-
7th May 2014, 11:17 AM
#2681
Junior Member
Seasoned Hubber
நகைச்சுவையின் உச்சகட்டம் 

பொம்மையில் 1971இல் வந்ததாக "வாசகர் கண்ட நட்சத்திரம்" என்ற தலைப்பில் ஒரு பேட்டி அந்த திரியில் இடம் பெற்றுள்ளது . அந்த பேட்டியை பற்றி நான் அதிகமாக கூற விரும்பவில்லை - நகைச்சுவைக்கு சிறிது கூட பஞ்சம் இல்லை இந்த பேட்டியில் - இதில் mt , nt யை பற்றி கூறும் இடத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன் - இது அவர் உண்மையிலேயே கூறியிருப்பரா என்பது சந்தேகமே !!
சின்ன அண்ணாமலையும் , ராமண்ணாவும் mt யை சந்தித்து அவரவர்கள் இயக்கம் "சிவாஜியின் வரலாறு" என்ற படங்களில் mt - "சிவாஜி " யாக நடிக்க வேண்டும் என்று மண்டாடினார்களாம் ! Mt மறுத்து விட்டாராம் - அண்ணாவிடம் mt யே முந்திக்கொண்டு தான் மறுத்த விஷயத்தை எடுத்து சொன்னாராம் - உடனே அண்ணாவும் " "நீங்கள் எடுத்த முடிவு சரியே , ஏற்கனவே சிவாஜி என்கின்ற பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்துவிட்டது நமது கட்சி - அந்த பட்டம் அவருக்கு நிலைச்சு இருந்தால் தான் நாம் கொடுத்த பட்டத்திற்கு கெளரவம் இருக்கும் " என்று சொன்னாராம் - இதைவிட சுவையான கற்பனையும் நகைச்சுவையும் இருக்க முடியுமா ?
Mt யை பற்றி எல்லோருக்கும் தெரியும் - அவருக்கு ஓவ்வாத பாத்திரங்களில் நடிக்கவே மாட்டார் - சிவாஜி யாக நடப்பது , பேசுவது , கர்ஜிப்பது , பல பக்கங்களின் வாசனைகளை மனப்பாடம் செய்வது - அவருக்கு ஒரு விஷ பரிச்சை என்பதை அவரே உணர்ந்து உள்ளார் - சங்கர் mt யை வைத்து ஒரு படம் எடுக்கும் போது சில காட்சிகளில் நடிப்பு சரியாக வரவில்லையாம் - சங்கர் முகத்தில் ஆழ்ந்த சோகம் - அதை உணர்ந்து கொண்ட mt , சங்கரிடம் " நீங்கள் யாரை மனதில் வைத்து கொண்டு வருத்தபடுகிறீர்கள் என்று எனக்கு தெரியும் - ராமச்சந்திரன் இடம் என்ன கிடைக்குமோ அதை மட்டும் எதிர் பாருங்கள் " என்று சொன்னவரா சிவாஜி வேடத்தில் நடிக்க ஒப்பு கொள்வார் ?? - அண்ணா யாரை சிவாஜியாக போடலாம் என்று வருத்தப்படும் வேளையில் , சிவாஜியே நேராக வந்திருந்தாலும் அப்படி நடித்திருக்க முடியாது என்பதை உலகத்திற்கு எடுத்து சொன்னவரல்லவா நம் தலைவர்
தன் இயலாமையை மற்றவர்களை மட்டம் தட்டுவதற்காக mt உபயோகித்திருக்க மாட்டார் என்பது தான் என் கருத்து - அதனால் இப்படி ஒரு பேட்டி எடுத்ததாக சொல்வதே உண்மைக்கு புறம்பாடாக உள்ளது - அதே சமயம் மனம் விட்டு சிரிக்கவும் இந்த பேட்டி உதவியாக இருந்தது.
-
7th May 2014 11:17 AM
# ADS
Circuit advertisement
-
7th May 2014, 11:19 AM
#2682
Junior Member
Veteran Hubber
பதிவிடும்போது "எங்கள் தெய்வத்தின் வசூல் சாதனை" என்று மட்டும் பதிவிட்டால் எந்த பதில் பதிவும் வரபோவதில்லை.
அதை விடுத்து, எந்த நடிகரும்...எந்த நடிகரின் படமும் ...தென் இந்தியாவிலயே, உலகத்திலயே ...என்ற ரீதியில் பதிவிட்டால்...எப்படி பதில் பதிவு பதிக்காமல் இருக்கமுடியும்?
ரசிகர் மன்ற நோட்டீஸ் நாம் பதிவு செய்தால் ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாயின்தது என்று அவர்கள் எழுதுகிறார்கள்.
அனால் அதே நோட்டீஸ் அவர்கள் பதிவிட்டு நாம் இதை திரும்ப கேட்டால் நாம் குழப்பம் விளைவிக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இது என்ன ஞாயம் ?
நம் ஞாயமான கேள்விகள் எப்போதுமே இவர்களுக்கு நகைசுவயாம், இவர்கள் பதில்கள், கேள்விகள் நாம் நகைச்சுவையாக எடுத்தால் குற்றமாம் ...என்னவென்று சொல்வது !
-
7th May 2014, 11:20 AM
#2683
Junior Member
Seasoned Hubber
Murali
"People may FORGET what you SAY. People may even FORGET what you DO. But they will NEVER Forget HOW you made them FEEL."
You made all of us feel proud of you
thanks
-
7th May 2014, 11:29 AM
#2684
Junior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302

உடனே அண்ணாவும் " ஏற்கனவே சிவாஜி என்கின்ற பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்துவிட்டது நமது கட்சி -
அறிஞர் அண்ணா கூறியதாக வெளியிட்டிருக்கும் "சிவாஜி பட்டம் நம் கட்சி கொடுத்தது" அதுவே ஒரு மிக தவறான ஒரு விஷயம்.
"சிவாஜி" என்ற பட்டம் எந்த கட்சியும் நடிகர் திலகத்திற்கு கொடுக்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் அவர்கள் வாயால் கொடுத்த பட்டம். ஒரு தனி பெரும் மனிதர் கொடுத்த பட்டம்....அன்று முதல் தான் ஒரு நடிகர்களை கூத்தாடி என்று அழைக்கும் பழக்கமும் அடியோடு கைவிடப்பட்டது. கலை துறையை சேர்ந்தவர்களுக்கு சமூகத்தில் இதன் மூலம் ஒரு நல்ல மரியாதை கிடைக்க வழி வகை செய்தவர் முதன் முதலில் நம் நடிகர் திலகம்தான் !
காரணம் "கூத்தாடி" என்று அழைப்பதை வாடிக்கையாக கொண்ட தந்தை பெரியாரே ஒரு நடிகருக்கு சிவாஜி என்ற பட்டம் கொடுத்தார் என்பது தான் அன்றைய நாளில் மிக பெரும் பேச்சு எங்குபார்த்தாலும். மேலும் அதற்க்கு பிறகு தந்தை பெரியார் பொது மேடைகளில் கலைதுரயினரை "கூத்தாடிகள்" என்று அழைபதையும் கைவிட்டார் !
சாதனை என்றால் இது தான் உண்மையான உலக கௌரவ சாதனை. - நிகழ்த்தியவர் ஒரே ஒருவர் - அவர் நம் நடிகர் திலகம் !
அதை பத்திரிகையில் செய்தி வெளியிட்டவர்கள் இவர்கள் கட்சியை பற்றி தம்பட்டம் அடித்து கொள்வதற்காக வெளியிடிருக்கிரர்கள் என்பதே சரி !
Last edited by RavikiranSurya; 7th May 2014 at 11:31 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2014, 11:37 AM
#2685
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
பதிவிடும்போது "எங்கள் தெய்வத்தின் வசூல் சாதனை" என்று மட்டும் பதிவிட்டால் எந்த பதில் பதிவும் வரபோவதில்லை.
அதை விடுத்து, எந்த நடிகரும்...எந்த நடிகரின் படமும் ...தென் இந்தியாவிலயே, உலகத்திலயே ...என்ற ரீதியில் பதிவிட்டால்...எப்படி பதில் பதிவு பதிக்காமல் இருக்கமுடியும்?
ரசிகர் மன்ற நோட்டீஸ் நாம் பதிவு செய்தால் ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாயின்தது என்று அவர்கள் எழுதுகிறார்கள்.
அனால் அதே நோட்டீஸ் அவர்கள் பதிவிட்டு நாம் இதை திரும்ப கேட்டால் நாம் குழப்பம் விளைவிக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இது என்ன ஞாயம் ?
நம் ஞாயமான கேள்விகள் எப்போதுமே இவர்களுக்கு நகைசுவயாம், இவர்கள் பதில்கள், கேள்விகள் நாம் நகைச்சுவையாக எடுத்தால் குற்றமாம் ...என்னவென்று சொல்வது !
அன்புள்ள ரவிகிரண் - உங்கள் ஆதங்கம் சரியே - இருந்தாலும் ஒரு நகைச்சுவை திரியை நீங்கள் ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்து கொள்கிறீர்கள் என்று புரிய வில்லை - ஒரு நகைச்சுவையை ஆராய கூடாது - நமக்கு sense of humour குறைந்து விட்டது என்றுதான் அர்த்தம் - நீங்கள் மறுப்பு பதிவுகள் போட போட , அவர்களுக்கு உற்ச்சாகம் அதிக மாகிறது - நம் பதிவுகளுக்கும் ஒரு மரியாதை கிடைகின்றதே என்ற அற்ப சந்தோஷத்தில் மீண்டும் மீண்டும் பொய் சொல்வதற்கும் , கற்பனை குதிரையை தட்டி விடுவதிலும் தன்னை தயார் படுத்தி கொள்கிறார்கள் - சொல்லிவிட்டு போகட்டுமே!! , நம் தலைவரின் புகழில் .0000000001% கூட அவர்களால் குறைக்க முடியாது - பூனைக்கு புலி வேடம் போட்டு அது உறும்பும் , கர்ஜிக்கும் , மானை வேட்டையாடும் என்று சொல்பவர்களின் வார்த்தைகளில் உண்மை புதைந்து இருக்குமா என்று அலசாதீர்கள் - உங்கள் energy இந்த திரிக்கு மிகவும் தேவை
-
7th May 2014, 12:20 PM
#2686
Senior Member
Devoted Hubber
Last edited by abkhlabhi; 7th May 2014 at 12:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th May 2014, 12:36 PM
#2687
Junior Member
Veteran Hubber

ஜெயா டிவி ஒளிபரப்பிய , திரு ரஜினிகாந்த் அவர்களை நகைச்சுவை நடிகர் திரு விவேக் பேட்டிகண்டபோது விவேக் ரஜினியிடம் கேட்ட கேள்வி
கேள்வி - திரை உலகில் நீங்கள் ஸ்டைல் மன்னன் என்று கூறுகிறார்களே .
அதற்க்கு திரு ரஜினியிடம் இருந்து வந்த உடனடி பதில் -
பதில் - இல்லை !
திரை உலகில் ஸ்டைலை முதன் முதலில் கொண்டுவந்தது சிவாஜி சார் தான் !
இதை திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறியது இந்த உலகமே பார்த்த ஒன்று..!
மற்றவருடைய திறமைகளை, சாதனைகளை தனதாக்கி கொண்ட, கொள்ளும் நடிகர்கள் மத்தியில் ரஜினியின் இந்த, உண்மையை தயக்கமின்றி ஒத்துகொண்ட பண்பு பாராட்டத்தக்கது !
-
7th May 2014, 12:51 PM
#2688
Junior Member
Veteran Hubber
1952 தீபாவளி முதல்தான் இந்த திரை உலகம்
"நடிப்பு" என்ற ஒன்றை கற்றுக்கொள்ள தொடங்கியது !
"ஸ்டைல்" என்ற ஒன்றை உணர தொடங்கியது !
டிரெஸ்ஸிங் சென்ஸ் என்ற ஒன்றை புரிந்துகொள்ள தொடங்கியது !
"தமிழ்" என்ற ஒரு மொழியை எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ள தொடங்கியது !
"நல்ல குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்களை பார்க்க தொடங்கியது !
தம்மை போல ஒவ்வொரு கதாபாத்திரங்களை திரையில் அடையாளம் கண்டது !
திரை உலகில் பல முன்னணி கதாநாயகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க முடியும் என்று ஊர்ஜிதபடுத்த தொடங்கியது !
பல புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை உருவாக்க தொடங்கியது !
பல நல்ல நடிகர்களின், இயக்குனர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர காரணமாக விளங்கியது !
இவை அனைத்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற ஒருவரின் தனிப்பட்ட சாதனை !
திரை உலகை, திறமையாளர்களை "நான் வாழவைப்பேன்" என்று வாழவைத்த, திரை உலகிற்கு கஷ்டம் வரும்போது கை கொடுத்த தெய்வம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
தமிழகத்தின் பெருமை இந்த மண்ணின் மண்ணின் மைந்தன் - இந்த நன்றிகெட்ட மண் அதை மறைத்தாலும் மறந்தாலும் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2014, 12:53 PM
#2689
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர்கள் திரு ரவிகுமார் - திரு ரவிகிரண் சூர்யா
1971 பொம்மை இதழில் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை வாசகி எடுத்த பேட்டி - பதிவினை
நான் மக்கள் திலகம் திரியில் பதிவிட்டேன் .எம்ஜிஆர் அவர்களின் பேட்டியே நடக்காத ஒன்று என்றும் கற்பனை என்றும் உங்களின் தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து உள்ளீர்கள் . நடந்த உண்மையான பேட்டியை நீங்கள் நம்பவில்லை என்றால் என்ன செய்ய முடியும் .உங்களிடமிருந்து இப்படி பட்ட ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை .
இப்படி விமர்சனம் செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால .... தொடருங்கள் .
அன்புடன்
வினோத்
-
7th May 2014, 01:00 PM
#2690
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர்கள் திரு ரவிகுமார் - திரு ரவிகிரண் சூர்யா
1971 பொம்மை இதழில் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை வாசகி எடுத்த பேட்டி - பதிவினை நான்
மக்கள் திலகம் திரியில் பதிவிட்டேன் .எம்ஜிஆர் அவர்களின் பேட்டியே நடக்காத ஒன்று என்றும் கற்பனை என்றும் உங்களின் தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து உள்ளீர்கள் . நடந்த உண்மையான பேட்டியை நீங்கள் நம்பவில்லை என்றால் என்ன செய்ய முடியும் .உங்களிடமிருந்து இப்படி பட்ட ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை .
இப்படி விமர்சனம் செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால .... தொடருங்கள் .
அன்புடன்
வினோத்
எஸ்வி சார்
முதற்க்கண் பேட்டியை நான் விமர்சனம் எதுவும் செய்யவில்லை.
நான் எனது பதில் கருத்தை ஒரே ஒரு வரிக்குதான் எழுதினேன். அதாவது சிவாஜி பட்டம் நம் கட்சி வழங்கியது என்ற வரி
பேட்டியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
தயவு செய்து நான் எழுதிய கடைசி வரி படிக்கவும். அதில் அந்த பேட்டியை வெளியிட்டவர்கள் (அதாவது அதை தொகுத்தவர் மற்றும் புப்ளிஷேர் நிறுவனம் ) அப்போதைய கட்சி தம்பட்டதிர்க்கு வெளியிட்டிருக்கலாம் என்றுதான் எழுதியிருக்கிறேன்.
மற்றபடி இப்படி ஒரு பேட்டி நடைபெறவில்லை என்று நான் ஒருபோதும் எழுதவில்லை.
தவறாக என்னை சம்பந்தபடுத்தவேண்டாம் என்று request செய்கிறேன் !
Bookmarks