-
26th June 2014, 07:44 AM
#3571
Senior Member
Devoted Hubber
-
26th June 2014 07:44 AM
# ADS
Circuit advertisement
-
26th June 2014, 09:32 AM
#3572
Junior Member
Senior Hubber
Enna poster pothalum eppadi adinalum KARNAN RERUN SUCCESS I nerungamudiyathu.
IDHU MAKKAL THEERPPU ANDRU 1964 keli pesiyathukku KARNAN THANTHA MAPERUM PARISU KARNAN 2012 vettri. arasan andru kolvan deivam nindru kollum
clearly proved very well. IAM PROUD that I am one of the witnesses for both the happenings.
VALGA SIVAJI VALARGA AVARTAM PERUMAI. NADIGARTHILAGAME YOU ARE REALLY
VERY VERY GREAT.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th June 2014, 09:44 AM
#3573
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
2+8=10
head breaking sivaa. please solve the riddle or puzzle or enigma, as you call it.
Next don't say 3 + 7 = 10.....
Last edited by sivajisenthil; 26th June 2014 at 10:44 AM.
-
26th June 2014, 10:14 AM
#3574
Junior Member
Veteran Hubber
கர்ணனின்மலைக்க வைத்த மாபெரும் வெற்றி அவர்களால் இன்னும் ஜீரணிக்க இயலவில்லை. கர்ணன் காட்டிய பாதையில்தான் இனி எந்தவொரு மெருகேற்றப்பட்ட பழைய திரைப்படமும் வெற்றி இலக்கை நோக்கி நகர இயலும். இதுவரையிலும் சரி இனி வரும் காலங்களிலும் சரி தமிழ் திரையுலகின் பெருமையை உயிர்ப்பித்து நிலைநிறுத்திய நடிகர் திலகம் மட்டுமே சோதனைகளை முறியடித்து வேதனைகளை வேருடன் பெயர்த்து சாதனை படைத்த இறவாப்புகழுக்கு அடையாளமான நடிகமேதை. காகித அம்புகளுக்கு கர்ணனின் பிரம்மாஸ்திர மேன்மை புரியாதுதான். நாம் எதை மலர்ப்படுக்கை என்று நினைக்கிறோமோ அது சிலசமயம் பீஷ்மரின் முள்படுக்கையாக மாறிவிடும். கானல்நீரைக் கண்களால்தான் பருக இயலும்
Last edited by sivajisenthil; 26th June 2014 at 04:41 PM.
-
26th June 2014, 05:52 PM
#3575
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது - 39
1967 ல் வெளிவந்த பேசும் தெய்வம் படத்தை பற்றிய பதிவு தான் இது
கதை :
பெரிய கோடீஸ்வரர் ரங்கா ராவ் . அவர் மனைவி சுந்தரி பாய்.
ரங்கா ராவ்வின் மகன் சந்துரு (நடிகர் திலகம்) , சந்துருவின் அக்கா கணவர் மதுரை கலெக்டர் . பணக்கார குடும்பம் , கல்லூரியில் படிக்கும் சந்துரு லக்ஷ்மி (பத்மினி ) என்ற பெண்ணை பார்த்த உடன் மனம் மாறுகிறார் , தன் நண்பர் நாகேஷ் உதவியால் லக்ஷ்மியை காதலிக்கிறார் . தன் மாமா உதவி செய்ய காதல் கல்யாணத்தில் முடிகிறது , லட்ச்மியின் குடும்பம் சந்துருவின் குடும்பம் போல் பெரிய அந்தஸ்து உள்ள குடும்பம் அல்ல , அனாதை லக்ஷ்மியை சிறு வயதில் இருந்து ஒருவர் எடுத்து வளர்கிறார் .
கல்யாணம் முடிந்து சில வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாததால் வேலைக்காரியின் குழந்தையை வளர்க்க இருவரும் முடிவு செய்ய , அதற்க்கு பெரியவார்களின் ஆசியும் கிடைகிறது .
அதன்படி வேலைக்காரிக்கு பிறகும் 7 வது குழந்தையை வளர்க்க முடிவு செய்கிறார்கள் , குழந்தை பிறந்ததும் வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஒடிகிறது . அந்த வீட்டின் centre of attraction அந்த குழந்தை தான் . ஆனால் அவர்கள் சந்தோசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை .டிப்திரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தையை சரியான நேரத்தில் டாக்டரிடம் காண்பிக்காததால் (வேலைக்காரியின் பேச்சை கேட்டுக் கொண்டு) குழந்தை இறந்து விடுகிறது. அதே நேரத்தில் மயங்கி விழும் லட்சுமி கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூற மீண்டும் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. அதற்கும் டிப்திரியா தாக்க ரங்கராவ் குழந்தையின் பெற்றோர்கள் இருவரையும் அழைத்து தன் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையான்யிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்யும் படி கூற அவர்களும் அதை செய்ய குழந்தை பிழைத்துக் கொள்கிறது.
-
26th June 2014, 05:53 PM
#3576
Junior Member
Seasoned Hubber
சில வருடங்கள் கழித்து
பர்மாவிலிருந்து யுவான்சென் என்ற செல்வந்தர் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகிறார். எல்லா வசதிகளும் இருந்தும் அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. எனவே இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியாவிற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள்.
சந்துருவின் பெற்றோர்கள் இப்போது சொந்த ஊரான நாகர்கோவிலில் வசிக்கிறார்கள்
சந்துரு வழக்கறிஞரிடம் பணியாற்றி வருகிறார். குழந்தை சற்று வளைந்து பெரியவனாக வளர்கிறார் . குழந்தை பாபு தான் லக்ஷ்மியின் உலகம் . பாபுவை பார்க்க வேண்டும் என்று தாத்தா பாட்டி இருவரும் பிரியப்பட , அந்த சமயத்தில் சந்துருவின் அக்கா மகள் கல்யாணத்துக்கு அழைப்பு வர . இதயம் பலவீனமான இருப்பதால் பயணம் செய்ய டாக்டர் அனுமதிக்காததால் பாபுவை அழைத்து கொண்டு திருமணத்துக்கு சென்று விடுகிறார் சந்துரு . திருமணத்தில் பழைய நண்பர்கள் கூட்டத்தை சந்திக்க அனைவரும் சீட்டு கச்சேரியில் மூழ்குகிறார்கள்.ஆட்டத்தில் ஆழ்ந்திருக்கும் சந்துரு தன் குழந்தையை கவனிக்காமல் விட்டு விட பாபு வேறு சில குழந்தைகளை பார்த்து விட்டு அவர்களுடன் விளையாடப் போகிறான்.
குழந்தை காணவில்லை என்பதை உணரும் சந்துரு தேட குழந்தையின் செருப்பு ஏரியில் கிடைகிறது . குழந்தையை பிரிய மனம் இல்லாமல் அனுப்பி வைத்த லக்ஷ்மி டெலிபோன் செய்ய தன் மாமா மற்றும் பெற்றோர்கள் பொய் சொல்லி சமாளிக்க , சந்துருவும் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்
தன் மாமாவின் ஆலோசனை படி ஊருக்கு திரும்பும் சந்துரு தன் மனைவிடம் குழந்தையை இன்னும் ஒரு வாரம் கழித்து தன் பெற்றோர்கள் கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்ல லக்ஷ்மி அதை ஏற்று கொண்டு இயல்பான மனநிலையில் இருக்க சந்துரு வேலைக்கு செல்லாமல் இருபதையும் , சந்துருவின் சீனியர் வந்து போவதையும் , ஊருக்கு கொண்டு போன போட்டியில் குழந்தையின் உடைகள் , பிஸ்கட் இருப்பதை பார்த்து லக்ஷ்மி லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது. குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க சந்துரு அவளை மதுரைக்கு கூட்டி செல்கிறான்.
யுவான்சென் மற்றும் அவர் மனைவி( சௌகார் ஜானகி ) பல அனாதை இல்லங்களுக்கு சென்றும் அவர்கள் விரும்பிய குழந்தை கிடைக்காமல் இருக்க அந்த நேரத்தில் கடற்கரையில் இருக்கும் பாபுவை பார்த்து விட அவர்கள் அந்த குழந்தையை வளர்க்கும் நபர்களிடம் பணம் கொடுத்து பாபுவை கூட்டி செல்கிறார்கள். சந்துருவின் அக்கா கணவர் குழந்தை குழந்தையை கொடைக்கானல் கான்வென்ட்- ல் சேர்த்திருப்பதாகவும் யாரும் பார்க்க முடியாது என்றும் சொல்ல லட்சுமியோ பாபுவை தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று கெஞ்ச வரிசையாக செல்லும் குழந்தைகளில் ஒன்றை காண்பித்து அதுதான் பாபு என்று சொல்ல லக்ஷ்மி அதை நம்ப மறுக்க நிலைமை மோசம் ஆகிறது . யுவான்சென் தம்பதிகளின் பேட்டியும் குழந்தை பாபுவுடன் நிற்கும் புகைப்படமும் அவர்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பர்மா செல்வதையும் பத்தரிகையில் செய்தியாக வர அதை அறிந்து சந்துரு & லட்சுமி திருச்சி சென்று விமான நிலையத்தில் அந்த தம்பதிகளை சந்தித்து உண்மையை சொல்லி குழந்தையை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் யுவான்சென்னின் மனைவியோ குழந்தையை பிரிய மனமில்லாமல் கதறி அழ, அவளது நிலை கண்டு பொறுக்காமல் லட்சுமியே அவளிடம் குழந்தையை கொடுத்து விடுகிறாள். சென்னை திரும்பும் சந்துரு லட்சுமி தம்பதியினர் குழந்தையை மறக்க முடியாமல் தவிக்க அப்போது யுவான்சென் தம்பதியினர் குழந்தை பாபுவுடன் வீட்டிற்கு வருகிறார்கள் , பம்பாய் விமான நிலையத்தில் அவர் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் பாபுவை தங்களிடம் கொடுக்க வந்ததாகவும் , மேலும் தங்களுக்கு குழந்தை இந்த வீட்டில் பிறக்க வேண்டும் என்று தன் விருப்பதை சொல்ல ரவி , லக்ஷ்மி இருவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்
happy ending
-
26th June 2014, 05:54 PM
#3577
Junior Member
Seasoned Hubber
கதாபாத்திரங்கள் பற்றி :
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் திரு ரங்கா ராவ் தான் .
பெரிய செல்வந்தர் , தயாள குணம் , உருவமும் , உள்ளமும் பெரியது , கடவுளை இப்படியும் கும்பிடலாம் என்று பார்வையாளர்களுக்கு புரிய வைக்கிறது , இவர் கடவுளை அணுகும் முறை .
1.கடவுளிடம் பக்கத்து நண்பர் போல் உரையாடும் காட்சி
2. கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி,
3.குழந்தையை பற்றி தெரியாமல் அவஸ்தை படும் பொது , திருப்பதி லட்டு வருவதும் , அந்த லட்டு சுற்றி வைக்கும்
செய்திதாளில் குழந்தையை பற்றி செய்தி இருப்பதும் நான் மிகவும் ரசித்த காட்சிகள்
ரங்கா ராவ் அந்த காட்சிகளில் பிச்சு உதறி இருப்பார்
சௌகார் ஜானகி :
படத்தின் கடைசி 1 மணி நேரம் தான் இவர் ஸ்க்ரீன் presence , கடைசியில் கதறி அழும் காட்சி தான் இவர் நடிக்க இருந்த ஒரே காட்சி , கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்
சகஸ்ரநாமம்:
Take it easy பாலிசி தான் இவர் அணுகுமுறை , எதையும் எதிர்கொளும் தைரியம் , அதே சமயம் சாதுர்யம் , simply superb . உதரணத்துக்கு பத்மினி குழந்தை எங்கே என்று கேட்க வரும் பொது அனைவரும் பதட்டமாக இருக்க இவர் கூலாக அதை handle செய்யும் விதம் , நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டிய குணம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th June 2014, 05:54 PM
#3578
Junior Member
Seasoned Hubber
பத்மினி :
அனாதை என்ற inferiority காம்ப்ளெக்ஸ் , ஒரு வித insecurity தான் அவர் பாத்திரத்தின் மையம் . இந்த மாதிரி வளரும் நபர்களுக்கு இருக்கும் ஒரு வித over possessiveness இவர் பாத்திரத்திலும் பிரதிபலிப்பதை பார்க்க முடியும் , முதலில் வேலைகாரி குழந்தையை வளர்க்கும் போதும் , அது இறந்த உடன் தன் ராசி இப்படி தான் என்று புலம்பும் விதமும் , தனக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கும் காய்ச்சல் வர பத்மினி துடிப்பதும் இவர் பாத்திரத்தை நிலை நிறுத்தி விடுகிறது
தன் குழந்தையை தன் கணவர் ஊருக்கு அழைத்து செல்லும் பொது இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கோபம் வந்தாலும் , இவர் மேல் பரிதாபம் வருகிறது இந்த காட்சியில் பத்மினி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
அதே போல் ஒரு பெண் அழுவதை பார்த்ததும் தன் குழந்தையை கொடுத்து நம் மனதிலும் நின்று விடுகிறார்
-
26th June 2014, 05:55 PM
#3579
Junior Member
Seasoned Hubber
சிவாஜி :
லேடீஸ் செண்டிமெண்ட் படத்தில் கதாநாயகனுக்கு பெரிய scope இருக்காது , பெரிய நட்சத்திர நாயகர்கள் நடிக்க முன் வர மாட்டார்கள் ஆனால் நடிகர் திலகம் அப்படியா ?
