Page 7 of 400 FirstFirst ... 567891757107 ... LastLast
Results 61 to 70 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #61
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats rks sir for making new thread 14 of our god of cinema nadigar thilagam.hope our thread members will actively participate and deliver lot of true datas about our nt films.

  2. Likes Georgeqlj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #62
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் இனிய நல்வாழ்த்துக்கள்!
    14ம் பாகம் துவக்கி வைக்கும்
    r
    k
    s
    அவர்களுக்கு

  5. #63
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி
    சிவா சார்
    அவர்களுக்கு
    என் பெயரையும்
    குறிப்பிட்டதற்கு

  6. #64
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஹ்ம்ம்...

    Nothing wrong in being superstitious at the accepted level .

    Those who claim that they are not, have always worn yellow ....green .......& other multi-color towel around their shoulders.. Time and again only because of their superstition ...!

    But they have always pretended in front of the world that they are not !!

    2)
    தவறு நம்முடையது தான் . ரசிகர் மன்ற நோட்டீஸ் ஒரு ஆதாரமாக எப்படி ஒத்துகொள்ளமுடியும் என்று கேட்டோம்.

    பதிலுக்கு...சரி..நோட்டீஸ் ஆதாரம் அல்ல..ஒத்துகொள்கிறோம்...ரசிகர் மன்றம் / ரசிகர் நடத்திவரும் நாளிதழ் பற்றி கூறவில்லையே என்று அதை ஆதாரம் போல பதிவிட்டுள்ளனர்...! தங்கபதக்கம் ..அவன்தான் மனிதன் பற்றி இவர்களுடைய வயிதெரிச்சல்..பொறாமை...வெதும்பல்கள்...என்றுதா ன் தீருமோ இலங்கையிலும் இருந்தது கண்டு மகிழ்ச்சி ..!

    ...அதுசரி...பராசக்தி பற்றியே வெதும்பல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை...அதற்குள் தங்கபதக்கம் அவன்தான் மனிதன் பற்றி வந்துவிட்டேன்.

    இன்னொரு "என்ன கைய புடிச்சு இழுத்தியா ராகம் ! "

    அவர்கள் அறிவுரை படி....அதில் உள்ள புரட்டுக்கு ஒரு நன்றி...!

    பொதுமக்கள் இதை கவனிக்க தான் செய்கிறார்கள்..! இதெல்லாம் ஒரு ஆதாரம் ...ஆவணம்...சிரிப்பு தான் வருது ! இல்லை இல்லை..சிரிப்பு வருது என்றால்..உடனே ....அந்த பாட்டு பதிவிடுவார்கள் நாம் என்னவோ ஆணவத்தால் சிரிக்கிறோம் என்று ! ...!

    நம்முடைய சிரிப்பு என்றுமே...

    "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே.."
    "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே "
    "சிலர் சிரிப்பார்..சிலர் அழுவார்...!
    "மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்.."

    நம் தலைவர் பாடியதில்லை என்றாலும்...அவர் பட பாடல்

    சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிச்சு ..சிரிச்சு..சிரிப்பு வருது...
    சின்ன மனுஷன்..பெரிய மனுஷன்..செயல பாத்து சிரிப்பு வருது....

    மற்றும்

    கலைவாணர் முதல் தேதியில் பாடிய...."சிரிப்பு..." பாடல்...!


    சிறிது நேரம் இளைபாறியாயிற்று !

    இன்றுமுதல் இந்த திரியின் - பாகம் 14 இதுவரை காணாத வேகத்துடன் பயணம் செய்ய தயாராக உள்ளது !



    பயணத்திற்கு தயாராகுங்கள் நண்பர்களே !
    Last edited by RavikiranSurya; 10th July 2014 at 04:17 PM.

  7. #65
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரி பாகம் 14 எதை பற்றி எழுதலாம் என்று சற்றே 13 பாகங்களையும் பார்த்தேன். எல்லா விஷயங்களையும் தொட்டுள்ளோம் அந்த 13 பாகத்தில்.

    ஆகையால் இந்த பாகம் 14 நமது நடிகர் திலகம் அவர்களின் அனைத்து தகவல்களையும் பல கோணங்களில் இரத்தின சுருக்கமாக கொடுக்கலாமே என்றால் அந்த அரும்பணியை நம்முடைய ராகவேந்திரன் சார் செய்துகொண்டிருக்கிறார்.

    அதை பார்த்தபொழுது சிந்தையில் ஒரு சிந்தனை. அதன் அடிப்படையில் இந்த பாகத்தில் நடிகர் திலகம் filmography ஒரு புதிய கோணத்தில் தொடங்கலாம் என்று முடிவேடுத்துளேன்.

    இத்தனை நாட்கள் ஒடியாது இவளவு வசூல் செய்தது என்று திரும்ப திரும்ப எழுதி எதற்கு அரைத்த மாவை அரைப்பது ?

    நம் பாத்திரம் என்ன ஒரே விஷயத்தை அரைக்கும் wet grinderஆ அல்லவே ...பல விஷயத்தை அரைக்கும் mixie அல்லவா !

  8. #66
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காவிரி தந்த தமிழகத்து புதுமாணலில் களமமைத்த சேர சோழ பாண்டிமன்னர் கோபுரத்து கலசமதில் யார்கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்த காலமது !

    தமிழகத்து திரைஉலகில் மற்றவர்போல் களமமைத்து தனது திறமையை காட்சிவைக்க என்றுதான் காலம் கைகூடுமோ என்று நடிகர் திலகம் ஏக்கமும் கைவிடாத முயற்சியும் செய்துகொண்டிருந்த காலமது...!

    அன்றொருநாளில்......



  9. #67
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear rks sir

    ஆரம்பமே அமர்க்களம்
    ராஜ நடை தொடரட்டும்
    gkrishna

  10. #68
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1952உக்கு முன் :

    தமிழ் திரை உலகம் அதுவரை பாடல்களை மையமாக கொண்டு கதை களம் அமைத்த திரைப்படங்கள் பல வந்தவண்ணம் இருந்தன...அதற்க்கு மத்தியில் சில சமயங்களில் சில சமூக படங்கள், மாயாஜால படம் என்று ஒன்றிரண்டு வந்துகொண்டும் இருந்தன...

    பல நடிகர்கள் முக்கியமாக ஆந்திரா, கேரளா மாநில நடிகர்கள் தமிழ்நாட்டில் நன்றாக மகசூல் செய்து கொண்டிருந்த காலம். அந்த சமயத்தில் எந்த ஒரு புரட்சிகரமான திரைப்படங்களோ, புரட்சிகரமான கருத்தை சொல்லும் நடிகர்களோ தமிழக திரை உலகில் வலம் வரவில்லை.

    இவை அனைத்தையும் விட முக்கியமாக, எந்த கதாபாதிரதிரமும் திறம்பட ஏற்று அதை நன்கு உணர்ந்து நடிக்க கூடிய நடிகர் என்பவர்கள் மிக மிக குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.

    நல்ல திரைபடம் நிறைய வந்தாலும் மக்களை திரைப்படத்துடன் ஒன்றிவிடசெய்யும் காவியங்கள் வரவில்லை. அப்படி வந்தாலும் அதில் நடிப்பவர்கள் நடிப்பு மக்கள் மனதில் தொடவோ அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்தவோ இல்லை. ஆகையால் மக்களும் எதற்கோ ஏங்குவதை போலவே நிலைமை இருந்தது.

    தயாரிப்பாளர்களும் அதை உணர்ந்தாலும் எதற்கு இந்த நிலை, என்ன எதிர்பார்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை.

    புரட்சி என்றால் என்ன என்று தெரியாத திரை உலகம் அதை உணராத திரை உலகம் இப்படி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் ஒரு திரை புரட்சிக்காக காத்திருந்த நேரம் ...ஏங்கிகொண்டிருந்த நேரம் ...என்று கூறுவதே சரியாகும்..

    தமிழ் திரைஉலகம் ஒரு spark என்று கூறுவார்களே அதற்காக ஏங்கிய தருணம் !


    RKS
    Last edited by RavikiranSurya; 10th July 2014 at 06:46 PM.

  11. #69
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இது ஒருபுறம் இருக்க , நாடகங்களில் பல கதாபாத்திரங்களை சர்வ சாதாரணமாக நடித்து, போட்ட வேடம் அனைத்திற்கும் பல கரகோஷங்கள் பெற்று வந்த ஒரு இளம் வயது நடிகன் ...

    அவர் தான் கலை கடவுள் கலைவாணியின் ஒரே தவப்புதல்வன் என்று என்றும் பல கோடி மக்கள் நம்பிகொண்டிருக்கும் நமது இப்போதைய நடிகர் திலகம் !

    அப்போதைய v c கணேசன்.

    நாடகங்களில் எந்த வேடமானாலும் அதை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து சக்கை போடு போடும் திறம் கொண்ட நடிகர் என்ற பெயர் மட்டும் இருந்தது.

    தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் என்று கருதப்பட்ட சக நடிகர்கள் திரைப்படங்களில் அவ்வபோது தலைகாட்டிய வண்ணம் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தை விட 10 - 18 வயது மூத்த கலைஞர்கள். இருந்தாலும் தங்களுக்கு கதாநாயக வேடம் இல்லை என்றாலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து அந்த ஒரு சந்தற்பத்திர்க்காக காத்திருந்தார்கள் ஒரு சில நடிகர்கள்..

    மற்றும் சிலரோ கதாநாயகன் வேடம் புனைந்தார்கள் என்றாலும் அவர்களால் தொடர்ந்து பரிமளிக்க முடியவில்லை, தொடர்ந்து படங்கள் கிடைக்கவும் வழியில்லை. தயாரிப்பாளர்கள் ஏனோ அவர்களை திரும்ப திரும்ப அணுகவில்லை. .ஆந்திரா நடிகர்கள் பக்கம் காற்று தொடர்ந்து வீசிகொண்டிருந்தது...!

    தமிழ் நடிகர்கள் என்று கூறப்பட்டவர்கள், இந்த நிலை எவ்வளவு நாள் இனியும் தொடர்ந்துகொண்டு இருக்கும் என்று கவலைப்பட்ட நேரம் !

    அப்படி இருக்கும்போது...அவர்கள் நிலையே நிரந்தரம் இல்லாதபோது அவர்கள் எப்படி நடிகர் திலகத்தையும் தங்களுடன் இணைக்க முடியும் ?

    நிலைமை இப்படி இருக்க நாடகத்தின் மூலம் வரும் வருவாய் போதுமானதாக வருமா என்று ஒரு ஏக்கம் ஒருபுறம், வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தில் உள்ள (சுமார் 8 முதல் 10 பேர் தாய் தந்தையார் தவிர )அனைவரையும் காப்பாற்றி கரை ஏற்ற, தானும் கரை ஏற முடியுமா என்ற கவலை மற்றொருபுறம் ....

    இப்படி ஒரு நிம்மதி இல்லாத நிலை இருந்தாலும் நாடகத்தில் நடிக்கும்போது தொழிலில் அப்படி ஒரு பக்தி. நேரம் தவறாமை, பேச்சில் கண்ணியம், செயலில் கண்ணியம், எந்த வேடமானாலும் திறம்பட நடித்தல் இப்படி அசாத்ய திறமை கொண்ட ஒரு நடிகர் ..இப்படி ஒரு கலைஞனை தமிழ் நாடக கலை மன்றம் அதுவரை கண்டதில்லை !



    RKS
    Last edited by RavikiranSurya; 10th July 2014 at 06:29 PM.

  12. #70
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் காலங்களில் இந்த நாடக நடிகர்தான் திரை உலகை அதுவும் தமிழ் திரை உலகை ஒரு சில வருடங்களிலே உலகளவில் கொண்டுசெல்லகூடியவர் பலரை வாழவைக்க போகிறவர், பலருக்கு வாழ்கை கொடுக்கபோகிறவர், படம் பார்க்கும் அனைவரையும் தனது அதீத நடிப்பு திறமையால் கட்டிபோட்டு ஆண்ட சராசரங்களையும் ஆச்சர்யபடுத்த போகிறார் என்று என்று யாராலும் கருத, எண்ண முடியவில்லை.

    1948ஆம் ஆண்டு முடிவில் அப்போதைய பெரும் பட நிறுவனமாம் avm திரைப்பட நிறுவனம் மற்றும் தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனமாம் perumal pictures நிறுவனமும் இனைந்து ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன? என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்த நேரம் !

    புதுமையான சமூக சீர்திருத்த கதை ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர அதையே திரைப்படமாக தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது !

    அதற்க்கு முன்பு இது போல கதைகள் அதில் சிறந்த வசனங்களும் எழுதிய கருணாநிதி என்ற திராவிட கழகத்தில் பெரியார் பாசறையில் இருந்து சீர்திருத்த நாடங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதுபவராக இருந்தார்.
    நல்ல வசனம் எழுதினாலும் அதை மக்களிடத்தில் சரியாக உச்சரித்து அதன் உயிரை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய விதத்தில் கொண்டு செல்ல ஒரு நல்ல நடிகர் தேவை. அப்படி ஒரு நடிகர் திரை உலகம் அதுவரை கண்டதில்லை என்ன செய்வது.

    ஆகவே அந்த வசனகர்தவிர்க்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து அதுவரை கிடைக்கவே இல்லை ! அவரும் அந்த அந்தஸ்தை எதிர்பார்த்து காத்து இருந்த நேரம் !
    Last edited by RavikiranSurya; 10th July 2014 at 06:42 PM.

Page 7 of 400 FirstFirst ... 567891757107 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •