ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து, மத்திய, மாநில விருதுகள் பெற்றும் இளையராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது இன்னும் கிடைக்கவில்லையே... ஏன்?
பால்கே விருது மட்டுமல்ல... உண்மையில் வரவேண்டிய எத்தனையோ விருதுகள் ராஜாவுக்கு பாக்கி இருக்கிறது. ஆனாலும் இளையராஜா இந்த விருதுகள் வந்தால் மட்டுமா பெருமை அடையப்போகிறார்? திண்ணையில் பாடிக்கொண்டு இருந்த பண்ணைபுரத்து பைந்தமிழ்க் குயில் இப்போது நாடுகள் கடந்து தமிழர் உள்ளங்களில் எல்லாம் கூடுகட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. வயது கடந்தவர்களின் வானத்தில் இன்னும் இளமை ஜொலிக்கவைக்கும் வானவில்தான் இளையராஜா. நித்திரை வராமல் புரண்டு படுப்பவர்களுக்கு தூக்க மாத்திரை. காலை நேரத்துக் கவலையைக் கரைக்கும் கானக டானிக். 'செவி உள்ளவர்கள் கேட்கக் கடவது’ என்பதே ராஜா விதைத்து வைத்துவிட்ட வேதம். அப்புறம் எதற்கு விருதுகளை வேண்டி நிற்கும் வேதனை? விடுங்கள்!
வரலாறு, பொக்கிஷம் என்கிறார்கள் நீயல்லவா அன்றும், இன்றும், என்றும் வரலாறு போற்றும் பொக்கிஷம் !!!
எவ்வளவு அழகான, அருமையான தமிழ் உச்சரிப்பு !!!
He is gasping for air when he talks. He never gasped before even when he sings. I hope, wish and pray this is just an anxiety nothing more then that. Almighty God, Please bless him with good health and a long life.
இசைஞானி அவர்கள் எழுதிய திருப்பாவை பாடல்கள் புத்தகமாக தயாராகிக்கொண்டுள்ளது. குமுதம் பதிப்பகம் பெருமையுடன் வெளியிடும் இந்த நூல் தலைவர் பிறந்த நாளான ஜீன் 2ம் தேதி வெளியிடப்படும் அதோடு குமுதத்தில் வெளிவந்த இசைஞானியின் கேள்வி-பதில் புத்தகமும் வெளிவருகிறது.
I remember I have been to ANNAKKILI in my native Place (Central Cinema), Just to see this 'SLIDE'....Thanks POEM for making me to remember ..."The Green & Great Memroies of IR"...
Bookmarks