-
4th May 2014, 05:22 PM
#2631
Senior Member
Senior Hubber
சிரிப்பு பாதி..அழுகை பாதி
*
அத்தியாயம் நான்கு
*
என் இனிய ந.தி ரசிகர்களே..!
*
இதுவரை நேரடியாக உங்களைப் போரடித்த சி.க இப்பொழுது காலயந்திரத்தில் ஏற்றி பலவருடங்கள் முன்னால் கொண்டு செல்லப் போகிறான்..ஆம் ஏறிவிட்டீர்களா..
*
சரி.இறங்கிக் கொள்ளுங்கள்..நாம் செல்ல வேண்டிய இடம் வந்து விட்ட்து..(ம்ம்.. பளாஷ் பேக் சொல்றதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு!)
*
இது இது..மதுரைதான்..
*
மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் லஷ்மி சுந்தரம் ஹால்..
*
வழக்கம் போல தலை கீழ் ப மீசை, காதுகளில் கொஞ்சம் பெரிய சைட் பர்ன் அதாவது கிருதா -மீசை மேல் கோவித்துக் கொண்டு சற்றே தள்ளியிருக்க,அழகாய்ப் பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு இருந்த அந்த இளைஞனின் கண்களில் காந்தம் இருந்தது
*
(போதும்டாப்பா ஒன்னை நீயே வர்ணிச்சுக்கறது..
ஷ்ஷ் மனசாட்சி இங்க எதுக்கு வந்த?!)
*
அங்கு சென்றது நாடக்ம் பார்க்கத்தான்..பிற்காலத்தில் பெருமை பெற்ற டைரக்டர் அந்த நாடகத்தை இயக்கியிருக்க – அவர் நடிக்காமல் அவரது அண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்..
*
சுவாரஸ்யமாய்த் தான் இருந்த்து நாடகம்..அதில் வரும் குருட்டுக் கதாபாத்திரம் பேசிய வசனம் கொஞ்சம் சப்பக் என்று ஸ்டாம்ப் ஒட்டினாற்போல் பதிந்திருக்கிறது இன்னும்..
*
“வழக்கமா நான் வெளியில் இருந்து வர்ற்ச்சே என் தங்கை தரையில் படுத்துத் தூங்கிட்டிருப்பா.. அவள் கால் மேல என் கால் லேசா படும்..ஒடனே பதறி எழுந்துடுவா.. அன்னிக்கும் வழக்கம் போல வீட்டுக்குள்ள திறந்து போனேன்..அப்ப அவ கால் என் தல மேல பட்டுது!”
*
புரிகின்ற வசனம் தான்..இருந்தாலும் தெளிவாக்க வேண்டி “ யெஸ்..என் தங்கை விக் விக் அவ தூக்குல தொங்கிட்டிருந்தா” என்று பேச வைத்திருப்பார்கள்..
*
நல்ல நாடக்ம் தான். வெளியில் வந்து லூனாவை உதைத்துக் கிளம்பி மேல் பாலத்தில் வண்டி ஏறும்போதெல்லாம் ஒரே சிந்தனை.. ந.தி இதில் நடித்தால் நல்லா இருக்குமே..அதுவும் மெயின் டாக்டர் கதாபாத்திரம்..அப்புறம் அந்த போட்டி போடும் பெண்பாத்திரத்திற்கு..ம்ம் யாராவது புதுமுகத்தைப் போட்டுக்கலாமே..
*
வீட்டிற்கு வந்து உறங்கி, பின் வந்த சில நாட்களில் தினமணியில் பார்த்தால் ஒரு சர்ப்ரைஸ்.. அந்த ரோலில் ந.தி நடிப்பதாக.. ப்ளஸ் மருமகள் ரோலில் சரிதா.. யெஸ்..படம் கீழ் வானம் சிவக்கும்..
*
விசுவின் அண்ணன் எம் ஆர் ராஜாமணி தான் டாக்டர்..பட்த்தில் ஒரு சிறுவேஷம் ஏற்றிருந்தார்.. அவரிடம் ந.தி சில காட்சிகளின் போது நடித்து விட்டு “சரியா இருக்கிறதா” எனக் கேட்டாராம்..என்னிடம் எதற்குக் கேட்கிறீர்கள் என்றதற்கு “சரியா ப் போச்சே.. நாடகத்தில நீங்க நடிச்ச ரோல் தானே..சரியா இருக்கா..இன்னும் டெவலப் பண்ணனுமா” என்றாராம் ந.தி.. அவருடைய பெருந்தன்மை எம்.ஆர்.ஆர் கண்ணில் நீரை வரவழைத்து விட்ட்தாக அவரே ஒரு பேட்டியில் எழுதியிருந்தார்..
*
மதுரையில் ரிலீஸ் ஆன தியேட்டர் நியூ சினிமா –என நினைவு.
*
பிரபல ஆஃப்தால்மாலஜிஸ்ட் டாக்டர் துவாரகா நாத் ஆக நடிகர் திலகம்..சரி சரி..பிரபல கண் மருத்துவராக ந.தி. மகனாக சரத்பாபு மருமகள் ஆக சரிதா..சரத்பாபு துரோகமிழைக்கும் பெண்ணாக மேனகா..
*
வித்யாசமான நோய் கொண்டு சீக்கிரமே இறக்கப் போகிற மருமகள், ஒரு பெண்ணுக்குத் துரோகமிழைத்த தனது மகன், அவனைக் கொலைசெய்வேன் என்று அலைபாய்ந்திடும் ஒரு குருடன்(அவனதுமூன்றாவது கையாய் ஒரு அரிவாள் –பட்த்தில் இந்த ரோல் ஜெய்சங்கர்)- அவனுக்கு ஆப்ப்ரேஷன்செய்து கண்ணொளி கொடுக்கவேண்டிய கட்டாயம்
– அதே சமயம் ஒழுங்காய் ஆபரேஷன் செய்ய மாட்டார் என மருமகள் சந்தேகித்துப் புரியும் செயல்கள் அதை சமாளிக்கும் விதம்- மருமகளுக்கு அந்த குருடனின் தங்கையைக் கைவிட்டவன் தன் மகன் தான் எனத் தெரியாமல் வைக்க அவர் தவிக்கும் தவிப்பு என வெகு அழகாக நடித்திருப்பார் ந.தி.
*
ஒரு கட்ட்த்தில் – இறுதிக் கட்ட்த்தில் – மருமகள் கைக்கு தனது மெடிக்கல் ஃபைல் சென்றுவிடுவதை அறிந்த்தும் தவிக்கும் தவிப்பு..அவளை நேரில் சென்று பார்க்கும் போது அந்த தவிப்பில், துடிப்பில், அழுகையில் உறைந்து நிற்கின்ற விழிகள் என அசத்தியிருப்பார்..
*
மருமகள் சரிதாவும் முகத்தில் எல்லாமும் நடிக்க கண்களில் ஒரு பாலாறையே அணைகட்டி நிறுத்தி பின் பொத்தென ந.தியிடம் விழுந்து நமஸ்கரிப்பார்..அத்துடன் காட்சி முடியும்..
*
இன்னும் இன்னும் இன்னும் நன்றாக எடுத்திருக்கப்பட்டிருக்க வேண்டிய படம் இது..என்ன அவசரமோ.. ந.தி.யின் விக், பட்டைக் கண்ணாடி நன்றாகத்தான் இருந்தாலும் இன்னும் நல்ல கெட்டப் கொடுத்திருக்கலாம்..
*
பொன்னிறமாக வறுக்கையில் சற்றே கை அசர லேசாகக் கறுக்கி எடுத்து ஜீராவில் ஊறிய கொழுக் மொழுக் குலோப்ஜாமூனைப் போல சரிதா – மாமனாரைப் புரிந்த, வெகு மரியாதை வைத்திருக்கும் மருமகள், பின் சந்தேகப்பட்டு மாமனாரை வார்த்தைகளால் வறுப்பதிலும் சரி, புரிந்த பிறகு அழுகையுடன் ஆசீர் வாதம் கேட்பதிலும் சரி நன்கு நடித்திருப்பார்..அவரது குரல் ஒரு வரப்பிரசாதம்..அந்த ஜீராவைப்போலவே இனிமை..
*
சரத்பாபுவின் அல்பாயுசுக் காதலியாக மேனகா..வெரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்!
*
குமுதமோ விகடனோ ஏதோ ஒரு விமர்சனத்தில் முக்கியமான பாத்திரங்களுக்கு சிவாஜி சரிதா போட்டாச்சு..அப்புறம் டைரக்டர் ஈஸி சேரில் தூங்கி விட்டார் என்று எழுதியிருந்தார்கள்
*
நல்ல படம் தான்..என்னைக் கவர்ந்த்து தான்..ஆனால் ஓரிரு முறைதான்பார்த்திருக்கிறேன்..
*
அடுத்து சிரிப்பிற்காக வரப் போகும் பட்த்தில்..பெயரிலேயே ஒரு ஆணின் அல்லது பெண்ணின் பெயர் பகுதியாக இருக்கும் என்றால் சுலபமாகத் தான் இருக்கும்..ஆனா..சாய்ஸ் இருக்கே..
*
(தொடரும்)
-
4th May 2014 05:22 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2014, 09:21 PM
#2632
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
சிரிப்பு பாதி..அழுகை பாதி
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களின் சிரிப்பு பாதி ..அழுகை பாதி - ஒவ்வொரு அத்தியாயமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. பாராட்டுக்கள்...... தொடருங்கள்..........
Last edited by KCSHEKAR; 4th May 2014 at 09:26 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2014, 09:25 PM
#2633
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்,
முன் திரிகளில் இடம் பெற்ற நடிகர் திலகம் படத்தின் விமர்சனங்கள், கட்டுரைகளின் url இணைப்புகளை அளித்தமைக்கு நன்றி. ஒவ்வொரு பாகம் முடிந்தபின்னும் இதுமாதிரி இணைப்புகளை அளித்தால், recap செய்வதற்கு எளிதாக இருக்கும்.
-
4th May 2014, 09:47 PM
#2634
Senior Member
Senior Hubber
அன்பின் சந்திர சேகர் சார் மிக்க நன்றி..
-
5th May 2014, 07:10 AM
#2635
Senior Member
Devoted Hubber
சாதனை! சாதனை!! சாதனை!!! இதுதான் சாதனை
பைலட் பிரேம்நாத்...........யாழ்நகர்.............வின்சர். .......222...நாட்கள் வசூல்
8 70 164.20
எட்டு லட்சத்து எழுபதாயிரத்து நூற்று அறுபத்து நாலு ருபா இருபது சதம்
இதன் வசூலை வேறு எந்த நடிகரின் படங்களும் எட்டிப்பாhக்கக்கூட முடியவில்லை
கட்டவுட் காட்டலாம் படம் காட்டலாம்
ஆனால் மக்கள் வரவேண்டும் வகூல் ஆகவேண்டும்
அது இயற்கையான நடிப்பு சக்கரவர்த்தி
குணத்தில் குன்று
கொடையில் வள்ளல்
அகில உலக வசூல் சக்கரவர்த்தி
நடிப்பலக மாமேதை நடிகர்திலகத்தின்
படங்களால் மட்டுமே இயலும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th May 2014, 07:11 AM
#2636
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th May 2014, 07:11 AM
#2637
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th May 2014, 08:04 AM
#2638
Junior Member
Seasoned Hubber
அற்புதம் சிவா சார் - nt தான் வசூலில் ஒரு கலக்கு கலக்கினார் என்றால் - நீங்கள் அவரையும் மீறி இந்த திரியில் அவருடைய சாதனை பட்டியல்களை போட்டு கலக்கிண்டீர்கள் . இந்தியாவிற்கு ஒரு ரவிகிரண் - ஸ்ரீலங்காவிற்கு ஒரு சிவா (ஜி) - தொடருங்கள்
-
5th May 2014, 09:20 AM
#2639
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
Thank you siva sir for the proof of the GREAT RECORD OF THE GREAT ACTOR a true milestone achieved in seventies itself. thanks again.
-
5th May 2014, 10:04 AM
#2640
Junior Member
Seasoned Hubber
திரு ராமதாஸ் - நீங்கள் NT யின் பல உணர்ச்சிமயமான நவரச நடிப்புக்களை அழகா தொகுத்து பதிவு செய்தீர்கள் - இந்த கார்ட்டூன் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது - சிலர் நடிப்பு என்ற பெயரில் முகத்தை மூடிகொண்டோ , சண்டை என்ற பெயரில் நகைச்சுவையை தருவதில்லோ , தங்கை என்று பல heroin களுக்கு காரியங்கள் முடித்தபின் பெயர் தானம் செய்வதிலோ, முகத்தை ஒரே மாதிரி எல்லா வேடத்திலும் வைத்து கொள்வதிலோ கைதேர்தவர்கள் - நமது PM position க்கு பொருத்தமானவர்கள்.
Bookmarks