Page 340 of 401 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3391
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டபொம்மன் கிட்ட தட்ட 100 தடவைகள் நடந்தது , அந்த நாடகம் நடந்த சமயத்தில் நடிகர் திலகம் ஒரு பிஸியான நடிகர் இருந்தாலும் நாடகம் தாமதம் இன்றி நடந்தது . நாடகம் 6 மணி என்றால் நாடகம் சரியான நேரத்துக்கு தொடங்கி விடும்
    நாடகத்தில் நடித்துகொண்டு இருக்கும் பொது ரத்தம் குபுக் என்று வந்து கொண்டு இருக்கும் , எதற்கும் கவலைபடாமல் இவர் நடித்து கொண்டே இருப்பார் , நாடகத்தில் வசனம் பேசும் பொது நாடகத்தின் வசனம் அடிவயிற்றில் இருந்து வருகிறதா இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா என்றே அறியமுடியாமல் நடித்து கொண்டே இருப்பார் நடிகர் திலகம்

    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் படமானது :

    நாடகத்தின் வெற்றி திரு பந்தலு அவர்களை கட்டபொம்மன் கதையை படமாக எடுக்க தூண்டியது , அதன்படி உருவானது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் 1959 ல் வெளிவந்தது

    இந்த படத்துக்கு research work தலைவராக ம .பொ . சிவஞானம்
    அங்கத்தினாராக
    சக்தி கிருஷ்ணசாமி , பந்துலு , கணேசன் , P. A. குமார் , K. சிங்கமுத்து and S. கிருஷ்ணசுவாமி என்று பலரும் பங்கேற்று படத்தின் கதைகருவுக்கு வலு சேர்த்தார்கள்

    வெள்ளையதேவனாக திரு SSR நடிப்தாக இருந்தது , சிவகங்கை சீமை படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் அவரால் அந்த commitment ல் இருந்து வரமுடியாமல் போகவே ஜெமினி கணேசன் அந்த பாத்திரத்தில் நடித்தார் . அப்போது திரு சாவித்ரி கர்பமாக இருந்ததால் ஜெமினி வர தயங்க நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சாவித்ரி ஜெமினி கணேசனை நடிக்க ஜெய்பூர் அனுப்பி வைத்தார் . தினமும் ஜெய்பூர் ல் இருந்து சென்னைக்கு trunk call செய்து சாவித்ரியின் உடல் நலம் குறித்து விசாரிபாரம் ஜெமினி கணேசன்

    படம் வெளி வந்தது பெரும் வெற்றி பெற்றது , இது அனைவருக்கும் தெரிந்தது .

  2. Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3392
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டபொம்மன் பெற்ற விருது , கெளரவம் :

    ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழா :

    1960 ல் ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தேர்வு செய்ய பட்டது ,அங்கும் அரசியல் செய்ய பார்த்து வேறு ஒரு படத்தை ணைபின்னர்கள் , ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தான் தேர்வு செய்யப்பட்டது . இந்த விழாவில் பங்கேற்க பந்தலு , பத்மினி , சிவாஜி எகிப்து சென்றார்கள் . விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் திரைட பட்டது , இங்கே நம் ஊரில் கை தட்டி ரசித்ததை போலே , அங்கேயும் ரசிக்க பட்டது
    பெஸ்ட் ஹீரோ விருது நம்மவருக்கு , விருது அறிவித்ததும் ஒரு வித பரபரப்பில் மயங்கி விழுந்து விட்டார் நடிகர் திலகம் , பிறகு மேடைக்கு சென்ற உடன் 5 நிமிடம் standing ovation மரியாதை கிடைத்தது நம்மவருக்கு
    மேலும் சிறந்த இசை , டான்ஸ் , கதை இந்த category ல் கட்டபொம்மன் விருது கிடைத்தது

    அதிபர் நாசர் சென்னை வருகை :
    எகிப்து விழாவில் அதிபர் நாசர் பங்கேற்கவில்லை , காரணம் அவர் சிரியா சென்று இருந்தார் , அதிபர் வீட்டுக்கு சென்ற பட குழு அதிபரின் மனைவி உடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசும் பொது அதிபர் வரமுடியாமல் போன காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்டார் அதிபர் மனைவி .

    நாசர் இந்திய வருவது அறிந்த நடிகர் திலகம் பிரதம மந்திரி நேருவிடம் அதிபர் சென்னை வரும் பொது சிறிது நேரம் தன்னுடைய விருந்தாளியாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள 2 மணி நேரம் அதிபர் நாசர் சிவாஜியின் விருந்தாளியாக இருந்து சிறப்பித்தார்

    அதிபரை வரவேற்க சில்ரன் தியேட்டர் முழுவதும் தேச தந்தை காந்திஜியின் படங்கள் மற்றும் இந்திய நாட்டின் பெருமையை எடுத்து கூறும் படங்களால் அலங்கரித்தார்கள் , மேலும் RED CARPET வரவேற்பு அளிக்க பட்டது . வெள்ளியில் ஷீல்ட் , ல் நடராஜர் சிலைக்கு இருபக்கமும் பிரமிட், மற்றும் தஞ்சாவூர் கோபுரம் , மேலும் யானை , ஒட்டகம் வடிவமும் செய்து அதிபருக்கு வழங்க பட்டது . இதற்க்கு சிகரம் வைத்தது போல் ஆங்கிலத்தில் திருக்குறள் பொரிக்க பட்ட தங்க தகடும் கொடுக்க பட்டது , அதற்க்கு ஒரு மொள்வியை வரவழைத்து அரபு மொழி வாசகங்களை பொரித்து அதையும் பரிசாக வழங்கி நாசர் அவர்களை கௌரவித்தார்கள்

  5. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes eehaiupehazij, KCSHEKAR liked this post
  6. #3393
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    SSR சிவகங்கை சீமையில் நடித்தால் தான் கட்டபொம்மன் படத்தில் நடிக்க வில்லை என்பது அனைவரும் அறிந்தது ,

    வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தின் துவக்க விழாவுக்கு கவிஞர் கண்ணதாசன் சென்று இருந்தார் அப்படி இருக்கும் பொது

    சிவகங்கை சீமை கட்டபொம்மன் படத்துக்கு போட்டியாக எடுக்க பட்ட படமா ?
    சிவகங்கை சீமை மருதுபாண்டியர் கதை , கட்டபொம்மன் படமும் , சிவகங்கை சீமை படமும் ஒரே கதை என்று கதை கட்டி விட்டார்கள் . ஆனால் உண்மையில் அப்படி இல்லை

    கட்டபொம்மன் இறந்த பிறகு , ஊமைத்துரை சிறையில் அடைக்க படுகிறார் , அத்துடன் முடிவது வீர பாண்டிய கட்டபொம்மன்

    ஆனால் ஊமை துறை தப்பித்து வருவதில் இருந்து தொண்டங்குவது தான் சிவகங்கை சீமை கதை . sequel (கட்டபொம்மன் படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பார்த்தல் ஒரு பெரிய novel படித்தது போல். இருக்கும் .

    படத்தின் preview பார்த்த AVM கட்டபொம்மன் வெளிவந்து 2-3 மாதம் கழித்து சிவகங்கை சீமை படத்தை ரிலீஸ் செய்தால் பணம் பார்க்கலாம் என்று சொல்ல அதை செய்யாமல் படத்தை கட்டபொம்மன் வெளிவந்து 2 வாரத்தில் அவசரமாக படத்தை ரிலீஸ் செய்ததால் படம் தோல்வியை தழுவியது


    காரணம் கட்டபொம்மன் படத்தின் grandeur , சிவாஜியின் வசனம், நடிப்பு சகலமும் படத்தின் + points

    வீரபாண்டிய கட்டபொம்மன் படம் முதல் டெக்னி கலர் படம் மேலும் ஜெய்பூர் அரண்மனையில் படம் பிடிக்க பட்டது . நடிகர் திலகம் கட்டபொம்மன் அவர்களுக்கு சிலை , நினைவு சின்னம் எழுபின்னர் , இந்த நாடகத்தின் வசூல் பல பொது காரியங்களுக்கு தானமாக கொடுக்க பட்டது . படம் அமெரிக்காவில் re ரிலீஸ் செய்த பொது மீண்டும் ஹவுஸ் புல் ஆக ஓடி சாதனை படைத்தது

  7. #3394
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    அன்புள்ள RKS - உங்கள் சேவை மகத்தானது , புதுமையானதும் கூட -

    திரியின் முதல் பாகத்திலிருந்து 12வது பாகம் வரை மிக சிறந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன - சர்ச்சைகளுக்கு உட்பட்ட பதிவுகள் நீங்கலாக ----பல படங்கள் , பாடல்கள் சிறந்த முறையில் இங்கு பதிவிடப்பட்டுள்ளன - அத்தனைக்கும் பின்பு ஒவ்வருடைய உழைப்பும் , Passion உம் அடங்கி உள்ளது - ஒவ்வருவரும் அவர்கள் பாணியில் நடிப்பு கடவுளுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் - வார்த்தைகளும் , வர்ணனைகளும் , பூஜிக்கும் விதங்களும் வேறு படலாம் - ஆனால் NT யை விரும்பாமல் யாருமே இங்கு பதிவுகளை இடுவதில்லை - அவருக்கு வாழ்க்கையில் கொடுக்க மறந்த மரியாதைகளை நாம் நமது புகழாழம் மூலம் இங்கு சற்றே ஈடு கட்ட முயற்சி செய்கிறோம் - கால போக்கில் பதிவுகள் அழிந்து விடலாம் - ஆனால் நாம் அவருக்கு மான சீகமாக கட்டிய மணி மண்டபமோ , , உள்ளத்தில் இருந்து வந்த புகழ் அஞ்சலியோ என்றுமே மறையாது - மறைய விடக்கூடாது

    சில யோசனைகள் உங்கள் பார்வைக்கு :

    1. Soft Copy யாக எல்லா பதிவுகளையும் , ஆவணங்களையும் CD யில் காப்பி செய்து புத்தகத்துடன் இலவசமாக கொடுக்கலாம் - இதன் செலவுகளை நான் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன்

    2. செந்தில்/ KCS சொன்னது போல பதிவுகளை அலசி வரிசை படுத்தி போட வேண்டும்

    3. பதிவுகள் போட்டவர்களின் பெயரை செலக்ட் பண்ணி , அவர் போட்ட எல்லா பதிவுகளும் அவருடைய பெயருக்கு கீழ் வர மாதிரி செய்யல்லாம்

    மிகவும் முக்கியம் - update - போதிய இடைவெளிக்குள் நம் compilation யை புதுப்பிக்க வேண்டும்

    உங்கள் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
    Dear Sir,.
    The Soft copy in CD is not a good idea i think because, there are every chances that the watermark will be removed using adobe photoshop and there are chances that some people might take a commercial mileage out of it.

    NO SPONSORING SIR...! Whoever wants it, will speak directly to the press / visit that press give the money and take it.

    Though, i could also do that, am not doing it because it is MONEY MATTER !

    xerox matrum binding enna cost varugiradho adhai andha pressil koduththu petrukollalaam

    regards
    RKS
    Last edited by RavikiranSurya; 14th June 2014 at 12:20 AM.

  8. #3395
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல் - எல்லா அதிசயங்களையும் ஏற்படுத்தின ஒரு படத்தை , இன்றும் , இன்னும் பல தலைமுறைக்கும் பெருமையாக பேசவைக்கும் ஒரே படத்தை , வீரத்தையும் , தமிழையும் , தேச பக்தியையும் ஒன்று சேர நமக்கு ஊட்டுவிக்கும் ( historically futuristic ) ஒரு படத்தை -இல்லை , இல்லை ஒரு பாடத்தை தொகுத்து வழங்கி இருக்கிண்டீர்கள் - இந்த படம் ஏற்படுத்தின சில தாக்கங்களை நான் கீழே summarize பண்ணியுள்ளேன் :

    1. இதுவரை ஒரு நாடகமாக வெற்றி கண்ட கதை படமாகவும் வெளிவந்து வெள்ளிவிழாவை சந்ததித்து இல்லை - இந்த படம் அந்த ஒரு magic யை முதல் முறையாக ஏற்படுத்தியது .இந்த அற்புதம் பிறகு பலமுறை NT நடத்தி காண்பித்தார்

    2. இந்த படம் வெற்றிகரமாக ஓடியது என்று ஒரே வார்த்தையில் சொல்வது போறாது - ஓடிய திரை அரங்குகள் ஏராளம் - ஓடிய நாட்களும் ஏராளம் - வசூலில் இந்த படத்தை மிஞ்சிய படம் என்று ஒன்று இருப்பதாக யாரவது சொன்னால் , அவர்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள் .

    3. இந்த படம் வெளிநாட்டிலும் சக்கை போடு போட்ட படம் - NT ஒரே படத்தில் வீரத்தையும் , அக்மார் தமிழையும் , தேச பக்தியையும் , வெளிநாட்டில் இப்படி ஒருவர் நம் நாட்டில் பிறக்கவில்லையே என்று ஒவ்வருவரும் நினைத்து கதறும்படியாகவும் , நம் நாட்டில் வெற்றி பெற்றால் போறாது என்று பல நாடுகளிலும் வெற்றியை பெறக்ககூடிய படமாகவும் மாற்றி காட்டி ,உண்மை கட்டபொம்மனாகவும் வாழ்ந்து காட்டிய படம் .

    4. பந்தலு முதல் முதலாக வெற்றி என்றால் என்ன , பணம் என்றால் என்ன , அதை எப்படி பண்ணுவது என்பதையும் தெரிந்து கொண்ட படம் . எவ்வளவு தடவை re release பண்ணினாலும் கர்ணன் மாதிரி வசூலை கொட்டி குவித்தது - இன்னும் வரும் நாட்களில் மேலும் குவிக்கும்

    5. The news of this movie won in ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழா , spread a wave of happiness at home and abroad . The joy at home knew no bounds as the hard work of several years of NT was getting the recognition it deserved , especially at the international level . The entire nation and tamil film world felt overwhelmed with emotion because so many of well wishers felt happy for NT. In those days globalization was on the verge of creating a rift between tamil movies and others but this one movie sailed through all odds.

    6.இந்த படம் பல புது முகங்களுக்கு entrance test ஆக அமைந்தது - அப்படி அமைந்த இன்னுமொரு படம் " பராசக்தி "

    7. உண்மையான கட்டபொம்மன் இந்த படத்தை பார்த்திருந்தால் - முதலில் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை NT யிடம் தெரிந்து கொண்டபின் , வெள்ளையர்களை விரட்ட முயண்டிருப்பார் .

    8.இப்படி ஒரு நடிகர் இனி வரபோவதில்லை , இப்படி ஒரு படமும் இனி தயாராக போவதில்லை - தமிழ் பாவம் அனாதையாகி - இன்று யாருடைய ஆதரவும் இல்லாமல் குமறிக்கொண்டு இருக்கின்றது

    9.மீண்டும் டிஜிட்டல் வடிவில் வந்தால் அந்த தமிழ் தான் ஒரு அநாதை என்று நினைக்கும் எண்ணத்தை சற்றே மாற்றலாம்

    அன்புடன்

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, KCSHEKAR liked this post
  10. #3396
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று காலையில் எனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி.

    நான் எனது மகளை வண்டியின் முன்புறம் அமரவைத்து அருகில் இருக்கும் SUPERMARKET செல்ல நேர்ந்தது. செல்லும் வழியில் எங்களது வண்டிக்கு முன்பு ஒரு ஆட்டோ சென்றுகொண்டிருந்தது...

    சாலையில் எனது கவனம் இருந்தது. திடீரென்று எனது மகள் "என்னப்பா இப்படி ஒரு தமாஷு" என்றாள். நான் என்னது என்று கேட்டபொழுது அந்த ஆட்டோவின் பின்புறம் ஒட்டிய ஸ்டிக்கரை காண்பித்தாள். எனக்கு அடக்க முடியாத சிரிப்பு.

    தொடர்ந்த என் மகள்....என்னப்பா அவரு மூஞ்சியபோய் இவரு உடம்புள்ள வெச்சு ஒட்டியிருக்காங்க...ஒரே காமெடி பா என்றாலே பார்க்கலாம் !

    விஷயம் இதுதான் !

    ஒரு மிக பிரபலமான நடிகரின் முகத்தை மட்டும் எடுத்து இன்னொரு இப்போதைய மிக பிரபலமான நடிகரின் போலீஸ் உடை போட்ட கட்டுமஸ்தான உடம்பில் (SIX PACK ) பொருத்தி (PHOTOSHOP WORK ) அதை ஒரு STICKER செய்து ஆட்டோவில் ஒட்டியுள்ளார்கள்.

    அதாவது என்னமோ இவர்களுக்கு தான் அறிவு இருக்கிறது மற்ற எவராலும் இவர்கள் செய்யும் தில்லுமுல்லை கண்டுபிடிக்க முடியாது என்பது போல இவர்கள் செய்யும் இந்த மடச்செயல் ஒரு 8வது படிக்கும் குழந்தையால் கூட எளிதில் கண்டுபிடித்து எள்ளி நகயாடப்படுகிறது என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ. 8வது படிக்கும் என்மகள் கூட இதை கண்டுபிடித்து எள்ளி நகயாடுகிற அளவிற்கு இருக்கிறது இவர்களுடைய சிறுபிள்ளைதனமான செய்கை.

    மொத்தத்தில் இவர்கள் இன்னும் 1000 ஆண்டுகள் போனாலும் அடுத்தவர் புகழையும் பெருமையும் தனதாக்கி கொண்டாடும் செயல் ...தன்னுடைய சிறுமையை அடுத்தவர் பெயரில் பறைசாற்றும் ஈன புத்தியும் என்று தான் இந்த பிறவிகள் கைவிடுவார்களோ தெரியவில்லை.

    அந்த STICKER ஐ பார்த்தவுடன் இந்த வடிவேலுவின் காமெடிதான் ஞாபகத்திற்கு வந்தது ! COMEDY என்றாலும் உண்மை நிறைந்துள்ளது இதில் !!

    Last edited by RavikiranSurya; 14th June 2014 at 02:19 PM.

  11. #3397
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragul. you have posted a nice compendium of VPKB, aptly supported by Ravi

    வீர்பாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் மட்டுமல்ல. நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் தங்கத்தில் பதிக்கப்பட்ட வைரம். காலங்கள் உருண்டோடலாம். ஆனால் காலத்தை விஞ்சிய இக்காவியம் கர்ணன் வரிசையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் கௌரவத்தை நிலைநிறுத்தும் பெருமைப்பொக்கிஷம். வரும் காலங்களில் இப்படம் உருவாக்கப்போகும் சாதனைகளை ....நினைத்தாலே இனிக்கும் அனுபவத்திற்காக காத்திருப்போம். கர்ணன் காவியம் ஒருவரை நவீன பந்துலு ஆக்கிப் பெருமிதம் கொள்ள வைத்தது .அவரும் பழைய பந்துலு பாணியில் கேம்ப் மாறி நொந்துலு ஆன கதை ...அதை மறைக்க செய்யப்படும் சமாளிப்புகள் ...உண்மை உணரும் நேரம்தான்!
    Last edited by sivajisenthil; 14th June 2014 at 02:55 PM.

  12. #3398
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு.ராகுல் / திரு.ரவி.
    வீரபாண்டிய கட்டபொம்மன் - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல் எனலாம். அதுபற்றிய செய்திகள், ஆய்வுகள் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுப்பதில்லை என்று சொல்வதைவிட அதனை மீண்டும் மீண்டும் படிப்பதில் ஒரு சந்தோஷமும் இருக்கிறது. இத்திரைப்படத்தைப் பற்றி தாங்கள் இருவரும் மீண்டும் அழகாக நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்.

    வருங்காலத் தலைமுறையினருக்கு கட்டபொம்மன் என்றால் இவர்தான் என்று அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்.

    அந்த வகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில செய்திகளைப் (சிவாஜி-ஒரு வரலாற்றின் வரலாறு - தொகுப்பு நூலில் வெளியானது) பகிர்ந்துகொள்கிறேன்.

    நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் நடித்ததோடு நின்றுவிடவில்லை. 1971-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலம் வாங்கி, அதில், கட்டபொம்மன் சிலையை நிறுவி, நீண்ட காலம் தன சொந்த செலவிலேயே பராமரித்து வந்து, பின்னன் அவ்விடத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

    1958 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடத்தி (112 முறை), அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, உறுப்பினர்கள் சம்பளம் போக ரூபாய் 32 லட்சத்தை, பல கல்லூரிகள், நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். இதேபோல பம்பாயிலும் இந்த நாடகத்தை நடத்தி அதில் வசூலான தொகையை நன்கொடையாக வழங்கினார். மயிலாடுதுறையில் கட்டபொம்மன் நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையை, கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியாக, தோழர் ஜீவாவிடம் வழங்கினார்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......... நடிகர்திலகம் சொல்லாமல் விட்டுசென்ற சேவைகளை.






    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  14. #3399
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    watching Murasu TV. மருமகள். இந்தப்படத்தின் கதாநாயகர் மிக மிக வயதானவர். ஜோடி இல்லாதவர். 90 சதவீதம் படுக்கையிலேயே நோயாளியாக இருப்பவர்.
    ஆனால் , படுத்துக்கொண்டேஇந்தப்படத்தை நிற்க வைத்தவர்.இக்கால ஹீரோக்களின் உடல்வாகு மறைந்து உருண்டு திரண்டு பழுத்த பழமாக தோன்றுபவர். ஆனால் படத்தின் ஆணிவேரே அவர்தான். இந்த பாத்திரத்தை உலகின் எந்த நடிகன் இவ்வளவு காந்த ஈர்ப்புடன் செய்ய முடியும்? கண்கள் குளமாகின்றன.நடிகர் திலகமே! நீங்கள் எங்கள் மனத்தில் இறவாப்புகழ் பெற்றவர்.
    Last edited by sivajisenthil; 14th June 2014 at 09:54 PM.

  15. #3400
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Subramaniam Ramajayam Sir, chinnakkannan Sir, Senthil sir

    Special thanks to KC Sekar sir for kattabomman pics and scans

    Thanks for complementary write up Ravi sir

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •