-
12th July 2014, 06:17 PM
#11
Junior Member
Platinum Hubber
1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.
கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ' நேற்று இன்று நாளை' படத்தில் " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ' மாயாத்தேவர் வெற்றி' என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார்.
" நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது
அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)
.................................................. ....
.................................................. ...
மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)
ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே - தாங்கள்
வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் - தாங்கள்
வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)
ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு.."
- என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:
" ஒரு சம்பவம் என்பது நேற்று
அதை சரித்திரம் என்பது இன்று
அது சாதனையாவது நாளை
வரும் சோதனை தான் இடைவேளை "
-
12th July 2014 06:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks