-
15th July 2014, 09:47 AM
#11
Junior Member
Veteran Hubber
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்த்த புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.
பெருந்தலைவர் காமராஜர் சென்னை தியாகராயநகர் திருமலைபிள்ளை சாலையில் வாழ்ந்த வீட்டை, 15-07-1978 அன்று அப்போது முதல்வராக இருந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் தலைமயிலான தமிழக அரசு, நினைவு இல்லமாக மாற்றியது . அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நினைவு இல்லத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.
தினமும் 9 மணி முதல் இரவு 7 மணி வரை நினைவு இல்லத்தை பொது மக்கள் பார்வையிடலாம். சென்னை .கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயரும் சூட்டப்பட்டது. விருது நகரை தலைமைஇடமாக கொண்டு காமராஜர் மாவட்டத்தை 1984ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மதுரை பல்கலை கழகத்துக்கு "மதுரை காமராஜர் பல்கலை கழகம்" என்று பெயர் சூட்டி சிறப்பித்தார். தமிழக அரசு வாங்கிய 3வது கப்பலுக்கு "தமிழ் காமராஜ்" என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.
நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில்தான், 18-08-1977 அன்று அப்போது குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் தமிழக சட்ட சபையில், காமராஜர் அவர்களின் திரு உருவப்படம் திறக்கப்பட்டது.
நம் மக்கள் திலகம் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இயங்கி வந்த தி. மு. க.வில் இருந்த போது, "காமராஜர் என் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் என் வழிகாட்டி" என்று கூறினார். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பொன்மொழியை உதிர்த்த பேரறிஞர் அண்ணா அவர்களும், இதை பொருட்படுத்தாமல் (கழகத்தில் இருந்த சிலர் இது குறித்து அவரிடம் கலகமூட்டிய போதும்) பெருந்தன்மையுடன், அந்த பொன்மொழிக்கேற்ப நடந்து கொண்டார்.
குறிப்பு : இப்போதெல்லாம் , மாற்றுக்கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் கலந்து கொண்டால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, கட்சியை விட்டு நீக்குவது, போன்ற அரசியல் அநாகரீக செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் காண்கிறோம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
15th July 2014 09:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks