-
11th June 2014, 08:57 PM
#3331
Senior Member
Senior Hubber
வாங்க வாங்க சிக்கலாரே (மனோரமா பாணியில்) ரவி .. குட்.. ரஹீமும் ரகுராமனும் பற்றிய பதிவு நன்னாயிட்டு இருக்கு..அடுத்து ஆண்ட்டனியா..
-
11th June 2014 08:57 PM
# ADS
Circuit advertisement
-
11th June 2014, 09:02 PM
#3332
Senior Member
Senior Hubber
எனக்கு இரண்டு வருத்தங்கள்.. 1. நான் ரஹீம் பற்றி எழுத நினைத்து நினைத்து இருந்த போது ரவி ராகுல் எழுதிவிட்டது (இருந்தாலும் எழுதிப் பார்ப்பேன்) 2. என்னுடைய சில ஆயிரங்கள் மேற்பட்ட போஸ்டைப் பற்றி என்னுடைய மனசாட்சி கூட என்னைப் பாராட்டலை (சேச்சே.. நீ எவ்வளவு ஹார்ட்லி வொர்க்கிங்க்னு எனக்குத் தெரியும்ப்பா.. -- மன்ச்சு அது ஹார்ட்லி வொர்க்கிங்க் இல்லை ஹார்ட் வொர்க்
)
-
11th June 2014, 09:21 PM
#3333
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
??????????????????????????????????????!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(Junior Member Newbie Hubber
Join Date
Apr 2014
Posts
17
Gopal,S.
Gopal,S. is offline
Senior Member Veteran Hubber
Join Date
Feb 2012
Location
Vietnam
Posts
2,028
ONE DOUBT GOPAL SIR !
Indha Senior Member Veteran Hubber means...Veteraen Hubberaa illa வெட்டறேன் ஹப்புரை யா ?
-
11th June 2014, 10:00 PM
#3334
Junior Member
Seasoned Hubber
நன்றி Dr செந்தில் & CK - ரஹீம் , ரகுராமிடம் இருக்கும் பரிவும் , பரந்த மனப்பான்மையும் உங்களிடம் அதிகமாகவே உள்ளது -
CK - ரஹீம் ஒரு அருமையான இயற்க்கை காட்சியை போன்றவர் - ஒருவர் கேமரா வில் கிளிக் செய்துவிட்டால் - அந்த இயற்க்கை காட்சி அந்த கேமரா வில் முடங்கி விடலாம் ஆனால் மறைந்து விடுவதில்லை - வேறு கோணத்தில் ரஹீம் வெளிவரலாம் - உங்கள் கவிதை நடையில் மீண்டும் கூப்பிடுங்கள் ரஹீமை - அருமையாக வெளிவருவார்
-
11th June 2014, 11:03 PM
#3335
Junior Member
Veteran Hubber
Ravi. call me just senthil. 'Dr' vendame! that may sometimes keep me at distance from our fellow hub friends and we may not interact with free mind.
Last edited by sivajisenthil; 11th June 2014 at 11:31 PM.
-
11th June 2014, 11:09 PM
#3336
Junior Member
Seasoned Hubber
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -3
ஒரு கை ரிக்க்ஷா வின் உண்மை கதை :
என் பெயர் கௌரி - நான் ஒரு சைக்கிள் ரிக்க்ஷா - என் முதலாளியின் பெயர் ராமு - நான் இந்த தெருவிற்கு வருவது இதுதான் முதல் தடவை - இங்கு வந்த முதல் நாளிலேயே பல நண்பர்களின் சகவாசம் கிடைத்தது - ஆனால் ஒவ்வருவரும் தன்னை பற்றியே அதிகமாக தம்பட்டம் அடித்துகொள்வது எனக்கு பிடிக்கவே இல்லை - என் தோழி அகிலா - பித்தீ கொள்வது என்ன தெரியுமா - இதுவரை அவள் ஒரு ஆம்பிள்ளையும் ஏற்றி கொண்டதே இல்லையாம் - அவளுடைய முதலாளிக்கு ஆம்பளை வாடை பிடிக்காதாம் ----- சிரிப்புதான் வந்தது - அன்று சைக்கிள் ரிக்க்ஷாக்களின் மாநாடு - எனக்கும் அழைப்பு வந்தது - என் முதலாளியை கேட்டால் போக அனுமதி கிடைக்காது - அவர் தூங்கியவுடன் மெதுவாக சத்தம் போடாமல் அகிலாவையும் அழைத்துக்கொண்டு அந்த மாநாட்டிற்கு சென்றேன் - குடியும் கூத்துமாக அந்த மாநாடு நடந்து கொண்டுருந்தது - எனக்கு பிடிக்கவே இல்லை - ச்சே என்ன ஜன்மங்கள் இவர்கள் என்று நினைத்துகொண்டே அகிலாவையும் விட்டுவிட்டு திரும்பி தனியாக வந்து கொண்டுருந்தேன் - அங்கே நான் பார்த்த காட்சி - என் ரத்தம் உறைந்து விட்டது
தனியாக ஒரு கை ரிக்க்ஷா நிற்க முடியாமல் இருமி கொண்டுருந்தது - வயதும் 70க்கும் மேலாக இருக்கும் - உதவி செய்ய அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை - மெதுவாக அருகில் சென்று பேச்சு கொடுத்தேன் - அவரின் பார்வையில் என் தந்தையை பார்த்தேன் - பேச முடியாமல் என்னிடம் அவர் தன் சுய சரிதையை சொல்ல ஆரம்பித்தார் - ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் என் கண்கள் கண்ணீர் அணையை திறந்துவிட்டன - என் உடம்பு முழுதும் நல்ல மழையில் நனைந்தது போல கண்ணீரில் நனைந்து விட்டது
அந்த வயோதிகர் பெயர் பாரத் - அவரின் முதலாளியின் பெயர் பாபு - பாரத் தெய்வத்தை பார்த்ததில்லை - அவருக்கு தெரிந்த தெய்வம் பாபு தான் - நன்றியின் பெயர் பாபு - கருணை பிறந்த இடம் பாபுவின் உள்ளம் - பாபு தொட்ட இடங்கள் மைதாஸ் தொட்ட தங்கம் போல - பாபுவின் மறைவுக்கு பிறகு பாரத் தன பொலிவை இழந்து விட்டது - யாரிடமும் வேலை செய்ய மனம் வரவில்லை - இழந்த சோகம் பாரத்தின் வயதை அதிகபடுத்தின -
நான் கேட்டேன் - அப்படி என்ன பாபுவிடம் ? -- பாரத் என்னை கேவலமாக பார்த்தார் - அப்படி ஒரு கேள்வி கேட்டது தவறு என்று உணர்ந்து கொண்டேன்
அவரிடம் இருந்து கணைகளாக கேள்விகள் வந்தன :
ஒருவர் ஒரு சின்ன உதவி செய்தார் என்பதற்காக , தன் வாழ்வையேஅவரின் குடும்பத்திற்காக பணையம் வைத்தவர் யாரையாவது உனக்கு தெரியுமா ? நன்றி நேராக வந்து நன்றி என்றால் என்னவென்று கற்று கொண்டது யாரிடம் தெரியுமா ? - தியாகத்தின் உண்மையான மறு பெயர் உனக்கு தெரியுமா ? - காதல் ததும்பும் வயதில் காதலியை இழந்து , வேறு ஒருவரையும் மனதில் கூட நினைக்காமல் , அந்த குடும்பம் முன்னேற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் என்னை ஓட்டியவர் யார் தெரியுமா ? தன்னால் வளர்க்கப்பட்ட முதலாளியின் மகள் திருமணத்தில் கூனி குறுகி அவமானப்பட்டு தன உயிரை கல்யாண பரிசாக கொடுத்த ஒரு உயர்ந்த உள்ளத்தை பற்றி கேள்வி பட்டதுண்டா ? - இத்தனைக்கும் ஒரே பதில் அதுதான் பாபு - பரிசுகள் இவர் விலைகொடுத்து வாங்கவில்லை - இவரை தேடி வந்தன - பாராட்டுகள் இவரின் முகவரியை கேட்டுக்கொண்டு வந்தன - இவரால் பாரத்தான எனக்கு பெருமை - அவர் தொட்ட என்னை வேறு எவரும் தொடக்கூடாது - அவரிடம் வேலை செய்த எனக்கு யாரிடமும் வேலை செய்ய பிடிக்கவில்லை - அவர் புகழ் பாடிய நான் இனி என் பாபுவை எங்கு காண போகிறேன் ???
என் கண்கள் குளமாகின - இப்படியும் ஒரு மனிதரா - இப்படிப்பட்டவருக்கு கீழ் வேலை செய்த பாரத்தை நினைக்கும் போது கர்வமாக இருந்தது - கூடவே அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்ய விரும்பினேன் - யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் , அதே சமயத்தில் மற்றவர்கள் கேட்க்காமல் உதவி செய்து வாழ்ந்த பாபு வை போலவே , பாரத் , நான் இனி உங்களுடன் உதவியாக இருப்பேன் என்று சொன்னவுடன் தன் கண்களை இறுக்க மூடிகொண்டார் - மூடிய கண்கள் பிறகு திறக்கவே இல்லை - அகிலா கூப்பிடுவது என் காதில் விழவே , கனத்த இதயத்துடன் அவளுடன் வீடு வந்து சேர்ந்தேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2014, 11:19 PM
#3337
Junior Member
Veteran Hubber
Baabu! Odaiyil ninnu malayalam movie remade with NT. This movie makes you feel the greatness of NT as how he polishes the role donned by Sathyan in its original. I have seen both. No doubt Sathyan was a good actor but in close-up scenes NT excels him with his facial expressions depicting the pains he undergo when the surrounding world turns thankless to him! Ravi.. your path with a difference is now getting defined and it will be refined over time. When one reads your write up NT comes before our eyes. You and Rahul alongside CK usher new approaches as a paradigm shift from the routine way of presentation or narration of the contents of a movie.
Last edited by sivajisenthil; 11th June 2014 at 11:24 PM.
-
11th June 2014, 11:54 PM
#3338
Junior Member
Seasoned Hubber
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -4
ஞான ஒளி - ஆண்ட்டனி
விட்டில் பூச்சிகள் போல படங்கள் பல வரலாம் - ஆனால் சில படங்கள் தான் மனதில் காவியமாக நிலைத்து நிற்கின்றன - immortal என்பதற்கு சாட்சியாக நிற்கும் படங்கள் இவை - அப்படி பட்ட படங்களில் ஒரு தனி ஒளி இருக்கும் - ஆனால் உங்களுக்கு ஞான ஒளி வேண்டுமென்றால் அதை ஒரு படம் தான் தர முடியும் - அதையும் ஆண்ட்டனி மனதை வைத்தால் தான் உண்டு - சாதரணமாக படம் நாம் திரையில் பார்க்கும் போது theaterஇல் உள்ள மற்ற விளக்குகள் அணைக்க படும் - இந்த படம் பார்க்கும் போது திரையில் ஒளி வரவில்லை - theater இல் முழுதும் ஒளி பரவியது - எல்லோர் மனதிலும் ஒரு ஞான ஒளி பிறந்தது - படம் என்றால் இதுதான் - நடிப்பு என்றால் இதுதான் - வசூல் என்றால் இதுதான் -
ஆண்ட்டனி - ஒரு பரிதாபத்திற்கு உரிய மனிதன் - வாழ்வில் அவன் சந்தித்தது கடுகளவு சந்தோஷம் , கடல் அளவு வேதனைகள் - மனைவியை இல் வாழ்க்கை யை அனுபவிக்கும் வயதில் பறிகொடுத்தான் - இருவரின் துடிப்பில் வந்த பரிசை படிக்க வைத்தான் - அவள் பரிசாக அவனுக்கு தந்ததோ ஏமாற்றம் - கனவுகள் கலைக்க படவில்லை - அழிக்க பட்டன - சந்தோஷங்கள் பிடுங்க படவில்லை - புதைக்க பட்டன - சட்டம் அவனை சுவரில் மாட்ட துடித்தது - அவனோ தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துகொண்டிருந்தான் - மகள் உயிருடன் இருக்கும் செய்தி அவனுக்கு தேனாக இனித்தது ஆனால் அவனை தேடும் அவன் போலீஸ் நண்பனோ தேனியாக அவனை தொடர்ந்து கொட்டி கொண்டுருந்தான் - தேவனின் கதுவுகளை தட்டினான் ஆண்ட்டனி - நிம்மதியை தேவன் உடனே தர விரும்பவில்லை - தன் பேத்திக்கு மணம் புரிய விதி உதவி புரியும் என்று நினைத்தான் - அவன் எதிர் பார்த்தபடி விதி உதவி செய்தது - ஆண்ட்டனிக்கு அல்ல அவனுடைய போலீஸ் நண்பன் லாரன்ஸ்க்கு - அன்பு ஒன்றுக்கே பிடி பட்டவன் , முதல் முறையாக போலீஸ் கைகளில் பிடிபட்டான் - வாழ்வில் எதையுமே முழுதாக அனுபவிக்கதாவன் சிறை வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்க தன்னை தயார் படுத்திகொண்டான் - பாதிரியாரின் கனவுகளை சாதித்த பெருமை கண்களில் இருந்தது - மகள் நடத்தை கெட்டவள் இல்லை என்பதை நிரூபித்த கர்வம் நெஞ்சில் நிறைந்து இருந்தது - பேத்திக்கு நல்ல முறையில் திருமணம் தானே முன் நின்று நடத்திய மகிழ்ச்சி முகத்தில் பீறிட , தன்னை வரவேற்கும் ஜெயில் யை தான் வரவேற்றான்
ஆண்ட்டனிக்காக எல்லா நல்ல மனங்களும் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கின்றன !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2014, 12:44 AM
#3339
Junior Member
Seasoned Hubber
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -5
ரவிகுமார் - அவன் தான் மனிதன்
ரவிகுமார் , கர்ணனின் மறு பெயர் - இருப்பவர்கள் இல்லை என்று சொன்னால் அவர்களை வெறுப்பவன் - இல்லை என்பவர்கள் இருக்கும் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவன் - காதலித்து மணந்தவள் ,தான் கொடுத்த மழலை செல்வத்தையும் அவனிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு இந்த உலகை விட்டு சென்று விட்டாள் - மீண்டும் அவன் வாழ்வில் காதல் பூத்தது - பூத்த மலர்களை அழகாக மாலையாக தொடுத்தான் - தொடுத்த மாலை வேறு ஒருவன் கழுத்தை அலங்கரிக்க ஆசை பட்டது - அந்த மாலையுடன் தனக்கு என்றும் அதிர்ஷ்ட்டம் கொடுத்து கொண்டிருந்த வைர மோதிரத்தையும் பரிசாக தன் உற்ற நண்பனுக்கு பரிசாக கொடுத்தான் - கர்ணனும் இப்படி ஒரு தானம் செய்திருப்பானா என்பது சந்தேகமே !!
நல்ல நட்பு தானமாக பறிபோனது - மீண்டும் வாழலாம் என்று ஆசையை மூட்டியவள் தன் நண்பனின் மனைவியானாள் - அவர்களின் மகள் அவனுக்கு ஆட்டுவிக்கும் கண்ணனாக காட்சி தந்தாள் - கடல் அளவு உள்ள ஆசைக்கும் , கையளவே கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் அவனுக்கு புரிந்தது - உதவி செய்து அதனால் துன்பம் கிடைக்கும் வாழ்க்கை அவனுக்கு தேனாக இனித்தது .
இனி கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை அவனிடம் உயிரை தவிர - அதையும் நட்புக்காக கொடுத்து அழியாத புகழை பெற்றான் - உலகம் மாறலாம் - எது மாறினாலும் எடுத்து சொல்ல , வழி நடந்து செல்ல ஒரு தியாக உள்ளம் உண்டு என்று சொன்னால் , அது அவனுடைய உள்ளம் ஒன்று தான் - எவ்வளவோ மனிதர்கள் வாழ்க்கையிலும் நடிப்பதுண்டு - ஆனால் வாழ்க்கையிலும் , அரசியலிலும் நடிக்க தெரியாமல் அவன் தான் மனிதன் என்று உலகமே சொல்லவைத்த ஒருவர் ரவிகுமார் என்னும் nt .......மட்டும் தான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2014, 01:38 AM
#3340
Junior Member
Veteran Hubber
dear Ravi. Give us some break between your write-ups on the unforgettable characterization of NT in these movies you are narrating one by one lest the impact of these characters will not linger in our minds longer. We have sufficient time ahead. When we try the old wine in a new bottle, your templates should be improvised throwing more light on how NT gave life to these characters. Please Ravi. Try to restrict extensive analysis on a character per day so that we can be absorbed into your writings rather than just surfing on the synopsis only. Hope you can take my humble personal opinion in the right sense and continue to enthrall us without monotony.
Last edited by sivajisenthil; 12th June 2014 at 01:43 AM.
Bookmarks