனாய், எமனாய், எமனுக்கு எமனாய், சத்திய சுந்தரனாய், ஹிட்லராய், தாதாவாய், தாத்தாவாய், பிதாவாய், குருவாய், துப்புரவுத் தொழிலாளியாய், பண்ணையாராய், பஞ்சாயத்துத் தலைவனாய், ஆத்திகனாய், நாத்திகனாய், ஐயராய், ஐயங்காராய், அய்யனாய், மெய்யனாய், பொய்யனாய், (மூச்சு முட்டுகிறது)
எங்கள் மனதைப் பூப்பறிக்க வந்தவனாய்
இன்னும் இன்னும் ஏராளாமாய், தாராளமாய்,
வேடங்கள் புனைந்து
அவற்றுக்கு உயிர் தந்தவனே! உரமிட்டவனே!
நீ புனைந்த வேடங்களை அளவிட்டு விடத்தான் முடியுமா? அதற்கு பதில் விண்ணில் மின்னும் நட்சத்திரங்களை எண்ணி விடலாமே.
எழுதியது கையளவு
எழுதாதது கடலளவு
எழுதவும் முடியாது. இயலாது எவராலும். ஏனென்றால்
நீ ஆதிஅந்தம் இல்லாத அடிமுடி காண முடியாத பிரம்மாண்ட நடிப்புக் கடவுள் அல்லவா!
தவறு கண்டிருந்தால் பொறுத்தருள்வீர்.
ராமனுக்கு தாசன் என் பெயர் (பெற்றோர் இட்டது)
சிவாஜிக்கு தாசன் (அனைவரும் அழைப்பது)
Last edited by Rama Doss; 3rd May 2014 at 09:57 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks