-
15th July 2014, 08:00 PM
#1
Junior Member
Seasoned Hubber
தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்கிறார் அஜீத்!
கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் 55வது படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். அண்ணன்-தம்பி என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிப்பவர், இதுவரை அண்ணன் வேடத்தில் நடித்துக்கொண்டிருநதார். புலனாய்வு செய்யும் போலீஸ அதிகாரி வேடம் என்பதால், தனது உடல் எடையில் எந்தவித மாற்றம் செய்யாமல் அப்படியே நடித்தார்.
ஆனால், அந்த வேடத்துக்கான அனைத்து காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டு விட்டதாம். அதனால் கடந்த ஒரு மாத காலமாக இளவட்ட அஜீத்தாக அதாவது தம்பி வேடத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து இளமையாக மாறிக்கொண்டிருக்கிறார் அஜீத். இதற்காக, தீவிர டயட்ஸ் கடைபிடித்து வரும் அஜீத், தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் கடின உடற்பயிற்சி செய்கிறார்.
ஏற்கனவே அவர் ஆரம்பம் படத்தில் நடித்தபோது மும்பையில் இருந்து வந்து அவருக்கு உடல் இளைக்க பயிற்சி கொடுத்த அதே நபர் இப்போதும் வரவழைக்கப்பட்டுள்ளாராம். அவரது ஆலோசனையின்பேரில் உடல் எடை குறைத்து வந்த அஜீத், தற்போது கணிசமான அளவு எடை குறைத்து விட்டார். அதனால், இன்னும் ஒரு வாரத்திற்குள் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் கெளதம்மேனன்.
அதோடு, இதுவரை அனுஷ்காவுடன் நடித்து வந்த அஜீத், இனிமேல் த்ரிஷாவுடன் நடிக்கிறார். இனி அவர்கள் நடிக்கப்போகும் காட்சிகள் அனைத்தும் படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளாகத்தான் வருகிறதாம். அப்போதுதான் இளவட்ட அஜீத்தின் காதலியான த்ரிஷா, மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாராம். அதனால் கடந்த சில மாதங்களாக தென் அமெரிக்காவுக்கு டூர் அடித்திருந்த த்ரிஷாவும் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார்.
-
15th July 2014 08:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks