Page 295 of 401 FirstFirst ... 195245285293294295296297305345395 ... LastLast
Results 2,941 to 2,950 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2941
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    We have to salute the efforts of Mr Ravi and Mr Rahul in taking this
    prestigious thread to the new level. Please keep up the tempo.

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2942
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மிக்க நன்றி

    ரவி சார் ,கோபால் சார் , kc சேகர் சார் ,சின்ன கண்ணன் சார் , வாசுதேவன் சார்

  4. #2943
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நெல்லை சீமையில் ஓரிரு வாரங்களுக்கு முன் குணசேகரன் திரையரங்கில் காட்சி தந்து மக்கள் மனதில் ராஜாவாக முடி சூடினார் என்றால் நாளை 23.05.2014 வெள்ளி முதல் அந்த ராஜாவே வந்து ஆளப் போகிறார். நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் நாளை முதல் தினசரி 4 காட்சிகளாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா விஜயம்.

    நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

    அன்புடன்

  5. #2944
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சின்னதாய் நடிகர் திலகத்துக்கு ஒரு அந்தாதி (பத்து வெண்பாக்கள்) எழுதிப் பார்த்தேன்..

    ***
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..

    *
    என்றென்றும் எண்ணவும் ஏட்டில் எழுதவும்
    தண்ணொளி பெற்றுவிட்ட தங்கமாய் – மின்னி
    துடிப்பாய் இருந்திடும் தூய்மையாய்த் தோன்றும்
    நடிகர் திலகம் நடிப்பு

    *

    நடிப்பென்று சொன்னாலும் இல்லையவர் நெஞ்சம்
    வடிக்கின்ற ஆற்றல் அறிவீர் – விடியாத
    வெண் திரைக்கு நன்றாக வித்தியாசம் கொண்டுவந்த
    மின்னலாம் ஆவார் அவர்..

    *

    அவர்தான் நடிப்பென்று ஆய்ந்தவர்கள் சொல்ல
    கவர்ந்திடும் கண்களால் பேசி – தவறென்று
    தக்கபடி சொல்லியே சிரிக்கும் அடக்கத்தைப்
    பக்குவமாய்ப் பெற்றவர் பார்..

    *

    பாரில் இவர்க்குநிகர் பார்த்தாலும் எந்தவொரு
    ஊரில் இவர்போலே யாருமிலை – நேரிலோ
    மென்சிரிப்பு நல்லாற்றல் மேன்மைக் குணமென்று
    தன்னிறைவு பெற்றவர் தான்..

    *

    தானாட விட்டாலும் தாமாய்த் தசையாடக்
    காணாத பேருக்குக் காட்டியவர் – வீணாய்ப்
    புறம்பேசிப் பின்பக்கம் துற்றியவர் தம்மை
    புறந்தள்ளி விட்டவர் தாம்..

    *

    தாம்தூமாய்த் தம்நடிப்பே மேலென்று தாவியவர்
    ஆமென்று சொல்வார் இவர்நடிப்பை மேம்பட்டு
    பண்பட்டு மின்னிடும் பட்டென மக்களின்
    கண்ணைக் கவர்ந்தவர் காண்..

    *

    காண்பதைக் கைப்படுத்தி காட்சியிலே நன்றாக்கித்
    தூண்டி நடிப்பினைத் துல்லியமாய் -வேண்டுதற்போல்
    மீண்டும் விழிபார்க்க மேலும் மெருகேற்றித்
    தீண்டினார் நம்நெஞ்சில் தேன்..

    *

    தேனென்றும் பாலென்றும் தேவதையாய்ப் பாவையர்முன்
    தூணென்றே காதலினைத் தூக்கியவர் – மீண்டுமே
    கண்டிப்பாய்க் காதல் கவித்துவம் மேலேற்றித்
    திண்ணமாய்ச் செய்தவர் தான்..

    *

    தான்தான் குழம்பெனில் தக்க ர்சமாக்க
    வீண் எண்ணம் என்றுமே விட்டவர் – மேன்மேலும்
    தீட்டி நடிப்பைத் தெளிவாக வெண் திரையில்
    காட்டியவர் நம்மிடம் ஆம்..

    *

    ஆமென்று சொல்லி அழகாய் மறுதலித்துப்
    போமென்கும் பொய்கொண்ட வெண் திரையில் - நாமென்றும்
    விந்தையாய்ப் பார்க்கும் வியப்பாம் நடிப்பினால்
    சிந்தை நிறைந்தவர் தான்

    *
    Last edited by chinnakkannan; 23rd May 2014 at 02:18 PM.

  6. Likes KCSHEKAR, Russellhaj liked this post
  7. #2945
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    சமீபத்தில் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தேன். அங்கு அன்னலெட்சுமி என்ற ஒரு ஹோட்டலில் காலை உணவு அருந்தச் சென்றேன். அப்போது அந்த ஹோட்டல் ஹாலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட அனைத்து திரைக் கலைஞர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. பிரதானமாக நம் நடிகர்திலகத்தின் கர்ணன் திரைப்பட புகைப்படம் இடம்பெற்றிருந்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அதன் பின் அங்கு வந்திருந்த பலரும் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எனக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. Likes chinnakkannan liked this post
  9. #2946
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Ck - கண்ணதாசன் , வாலி , கல்யாண சுந்தரம் , வைரமுத்து இவர்கள் வரிசையில் நீங்கள் வருவீர்கள் என்பது அறிந்ததே - இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று -

    முதலில் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்திதில் ஒரு பதிவு - இதற்கே ஒரு தனி சபாஷ் கொடுக்கலாம்

    வெண்பாக்களில் தமிழை அதனின் விருப்பத்தில் விளையாட விட்டுருக்கிண்டீர்கள் - இவ்வளவு சுதந்திரம் தமிழுக்கு கொடுத்து வேலை வாங்கினவர்களை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை - தமிழை தமிழாக படிக்க வைத்ததற்கு இன்னும் ஒரு சபாஷ் ..

    அழுகை பாதி , சிரிப்பு பாதியாக இருந்தவர் , கவிகுயிலாக மாறிய காரணம் தான் புரியவில்லை !

  10. #2947
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Kcs - மகிழ்ச்சிக்கு ஒரு தனிப்பட்ட குணம் உண்டு - பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது , அதன் அளவு பல மடங்கு அதிகரிக்கின்றது - பல தடவை வெளிநாட்டுக்கு செல்லும் போது , ஒரு நல்லா தமிழ் பேசுபவரை பார்க்க மாட்டோமா என்று ஏங்குவேன் - கிடைத்தவுடன் என்னவோ அந்த நாடே நமக்கு அடிமை என்ற எண்ணம் வந்துவிடும் - இப்படித்தான் நம் கர்ணனை எங்கு சந்தித்தாலும் நமக்கு ஏற்படும் உண்மையான உணர்வு - நன்றி உங்கள் மகிழ்ச்சியை இந்த திரியில் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதற்கு

  11. Likes KCSHEKAR liked this post
  12. #2948
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி ரவி ஆமா புரியாம நானெங்கே எழுதினேன்..

    //அழுகை பாதி , சிரிப்பு பாதியாக இருந்தவர் , கவிகுயிலாக மாறிய காரணம் தான் புரியவில்லை !// ஆமா நீங்களும் ராகுலும் கேப் பே கொடுக்காம விளையாடிக்கிட்டிருக்கீங்க.. நானெந்து செய்யு அதான் எனக்கு (கொஞ்சம்) தெரிந்த படி எழுதிப் பார்த்தேன்..அதிலயும் கொஞ்சம் தப்பிருந்ததா (இலக்கணம்) நைஸா கரெக்டும் பண்ணிட்டேன்
    Last edited by chinnakkannan; 23rd May 2014 at 02:11 PM.

  13. #2949
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கண்ணா! உங்கள் தமிழார்வத்தையும் கவிதை எழுதும் திறன் பற்றியும் மற்றவர்கள் புகழ்வதை படித்திருக்கிறேன். ஆனால் நேரிடையான வாசிப்பு அனுபவம் இல்லை. உங்கள் நடிகர் திலகம் அந்தாதி படிக்கும் போதுதான் தெரிகிறது. அந்த பாராட்டுகளுக்கெல்லாம் நீங்கள் தகுதியானவர்தான் என்று. முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!

    நிறைய எழுதுங்கள்!

    அன்புடன்

  14. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellhaj liked this post
  15. #2950
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சேகர் சார்,

    ஏற்காடு போஃட்டோ ஒரு சுவையான செய்தியை வெளிப்படுத்துகிறது. அதாவது நமது கண்ணுக்கு தென்படாமல் எத்தனையோ சிகர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைதான் சொல்கிறேன். நன்றி!

    ரவி,

    நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி எழுதும்போது அதற்கு பிடிக்கும் டைட்டில் இருக்கிறதே அதுதான் கூடுதல் சுவாரஸ்யம். லேட்டஸ்ட் உதாரணம் ஜோடிகள் இல்லையடி பாப்பா! வாழ்த்துகள்!

    அன்புடன்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •