-
3rd August 2014, 06:44 AM
#11
Junior Member
Platinum Hubber
செந்தில் - அண்ணே ! 1965 வருஷத்தை பற்றி சொல்லுங்கண்ணே
கவுண்டமணி - எதுக்குடா கேட்கிறே ?
செந்தில் - எனக்கு நிறைய டவுட்டு .அதுக்குதான் .
கவுண்டமணி - எதை பத்தி சொல்லணும் .
செந்தில் - 1965ல வந்த சினிமா பத்தி .
கவுண்டமணி - டேய் செந்திலு .. எடா கூடமா மாட்ட வைக்கா தடா .
செந்தி - போங்கண்ணே . சும்மா சொல்லுங்க .
கவுண்டமணி - சரி சொல்றேன் .கேட்டுக்கோ . முதலே எங்க வீட்டு பிள்ளை . வாத்தியார் படம் பொங்கலுக்கு வந்துச்சு .
மக்களும் ரசிச்சி போட்டி போட்டு கொண்டு படத்தை பார்த்தார்கள் ..சூப்பர் ஹிட் . சினிமா வரலாற்றில் புது சரித்திரம்
படைத்தது ..அப்புறம் வாத்தியார் படங்கள் தொடர்ந்து பணம் படைத்தவன் - ஆயிரத்தில் ஒருவன் -கன்னித்தாய்
கலங்கரைவிளக்கம் - தாழம்பூ - ஆசைமுகம் என்று 7 படங்கள் வந்து நல்லா ஓடியது .
செந்தில் - ஆயிரத்தில் ஒருவன் வந்த நேரத்தில் ஏதாவது கலாட்டாவா ?
கவுண்டமணி - டேய் ...விவரம் புரியாமல் பேசாதடா ... நீ அப்போ பொறக்கவே இல்லை . நான் சொல்றதே கேளு
பாகிஸ்தான் சண்டை - திராவிட மாயை - இரவுக்காட்சிக்கு போக பயம் -இப்படீல்லாம் சொல்லி கொஞ்ச பேரு
புலம்புவாங்க . அடேய் நம்ம சிவாஜி நடிச்ச திருவிளையாடல் - பக்தி படம் .இந்த நேரத்திலே நல்லா ஒடிச்சு .பெண்கள்
கூட்டம் ஜாஸ்தி .எல்லா தரப்பு மக்களும் பார்த்தாங்க .
செந்தில் - அப்போ யாரண்ணே டாப்பு ?
கவுண்டமணி - என்னடா கேக்கிறே
செந்தில் - வாத்தியார் பட வசூலை திருவிளையாடல் பீட் பண்ணிச்சா ?
கவுண்டமணி - டேய் .நல்ல கேட்டுக்கோ . இரண்டு படமும் சூப்பர் ஹிட் .வசூலில் வாத்தியார் படம் .பக்தியில் சிவாஜி படம் ..
செந்தில் - ஒண்ணுமே புரியலியே
கவுண்டமணி - அடேய் ..அப்போ பேசும் படம் புக்கிலே 1965ல் அதிக வசூல் தந்த படம் வாத்தியார் படம் என்று போட்டுள்ளார்கள் .

செந்தில் - நான் நம்ப மாட்டேன் .
கவுண்டமணி - மவனே - நான் இவ்வளவு ஆதாரமா சொல்றேன் .நம்புடா
செந்தில் - எனக்கு அந்த கோடி வீட்டு கோபு அண்ணே என்ன சொன்னார் தெரியுமா ?
1965லே தமிழ் நாட்டிலே திராவிடம் - ஹிந்தி எதிர்ப்பு -போன்ற கலாட்டா இருந்ததை மீறி பக்தி படம் ஒடுச்சாமே ?
கவுண்டமணி - அப்படி போடு அரிவாளை . மவனே நீ திருந்தவே மாட்டியா .
Last edited by esvee; 3rd August 2014 at 09:22 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd August 2014 06:44 AM
# ADS
Circuit advertisement
Bookmarks