நடிகர் திலகம் படத்தில் எப்படிப்பட்ட performance கொடுத்து இருக்கிறார்?
முதலில் அவர் இந்த படத்தில் இளமையாக சிக்கென்று இருக்கிறார் . கவலை என்றல் என்ன என்று தெரியாமல் பத்மினியை காதலிக்கும் காட்சிகள் , கூடவே துணைக்கு நாகேஷ் வேறு கேட்க வேண்டுமா light hearted scenes க்கு . பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, என்று ஒரு phase
திருமணத்துக்கு பிறகு இரண்டாவது phase அதுவும் தந்தையாக முடியவில்லை என்று ஏங்குவதும் வேலைகாரி குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் நான் தான் டாக்டரிடம் அழைத்து கொண்டு போகிறேன் என்று சொன்னேன் என்று கதறும் போதும்
, குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு அமைதி காப்பதும் (முக பாவனை எப்படி செய்ய வேண்டும் என்று எல்லோரும் பார்க்க வேண்டிய காட்சி , ஈஸ்பெசியால்லி எப்போது கர்ஜனை செய்ய வேண்டும் , எப்போ subtle performance கொடுக்க வேண்டும் என்று நடிகர்களுக்கு சொல்லி கொடுக்க இந்த காட்சியை பயன்படுத்தலாம் .
THIRD PHASE :
கல்யாணத்தில் குழந்தையை காணவில்லை என்ற உடன் ஒரு வித dullness உடன் இருப்பதும் , வழக்கமாக நொடிக்கு 1000 expressions குடுக்கும் ஒரு நபர் பத்மினியிடம்பொய் சொல்லும் பொது உணர்ச்சி இல்லாமல் , dialouge modulation என்று எதுவும் இல்லாமல் பேசும் காட்சி என்று இந்த படத்தில் பல இடத்தில ஸ்கோர் செய்து இருப்பார்
படத்தை பற்றி
KSG படம் தரம் எப்போதும் அதிகம் சிவாஜி KSG கூட்டணி பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்கள் , அதில் இதுவும் ஒன்று . கிளைமாக்ஸ் காட்சியில் குழந்தையை சௌகார் வசம் கொடுத்த உடன் படம் முடிந்து விடுகிறது , சௌகார் மீண்டும் வருவது , குழந்தையை திருப்பி கொடுப்பதும் , அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் cinematic , வேறு padamaaka இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டேன் , படம் முழுவதும் ஒரு வித naturalness உடன் smooth flow உடன் சென்ற பொது இந்த காட்சி மனசில் ஓட்ட வில்லை
பாடல்களில் நான் அனுப்புவது கடிதம் அல்ல என்ற பாடலின் பாசக் கிரௌண்ட் காட்சிகள் , மேலும் நடிகர் திலகத்தின் close up shots பாடுக்கு மெருகு கூட்டுகிறது
படம் - தரம்
பார்கதவார்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th June 2014, 06:50 PM
#3580
Junior Member
Veteran Hubber
Happy come back raghul. Enthrall us with your refreshing write-ups.
Bookmarks