Page 271 of 401 FirstFirst ... 171221261269270271272273281321371 ... LastLast
Results 2,701 to 2,710 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2701
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for your comments Dear Ragavan sir & chinna Kannan sir


    Dear S. Vasudevan sir,

    Thanks for your wishes

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2702
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    விவாதக்காட்சி தொடர்கிறது (சுருக்கமாக)
    பின்வாங்கிக் கொண்டதாக குற்றம் சுமத்தியவர்கள் இரவிகிரண் சூர்யா எப்போது பின்வாங்கினார் என்பதை தங்களது வழக்கமான தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தனர். திரு முரளி சீனிவாஸ் கேட்டதற்கு பதிலாக ஒருவர் மதுரைவீரன் எப்படி ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்றதை வழக்கமான தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தார். மற்றொருவர், மக்கள் திலகம் அணியில் புகுந்து குழப்பம் விளைவிப்பவர்களை கண்டித்து தனது அணியினர் நடிகர்திலகத்தை, அவரது ரசிகர்களை சீண்டுவதில்லையென உறுதிப்படுத்தினார். இன்னொருவர் எழுந்தார் ... மதியைப்பற்றி தவறாக பல சொன்னார். சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு நதி அணியினர் அதையெல்லாம் சொல்லக்கூடுமென்று சொல்லி அவர்களைப்பார்த்து பரிதாபப்பட்டார். இதன் மூலம் மதியின் படங்கள் செய்த சாதனைகளை நிரூபித்தார். இனிமேலாவது உங்களின் தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரைத்தார். மனமிருந்தால் பாராட்டுங்கள். குற்றத்தையே கண்டுகொண்டிருந்தால்... என்று சொல்லி, தான் மதியின் திரைப்படங்களைப்பற்றி சொல்லிய யாவும் சரியே என்று வலியுறுத்தினார். இரவிகிரண் சூர்யா 'மறப்போம். மன்னிப்போம்' என சொல்லாமல் சொல்லி மதி அணியின் நண்பரொருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறாக விவாதம் இப்போதைக்கு முற்றுப்பெற்றது.
    Last edited by kalnayak; 7th May 2014 at 05:35 PM.

  4. Likes KCSHEKAR liked this post
  5. #2703
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது திரைப்படம் கெளரவம் நவீனமயமாக்கபடுவதர்க்கு முன்பே அரபு நாடுகளில் ஒன்றான குவைத் இல் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நமது நடிக பேரரசரின் படம் தான் !

    இது வெறும் ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !
    நடுநிலை ஏடு ராணி யில் 1975இல் வெளிவந்த ஆவணம் !

    நடிகர் திலகம் படங்கள் நவீனம் இல்லையென்றாலும் உலகெங்கும் வெல்லும் !


  6. #2704
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் 1972உக்கு முன் வந்த அனைத்து படங்களின் வசூலை சர்வ சாதாரணமாக ஊதி தள்ளிய எங்கள் மூக்கையா தேவர் !

    நடுநிலை நாளேடு தினமணியின் விளம்பரம்......இது வெறும் ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !


  7. #2705
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    50 நாட்கள் ஒரு கருப்பு வெள்ளை படத்தின் அசுர சாதனை !

    ரசிகர் மன்ற நோட்டீஸ் தவிர மற்ற நடுநிலை பத்திரிகை வசூலுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம் !

    150 SHOWS ALL CENTERS - ALL SHOWS CONTINUOUS HOUSEFUL !!!! JUST 6 WEEKS COLLECTION is MORE THAN 30 LAKHS !!!!


    Last edited by RavikiranSurya; 7th May 2014 at 06:33 PM.

  8. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  9. #2706
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    நமது திரைப்படம் கெளரவம் நவீனமயமாக்கபடுவதர்க்கு முன்பே அரபு நாடுகளில் ஒன்றான குவைத் இல் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நமது நடிக பேரரசரின் படம் தான் !

    இது வெறும் ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !
    நடுநிலை ஏடு ராணி யில் 1975இல் வெளிவந்த ஆவணம் !

    நடிகர் திலகம் படங்கள் நவீனம் இல்லையென்றாலும் உலகெங்கும் வெல்லும் !

    நண்பர் இரவிகிரண் சூர்யாவே, என்ன மாற்றம் உங்களிடம். நீங்கள் கொடுக்கும் இந்த ஆதாரம் அங்கே 77-ஆம் பக்கத்தில் கொடுத்துள்ள கடைசி பதிவு ஆதாரத்திற்கு முன் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்ததாலா? பாருங்கள் அங்கே ஏதேனும் மாற்றமிருக்கிறதாவென்று.

  10. #2707
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்

    சில பதிவுகளை பார்ப்போம்

    சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

    எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!

    தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -

    ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .

    திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

    இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி

    1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -


    இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,

    1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .

    இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---

    அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...

  11. Likes KCSHEKAR liked this post
  12. #2708
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கையில் இப்படி ஓடியது..அப்படி ஓடியது என்று கதையை இங்கு நாம் எழுதபோவதில்லை. மேலும் இது ரசிகர் மன்றம் விடும் நோட்டீஸ் அல்ல...பத்திரிகையில் இலங்கை பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம்....இந்தியா இலங்கை மற்றும் எந்தனாடானாலும் நடிகர் திலகம் தான் வசூல் சக்ரவர்த்தி என்று பட்டவர்த்தனமாக கூறும் ஆவணம்....! இதுபோல உண்மையான ஆவணங்கள் இருந்தால் அனைவரும் பதிவிடலாம்....

    உத்தமன் படத்திற்கு முன் வந்த அனைத்து படங்களின் சாதனையை தவிடு பொடியாகி ஊதி தள்ளிய வசூல் புயல் நம் நடிகர் திலகத்தின் உத்தமன்





    Last edited by RavikiranSurya; 7th May 2014 at 09:36 PM.

  13. Likes KCSHEKAR liked this post
  14. #2709
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிரிப்பு பாதி அழுகை பாதி…
    *
    அத்தியாயம் ஆறு
    *
    “சரி.. கதை நல்லா இருக்கு.. முழு நீள காமெடியா வரும்..என் கூடவே வருதே ஒரு ஃப்ரண்ட் ரோல்..யாரப் போடலாம்னு நினைக்கறே” ந.தி..கேட்க நீலகண்டன் “டி.ஆர். ராமச்சந்திரனை போடலாமா இல்ல வேற யாரையாவதான்னு ஒரு டிஸ்கஷன்.. நீங்க என்ன சொல்றீங்க..”
    *
    “அதான் ஒல்லியா வெடவெடன்னு இருப்பானே.. அந்தப் பையனப் போடு சூட் ஆகும்..போய் க் கேளு.. அந்த இன்னொரு வேஷம் இருக்கே ஆள் மாறாட்ட வேஷம் அதையும் இவனையே கொடு.. சரியா வரும்..” ந.தி சொல்ல பந்துலுவும் நீலகண்டனும் போய் சந்தித்தவர் யாரென்றால்…
    *
    சந்திர பாபு.. அவரை அவர் வீட்டில் சந்தித்து ” இந்த மாதிரி ந.தி யோட படம்.. அவரே உங்களைக் கேட்கச் சொன்னார்..நீங்க கால்ஷீட் கொடுத்தீங்கன்னா”
    *
    “ஓ.. மிஸ்டர் சிவாஜி (சந்திரபாபு எல்லோரையும் மிஸ்டர் போட்டுத்தான் பேசுவாராம்) சொன்னாரா..அப்ப சரியாத் தான் இருக்கும்.. நீங்க என்ன பண்றீங்க.. மிஸ்டர் சிவாஜிக்கு எவ்வளவு கொடுக்கறீங்களோ எனக்கு அத விட ஒரு ரூபா கூடக் கொடுங்க..”
    *
    கொஞ்ச நேரம் மூச்சு மறந்து போய் உணர்வுகள் கொந்தளிக்க பந்துலுவும் நீலகண்டனும் ஒன்றும் பேசாமல் ந.தியிடம் திரும்பி விஷயத்தைச் சொன்னார்கள்..
    *
    ந.தி, “ நீலா, பந்துலு,, என்ன இது.. அவன் இப்படித் தான் லூஸீத் தனமா சில சமயங்கள்ல பேசிடுவான்..விடுங்க.. அவனையே போடுங்க..அவன் கிட்ட ஃஸ்டஃப் இருக்கு.. சரியா வரும்” என்று சமாதானப் படுத்திய பிறகு தான் அந்தப் படத்திற்கு சந்திரபாபுவையும் புக் செய்தனர்..
    *
    அந்தப் படம் சபாஷ் மீனா..(முகில் என்பவ்ர் எழுதிய சந்திர பாபு பற்றிய புத்தகத்தில் இருந்து)

    *

    ந.தி வெகுஇளமை..அவருடன் நாடக நண்பனாக சந்திரபாபு.. ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா – என அழகாக ந.தி பாட சந்திரபாபு அபினயிக்க.. ஆசையிருந்தா போதுமா ஒங்க அப்பா மனசு மாறுமா என்கையில் ந.தியின் அப்பா வந்து விட ( டி.பாலசுப்ரமணியன் என்ற நடிகர்) ந.தியின் துடிப்பு, சந்திரபாபு – எனப் பார்க்கையில் பீறிட்டு வந்த சிரிப்பை மறக்க முடியாது..

    *

    யா.. முதன் முதல் இந்தப் படத்தை தேவி தியேட்டர் ரீ ரன்னில் பார்த்தேன்.. நைட் ஷோ என நினைவு.. சாதாரண நாள்..ஆனால் ஹவுஸ் ஃபுல்..

    *

    பின் எஸ்.வி.ரங்காராவிடமும் அப்பாவிடமும் சேர்ந்தாற்போல் இருவர் மாட்டுவதும், பின் நடுவில் ஒரு நாடகத்திலேயே கோமாளிகள் என்ற டிராமா என நினைவு… பெற்றவனே வந்தாலும்…என்று பாடுகையில் பெற்றவரே வந்து விட ஓடி விடுவதும்..ம்ம் ஒரே சிரிப்பு தான்..
    *

    மாலினி ந.திக்கு ஜோடி.. ஓ.கே அழகு தான்.. சர்ரோஜாதேவி இள்ள்ளமையாக இருப்பவரை சந்திரபாபுவுக்கு ஜோடியாகப் போட்டிருப்பார்கள் ( நற நற)

    *
    க்ளைமாக்ஸில் ரிக்*ஷாக்கார சந்திர பாபு – நார்மல் சந்திரபாபு ந.தியும் சேர்ந்துகுழம்புவது எனக் கூத்தாக இருக்கும்..

    *
    டி.ஜி லிங்கப்பாவை ச் சொல்லாமல் விட முடியாது.. ஆசைக்கிளியே கோபமாவில் சந்திரபாபுவிற்கு சீர்காழி குரல் போட்டவர்.. .. சிவாஜி இவரிடம்..”ஒரு சூப்பர் டூப்பர் மெலடி கொடுங்க பாக்கலாம்..ஆனா டிஃபரண்ட்டா இருக்கணும்”
    *

    *”என்னண்ணா ஒங்களுக்கு இல்லாததா.. நாளைக்கு வெள்ளன எழுந்திருச்சு மெட்டோட வந்துடட்டுமா..அப்புறம் பாட்டையும் எழுதச்சொன்னா போச்சு.. நம்ம பாலு தான்(கு.மா.பாலசுப்பிரமணியம்) தமிழ்ல பொளந்துகட்டுவார்..ஆனா நான் சொல்ற ஆள் தான் போடணும்.. குரல் வித்யாசமா இருக்கும் சரியா..”*

    *

    *”நீ யார வேணும்னாலும் போட்டுக்க எனக்குத் தேவை வித்யாசமான பாட்டு.. சரி சரி.காலைல டிஃபனுக்கு வந்துடுங்க..”

    *

    இரவிலேயே யோசித்து மெட்டுப் போட்டு கு.மா பாலசுப்பிரமணியத்தைப் பாட்டெழுத வைத்து அதிஅதிகாலையில் எழுந்து குளித்து ந.தி வீட்டிற்கு விடு ஜூட்..

    *
    “வாங்க லிங்கப்பா..வாங்க கவிஞரே.. கொண்டாந்தீங்களா”
    *
    ஆர்மோனிய பெட்டியில் விரல்கள் தாண்டவமாட… கூட வந்த மியூஸிக் ஆசாமிகளில் குரல் வளம் உள்ள ஒருவர் பாட-
    அது தான் காணா இன்பம் கனிந்ததேனோ..’
    *

    நல்லா இருக்குய்யா.. நம்ம செளந்தர் தானே.பாடப் போறான்.

    *

    இல்லீங்க்னா.. மோடின்னு ஒரு ஆள்..”


    *

    “யாரு..”

    *

    “இதோ இப்பப் பாடினாரே இவர் தான்.. ப்ளஸ் பி.சுசீலா..”

    *

    *”ஓ.கே.ஓ.கே.. லிங்கப்பா.. இந்த ராகம் பாகஸ்ரீ தானே”

    *
    “அண்ணா.. ரொம்ப சரின்னா..பிரமிப்பா இருக்குண்ணா..”

    *சரி போய் அழகா ஃபுல் பாட்டையும் போட்டுக் கொண்டுவா கேக்கலாம்..”

    *

    பாட்டு ஃபேமஸ் ஆனாலும் மோடியின் குரல் மக்கள் மனதில் எடுபடவில்லை என நினைக்கிறேன்.. அதே படத்தில் லிங்கப்பாவின் இன்னொரு பாட்டு..

    *

    மிஸ்ர் பெஹாக் என்ற ராகத்தில் அமைந்த சித்திரம் பேசுதடி.. முதலில் ந.தி பாடுவது போலவும், பின்னால் அந்த மாலினி பாடுவது போலவும் வரும்..

    *

    ந.தியின் அருமையான நகைச்சுவை நடிப்பில் மிளிர்ந்த படங்களில் இதுவும் ஒன்று..

    *

    அடுத்த அத்தியாயத்திற்காக என்ன பண்ணலாம்..

    *

    யெஸ்..இதிலும் வெகு வெகு யூத்தான ந.தி.. ஜாலியாகத் தான்போகும் படத்தில் அழுகை துடிப்பு இனிமையான பாடல்கள் என எல்லாம் உண்டு…இருப்பினும் என்னனாக்க..

    *

    ஒரு காமெடி நடிகர் தான் படத்துல வில்லன்.. ஒரு வில்லன் நடிகர் தான் படத்துல சப்போர்ட்டிவ் ரோல்..அப்புறம்னு சொன்னா கண்டு புடிச்சுடுவீங்க தானே..

    *

    எனில் அடுத்த போஸ்டில் வரட்டா

    *
    (தொடரும்)

  15. Likes KCSHEKAR liked this post
  16. #2710
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முதலமைச்சர்களை பார்க்க, அரசியல்வாதிகளை பார்க்க எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வரலாம்..வந்திருக்கிறார்கள்..
    இவர்கள் காசுகொடுத்து வண்டியில் கொண்டுவந்த அரசியல் கும்பல் அல்ல ! தானாக அன்பால் வந்த கூட்டம். !

    ஒரு நடிகனை பார்க்க ...அது நமது நடிகர் திலகத்தை பார்ப்பதற்குதான் !

    Last edited by RavikiranSurya; 7th May 2014 at 09:47 PM.

  17. Likes KCSHEKAR liked this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •