Page 323 of 401 FirstFirst ... 223273313321322323324325333373 ... LastLast
Results 3,221 to 3,230 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3221
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    From Today @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3222
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரைப்படங்கள் பல மேல்நாட்டு திரைப்படங்களின் தரத்திற்கு ஈடானவை.

    நடிகர் திலகத்தின் நடிப்போ, திறமையோ மேல் நாட்டு நடிகர்களை விட பல மடங்கு அதிகம் என்பது நாம் நிதர்சனமாக உணர்ந்த உண்மை.

    ஒரு சிறு உதாரணம் :

    1958இல் வெளிவந்த CHASE A CROOKED SHADOW என்ற பெயரில் வந்த திரைப்படம் மற்றும் நம் நடிகர் திலகம் நடிப்பில் 1964இல் வெளிவந்த "புதிய பறவை" ஆகிய இரண்டு திரைப்படங்களையும் பார்த்தோமேயானால் அந்த உண்மை தெளிந்த நீரோடை போல நமக்கு விளங்கும்.


  4. #3223
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear RKS. Pudhiya Paravai is the ace movie of NT parading all his talents and acting dimensions frame by frame. A man haunted by his poignant memories of his past life and the demise of his wife hidden to his present interest had been neatly portrayed by NT. The level crossing scene... his BP rise and facial expressions... something unmatched and his performance unparalleled. In the whole world cinema, NT is the only actor who can mesmerize us with his close-up expressions. NT was also fortunate to have cameramen with perspective thinking and directors to show his acting phases in absorbing angles and shades. Also, no other hero had ever undergone such a turmoil as experienced by NT scene by scene in this movie. An ever refreshing experience!
    Last edited by sivajisenthil; 6th June 2014 at 10:43 AM.

  5. #3224
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் "இனிய உதயம்" என்ற மாத இதழுக்காக, கலைஞரின் பிறந்தநாள் சிறப்பிதழுக்காக, நடிகர்திலகம் மற்றும் கலைஞரின் நட்பைப் பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள்.
    தலைப்பு (எனக்கு உடன்பாடானதல்ல) அவர்களே வைத்துக்கொண்டார்கள். அதற்காக என்னைப் பொறுத்தருளவும்.. கடைசி நேரத்தில் கேட்டிருந்ததால், சில சம்பவங்களைக் கோர்வையாக அளிக்க முடியவில்லை. தலைப்பைத் தவிர்த்து கட்டுரையைப் படித்து கருத்தைத் தெரிவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன்.




    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  7. #3225
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kcshekar View Post
    நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் "இனிய உதயம்" என்ற மாத இதழுக்காக, கலைஞரின் பிறந்தநாள் சிறப்பிதழுக்காக, நடிகர்திலகம் மற்றும் கலைஞரின் நட்பைப் பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள்.
    தலைப்பு (எனக்கு உடன்பாடானதல்ல) அவர்களே வைத்துக்கொண்டார்கள். அதற்காக என்னைப் பொறுத்தருளவும்.. கடைசி நேரத்தில் கேட்டிருந்ததால், சில சம்பவங்களைக் கோர்வையாக அளிக்க முடியவில்லை. தலைப்பைத் தவிர்த்து கட்டுரையைப் படித்து கருத்தைத் தெரிவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன்.
    [/img][/url]
    அதிர்ஷ்டம் செய்த இந்தியா மற்றும் தமிழ்நாடு வாஸ்தவம் !

    ஆனால் இந்திய மற்றும் தமிழகத்தின் துரதிஷ்டமான, சாபக்கேடாக விளங்கும் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் காழ்புனற்சியான ஆளுமை நமது நடிகர்திலகத்தை என்றுமே அரசியல் காழ்புணர்ச்சியால் உதாசீனபடுத்தியது, உதாசீனபடுத்தினார்கள் !

    உண்மை மற்றும் அவதார புருஷன் நம் நடிகர் திலகம் !

    அதே சமயத்தில் அறிஞர் அண்ணாவால் துரதிஷ்டம் என்று உவமிக்கப்பட்ட வெளிநாடுகள் நமது நடிகர் திலகத்தை, அவரது திறமையை மற்ற எவரை காட்டிலும் பெருமை படுத்தி கெளரவம் செய்துள்ளது நமது அதிர்ஷ்டம்..!

    அதனால் தானே உள்ளூர் அரசியல்வாதிகள் நமது நடிகர் திலகத்தின் மீது வயிதெரிச்சல் கொண்டு அவரை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தனர, இருக்கின்றனர் !

    துரதிஷ்டம் என்று உவமிக்கப்பட்ட வெளிநாடுகள் உலகளவில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய தமிழ் நடிகர் நமது நடிகர் திலகம் மட்டுமே !

    1959 - ஆசிய ஆப்ரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் வெள்ளிபருந்து விருது !

    1962 - அமெரிக்க அதிபர் john f kennedy அழைபிதழின் பேரில் இந்திய அமெரிக்க கலாசார தூதுவர்.

    1962 நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மாநகர தந்தை (one day mayor ) பதவி மற்றும் தங்கசாவி அளிப்பு !

    1995 அமெரிக்க நாட்டின் கொலம்பஸ் மாநகரத்தின் ஒருநாள் மாநகர தந்தை ( one day mayor ) பதவி மற்றும் அமெரிக்க தமிழ் சங்கத்தின் honorory presidentship .

    1995 அதே அமெரிக்க நாட்டின் கொலம்பஸ் மாநகரத்தின் citizenship .

    1994 பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நபோலியன் அறிமுகபடுத்திய செவாலியர் விருது

    ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க ஆகிய கண்டங்கள் உலக அளவில் மிக உயர்ந்த விருதையும் கௌரவத்தையும் அந்தந்த காலகட்டங்களில் நம் நடிகர் திலகத்திற்கு கொடுத்து கௌரவித்ததர்க்கு நாமல்லவா அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும். !

  8. Likes KCSHEKAR liked this post
  9. #3226
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று முதல் மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த, இளைய திலகம் பிரபு அறிமுகம் ஆன "சங்கிலி" திரயிடபடுகிறது - தினசரி 4 காட்சிகள்



  10. #3227
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூன் மாதம் நடிகர் திலகம் திரைப்படங்களின் அணிவகுப்பு

    ஜூன் 1ஆம் தேதி முதல் வியாழன் வரை

    காஞ்சி பால சுப்ரமணியன் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நீதி திரைப்படம்

    நல்லதொரு வரவேற்ப்பு பெற்றுள்ளது. மே 31ஆம் தேதி புதிய திரைப்படம் வெளியிட்டு போதிய வரவேற்ப்பு இல்லாததால் அடுத்த நாளே நீதி திரையிடப்பட்டது குறிப்பிடதக்கது.

    நேற்று முதல் நடிகர் திலகம் திரைப்படங்கள் :

    சென்னை

    மகாலட்சுமி திரைஅரங்கில் சில வாரங்களுக்கு முன் பைலட் திரை அரங்கில் வெளியிட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் காவியம் தங்கச்சுரங்கம் - தினசரி 3 காட்சிகள் .

    நேற்று மட்டும் கிட்டத்தட்ட 900 பேர் இந்த திரைப்படத்தை கண்டு களித்துள்ளனர்.

    பைலட் - தினசரி 2 காட்சிகள் -
    நடிகர் திலகத்தின் 1974 மெகஹிட் திரைப்படம் எங்கள் தங்கராஜா - மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணி காட்சி.

    தங்கச்சுரங்கம் போல , எங்கள் தங்கராஜா திரைப்படமும் சில வாரங்களுக்கு முன் மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி 3 காட்சிகள் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது நாம் அறிந்ததே.

    பைலட் திரை அரங்கில் நேற்று கணிசமான மக்கள் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பைலட் திரை அரங்கில் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரைப்படங்கள் ஒன்றாக வெளியிட்டுள்ளனர். இரண்டு திலகங்களும் திரை உலகை இன்றும் ஆட்சி செய்து வருவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது ! மீண்டும் இதுபோல தொடரும் என்று நம்புவோம்.

    கோவை மாநகரில்
    -
    நடிகர் திலகத்தின் உயர்ந்த மனிதன் திரைப்படம் தினசரி 4 காட்சிகள் - கோவையில் மதியம் முதல் நல்ல ஒரு வரவேற்ப்பு உயர்ந்த மனிதனுக்கு கிடைத்துள்ளது என்று அரங்க மேலாளர் கூறினார்.

    மதுரை மாநகர் -
    நடிகர் திலகத்தின் 80 களில் c v ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற நடிகர் திலகத்தின் புதல்வர் பிரபு அறிமுகம் ஆன சங்கிலி திரைப்படம் சென்ட்ரல் திரை அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் எப்போதுமே நடிகர் திலகம் திரைப்படம் என்றால் ஸ்பெஷல் தான். இப்போதும் அப்படியே. மிகவும் ஆரவாரமான வரவேற்ப்பு பெற்றுள்ளது சங்கிலி
    Last edited by RavikiranSurya; 7th June 2014 at 07:35 AM.

  11. #3228
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear RKS. today mngshow at royal Uyarndha Manidhan.. enjoyed.
    this movie has the answer to why NT is regarded as the supremo of acting and why the title NT fits to him hand in glove. The surprise is Asokan! His role has been carved neatly thanks to the generosity of NT who is interested in the overall product rather than glorifying himself. Like Tharumi Nagesh, here Doctor Asokan performs his lifetime role unlike his over clownish portrayals of villainy in other actor's movies. All have done their role well and NT.....with ease proves his screen presence in scenes like eating the 'spicy' meals from Sivakumar, haunted by his nightmarish memories of Vanishree's death, ...... we feel proud to be NT's ardent fans.
    Today i had talked to Ragul and GK Ravi from Hyderabad and we shared a lot on NT and the direction in which our thread is going on...
    However, I found the print not upto the mark and most of its length I felt like viewing a geva color version of UM. The audience turnout was moderate, being the morning show and for the noon show i could see substantial crowd waiting. As usual the audience response in the theatre was plausible.
    Last edited by sivajisenthil; 7th June 2014 at 08:11 PM.

  12. #3229
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Mr Sivaji Senthil,

    Could u pls upload the alapparai at the theatre and whether you have gone with
    Mr Rahul or alone. Anyhow thanks for posting immediately.

  13. #3230
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் என் வந்தனம்.

    இடையில் வேலைப்பளுவினால் திரியில் பங்கு கொள்ள இயலவில்லை.

    சரி! விஷயத்திற்கு வருகிறேன்.

    நன்றாகப் போய்க் கொண்டிருந்த திரி இப்போது மீண்டும் டல்லடிக்க ஆரம்பித்துள்ளது.

    இந்தத் திரியின் ஜாம்பவான்களின் அறிவுபூர்வமான பங்களிப்பே என்னைப் போன்றவர்களை இந்தத் திரிக்கு அழைத்து வந்தது. மனம்நிறை சந்தோஷங்களை இத்திரி எனக்கு மட்டுமல்ல பலருக்கும் வாரி வழங்கியது.

    ஆனால் இப்போது நிலைமை என்ன?

    முரளி சாரின் அற்புதமான பங்களிப்பும், ரவிகிரண் அவர்களின் அயராத உழைப்பும் தவிர வேறு ஒன்றுமே சொல்வதற்கில்லையே!

    இந்தத் திரி தன் பொலிவை இதே போல முன்பொருமுறை இழந்த தருணத்தில் அருமை நண்பர் ரவி (ஹைதராபாத்) அவர்கள் கொஞ்சமும் மனம் தளராது அனைவரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மீண்டும் திரியை ஜெட் வேகத்தில் பயணிக்க வைத்தார் என்பது மறுக்க முடியாதது.

    ஆனால் இப்போது அவர் எங்கே போனார்?

    சரி அவரை விடுங்கள். பம்மலார், ராகவேந்திரன் அய்யா, நெய்வேலி வாசுதேவன், கார்த்திக், கோபால், பார்த்தசாரதி போன்ற அரும்பெரும் பங்களிப்பாளர்கள் எங்கே?

    கார்த்திக் சார், கோபால் முதலானோர் முன்னைப் போல எதுவும் எழுதுவதில்லை. ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் வந்து போவது போல் தெரிகிறது. அதற்குக் காரணமும் உண்டு. அவர்களுக்கு சரியான அவர்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆட்கள் திரியில் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ? அதனால் இவர்களுக்கு பதிவிடும் விருப்பம் குறைவாகவே தெரிகிறது.

    ரவி அற்புதமாக நகைச்சுவையுடன் கூடிய பங்களிப்புகளைத் தந்து கொண்டிருந்தார். திடீரென்று அவரும் மாயமாகி விட்டார். திரி சுணங்கிய நேரத்திலேயே விடாமல் பதிவுகள் இட்டு மற்றவர்களையும் உற்சாகப்படுத்தியவர் இப்போது சிலரின் செய்கைகளால் மனம் நொந்து விலகி இருப்பதாகத் தெரிகிறது.

    ஏனென்றால் ஒன்றிரண்டு போடக்கூடிய பதிவாளர்களின் பதிவுகளும் டார்ச்சர் என்று இங்கே விமர்சிக்கப்பட்டது. எனக்கு சுற்றி வளைத்து பேசத் தெரியாது. கோபால்தான் இந்தக் காரியத்தை செய்தார். இது ரவியை வெகுவாகப் பாதித்துள்ளது போலத் தெரிகிறது. அருமையாகப் பங்களிப்புகளைத் தந்து கொண்டிருந்த அவர் பின் ஏன் காரணம் இல்லாமல் நிற்பானேன்?

    பம்மலாரின் ஆவணப் பதிவுகளை சிலர் கேலி பேசி அவரை புதுத் திரி தொடங்க காரணமாக இருந்தார்கள். பின் அவரும் சுத்தமாக திரியிலிருந்து ஒதுங்கி மாற்றுமுகாம் நடிகருக்கு புத்தகம் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். ஆக இதற்கு அவர் காரணமல்ல.

    ராகவேந்திரன் அய்யா திரிக்கு அல்லும் பகலும் உழைத்திருக்கிறார். இப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரும் பல வருத்தங்களினால் மெயின் திரிக்கு வராமல் ஒதுங்கி இருக்கிறார்.

    நெய்வேலி வாசுதேவன் அவருடைய பங்களிப்பைத் தராமல் மனம் வருத்தப்பட்டு ஒதுங்கியிருப்பது போலத் தெரிகிறது. ரவிச்சந்திரன் திரியில் பங்களிக்கும் அவர் இந்தத் திரியில் பங்களிக்காமல் இருப்பதில் இருந்தே அவர் காயப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

    மற்ற திரியின் பங்களிப்பாளர்கள் எவரும் இங்கு முன்னைப் போல பங்களிப்புகள் தருவதில்லை. மெயின் பங்களிப்பாளர்கள் பலர் இல்லாமல் போனதால் மற்ற பங்களிப்பாளர்கள் இங்கு வர ஆர்வம் காட்டவில்லையோ?

    பார்த்தசாரதி அவர்கள் எப்போதோ தலை காட்டுகிறார் (முரளி பதிவிட்டால் மட்டுமே). நகைச்சுவை கொப்பளிக்க பதிவிடும் கல்நாயக் அவர்களும், அருமையான புள்ளி விவரங்களைத் தரும் ஆதிராம் அவர்களும் முன்பு போல பங்காற்றுவதில்லை.

    சந்திரசேகரும் அப்படியே!

    நன்றிகள் போடும் ராதாகிருஷ்ணனும், சித்தூர் வாசுதேவனும், செந்திலும் தென்படுவது அபூர்வமாக இருக்கிறது.

    இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரும் கோபப்பட்டு விடவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு மனவருத்தத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

    ஒன்று மட்டும் நிச்சயம். விமர்சனங்கள் என்ற கடும் முள் பலரை செயலிழக்கச் செய்துள்ளது. பங்களிப்பாளர்களை உற்சாகப்படுத்துவது என்பது இந்தத் திரியில் தேய்பிறையாகத் தேய்ந்து வருகிறது.

    என்னைப் போல திரியின் மௌன வாசிப்பாளர்கள் பலர் ஆயிரக்கணக்கில் உண்டு. இவர்களும் உற்சாகம் இழந்துவிட்டால் முதன்மையான இந்தத் திரி கடைநிலைக்கு தள்ளப்பட்டுவிடும். நான் சொல்லும் இந்த உண்மை கசப்பாகத்தான் இருக்கும். திரியின் பல ஆண்டுகால வாசிப்பாளன் என்ற முறையில் கூறுகிறேன்.

    என்னுடைய இந்தப் பதிவிற்கும் விமர்சனங்கள் எழலாம். ஆனால் அதுபற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

    பங்களிப்பாளர்கள் அனைவருமே வெகு ஆர்வமாகத்தான் இங்கு பதிவிட வந்தார்கள். ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் தகுதி இங்கிருப்பவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதுதான் வருத்தமான உண்மை.

    அனாவசிய சொல் குத்தல்கள், உற்சாகப்படுத்தாமை, கடும் விமர்சனங்கள், நான்தான் புத்திசாலி மீதி பேரெல்லாம் ஒன்றுமில்லை என்ற எள்ளிநகையாடல், சம்பந்தமில்லாதவர்கள் சிலர் இந்தத் திரியில் நுழைந்து திரியின் வளர்ச்சியைக் கெடுக்கும் செயல்களைச் செய்தல் என்று இந்த அற்புதமான திரி தன் பொலிவை இழந்து கொண்டிருக்கிறது.

    மனம் ரணப்பட்ட பதிவாளர்கள் அனைவரும் வந்து மீண்டும் பதிவிடுங்கள் என்று நாம் கேட்கவே முடியவில்லை. ஏனென்றால் தாமாகவே முன்வந்து பதிவிட்டவர்கள் அவர்கள். அவர்கள் வராமல் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது.

    சரி! இதற்கு முடிவுதான் என்ன?

    அதுதான் புலப்படவில்லை. ஒருவரையொருவர் மட்டம் தட்டுவதும், கடும் விமர்சனங்களை முன் வைப்பதும், அடுத்தவர் பதிவுகளை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ காயப்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

    இப்போதைய என்னுடைய இந்தப் பதிவிற்கும் விமர்சனங்கள் வரலாம். நான் ஏற்கனவே சொன்னது போல நான் இதுபற்றி கவலைப்படப் போவதில்லை.

    இந்தத் திரியின் மாண்பும், புகழும் எள்ளளவும் குறைந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் இப்பதிவை இடுகை செய்கிறேன். இதிலும் குற்றங்குறை காணாதீர்கள்.

    பங்களிப்பாளர்கள் பங்களிக்காததின் நியாயமான காரணத்தை உணருங்கள். எவருமே கெட்டவர்கள் இல்லை. மனம் விட்டு பேசினால், எழுதினால் அனைத்துமே சரியாகும்.

    பங்களிக்காத பங்களிப்பளர்களே!

    தங்கள் வருத்தங்கள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதை மனதுக்குள்ளேயே வைத்து பூட்டாதீர்கள். மனம் விட்டு உங்கள் குறைகளை எழுதுங்கள் யாரும் புண்படாத வகையில். எந்த வகையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் உணர்த்தினால்தான் மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மற்றவர்கள் வேண்டுமென்று உங்களை காயப்படுத்த மாட்டார்கள். உங்கள் மேல் உள்ள உரிமையால் அவர்கள் சற்று எல்லை மீறி இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நடிகர் திலகம் நமக்கு முக்கியமல்லவா? நீங்களும் மற்றவர்களை புரிந்து கொள்ளவும்.

    ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியன் என்ற முறையில் உங்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்கிறேன். உங்கள் மனவருத்தங்களைத் தள்ளி வையுங்கள். உங்கள் பதிவுகள் காயப்படுத்தப்பட்டால் திரியிலிருந்து ஒதுங்காதீர்கள். மாறாக தகுந்த விளக்ககமளியுங்கள்.

    மறுபடி இந்தத் திரி ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும். அது மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு நாம் செயல்படுவோம்.

    முரளி சார்,

    இனி தாங்கள்தான் மனது வைக்க வேண்டும். மற்ற பங்களிப்பாளர்களை நாம் மனமுவந்து அழைப்போம். அவர்கள் குற்றங்குறைகளை காது கொடுத்து கேட்போம். மீண்டும் அவர்கள் திரியை விட்டு விலகிவிடாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.

    ரவி, வாசு, ராகவேந்திரன் அய்யா, பார்த்தசாரதி, கோபால், பம்மலார், சதீஷ், செந்தில், ராதா கிருஷ்ணன், சந்திரசேகரன், பெயர் விடுபட்டுப் போன அனைவரும் வருத்தங்கள் விட்டு வாருங்கள்.

    உலகிற்கு பெருமை சேர்த்த பச்சைத் தமிழன் சிவாஜியின் புகழை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் மீண்டும் எடுத்துரைப்போம்.

    அது மட்டுமே நம் குறிக்கோளாய்க் கொள்வோம்.

    அனைவருக்கும் நன்றி!
    Last edited by Rama Doss; 7th June 2014 at 08:56 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •