Page 166 of 400 FirstFirst ... 66116156164165166167168176216266 ... LastLast
Results 1,651 to 1,660 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1651
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.

    ஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே!

    கொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன!
    டியர் வாசு சார்,

    இத்தனைக்கும் ராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாபு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார்.

    காலையில் ஒரு பட ஷூட்டிங்க், மாலையில் இன்னொரு பட ஷூட்டிங்க், இரவில் வேறொரு பட ஷூட்டிங்க் என்று கலந்து கொண்டு நடித்தார். காலையில் தாடியும் மீசையும் கிழிந்த உடைகளுமாக கைரிக்ஷா இழுக்கும் பாபு, மதியம் ஸ்டைலான சி.ஐ.டி.ராஜா, இரவில் இவற்றுக்கு சம்பந்தமே இல்லாத மூக்கையா சேர்வை, மறுநாள் காலை முரடன் ஆண்ட்டனி இப்படி மாறி மாறி கூடு விட்டு கூடு பாய்ந்த ஒரு நடிப்புலக மேதையை, எல்லாப்படங்களிலும் 'ஒரே மாதிரி வந்து போனவர்களுடன்' ஒப்பிட்டு பேசுகிறார்களே. என்ன ஒரு அறியாமை...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1652
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் ராஜேஷ் சார்,

    தங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)

    கண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...

  4. #1653
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் ராஜேஷ் சார்,

    தங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)

    கண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...

  5. #1654
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    ஐயோ ஐயோ... இப்படி ஒரேயடியாக எங்களைக் கொல்லலாமா?. இது நீதியா?. நியாயமா?. ராஜா திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'நீ வரவேண்டும்' பாடல் பதிவைத்தான் சொல்கிறேன். என்ன ஒரு அருமையான, அதே சமயம் போலீஸ் காவலுடன் கூடிய மிரட்டல் டூயட். இப்பாடல் பற்றி ஏற்கெனவே நடிகர்திலகம் திரியில் எழுதியிருந்த போதிலும் ஆவல் அடங்கவில்லை.

    பாடலில் நமது நடிகர்திலகமும் சரி, 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களும் சரி செம க்யூட். மேட் பார் ஈச் அதர் என்பது போன்ற கெமிஸ்ட்ரி. வெள்ளை பேண்ட், கிரீம் கலர் ஷர்ட், வெளிர் நீல நிற ஸ்கார்ப், பிரௌனும் மஞ்சளும் கலந்த நிறத்தில் கோட், சொக்க வைக்கும் ஹேர் ஸ்டைல் இவற்றுடன் நடிகர்திலகம். வித்தியாசமான மெரூன் கலர் ஸாரி, அதே கலரில் புல்ஸ்லீவ் ஜாக்கெட், அழகான ஹேர்ஸ்டைல், காதோரம் வளைத்துவிடப்பட்ட முடியலங்காரம் என 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.

    பாடலின் ஒவ்வொரு வரியையும் என்னமாய் ரசித்து ரசித்து விளக்கம் அளித்துள்ளீர்கள். அட்டகாசம் சார். உங்கள் விளக்கத்தைப் படித்துக்கொண்டே பாடலின் வீடியோவைப் பார்ப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கணக்கிலடங்கா தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. அதனால் ஸீன்-பை-ஸீன் அத்துப்படி. ராஜாவும் ராதாவும் மட்டுமா?. தர்மலிங்கம், நாகலிங்கம், பூசாரி காளிதாஸ், கமிஷனர் பிரசாத், பட்டாபி, ஜானகி, சீதா ராமன்கள், பாபு (சந்தர்), விஸ்வம், குமார், ஜம்பு, பார்வதி, தாரா என அனைவரும் நம் இதயங்களில் ஒன்றிவிட்டனரே. இந்தப்பாடலும் சரி,

    இந்தப்படமும் சரி எத்தனை தடவை விவாதித்தாலும் சலிக்காது.

    திடீர் விருந்துக்கு மிக்க நன்றி வாசு சார். (பி.எம்.பார்த்தீர்களா)

  6. #1655
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வாசு சார் & கிருஷ்ணா சார்,

    'யார் நீ' படத்தில் இடம்பெற்ற கிளப் டான்ஸ் பாடலையும், 'பொன்மேனி தழுவாமல்' பாடலையும் பதித்ததற்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    யார் நீ பாடல்கள் அனைத்துமே அருமைதான் (அத்தனையும் ஹிந்திப்பட மெட்டுக்களாக இருந்தபோதிலும்) . ஆனந்தன் சீசன் இன்னும் முடியவில்லை போலும். இந்தப்படத்திலும் பிரதான வில்லன் ஆனநதன்தான்.

    எனக்கு பிடித்த இன்னும் நான்கு பாடல்கள்...

    படத்தின் பெயரைச் சொன்னதுமே நினைவுக்கு வரும் "நானே வருவேன் இங்கும் அங்கும்" படத்தில் பலமுறை ரிப்பீட்டட் ஆக வந்தாலும் அலுக்காது. காரணம் திகில் காட்சிகள் அப்படி. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் ஆவியாகவே வந்து அசத்தியிருப்பார்.

    ஜெய்சங்கர் குமாரி ராதாவுக்கான டூயட், டி.எம்.எஸ்ஸும், ராட்சசி ஈஸ்வரியும் இணைந்து பாடிய
    'பார்வை ஒன்றே போதுமே
    பல்லாயிரம் சொல் வேண்டுமா
    பேசாத கண்ணும் பேசுமா
    பெண் வேண்டுமா பார்வை போதுமா'
    மனதை வரும் மென்மையான மேலோடி. பாடல் முடிந்த சிறிது நேரத்தில் பாவம் குமாரி ராதா கொல்லப்படுவார்.

    இன்னொரு அட்டகாசமான பாடல் கண்ணியப்பாடகிக்கு...

    வீட்டை விட்டு புறப்படும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் ஜெய்யைப்பார்த்து பாடும்..
    'என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு
    அழுவதேன் கண்ணா'

    மன அமைதிக்காக ஜெய் கொடைக்கானல் சென்றிருக்கும் சமயம் அங்கு பார்த்து ரசிக்கும் குரூப் டான்ஸ் பாடல், கோரஸுடன் இணைந்து ராட்சசி..

    'கண்ணுக்கென்ன சும்மா சும்மா பாக்குது
    அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது'

    காப்பியடித்தாலும் அதை அழகாக செய்தால் அழகுதான். அதை அழகாக செய்தவர் வேதா...

  7. #1656
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி,

    யார் நீ படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட விளம்பரங்களைப் பதித்தீர்களே, அப்படியே தமிழ் விளம்பரம் கிடைத்தாலும் பதியுங்களேன். (இங்காவது அல்லது மக்கள் கலைஞர் திரியிலாவது)..

  8. #1657
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    கிருஷ்ணாஜி,

    யார் நீ படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட விளம்பரங்களைப் பதித்தீர்களே, அப்படியே தமிழ் விளம்பரம் கிடைத்தாலும் பதியுங்களேன். (இங்காவது அல்லது மக்கள் கலைஞர் திரியிலாவது)..
    நிச்சயமாக கிடைத்ததும் போடுகிறேன் kaarthik sir
    gkrishna

  9. #1658
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    நூல்வேலி 1979
    பாலசந்தர் இயக்கம்
    சரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவின் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்
    மெல்லிசை மன்னர் இசை
    இதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது
    நினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்
    கதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்
    ஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.
    சரத்பாபு சுஜாதா கணவன் மனைவி
    சரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா
    ) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்
    'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'
    மூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)
    சுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .
    அவரோ "தான் ஒரு சாதாரண மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் " என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்
    சுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் .

    இதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .

    'இது நல்ல படமா மோசமான படமா '
    'வெற்றி படமா தோல்வி படமா '

    (நாயகன் கமல் ) தெரியலேப்பா

    ஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்

    1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location
    family outing அண்ட் gettogether ஒரு நல்ல பாடல்

    (மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )

    நானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா
    வெரிகுட் (பாலாவின் குரல்)
    ஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)

    நானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா

    இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
    உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
    இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
    உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்

    நானா
    ஹா
    பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

    (அஞ்சலியின் அருமையான ஹம்மிங்)
    ப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..
    ருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்
    ரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்

    (தபேல இசை ) பின் violin இசை
    சரணம் 1

    கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
    நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

    ஹஹஹஹ்ஹா ..(பாலாவின் சிரிப்பு)

    (அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)
    நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
    பபதத ததத மமபப பபபப
    மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

    கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
    நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

    தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
    தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
    நீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே
    இதில் ஏனோ சந்தேகமே
    (தபேல இசை )
    நானா
    ம்
    பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

    அஞ்சலி ஹம்மிங்
    டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்
    டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங்

    இடை இசை மீண்டும் தபேலா violin கலந்து
    சரணம் 2
    கவிஞன் சொல்லாததோ .... தமிழ் கவிதை காணாததோ
    இதில் எதை நான் சொல்வேனம்மா
    இந்த சபையை வெல்வெனம்மா

    பாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்
    நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
    பபதத ததத மமபப பபபப
    மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

    கவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ
    இதில் எதை நான் சொல்வேனம்மா
    இந்த சபையை வெல்வேனம்மா

    நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
    நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
    பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்
    எந்த பாட்டும் சபையில் வரும்
    (தபேலா)
    நானா
    ஹ ..ஹ ..ஹ
    பாடுவது நானா .... நானும் இளவயது மானா
    இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
    உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
    நானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..



    2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்

    மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
    ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
    காரியம் தவறானால் கண்களில் நீராகி
    மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
    மனசாட்சியே

    ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
    சோதனைக்களம் அல்லவா?
    நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
    ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
    ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

    (மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

    உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
    யாருக்கும் நீயல்லவா
    நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
    ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
    யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
    (மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

    ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ




    3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்
    நாராயண ராவ்விற்கும் சரிதாவிற்கும்
    (இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)

    SPB:வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?
    மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?
    வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?
    மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?
    பூசிய சந்தனம்
    மார்பினில் சாய்ந்ததும்
    கன்னம் தடமாகுமா ?
    பூசிய சந்தனம்
    மார்பினில் சாய்ந்ததும்
    கன்னம் தடமாகுமா?
    பொங்கிய குங்குமம்
    செங்கனி வாய் இதழ்
    எங்கும் விளையாடுமா ?
    பொங்கிய குங்குமம்
    செங்கனி வாய் இதழ்
    எங்கும் விளையாடுமா ?

    VJ:விழி ஓரங்கள்
    கதை பேசுமோ ?
    தேன் அமுதினில் மழை வர
    நாதங்கள் உருவாகுமோ ?

    SPB:அழகிய திருமுகமதில்
    நாணங்கள் விளையாடுமோ ?
    இடை எனும் சிறு கொடிதனில்
    வானங்கள் கவிபாடுமோ ?

    VJ:வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?
    மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?

    VJ:மன்மத மந்திரம்
    மாலையில் கேட்டதும்
    எண்ணம் அலையாகுமோ
    மங்கள நாடகம்
    பள்ளியில் வந்ததும்
    பெண்மை விலையாகுமோ
    மங்கள நாடகம்
    பள்ளியில் வந்ததும்
    பெண்மை விலையாகுமோ

    SPB:ரதி நேர் வந்து
    மலர் தூவுமே
    ஒரே ரகசிய கவிதையில்
    ஆனந்தம் கலைஆகுமஎ

    VJ:இலையோடு மலரென தினம்
    உள்ளங்கள் உறவாடுமோ
    இருவரும் ஒரு நிலை பெற
    கீதங்கள் துணையாகுமோ

    SPB:வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?

    VJ:மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?



    4.பாலாவின் சோலோ
    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)
    காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
    காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    பொண்ணாட்டம் அங்கு பெணாட்டம்
    என் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)
    சின்ன சின்ன நடை திண்டாட்டம்
    அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
    காவிரி பொங்கிடும் நீரோட்டம்
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    பூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )
    பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
    பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)
    வண்ன வன்ண முகம் பாலாட்டம்
    அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
    காவிரி பொங்கிடும் நீரோட்டம்
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    சேலாட்டம் விழி சீராட்டும்
    இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)
    என்ன என்ன சுகம் உளோட்டம்
    எனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
    காவிரி பொங்கிடும் நீரோட்டம்
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
    gkrishna

  10. #1659
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் கிருஷ்ணாஜி,

    ஸ்டைல் கிங் அசத்திய 'ராஜா' திரைப்படத்தைப்பற்றி நடிகர்திலகம் திரியின் பாகம் 11-ல் அட்டகாசமாக அலசப்பட்டிருக்கிறது. நமது ஹப்பர்கள் அனைவரும் பங்குபெற்று மிக அருமையாக பதிவுகள் இட்டிருந்தனர். நடிகர்திலகம் மற்றும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பற்றி மட்டுமல்லாது வசீகர வில்லன் விஸ்வம் மற்றும் நடனதாரகை தாரா பற்றியும் கூட பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதுபோக ஏராளமான நிழற்படங்கள் மற்றும் காட்சிகள் என 'ராஜா' பூரணமாக ஆயப்பட்டுள்ளது. (அவற்றில் நமது வாசு சாரின் உழைப்பு அசுரத்தனமாக அமைந்துள்ளது)

    எனவே தற்போது நமது திரியில் ராஜாவின் பாடல் காட்சிகள் பற்றி ஆராயலாம். ஏற்கெனவே 'இரண்டில் ஒன்று' மற்றும் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடல்கள் 'கல்யாண பொண்ணு', 'கங்கையிலே ஓடமில்லையோ' மற்றும் 'நான் உயிருக்கு தருவது விலை' ஆகிய பாடல்கள் பற்றி கூடிய விரைவில் ஆய்வு செய்வோம்...
    அன்பு கார்த்திக் சார்
    நிச்சயமாக ராஜாவின் பிற பாடல்களை அலச வேண்டும்
    நீங்களாவது வாசு சார் ஆவது நிச்சயம் எழுத வேண்டும்
    நாங்கள் எல்லாம் அதை படிக்க வேண்டும்

    காத்து கிடப்பதில் சுகம் உண்டு
    gkrishna

  11. #1660
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    வாசு சார் & கிருஷ்ணா சார்,


    காப்பியடித்தாலும் அதை அழகாக செய்தால் அழகுதான். அதை அழகாக செய்தவர் வேதா...
    உண்மை கார்த்திக் சார்
    என்னை தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்று சொல்லுகிறேன்
    விடுதலை நமது nt யும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடித்து வெளி வந்த படம் . ஹிந்தி குர்பானி தழுவல் .ஹிந்தியில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் பாட்டுக்காகவே ஓடிய படம்.
    அதை தமிழ் இல் சந்திர போஸ் இசையில் 'நீல குயில்கள் இரண்டு'
    பாடலை தவிர வேறு எதாவது மனதை கவர்ந்ததா
    நிச்சயமாக விடுதலையில் இன்னும் பாடல்கள் பிரபலமாகி இருந்து இருக்க வேண்டும் என்பது எனுடைய தனிப்பட்ட கருத்து
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •