Page 275 of 401 FirstFirst ... 175225265273274275276277285325375 ... LastLast
Results 2,741 to 2,750 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2741
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    அன்புள்ள முரளி - உங்களிடம் இன்னும் கற்று கொள்ளவேண்டியவைகள் பல . இந்த அடக்கம் , புத்தரின் கோட்பாடு , கண்ணியம் தவறாத வார்த்தைகள் , காந்தியின் அஹிம்சா வழி - இன்னும் எவள்ளவோ ! இவைகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் இருந்தால் உங்கள் வார்த்தைகள் பொன்னாக மதிக்கப்படும் - இல்லாவிட்டால் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர் தான் --- நமக்கு மட்டும் இந்த பண்புகள் இருந்தால் போதாது - அடுத்த தலைமுறை வேண்டுமானாலும் நம் பண்புகளை வியந்து பாராட்டலாம் , எழுதலாம் .. இந்த தலைமுறை இன்னும் நம்மை பழைய பஞ்சாங்கம் என்றுதான் தூற்றும் - கொஞ்சம் கூட தயிரியம் இல்லாதவர்கள் - உண்மைகளை கூட புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல தெரியாதவர்கள் என்று தான் ஏசும் --- உங்களுக்கு ஒரு பழ மொழியை நினைவு படுத்த விரும்பிகிறேன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது --------- . உங்களின் அடக்கமான வார்தைகளால் அவர்கள் ஏதாவது இதுவரை கற்று கொண்டார்களா ? - மாறாக இன்னும் பொய்களை தங்களின் பிறவி சொத்தாகத்தான் வைத்து கொண்டிருக்கிண்டார்கள் - NT yin படம் ஓடவில்லை என்பதை அந்த திரியில் யாராவது சொல்லும் வரை நாம் காத்திருப்பதில்லை - நம்மில் ஒருவரே இந்த படம் பார்க்க தேவை இல்லை என்று எழுதிவிடுவார் - அங்கே பாருங்கள் - LIC மாடியில் தீ , சென்ட்ரல் station இல் train வரவில்லை , மாடியில் இருந்த புறா ஒன்று இறந்துவிட்டது - அதனால் கூட்டம் குறைந்து விட்டது - ஆனாலும் theater இல் வேலை செய்யும் முனியம்மாவும் அவரின் குடும்பமும் அந்த படத்தை தினமும் பார்த்து வெற்றி அடைய செய்து விட்டார்கள் என்று எழுதுவார்கள் - இவர்களா நம்முடைய உண்மைகளை தெரிந்து கொண்டு ஒத்து கொள்ள போகிறார்கள் ? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம் . முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - அவர்களுடைய பொய் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் - இது நமக்காக மட்டும் அல்ல - அடுத்த தலைமுறைக்காகவும் கூட

    ஒரு பாம்பு ஒரு சாது சொன்னார் என்பதற்காக தன்னுடைய சீறும் இயல்பையும் குறைத்து கொண்டு உயிருக்கு ஊசலாடிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் - நாம் சீற வேண்டும் தேவைப்பட்டால் - ஆனால் அவர்களைப்போல அநாகரிகமாக அல்ல - நம்முடைய எழுத்துக்கள் அவர்களை புண் படுத்த வேண்டாம் - ஆனால் அத்தனையும் உண்மை என்று அவர்கள் உணரும்படி இருக்க வேண்டும் - நம்முடன் விளையாடுவது ஒரு நெருப்புடன் , சிங்கத்துடன் விளையாடுவதைப்போல - ஆனால் நாம் நண்பர்களுக்கு நண்பர்கள் - கண்ணியம் தவற மாட்டோம் - அதே சமயத்தில் பதுங்கி கிடந்தது உபதேசம் செய்யும் துறவிகள் அல்ல நாம் - இதை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்வாகளோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நம்முடைய இனிய நண்பர்களாகி விடுவார்கள்
    திரு. ரவி உங்கள் கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். நண்பர் இரவிகிரண் சூர்யாவும், மற்றவர்களும் தங்கள் பதில்களை இங்கே மட்டும் வைக்காமல் அங்கேயும் வைக்கவேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா - பதிவை அழிக்காமல் விடுவார்களா? பழிச்சொல் சொல்லாமல் இருப்பார்களா? நடக்காததை நடந்தது, நடந்ததை நடக்காதது என மறுக்காமல் இருப்பார்களா? மீண்டும் பார்க்கலாம். எதையும் உணர நினைத்தால் உணரலாம். உயர நினைத்தால் உயரலாம். வாழ நினைத்தால் வாழலாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2742
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம். //

    color + Kashmir 'Raman Thediya Seethai', Color 'Naan Yen Pirandhen' padangalai Black & White 'Pattikkada patanama' padam Oda Oda virattiyapinnum....

    Color Brammandam 'Neerum Neruppum' padaththai Black & White 'Babu' Oda Oda virattiya pinnum ippadiyellaam ezhudha eppadiththaan manam thunigiradho theriyavillai.

  4. #2743
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    'Ninaiththadhai Mudippavan' padam ange 100 naal odiyadhu, inge 100 naal odiyadhu endru pulukikkondirundha aasaamigalukku naduvil, andhappadam Maduraiyil mattume 100 naal odiyadhu endra unmaiyai pottu udaiththa nanbar Vinodh (esvee) avargalukku nandri.

    LIC buildingil neruppu pidiththadhaal Devi Paradaisil odavillai, sari. Agasthiyavilum odavillaiye ange endha building patri erindhadhu?.

    Reason kandu pidikkiraanga paarungappaa, adeyappaa.

  5. #2744
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    நமது திரி நண்பர்களுக்கு,

    நீங்கள் யார் என்ற கேள்வி மிக அதிகமாக கேட்கப்பட்ட நபரான நண்பர் கல்நாயக் அவர்கள் வேறு எந்த உறுப்பினரின் பினாமியும் அல்ல என்பதை இந்த திரியின் Moderator என்ற முறையில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் தன profile-ல் குறிப்பிட்டிருப்பது போல் சென்னையில்தான் வசிக்கிறார். ஆகவே இனிமேல் இது போன்ற விவாதத்தை அறவே தவிர்த்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    Thanks a lot Murali sir for your explanation. (puriya vendiyavargalukku purindhaal sari)

  6. Likes KCSHEKAR liked this post
  7. #2745
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    When mentioning about Thiruvaiyaru, Mr.Yukesh Babu should not forget what result MGR faced in 1980 PARLIMENT ELECTION. ('thOlviye kaanaadhavar' endrellaam sollappattavarukku kidaiththa seats 2 out of 40)

    ottumoththa tamilnade MGR kai kaattubavarukkuthaan vottu podum endra maaya thirai vilagiyadhu andha electionilthaan.

  8. #2746
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Very Apt reply Mr Murali Sir but at the same time we should not keep quite when they
    write false info about Our NT.

    Here I am totally agree with Mr Ravi.

    Regards

  9. #2747
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Very Apt reply Mr Murali Sir but at the same time we should not keep quite when they
    write false info about Our NT.

    Here I am totally agree with Mr Ravi.
    Yes,

    avargal verum kaiyaal muzham podumbodhu, we are having plenty of Murali sir's Statistical informations and Pammalar's newspaper evidences.

    why should we keep quit?. let public know who is the real Emperor of Box Office. It is none other than our NT.

  10. #2748
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    Thiruvaiyaru matter -nitharsanamana unmai.Thank u RAVI KIRAN sir for your points regarding Thiruvaiyaru matter.
    Last edited by vcs2107; 9th May 2014 at 10:07 PM.

  11. #2749
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    In 1980- CONGRESS main proboganda is Our leader Sivaji who alone canvassed for congress and DMK .We won 38 seats out of 40 seats in parliment..
    In 1984-when mr .MGR was hospitalised in USA ,our leader sivaji alone canvassed for AIADMK and CONGRESS .Because of his tour in 234 seats AIADMK- CONGRESS alliance captured more than 3/4 of seats.Not only that, that time only our fans association was given 5 MP seats and 6 MLA seats.We won all the seats i.e 100 percent victory.

  12. #2750
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கார்த்திக் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ரவுண்டு வந்ததால் அவரின் சுவையான எழுத்துக்களை மீண்டும் படிக்கவும் மற்றவர்களும் இடையூறு இல்லாமல் அதை தொடர்ந்து வாசிக்கவும் சற்று இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து

    விட்ட இடம் 1972-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கம். பட்டிக்காடா பட்டணமா ஓபனிங் ஷோ. அதை பற்றிய சென்ற பதிவின் இறுதி பாரா.

    அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.

    உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.

    இரண்டாவது சரணம் வந்தது

    ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க

    ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

    வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி

    வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி


    1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்

    சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்

    செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

    மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த

    மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,


    ரசிகர்களை அலப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

    பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.

    அன்புடன்

  13. Likes KCSHEKAR liked this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •