Page 297 of 401 FirstFirst ... 197247287295296297298299307347397 ... LastLast
Results 2,961 to 2,970 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2961
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்கள் :

    மை ஸ்வீட்டி... typical 70's சாங்

    செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று பாடலும் , காட்சிகளும் கண்ணுக்கும் , காதுக்கும் குளிர்ச்சி
    கார்த்திகை மாசமடி கல்யாண சீஸனடி- கிளப் சாங் , பாடலில் ஒரு பரபரப்பு இருக்கும் , காரணம் படத்தின் விறுவிறுப்பு , ஒரு ட்விஸ்ட் இந்த பாடலில் இருக்கும் , typical treat from MSV


    ஏன் இந்த படத்தை பற்றி எழுதினேன் ?

    திரு சிவாஜி செந்தில் சார் உடன் பேசிய பொது கிடைத்த அரை மணி நேரத்தில் பல விஷியங்களை பற்றி பேசினோம் , அலசினோம் , பேசிய விஷியத்தில் அதிக weightage கொடுத்த விஷியங்கள் நடிகர் திலகத்தின் action படங்கள், காட்சிகள் குறிப்பாக தங்கசுரங்கம் , சரி தங்கசுரன்கத்தை பற்றி எழுதலாம் என்றால் அதை ஏற்கனனவே எழுதி விட்டேன் , பார்த்ததில் பிடித்தது என்ற series யின் ஆரம்பமே அந்த படம் தான் , இருந்தாலும் அந்த படத்தை பற்றி நான் எழுதியது மீண்டும் படிக்கும் பொது நான் எழுதியது எனக்கே திருப்தி இல்லை . மீண்டும் அந்த படத்தை எழுதலாமா , improvement எழுதுவது போல என்று என்னை நானே கேட்டு கொண்டது உண்டு , எழுதி விட்டேன் , இந்த ஒரு வார இடைவெளி அதற்க்கு தான் , இருந்தாலும் ஏற்கனவே எழுதியதை மீண்டும் பதிவு செய்ய ஒரு தயக்கம் , அதனால் வேறு ஒரு துப்பறியும் படம் தேடிய பொது சிக்கிய படம் தான் இந்த வைரநெஞ்சம்

    So leaving aside all these lets discuss about the movie


    படத்தின் மிக பெரிய பலம் + points என்றால் சிவாஜி சார் , இசை குறிப்பாக பின்னனி இசை , ஒளிபதிவு திரைகதையின் வேகம் , சில திருப்பங்கள்

    படத்தின் negative points :

    காலதாமதம் , நடிகர் திலகத்தின் வரலாறு காணாத சரித்ரம் படைத்த 1972 வருடத்தை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை , திரு கோபால் அவர்கள் அந்த வருடம் வந்த படங்களை பற்றி எழுதியே உள்ளார்

    ஹீரோ 72 என்று வர வேண்டிய படம் 1975 ல் தான் வந்தது , இந்த 3 வருட காலதாமதத்தில் ஏக பட்ட மாற்றங்கள் EXTERNAL FACTORS .

    இந்த விஷயம் எதுவுமே தெரியாமல் இந்த படத்தை பார்த்தல் , இந்த external issues யை தள்ளி வைத்து பார்த்தல் படத்தை தாரளமாக ரசிக்கலாம் .

    சரி external factors தான் காரணமா என்றால் இல்லை

    இந்த மாதிரி துப்பறியும் கதையை ஒரு huge canvas மீது காட்டினால் தான் எடுபடும் . முக்கிய காட்சிகள் கொஞ்சம் பிரமாண்டமாக எடுத்து இருக்கலாம் . படம் மிக சிறிய படம் , இன்னும் 2 ரீல் அதிகம் இருந்து , கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி இருந்தால் , (நடிகர் திலகத்தின் அறிமுகம் கொஞ்சம் 1/2 மணி நேரம் கழித்து தான் , இது என் பொறுமையை சோதித்து விட்டது )

    ஒரே வரியில் :

    சில குறைகள் இருந்தாலும் விறுவிறுப்பு அதிகம் , அதனால் கண்டிப்பாக பார்க்கலாம்

  2. Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2962
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear all
    today daily thanthi write up by arurdas about thenum paalum.
    "SJ" kku alave illai
    rgds
    gk
    gkrishna

  5. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  6. #2963
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Dear Raghul Ram,

    Nice write-up about 'Vaira Nenjam', a movie close to my nenjam. I feel I can re-produce my previous write-up abput plus and minus of this film. Here is the 'meel padhivu'....

    ‘வைர நெஞ்சம்’ படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டுகள்:

    1) ஸ்மார்ட்டான நாயகன், நாயகி மற்றும் வில்லி. ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகத்துக்கு மிக அருமையான மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல். (ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகம் விக் வைத்து நடித்த ஒரே படம் இது. விடிவெள்ளி, நெஞ்சிருக்கும்வரை, ஊட்டி வரை உறவு, சிவந்தமண் அனைத்திலும் ஒரிஜினல் முடி).

    2) அருமையான பாடல்கள் மற்றும் இசை. மெல்லிசை மன்னரின் அற்புத உழைப்பில் 'ஏஹே மைஸ்வீட்டி', 'செந்தமிழ் பாடும் சந்தன காற்று', 'நீராட நேரம் நல்லநேரம்', 'கார்த்திகை மாசமடி', 'அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட' என அனைத்துப் பாடல்களும் இனிமையோ இனிமை.

    3) உடையலங்காரம் (Costumes): நட்சத்திரங்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உடையலங்காரம் வெகு நேர்த்தி. நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா மற்றும் வில்லனின் கையாள் என அனைவருக்கும் அழகான உடைகள். நடிகர்திலகம் அணிந்து வரும் உடைகளனைத்தும் கண்களுக்கு விருந்தோ விருந்து. எல்லா வித உடைகளும் SUPER MATCH.

    4) கிளுகிளுப்பு: நடிகர்திலகமும் பத்மப்ரியாவும் கொஞ்சலும், சிணுங்கலுமாக காதல் செய்யுமிடங்கள் நல்ல இளமை விருந்து. பத்மப்ரியா இந்தப்படத்தில் இருந்த இளமையும், அழகும், கவர்ச்சியும் அவர் நடித்த வேறெந்தப் படத்திலும் இல்லை. அதுபோலவே வில்லன்கூட்டத்தின் கையாளாக வரும் சி.ஐ.டி.சகுந்தலாவும் சரியான செக்ஸ் பாம். பாலாஜியின் பிறந்தநாளில் சேலையழகில் ஷோபா ராமநாதன் என்ற பொய்ப்பெயருடன் அறிமுகமாகும் இடமும், தொடர்ந்து பார்ட்டியில் நடனமாடிக்கொண்டே நடிகர்திலகத்துடன் வைர வியாபார பிஸினஸ் பேசும் காட்சியும் செம க்யூட். 'நீராட' பாடல் காட்சியின்போது சரியான இளமை விருந்து. ஒருகாட்சியில் பாலாஜி, சகுந்தலாவை வெறுமனே ஒரு டவலில் சுற்றி அள்ளிக்கொண்டு போகும் காட்சி பலரை கனவில் வந்து தொல்லைப்படுத்தியிருக்கும். அவ்வளவு அட்டகாசம். மற்றும் கிளுகிளுப்பு.

    5) ஒளிப்பதிவு: படம் முழுவதும் யு.ராஜகோபால், பெஞ்சமின் இருவரின் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். கண்ணைக்கவரும் வண்ணக்கோலம். 'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று' பாடலில் கடற்கரை ஓய்வுக்குடில்களை படம்பிடித்த அழகு. இரவுக்காட்சிகளைப்படம் பிடித்த அழகும் அப்படியே. நைட்ஷோ சினிமாவுக்குப் போய்த்திரும்பும் பத்மப்ரியா பேங்கில் கொள்ளை அடிக்கவந்த கும்பலால் வாட்ச்மேன் கொல்லப்படும் காட்சியைக்கண்டு அலற, துரத்திவரும் கொள்ளைக்கும்பல் ஆளிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிக அருமை. ஸ்டுடியோ செட்களும் 'ஹோ'வென்று பெரிதாக இல்லாமல் கனகச்சிதம். பத்மப்ரியா வீடு செட் மிக அழகு என்றால், சகுந்தலா வீடு கலைநயம். (வேடிக்கை என்னவென்றால், கதாநாயகன் நடிகர்திலகத்துக்கு படத்தில் வீடு கிடையாது).

    6) சண்டை காட்சிகள்: நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சியைத் தொடர்ந்து ஏர்ப்போர்ட்டிலிருந்து வரும் வழியில் முதல் சண்டைக் காட்சி. வைரங்களடங்கிய பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடும் வில்லனின் ஆட்களோடு நடிகர்திலகமும் முத்துராமனும் சூட்கேசை தூக்கி தூக்கிப் போட்டு பிடித்தபடி மோதும் சண்டை அபாரம் எனினும் அதில் மெல்லிசை மன்னர் 'ராஜா' பாணியில் வோகல் எஃபெக்ட் கொடுக்க நினைத்து சற்று சொதப்பி விட்டார். இரண்டாவது சண்டைதான் டூப்ளிகேட் போலீஸுடன் ஜீப்பில் போடும் அபார சண்டைக்காட்சி. முன்னால் சென்று கொண்டிருக்கும் லாரியிலிருந்து ரெயில்கள் இறங்க அதன் வழியே ஜீப் லாரிக்குள் ஏற்றப்பட்டு நடக்கும் சண்டை மிக அற்புதம். மூன்றாவது சண்டை, நல்லவராக நடிக்கும் சகுந்தலாவினால் வைரவியாபாரத்துக்காக அழைத்து செல்லப்படும் பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் சண்டை. இதனிடையே ஓடும் காரில் நடக்கும் மினி சண்டை, அத்துடன் பாலாஜியுடன் ஒரு துப்பாக்கி சண்டை. முடிவாக கிளைமாக்ஸ் சண்டை. அனைத்து சண்டைக்காட்சிகளிலும் நடிகர்திலகம் தூள் கிளப்புவார். தன்னை நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் என்று நிரூபித்திருப்பார். ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கான அட்டகாசமான சண்டைக்காட்சிகள்.

    7) பாத்திரப்படைப்பு :
    பத்மப்ரியா: அவருடைய முதல்படம். அதிகம் நடிக்க வாய்பில்லை எனினும் அழகாக வளைய வருகிறார். நடிகர்திலகத்தை காதலித்தபோதிலும், அவர் அண்ணன் மீது காதலன் கொலைப்பழி சுமத்தும்போது, அண்ணனின் பக்கம் நின்று வாதிடுவது அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது அவர் உடல்வாகைப் பார்க்கும்போது (அவரது மட்டுமல்ல நடிகர்திலகம் உள்பட அனைவரின் உடல்வாகை நோக்கும்போது) இப்படம் அதிகநாட்கள் தயாரிப்பில் இருந்ததாக நம்ப முடியாது.

    முத்துராமன்: சூழ்நிலையின் காரணமாக கொள்ளைக்கு உடந்தையாக இருந்துவிட்டு, அதைவிட்டு விலகமுடியாமல் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக நம்பிய தன நண்பன், ஒரு வைரகடத்தல் வியாபாரி என அறிய வரும்போது காட்டும் அலட்சியம், அதே நண்பன் ஒரு துப்பறியும் அதிகாரி, அதிலும் தன வங்கிக்கொள்ளையைக் கண்டுபிடிக்க ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டவர் என அறியும்போது காட்டும் அதிர்ச்சி, பேங்க் கொள்ளைக்கு தான் உடைந்தையாக இருந்ததை சாதகமாக்கி தன்னை பிளாக்மெயில் செய்யும் வில்லனின் போதனைப்படி தன் நண்பனையே கொல்ல பாத்ரூம் பைப்பில் கரண்ட் கனெக்ஷன் செய்துவிட்டு, பின்னர் (நட்பின் உந்துதலால்) நண்பனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்த அதே வினாடியில் மெயின் ஆப்செய்து காப்பாற்றுவது என, தன் ரோலை திறம்பட செய்துள்ளார். முதல் சண்டையிலும் கிளைமாக்ஸ் சண்டையிலும் ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். 'பைனல் ஆடிட்டிங்' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே அப்பாவும் பின்னர் மகனும் கதிகலங்குவது நன்கு எடுக்கப்பட்டுள்ளது.

    8) சுவாரஸ்யமான காட்சிகள் என்றால் பலவற்றைச் சொல்லலாம். வங்கி அதிகாரியாக இருந்த அப்பாவின் கையாடலைச் சொல்லி மிரட்டியே கொள்ளைக்கும்பல், வங்கியின் பிரதான சாவிகளை மெழுகில் பிரதியெடுத்து அதன்மூலம் கொள்ளையை சுலபமாக்குவது. பாலாஜியின் பிறந்தநாள் விருந்துக்காட்சி. நடிகர்திலகத்திடம் பத்மப்ரியாவின் செல்லமான கோபங்கள், சிணுங்கல்கள் என நிறைய அங்கங்கே தூவப்பட்டுள்ளன. .

    9) இது போன்ற ‘கிரைம்’ படங்களுக்கு. வேகத்தடைகளாக அமையக்கூடிய அம்மா செண்டிமெண்ட்கள் இப்படத்தில் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். யாருக்குமே அம்மா இல்லாததால் சீனியர் நடிகைகளுக்கு வேலையே இல்லை. (தங்கசுரங்கத்திலும், ராஜாவிலும் நாயகனின் அம்மாக்கள் தேவையான பாத்திரங்கள். ஜெயலலிதாவின் அம்மா காந்திமதி ஒரே சீன் என்பதால் மன்னிக்கலாம்)

    மைனஸ் பாயிண்ட்ஸ்:

    1) இம்மாதிரி க்ரைம் மற்றும் துப்பறியும் படங்களுக்கு தேவையான ஸ்டார் வால்யூ மிகவும் குறைவு. வெறும் ஐந்து பேர் மட்டுமே படத்தில். நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா அவ்வளவுதான். ராஜா, என்மகன் போன்ற படங்களில் இருந்த நட்சத்திரகூட்டம் வைர நெஞ்சத்தில் இல்லை.

    2) மந்தமான ஆரம்பம், வலுவான கதை இருந்தும் அதைத் தூக்கி நிறுத்தும் அளவு வலுவில்லாத மெதுவான திரைக்கதை. ஆனால் நடிகர்திலகத்தின் அறிமுகத்துக்குப்பின் படம் வேகம் பிடிக்கிறது. லவ்ஸ்டோரி கதைகளை மட்டுமே படமாக்கி வந்த ஸ்ரீதருக்கு கிரைம் சப்ஜக்டில் அனுபவமின்மை. (அவர் சிஷ்யரான சி.வி.ஆர். இதில் கில்லாடி).

    3) சண்டைக்காட்சிகளில் யாரோ முன்பின் தெரியாத ஆட்களுடன் சண்டையிடுவதற்கு மாறாக ராமதாஸ், கே.கண்ணன், ஜஸ்டின் போன்றவர்களுடன் சண்டையிடுவதாக அமைத்திருக்கலாம். முத்துராமனின் அப்பா ரோலில் செந்தாமரை, முத்துராமனை மிரட்டும் வில்லனாக மனோகர் என்றெல்லாம் போட்டு, திரைக் கதையையும் ஸ்பீட் அப் பண்ணியிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும் (முத்துராமனின் தந்தை இறந்தபின், அவரை வந்து மிரட்டுவதில் துவங்கி படம் முழுதும் வில்லில் பிரதான கையாளாக வரும் அந்த நடிகர் யார்?. அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?)

    4) ஏர்போர்ட்டில் நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சி, தியேட்டரில் படம் முடிந்து மக்கள் வெளியேறும் காட்சிகளில் எல்லாம் ரிச்னஸ் மிகக்குறைவு. பிரதான வில்லனின் இருப்பிடமாக காண்பிக்கப்படும் இடமும் மிகச்சிறியது. ஒரு சிறிய ஹால். அதில் ஒரு மேஜையும் சுழல் நாற்காலியும் மட்டுமே. போதாக்குறைக்கு அந்த இடமும் ஒரே இருட்டு வேறு. இதன் காரணமாகவே அட்டகாசமான கிளைமாக்ஸ் சண்டை கொஞ்சம் சுவைக்குறைவாக தெரிகிறது. (ஓ.ஏ.கே.தேவரின் இன்ப நிலையம் போலவோ அல்லது ரங்காராவின் மாளிகை போலவோ பிரமாண்டாமோ வெளிச்சமோ இல்லை). வில்லனின் இரண்டு பக்கமும் ரேகா, ரீட்டா என்ற பெயர்களில் தொடை காட்டும் அழகிகள் இருந்தும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.

    5) காமெடி ட்ராக் அறவே இல்லை. இது கிரைம் படத்துக்கு மைனஸா அல்லது பிளஸ்ஸா தெரியவில்லை. ரங்கூனில் கட்டபொம்மன் தெருவில் குடியிருந்த நாகேஷும், 'ட்ரிபிள் ராம்' சகோதரர்கள் சந்திரபாபுவும் அப்படங்களின் ஓட்டத்துக்கு எவ்வகையில் துணையிருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஸ்ரீதர் படம் என்பதால் சச்சு மட்டும் ஒரேஒரு காட்சியில் வந்து போகிறார்.

    6) இம்மாதிரி ஜாலியான படங்களிலாவது நடிகர்திலகம் அதிக சீன்களில் ‘கூலிங்கிளாஸ்’ அணிந்து நடித்திருக்கலாம். அவுட்டோர் காட்சிகளிலாவது முடிந்தவரை அணிந்து ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்திருக்கலாம். அதேபோல துப்பறியும் அதிகாரி ரோல் அமைந்த இப்படத்தில் அதிக காட்சிகளில் ரிவால்வருடன் தோன்றியிருக்கலாம். (மக்கள் கலைஞர் ஜெய், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒப்பந்தமானதுமே கையில் ரிவால்வரை பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்வதை நடிகர்திலகமோ ஸ்ரீதரோ பார்த்ததில்லையா).

    ஆனால் இத்தனை மைனஸ்களையும் தாண்டி படம் விரும்பக் கூடியதாக அமைந்துள்ளதுதான் ‘வைர நெஞ்ச’த்தின் சிறப்பு.

  7. #2964
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    dear all
    today daily thanthi write up by arurdas about thenum paalum.
    "SJ" kku alave illai
    rgds
    gk
    You are very right Arur doss writings about NT films is too too much, can he write like this about other hero/ heros movies which WERE toal failures.
    ELLAM SABAKEDU FOR NT AND HIS FANS.

  8. #2965
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear கார்த்திக் சார் ,

    உங்கள் பதிவு , உங்கள் அலசல் நன்றாக இன்னும் சொல்ல போனால் மிகவும் நன்றாக இருந்தது

  9. #2966
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,489
    Post Thanks / Like


    Taken during 1962 US visit - invited by president JFK as the cultural ambassador of India
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. Likes KCSHEKAR, chinnakkannan liked this post
  11. #2967
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear GK sir,

    Could you share about Arror Dass sir's article

  12. #2968
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear NOV sir,

    Rare Pic thank you
    Last edited by ragulram11; 24th May 2014 at 06:52 PM.

  13. Likes NOV liked this post
  14. #2969
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Rare Photo of NT in US. Thanks for the same Mr Nov Sir.


    Regards

  15. Likes NOV liked this post
  16. #2970
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தியில் இன்று வந்த பதிவு .

    1971 ஏப்ரல் 14 அன்று தமிழ்ப்புத்தாண்டு நாள்! காலையில் தொலைபேசி மணி ஒலித்தது. எடுத்தேன்.

    குரல்:– தம்பி! கஸ்தூரி பிலிம்ஸ் சுப்பராமன் பேசுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நான்:– அண்ணே! உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    சுப்பராமன்:– இன்னிக்கு புது வருஷமும் அதுவுமா உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். பத்து மணியைப்போல நம்ம ஆபீசுக்கு வரமுடியுமா?

    நான்:– கண்டிப்பாக வர்றேண்ணே.

    அலுவலகத்தில் தன் தனி அறையில் எனக்காகக் காத்திருந்த அண்ணன் வி.சி.எஸ். என்னைக் கண்டதும் எழுந்து மலர்ந்த முகத்துடன், ‘‘வாங்க தம்பி’’ என்று வரவேற்று, சுவாமி படங்களின் அடியிலிருந்த ஒரு நீண்ட உறையை எடுத்து என் கரங்களில் வைத்து

    வி.சி.எஸ்:– அடுத்தபடியாக சிவாஜியை வச்சு நான் எடுக்கப்போற புதுப்படத்துக்கு சென்டிமென்டலா – புது வருஷமும் அதுவுமா உங்களுக்குத்தான் முதல் முதலா அட்வான்ஸ் கொடுக்கிறேன். வாங்கிக்குங்க.

    நான்:– நன்றிண்ணே. புது வருஷமும் அதுவுமா, புதுப்படத்துக்கு உங்க கையால் அட்வான்ஸ் வாங்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று கவரை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அவர் பாதம் பணிந்தேன்.

    வி.சி.எஸ்:– ‘‘பார் மகளே பார்’’ படத்துக்கப்புறம் சிவாஜி – பீம்சிங் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்ததுல எனக்கு நிறைய டயம் வேஸ்டாயிடுச்சு. சிவாஜி கால்ஷீட் கிடைச்சா பீம்சிங் கால்ஷீட் கிடைக்கலே. இவர் கால்ஷீட்டுக்குத் தகுந்தாப்போல அவரால கால்ஷீட் கொடுக்க முடியலே. காத்திருந்து பார்த்துப் பார்த்து முடியாமல் கடைசியில் பி.மாதவனை இந்தப் படத்துக்கு டைரக்டராக பிக்ஸ் பண்ணிட்டு சிவாஜிகிட்டே சொல்லிட்டேன். கதை – வசனம் யாரு? ஆரூர்தாஸ்தானேன்னு அவரே கேட்டாரு. டைரக்டர் – ஹீரோயின் யார் மாறினாலும், சிவாஜியும் நீங்களும் இல்லாமல் நான் படம் எடுக்கமாட்டேன்னு ஏற்கனவே அவருக்குத் தெரியும்.

    அதனால்தான் அப்படிக் கேட்டாரு. ‘‘ஆமா. ஆரூர்தாஸ்தான் எழுதுறாருன்னு சொன்னேன். மத்தபடி கதை – ஆர்ட்டிஸ்டுங்க விஷயமெல்லாம் ஆரூரான்கிட்டே பேசிக்குங்கன்னு சிவாஜி சொல்லிட்டாரு. அவருக்கே இனிமேத்தான் நான் அட்வான்ஸ் கொடுக்கணும் என்று கூறி மேஜை மீதிருந்த ஒரு அறுபது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து

    வி.சி.எஸ்:– எங்க குடும்பத்துக்கு ரொம்ப வேண்டிய ‘ஸ்ரீமதி’ங்குற ஒரு பொண்ணு இந்தக் கதையை எழுதி எங்கிட்டே கொடுத்துது. படிச்சுப் பார்த்தேன். இது ரெண்டு மனைவிங்களைப் பத்தின கதை. ‘பேமிலி சென்டிமென்ட்ஸ்’ இருக்கு. ஒருத்தி ஹீரோவுக்கு முறையா வாழ்க்கைப்பட்ட மனைவி. இன்னொருத்தி விதிவசமா அவனுக்கு ரெண்டாவது மனைவியா வந்து சேருறா. குடும்பத்துல குழப்பம். இதுதான் கதையோட கரு!

    சிவாஜி – மாதவன் சஜ்ஜஸ்ட் பண்றதுக்கு முந்தி, முதல் மனைவியாகவும், ரெண்டாவது மனைவியாகவும் யார் யாரை நடிக்க வைக்கலாம்னு நம்ம ரெண்டு பேருக்குள்ளே பேசி முடிவு பண்ணிக்கிட்டோம்னா நல்லது. இல்லேன்னா சிவாஜி ரெண்டு ஹீரோயினை சொல்லி, மாதவன் ரெண்டு பேரைச் சொல்லி எனக்குக் குழப்பமாயிடும்.

    போன ‘‘பார் மகளே பார்’’ படத்துல சிவாஜிக்கு மனைவியாகவும், அதே சமயம் விஜயகுமாரி – புஷ்பலதா ரெண்டு பெண்களுக்கும் தாயாகவும் நடிக்கணும்னா அதுக்கு சவுகார் ஜானகிதான் பொருத்தமாக இருக்கும்னு நீங்க சொல்லித்தான் நானும், சிவாஜியும், பீம்சிங்கும் ஒத்துக்கிட்டோம். அதுக்கு முந்தி ஆளுக்கு ஆள் ஒவ்வொருத்தரைச் சொல்லி போட்டுக் குழப்பிக்கிட்டிருந்தோம்.

    நீங்க சொன்னது மாதிரி சவுகார்ஜானகிதான் நல்லா ஒர்க் – அவுட்டாச்சு. அந்த மாதிரி இதுக்கும் அமைஞ்சாத்தான், ரெண்டு கேரக்டர்சுக்கும் நல்ல ‘ஜஸ்டிபிகேஷன்’ கிடைக்கும். இது ரொம்ப சிக்கலான கதை. அதனால நீங்க சொன்னா சரியா இருக்கும். அந்த ரெண்டு மனைவிங்களுக்கு யார் யாரை ‘பிக்ஸ்’ பண்ணலாம்?

    நான்:– நீங்க எந்த ஆர்ட்டிஸ்டுங்களையாவது மனசுல நினைச்சிருந்தா சொல்லுங்க. அவுங்களைப்பத்தின அபிப்பிராயத்தை அப்புறம் நான் சொல்றேன்.

    வி.சி.எஸ்:– இல்லை. யாரையும் நினைக்கலே. ஒரு ஹீரோயினா இருந்தா பரவாயில்லே. ஒரு முடிவுக்கு வரலாம். ரெண்டு பேருங்குறதுனால யார் யாரையோ நினைச்சு அது எனக்கு சரியா வரலே. வந்திருந்தா நானே சிவாஜிகிட்டே சொல்லிட்டு அப்பவே பிக்ஸ் பண்ணியிருப்பேனே. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு. அதனால்தான் உங்களைக் கேட்கிறேன்.

    நான்:– அண்ணே! நீங்க சொன்ன மாதிரி இது ஒரு ‘காம்ப்ளிகேட்டட் ஸ்டோரி!’ இதுக்கு தெளிவான ‘ஸ்கிரீன் பிளே’ பண்ணி, அதுக்கு நல்ல வசனங்கள் எழுதி, அந்த ரெண்டு மனைவிங்களோட பாத்திரங்களையும் நியாயப்படுத்தணும். இதுக்கு முந்தி இந்த டைப் ஸ்டோரியோட ரெண்டு படங்களுக்கு நான் வசனம் எழுதின அனுபவம் எனக்கு இருக்கு.

    வி.சி.எஸ்:– இந்தக் கதையை ஒரு ‘அவுட்லைன்’ உங்களுக்கு சொல்லிட்டேன். இதுக்கு அந்த ரெண்டு மனைவிங்க கேரக்டர்சுக்கு யார் யாரைப் போட்டால் நல்லாயிருக்கும் என்று சொல்லுங்க. ‘நோ காம்ப்ரொமைஸ்’ – யாரை வேணுன்னாலும் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன். ஏன்னா நீங்க எழுதுற நிறைய படங்களில் எல்லா ஹீரோயின்களும் நடிக்கிறாங்க. என்னைவிட உங்களுக்கு ‘பெட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ இருக்கு. அதை வச்சித்தான் கேட்கிறேன். சொல்லுங்க.

    நான்:– சொல்றேன். அண்ணே! இரண்டு மனைவிங்களோட கேரக்டர்சுக்கு மட்டுமில்லே. சிவாஜிக்கும் மேட்சா இருக்கணும். அதோட நாம பிக்ஸ் பண்ற இரண்டு ஹீரோயின்களுக்கு மத்தியில், எந்தவிதமான சுப்பீரியாரிட்டி – இன்பீரியாரிட்டி – அதாவது உயர்வு தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருக்கணும்.

    வி.சி.எஸ்:– (இடைமறித்து) ஆ! கரைக்ட். அது ரொம்ப முக்கியம்.

    நான்:– ‘‘இரு மலர்கள்’’ படத்தில் சிவாஜியைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்க முடியாமல் போன பத்மினியை முதல் மனைவியாக நடிக்க வைக்கலாம்.

    வி.சி.எஸ்:– (மகிழ்ச்சியுடன்) வெரிகுட்! அப்புறம் இரண்டாவது மனைவிக்கு...

    நான்:– இந்த இரண்டாவது மனைவி வேஷத்துக்கு சரோஜாதேவி பொருத்தமா இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க கேட்டதுனால நான் சொன்னேன். அப்புறம் முடிவு பண்ண வேண்டியது நீங்களும், சிவாஜியும், மாதவனும்தான்.

    இதைக்கேட்டவுடன் வி.சி.எஸ். அதிக மகிழ்ச்சியுடன்...

    வி.சி.எஸ்:– கரைக்ட் சஜ்ஜஷன். மாதவனைப்பற்றின கவலை இல்லை. நாம சொல்றதுதான். சிவாஜியைத்தான் ‘கன்வின்ஸ்’ பண்ணணும். தம்பி! நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்...

    நான்:– சொல்லுங்கண்ணே.

    வி.சி.எஸ்:– இன்னிக்கு தமிழ் வருஷப்பிறப்புங்கிறதுனால, சிவாஜியை நான் பார்த்தாகணும். இப்போ என்னோட நீங்க வந்தீங்கன்னா இரண்டு பேரும் போய் அவரைப் பார்த்து ‘விஷ்’ பண்ணிட்டு அப்படியே இந்த ஆர்ட்டிஸ்ட் விஷயத்தையும், என்னைவிட நீங்க அவர்கிட்டே சொன்னால் ‘ஓகே’ ஆயிடும்.

    நான்:– சரிண்ணே. நானும் எப்படியும் இன்னிக்கு சிவாஜியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும்... வர்றேன்.

    வி.சி.எஸ்:– அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துவிட்டேன். நம்ம போன படம் ‘‘பார் மகளே பார்’’ எனக்கு ‘பிஸ்னஸ்’ ரீதியாகவும் நல்ல ‘பெனிபிட்டா’ ஒர்க் அவுட்டாச்சு. அதனால் இந்தப்படத்துக்கு இரண்டு மனைவிங்களை வச்சு, ‘‘பாலும் தேனும்’’ என்று டைட்டில் வைக்கலாம் என்று இருக்கிறேன்.

    நான்:– அண்ணே! ஒரு விஷயம். இந்த ‘பா’ எழுத்து சென்டிமென்ட் பீம்சிங்குக்கு மட்டும்தான் நல்லா ஒர்க் அவுட் ஆகும். அது மட்டுமில்லே. ஏற்கனவே அவர் டைரக்ஷன்ல சிவாஜி நடிச்சு ‘‘பாலும் பழமும்’’ படம் வந்திருக்கு. இப்போ மறுபடியும் ‘பாலும் தேனும்’ என்கிறதைவிட அதை அப்படியே ‘உல்ட்டா’ பண்ணி ‘‘தேனும் பாலும்’’ என்று வச்சிக்கலான்னு எனக்குத்தோணுது. அதாவது பத்மினி தேன்! சரோஜாதேவி பால்!

    வி.சி.எஸ்:– ஆகா! பிரமாதம். ஓகே! நாளைக்கே இந்த டைட்டிலை ரிஜிஸ்ட்டர் பண்ணிடுறேன். புறப்படுங்க. சிவாஜியை பார்த்திடலாம்.

    சிவாஜியின் ‘அன்னை இல்லம்.’

    சிவாஜி:– என்னைக் கண்டதுமே... வா ஆரூரான். தோத்திரம்பா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நான்:– நீடூழி வாழ்க என்று கூறிக்குனிந்து அவர் பாதந்தொட்டு வணங்கி, என் சட்டைப் பையிலிருந்த கவரை எடுத்து அவர் கையில் வைத்து...

    நான்:– (வி.சி.எஸ்.சைக் காட்டி) புது வருஷமும் அதுவுமாக புதுப்படத்துக்கு அண்ணன் கொடுத்த அட்வான்ஸ். இதை உங்க கையால் எங்கிட்டே கொடுங்க.

    சிவாஜி:– (மகிழ்ச்சியுடன்) போணி ஆயிடுச்சா? முதல் போணி உனக்குத்தான். இந்த வருஷம் பிச்சி உதறப்போறே. ‘ஆல் த பெஸ்ட்’ என்று கவரைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு என்னிடம் கொடுத்தார்.

    சிவாஜி:– அண்ணன் கதையைச் சொன்னாரா?

    நான்:– சொன்னாரு. இரண்டு மனைவிங்களைப் பற்றிய குழப்பமான குடும்பக்கதை... கவனமாகக் கையாளணும்...

    சிவாஜி:– ஆமா. அதெல்லாம் நீ பார்த்துக்க. அந்த இரண்டு மனைவிகளுக்கு யாரைப்போடலாம். சொன்னியா?

    நான்:– சொன்னேன்.

    சிவாஜி:– யாராரு?

    நான்:– முதல் மனைவி பப்பிம்மா!

    சிவாஜி:– நானும் அதைத்தான் நினைச்சிருந்தேன். நல்லாருக்கும். இரண்டாவது... யாரு?

    நான்:– சரோஜாதேவி!

    சிவாஜி:– சரோஜாவா? சரியாருக்குமா?

    நான்:– ஏன்? நீங்க வேற யாரையாவது நினைச்சிருக்கீங்களா?

    சிவாஜி:– நான் தேவிகாவை நினைச்சேன். சரோஜாதேவி என் நினைவுக்கு வரவில்லை.

    நான்:– தேவிகாவும் நல்லாருக்கும். நான் இல்லேன்னு சொல்லலே. பப்பிம்மாவும், தேவிகாவும் கிட்டத்தட்ட ஒண்ணாயிருக்கும். ஆனால் சரோஜாவுக்கும், பப்பிம்மாவுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். அதோட சரோஜா ‘ரொமான்டிக் ஹீரோயின்.’ அதனால்தான் ‘‘புதிய பறவை’’ படத்தில் உங்களுக்கு அவ்வளவு நல்லா மேட்ச் ஆச்சு. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் சீன்ல சரோஜாவோட நடிப்பு வித்தியாசமாக இருந்தது இல்லியா? சரோஜாவோட ‘நளினபாவங்கள்’ பப்பிம்மாவுக்கு ‘கான்ட்ரஸ்ட்டா’ வேற மாதிரியாக இருக்கும் அண்ணே! எக்ஸ்பிரஷனை வச்சு முகம் இல்லை. முகத்தை வச்சுத்தான் எக்ஸ்பிரஷன் வரும்!

    சிவாஜி:– நீ சொன்னா சரியா இருக்கும் ஆரூரான்! நான் தினமும் கமலாம்மா கையால ஒரு வீட்டு சாப்பாட்டை மட்டும் ஒழுங்கா திங்குறவன். நீ பல வீட்டுச் சோற்றைத் திங்குற பரதேசி! எம்.ஜி.ஆரோடயும், என்னோடயும் மட்டும் இல்லை. கண்ணாம்பாம்மா, பானுமதி, சவுகார்ஜானகி, சாவித்திரி என்று ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தரோட சாப்பிடுவே. உனக்குத்தான் யாராரு எப்படி நடிப்பாங்கன்னு தெரியும்.

    இதைக்கேட்டு வி.சி.எஸ். சிரித்தார். சிவாஜி தொடர்ந்தார்:–

    சிவாஜி:– (என்னிடம்) ஏம்பா? பப்பிம்மா, சரோஜா சேர்ந்து நடிச்சி இதுக்கு முந்தி வேற ஏதாவது படம் வந்திருக்குதா?

    நான்:– இல்லேன்னு நினைக்கிறேன்.

    சிவாஜி:– அப்படின்னா நல்லாருக்கும்.

    நான்:– நல்லாருக்கிறது மட்டுமில்லே. உங்க கேரக்டருக்கு கரைக்ட்டா ‘மேட்ச்’ ஆகும்.

    சிவாஜி:– ஓகே! அண்ணே! நீங்க ‘புரசீட்’ பண்ணுங்க. ஷண்முகத்தைப் பார்த்துப்பேசி என் கால்ஷீட் – அதுக்குத் தகுந்தாற்போல பப்பிம்மா, சரோஜா கால்ஷீட்டெல்லாம் வாங்கிடுங்க...

    வி.சி.எஸ்:– சரி தம்பி. நான் பார்த்துக்கிறேன்.

    பானுமதி அம்மாவுக்குச் சொந்தமான பரணி ஸ்டூடியோவில் ‘‘தேனும் பாலும்’’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

    ‘‘மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்

    மங்கல மங்கை மீனாட்சி – நெஞ்சம் ஒருவன்

    சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி’’

    என்ற கவியரசர் கண்ணதாசனின் பொருள் பொதிந்த சென்டிமென்டல் செந்தமிழ்க் கவிதைக்கு என் அன்பிற்கினிய அண்ணன் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. இனிமையாக இசை அமைத்திருந்த அந்தப்பாடலை பத்மினியும், சரோஜாதேவியும் பாடி, மதுரை வைகை நதிக்கரையில் விளக்கு பூஜை செய்யும் அந்த அழகிய காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. இடைநேரத்தில் பத்மினி என்னிடம் கேட்டார்:–

    பத்மினி:– மத்தியானம் நீங்க சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவீங்களா?

    நான்:– அம்மா! நான் வீட்டுலே சாப்பிட்டுப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. அன்னன்னிக்கு எழுதப்போற கம்பெனியில இல்லேன்னா ஷூட்டிங் நடக்கிற ஸ்டூடியோக்கள்ளே எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, சாவித்திரியோட சாப்பிட்டுத்தான் எனக்குப் பழக்கம்.

    பத்மினி:– அப்போ மத்தியானம் என்னோட சாப்பிடுங்களேன். பஸ்ட் டே!

    நான்:– சரிம்மா. சாப்பிடுறேன்.

    பத்மினி:– பெரும்பாலும் எங்கம்மா சைவ சாப்பாடுதான் அனுப்புவாங்க. மட்டன்லாம் சாப்பிட்டா உடம்பு ஊதிடும் என்று சொல்லி ‘டயட் கண்ட்ரோல்!’

    நான்:– அவுங்களுக்குத் தெரியாது. ‘கான்ஸ்டிடியூஷன் ஈஸ் டிபரண்ட் பிரம் ஒன் அனதர்!’ அப்படின்னு இங்கிலீஷ்ல சொல்றது உண்டு. அப்படின்னா, உடல்வாகு என்கிறது ஒவ்வொருத்தருக்குத் தகுந்தபடிதான் அமையும். எல்லா உடம்பும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் சினிமாவுக்கு வராத அந்தக் காலத்திலேயே நீங்க நடிச்ச என்.எஸ்.கே.யின் ‘‘மணமகள்’’ நீங்களும், லலிதாம்மாவும் ஆண் – பெண் வேடத்துல பாம்பாட்டி நாடக நாடகம் ஆடுன ஏவி.எம். ‘‘வேதாள உலகம்’’ ஜூபிடர் ‘‘வேலைக்காரி’’ இப்படி பல படங்களில் உங்க சிஸ்டரோட நீங்க சேர்ந்து ஆடின டான்ஸ் எல்லாம் இன்னும் எனக்கு நல்லா நினைவிருக்கு. அந்தக் காலத்தில் நான் உங்க ‘விசிறியா’ இருந்திருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தப்புறம்கூட எனக்குத் தெரிஞ்சு நீங்க அப்படியேதான் இருக்கீங்க. உங்க உடம்பு ஊதவும் இல்லை, உப்பவும் இல்லை, வெடிக்கவும் இல்லை.

    இதைக்கேட்டதும் ஏற்கனவே மஞ்சள் அரளிப் பூப்போல இருந்த பப்பிம்மாவின் முகம் இன்னும் சிவந்து செவ்வரளி மலராக மாறியது. அவர் அதிக வியப்புடன் என்னைக் கேட்டார்.

    பத்மினி:– அட! எவ்வளவு நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க? நீங்க சொல்றதைப்பார்த்தால் நான் உங்களைவிட வயசுல மூத்தவளா இருப்பேன்னு நினைக்கிறேன். நீங்க எந்த வருஷம் பொறந்தீங்க?

    நான்:– செப்டம்பர் பத்து 1931 என்று நான் சொன்னதும் அவர் ஒரு சிறு முத்துச்சிரிப்பை உதிர்த்தார்.

    நான்:– ஏம்மா சிரிக்கிறீங்க? நான் உங்களைவிட ரொம்பச் சின்னவனா?

    பத்மினி:– இல்லை. இல்லை. நீங்க எழுத்துலேயும் பெரியவரு – என்னைவிடவும் பெரியவரு.

    நான்:– (ஆச்சரியத்துடன்) அப்படியா!

    பத்மினி:– ஆமா. நான் ஜூன் பன்னெண்டு 1932. அப்படின்னா எனக்கும் உங்களுக்கும் என்ன வயசு வித்தியாசம்?

    (நான் மனக்கணக்குப் போட்டுப் பார்த்து...)

    நான்:– ரொம்ப இல்லை – கொஞ்சம்தான்.

    பத்மினி:– எவ்வளவு?

    நான்:– ஏழு மாசம் ரெண்டு நாள் நான் பெரியவன்! தப்பு – மூத்தவன்.

    பத்மினி:– (சிரித்து) பாவாடை சட்டை போட்ட அந்தச் சின்ன வயசுலேயே நானும் லலிதாக்காவும் வழுவூர் ராமையா பிள்ளை கிட்டே பரதநாட்டியம் கத்துக்கிட்டு, அதன் மூலமாக முதல் முதல்லே டான்ஸ் ஆடுறதுக்காகத்தான் சினிமாவுல எங்கம்மா சேத்தாங்க. அப்போல்லாம் எம்.ஜி.ஆரோடயும், சிவாஜியோடயும் நான் ஹீரோயினா நடிக்கப்போறேன்னு கனவுகூட காணலே. எப்படியோ மள மளன்னு மேல வந்திட்டேன்.

    நல்ல ‘பீக்’குல இருக்கும்போது நீ நடிச்சது போதும், இனிமே நடிக்க வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லி,
    எங்கம்மா டாக்டருக்குக் கட்டி வச்சு அமெரிக்காவுக்கு அனுப்
    பிட்டாங்க. அங்கேபோய் டான்ஸ் ஸ்கூல் நடத்தி பல இந்தியப் பெண்களுக்கும் அமெரிக்க கேர்ள்சுக்கும் பரத நாட்டியம் கற்றுக்கொடுத்தேன். அதோட ஒரு பிள்ளையும் பெத்துக்கிட்டேன். என் தலை எழுத்து! ஹஸ்பெண்டோட மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்! மெட்ராசுக்குத் திரும்பி வந்தேன்.

    ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு என் குருநாதர் வழுவூரார் சொல்வாரு. நான் சும்மாதான் இருந்தேன். என் விதி என்னை சும்மா இருக்க விடலே. மறுபடியும் சினிமா என்னைக் காந்தம்போல இழுத்திடுச்சு. பழையபடி வந்து விழுந்திட்டேன் என்று சொல்லி முடிக்கும் முன்பே அவரது முகத்தில் ஒரு சோக ரேகை படர்ந்ததை நான் கவனித்தேன்.

    நான்:– அம்மா, நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்.

    பத்மினி:– சொல்லுங்க தப்பா நினைக்கமாட்டேன்.

    நான்: பல படங்களில் பலவிதமான கதைகளில் நாயகியாக நடிக்கிற ஒவ்வொரு நடிகையோட சொந்த வாழ்க்கையிலும் சுகமும், சோகமுமான ஒரு கதை இருக்கு. அது இன்பக் கதையாகவும் இருக்கும், துன்பக்கதையாகவும் இருக்கும். சிலர் சொல்லுவாங்க. சிலர் சொல்லமாட்டாங்க.

    பத்மினி:– (குறுக்கிட்டு) முழுக்க முழுக்க உண்மை.

    நான்:– ஹீரோக்களைவிட, ஹீரோயின்ககிட்டேதான் விதம் விதமான கதைங்க இருக்கு. எனக்குக் கதை வசனம் எழுதுறதுல மட்டும் இல்லை. மத்தவுங்களோட வாழ்க்கையின் உண்மைக் கதைகளைத் தெரிஞ்சிக்கிறதுலயும் ஆர்வம் அதிகம். அதனால் எல்லா ஆர்ட்டிஸ்டுங்களோட கதைங்களும் எனக்குத் தெரியும். இப்போ நீங்க சொன்னீங்களே, உங்க சொந்தக்கதை. இது முன்னாலயே எனக்குத் தெரியும். உங்க வாயால் கேட்டுக்கிட்டேன். அவ்வளவுதான், பப்பிம்மா.

    கல்யாணத்துக்கு முந்தி நீங்க நடிச்சதைவிட, இப்போதான் அதிகப்படங்களில் நடிச்சு புகழும், பொருளும் சம்பாதிக்கிறீங்க. நீங்க எத்தனை படங்கள் நடிச்சாலும் கூட ஒரே ஒரு ‘‘தில்லானா மோகனாம்பாள்’’ படத்துக்கு எதுவுமே ஈடாகாது. அந்த ஒரு படத்தில் ஆடுறதுக்காகவும், நடிக்கிறதுக்காகவும்தான் நீங்க மறுபடியும் சினிமாவுக்கு வந்தீங்கன்னு சொல்லுவேன்.

    22.7.1971–ல் வெளியான ‘‘தேனும் பாலும்’’ நன்றாக ஓடியது. ஆனால் மிக நன்றாக ஓடுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை இழந்து விட்டது. அதற்குக் காரணம் திரைக்கதை அமைப்பு.

    விருந்தாளியாக ஒரு வக்கீலின் வீட்டில் தங்கிய சிவாஜி, அங்கு சர்வசாதாரணமாக மேஜை மீதிருந்த ‘ஜின்’ மதுபானத்தை தண்ணீர் என்று நினைத்து கடகடவென்று குடித்து விட்டு அந்த போதையில் வக்கீலின் மகளைக் (சரோஜாதேவி) கெடுத்துவிட்டு, அவளுடைய தாய் சொன்னதன் பேரில் தன்னுடன் அழைத்துச் செல்லும் அந்தப் பகுதியில் எனக்கு உடன்பாடு இல்லை.

    சிவாஜி – சரோஜாதேவி இருவருடைய பாத்திரப் படைப்பே கெட்டுவிடும் என்று நான் எவ்வளவோ வாதாடி எடுத்துக் கூறியும் இயக்குனர் கேட்கவில்லை. அந்த ‘எபிசோட்’ பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை படம் ரிலீசான பிறகுதான் தெரிந்து கொண்டார்.

    வாதம் வெல்லும்! ஆனால், பிடிவாதம் வாழ்க்கையில் வெல்வதில்லை என்பதை அனுபவத்தில் அவர் அறிந்து கொள்ள காரணமான ‘‘தேனும் பாலும்’’ எதிர்பார்த்த அளவிற்கு இனிக்கவில்லை. அத்துடன் கஸ்தூரி பிலிம்சின் கதவுகள் மூடப்பட்டு விட்டன.



    பத்மினியை கிண்டல் செய்த சிவாஜி

    ‘‘தேனும் பாலும்’’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் ஒரு முக்கியமான காட்சி. தன் கணவனுக்கு இன்னொரு மனைவி (அது தன் தோழி சரோஜாதேவிதான் என்பது பத்மினிக்குத் தெரியாது) இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட பத்மினி அதிர்ச்சியுற்று, சிவாஜியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து பூஜை அறையில் நிறுத்தி வைத்துப் பேசிக்குமுறுவதாக – பத்மினிக்காகவே நான் எழுதிய வசனம் இது. ராமர், சீதை உருவங்களைக்காட்டி...

    பத்மினி:– (கண்கலங்க) என்னங்க! இது யார் தெரியுதா? நல்லா பாருங்க – சீதாராமன்! தன் ஒரே ஒரு மனைவியோட இருக்கிறான். ஒரு சொல் – ஒரு வில் – ஒரு பத்தினியோட வாழ்ந்த அந்த அயோத்திராமன் மாதிரிதான் என் கணவரும் என்கிறதற்காகத்தான் நான் ராமனை என் தெய்வமாக நினைச்சிக் கும்பிடுகிறேன். ஆனா, நீங்க கண்ணனா மாறுவீங்கன்னு நான் கனவுகூட காணலிங்க. (அழுது குமுறி)

    என் குடும்ப வாழ்க்கையில குறுக்கிட்டு, எனக்கு மட்டுமே சொந்தமான உங்களைப் பங்கு போட்டுக்கிட்ட அவ யாருங்க. (சிவாஜியின் முகத்தை தன் இரு கைகளினாலும் தடவியபடி) என் இதயத்தின் அடியிலே நான் பத்திரமாகப் போட்டுப் பாதுகாத்து வச்சிருக்குற இந்த மாணிக்கம் இன்னொருத்தி கண்ணுக்கு எப்படிங்க தெரிஞ்சிது? அவ யாருங்க? என்னைவிட அழகா இருப்பாளா?

    என்னைவிட ஒரு அழகி உலகத்துலேயே இல்லேன்னு அப்போ – நம்ம முதல் இரவுல சொன்னீங்களே – அது பொய்தானே? உங்க மனசைக் கவர்ந்து, எங்கிட்டே இருந்து உங்களைத் திருட நினைக்கிற அவளை நான் பார்க்கணுங்க. நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே. அவ ஏங்க எனக்குக் கெடுதல் செய்யுறா? அவளை நான் பார்த்து நாலு வார்த்தை கேக்கணுங்க. கேக்கணுங்க – கேக்கணும்...

    சிவாஜி, பத்மினி இருவரையும் நிறுத்தி வைத்துக்கொண்டு, இந்த வசனங்களை உணர்ச்சிபூர்வமாக – ஏற்ற இறக்கத்துடன் நான் படித்துக்கொண்டு வரும்போதே சிவாஜியின் கண்கள் கலங்கின. பத்மினியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அவர் அதீத உணர்ச்சிவசப்பட்டு, என் கைகள் இரண்டையும் இறுகப்பற்றிக்கொண்டு...

    பத்மினி:– (சிவாஜியிடம்) கணேஷ்! (சினிமாவில் சிவாஜியை ‘கணேஷ்’ என்று பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகை பத்மினி மட்டும்தான் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன். நான்கு வயது குறைவானாலும், சினிமாவைப் பொறுத்தவரையில் பத்மினி சிவாஜிக்கு சீனியர்!) ‘‘நான் திருவனந்தபுரத்துக்குப் போயிருந்தப்போ, அங்கே ‘‘பாசமலர்’’ படத்தைப் பார்த்துவிட்டு எமோஷனாகி, மெட்ராசுக்குப் போன் பண்ணி சாவித்திரியோட பேசினேன். அப்போ சொன்னேன். உன்னையும், சிவாஜியையும் தவிர இந்தப்படத்தில் வேற யாராலேயும் இப்படி நடிக்க முடியாது. உங்க இரண்டு பேரோட நடிப்புக்கும் ‘டயலாக்’ ரொம்பஹெல்ப்பா இருக்கு. அந்த எமோஷனல் டயலாக்தான் உங்களை அவ்வளவு நல்லா நடிக்க வச்சிருக்குன்னு சொன்னேன்.

    சிவாஜி:– உண்மைதான். பாசமலர்தான் எனக்கு இவன் எழுதின முதல் படம். ஆரூரான்! இது என்னோட உனக்கு எத்தனையாவது படம்?

    நான்:– பத்தாவது படம்.

    சிவாஜி:– பாத்தியா? இவன்தான் எனக்கு ஆஸ்தானம். இடையில டைரக்ட் பண்ணப்போயிட்டான். இல்லேன்னா இன்னும் பத்துப்படம் எழுதியிருப்பான். என்னையும் என் நடிப்பையும் முழுசா தெரிஞ்சிக்கிட்டவன் இவன்.

    பத்மினி:– குடும்பக் கதைகளுக்கு டயலாக் எழுதுறதுல மாஸ்டரா இருக்காரு. இதுக்கு முந்தி தேவர் பிலிம்ஸ்ல நான் நடிச்ச பெண் தெய்வம் படத்துலேயும் டயலாக் ரொம்ப நல்லா இருந்தது.

    அதுசரி கணேஷ், இந்த சீன் பூராவும் நானே டயலாக் பேசுறேனே. உங்களுக்கு ஒருவரிகூட இவர் எழுதலியே...

    சிவாஜி:– தேவை இல்லை. எந்த சீனுக்கு எப்படி எழுதணும்னு அவனுக்குத் தெரியும். பப்பிம்மா! நீ எவ்வளவு வேணுன்னாலும் பேசு. நான் நடிச்சிக்காட்டுறேன். அது தெரிஞ்சுத்தான் இவன் என்னை... (என்பதற்குள் நான் இடைமறித்து)

    நான்:– அம்மா! இந்த சீன்ல நீங்கதான் ‘டாமினேட்’ பண்ணனும். இது ஒரு குடும்பப் பெண்ணுடைய குமுறல்! நீங்க பேசணும். அவர் பேசாமல் இருக்கணும். அவர் பேசுனா உங்க ‘எமோஷன்’ ‘பிரேக்’ ஆயிடும். நீங்க ‘டிராப்’ ஆயிடுவீங்க.

    பத்மினி:– உங்களை ஒண்ணு கேக்குறேன். தப்பா நினைக்கமாட்டீங்களே?

    நான்:– நோ நோ – நெவர்! கேளுங்க.

    பத்மினி:– (தயங்கியபடி) உங்களுக்கு இரண்டு ‘மனைவி’ங்கதானே?

    இதைக்கேட்டு சிவாஜியும் நானும் சிரித்தோம்.

    சிவாஜி:– (பத்மினியிடம்) எப்படி கண்டுபிடிச்சே?

    பத்மினி:– இந்த டயலாக்கே சொல்லுதே. ‘எக்ஸ்பீரியன்ஸ்’ இல்லேன்னா இப்படி எழுத வராது. அதை வச்சித்தான் கண்டு பிடிச்சேன். ‘கரைக்ட்’தானே?

    சிவாஜி:– ஆரூரான்! இவளை என்ன பண்ணலாம் சொல்லு.

    பத்மினி:– (புரியாமல்) ஏன் அப்படி சொல்றீங்க?

    சிவாஜி:– (பத்மினியிடம்) மண்டு! இவன், இந்த சீன்ல எழுதி இருக்கானே சீதாராமன்னு – அது இவன்தான்! சின்ன வயசுலேயே சொந்த அத்தை பொண்ணைக் கட்டுனவன். நான் அக்கா பொண்ணைக் கட்டுனவன். பின்னிடுவாளுங்க. அது இதுன்னு ஏதாவது கேள்விப்பட்டா அவ்வளவுதான். சோறு போடமாட்டாளுங்க. வெரட்டிடுவாளுங்க.

    பத்மினி:– (சிரித்தபடி) பின்னே எப்படி இவ்வளவு ‘பிராக்டிக்கலா’ எழுதுறாரு?

    சிவாஜி:– நல்லா கற்பனை பண்ணுவான். மிகைப்படுத்துவான். அதுல ‘கேரக்டர்ஸ்’ நின்னுடும்.
    Last edited by Barani; 24th May 2014 at 07:42 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •