-
4th August 2014, 10:11 PM
#691
Junior Member
Veteran Hubber
< Dig>
எப்படி ஒருவர் தன்னுடைய உரிமை என்று கூறுகிறாரோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மட்டும் ஒத்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை...தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதை கூறுவது ஏற்புடையது அல்ல !
தமிழுக்கு நான் விரோதி அல்ல ! தமிழிசம் என்பதற்கு தான் நான் எதிர் கருத்து உடையவன். அதாவது தமிழ் திணிப்பிற்கு எனக்கு உடன்பாடில்லை.
தமிழ் இருக்ககூடாது என்று எந்த காலத்திலும் எந்த கட்சியும் சொன்னதாக தெரியவில்லை. ஹிந்தி கட்டாயம் கற்கவேண்டும் என்று சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
கட்டாயபடுத்தினாலும் கற்க மனம் இல்லையென்றால் ஒருவரும் கற்க்கபோவதில்லை !
ஹிந்தி அந்தகாலத்தில் கட்டாயபடுத்தி கல்வி முறையில் கொண்டு வந்திருந்தால் தமிழன் அனைத்து மாநிலங்களிலும் கோடி கட்டி வாழ்ந்திருப்பான் ! அந்த ஒரு சந்தர்பம் மறுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும் !
ஒரு மொழி மக்கள் கற்க இவ்வளவு தடை ஏன் ? இதை ஏன் அரசியலாக்கவேண்டும் ஆட்சியில் இருந்தவர்களாக இருந்தாலும் இல்லாதவர்களாக இருந்தாலும். ? ஏன்...அப்படி கட்டாயபடுத்தி ஒருவர் ஒரு மொழி கற்று தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழி கற்று சிறிது உருபடட்டுமேன் ...என்ன தவறு அதில் இருந்துவிடபோகிறது ?
அதெப்படி விட்டு விட முடியும் ? இன்னொரு மொழி கற்றால் வேறு ஏதாவது மாநிலம் சென்று பிழைத்துவிடுவார்கள் ! உண்மைகள் பல தெரியவரும் வேறு ஊர்களுக்கு போனால்...பிறகு இந்த அரசியல்வாதிகள் எப்படி இவர்களை ஏய்த்து பிழைப்பு நடத்த முடியும்...ஆகையால் அந்த சூழ்நிலையே வராமல் செய்துவிட்டால்..! இது தான் அரசியல் !
தமிழக எல்லையை தாண்டினால் ஹிந்தி அவசியம் ! இதை முதலில் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் ! ஆந்திரா, கேரளம், கர்நாடகம், முதல் காஷ்மீர் வரை ஆங்கிலம் தெரியாமல் இருந்தால் கூட பரவா இல்லை. ஹிந்தி தெரியாமல் இருந்தால் என்ன செய்யமுடியும் ?
ஒரு மனிதன் 3 ஸ்டேட்ஸ் செல்கிறான் என்றால் உதாரணமாக...ஆந்திர, கர்நாடக, பீகார் செல்வதானால் அவனுக்கு ஆங்கிலம் தெரிந்தால் கூட..அந்த ஊர் மக்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பின் தமிழ் பேசி ஒரு விஷயத்தை புரிய வைத்து விட முடியுமா அல்லது சான்கய்த மொழியில் கேட்கதான் முடியுமா ? சிறிது யோசியுங்கள் !
அந்த காலத்தில் ஹிந்தி படிக்காததால் அடைந்த நஷ்டம் என்ன என்று அவர் அவர் மனசாட்சிக்கு தெரியும் !
திணிப்பை எதிர்த்தவர்கள் அவர்கள் குடும்ப அங்கங்கள் ஹிந்தியே படிக்கவில்லையா ? அல்லது ஹிந்தியில் அவர்கள் உரையாடல் நடதியதில்லையா ? சட்டமன்ற வளாகத்தில் உரையாடியது இல்லையா ?அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அப்பரம் ஏன் மக்களை இப்படி ஏமாற்றவேண்டும்..?
இதே அரசியல் தலைவர்கள் ...கொலை, கொள்ளை, அடிதடி, கட்டபஞ்சாயத்து, வழிப்பறி, சாராய வியாபாரம் யாரும் கட்டாயம் செய்யகூடாது என்று ஒரு தீர்மானமோ அதற்காக ஒரு போராட்டமோ எந்த காலத்திலாவது செய்ய முனைந்ததுண்டா ?
1) கொள்ளை, கொலை, வழிப்பறி ஒழிப்பு தினம் ,
2) கள்ளச்சாராய ஒழிப்பு தினம்...
3) சாராய ஒழிப்பு மாநாடு ...இப்படி ஏதாவது செய்தார்களா ? இது போல போராட்டங்கள் தான் நாட்டிற்க்கும் நாட்டுமக்களுக்கும் முக்கியம்.!
அதை விடுத்து மக்கள் உருப்படும் வழியில் மண்ணை தூவுவது ஒரு நல்ல காரியம் அல்ல !
உண்மையிலேயே மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இருந்தால் இது போல ஒரு விஷயத்தை செய்வார்கள்...! மக்கள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை..எந்த காலத்தில் இவர்களுக்கு இருந்தது ? <dig>
இதை நான் இங்கு உரைப்பதனால் உடனே "தயவு செய்து அரசியல் பேசவேண்டாம் இந்த திரியில் என்று வரும் அல்லது..உங்கள் புரிதலை பற்றி தவறாக எடை போட்டேன்...ஹி..ஹி....என்று ஒரு பதில் வரும்..!
அந்த இரண்டு வரிகளை போல பல வரிகள்..பதில் சொல்ல தெரியாமல் சமாளிப்பவர்களுக்கு நிறைய தெரியும்..
எனக்கு அப்படி சொல்ல தெரியாது என்ன செய்ய ?
" உள்ளதை சொல்வேன்..சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது..உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் கிடையாது ! என்று என் இறைவன் பாடி நடித்த காட்சியை போன்றவன் நான் !
Last edited by RavikiranSurya; 4th August 2014 at 10:22 PM.
-
4th August 2014 10:11 PM
# ADS
Circuit advertisement
-
4th August 2014, 10:29 PM
#692
Senior Member
Diamond Hubber
நண்பர் RKS,
எந்த விவாதத்துக்கும் சில அடிப்படை புரிதலில் ஒப்புமை அடிப்படை .. அது நாமிருவருக்கும் சாத்தியமில்லை எனும் போது ,உங்களுக்கு தெளிவாக என்னால் பதில் சொல்ல முடியும் என்றாலும் , அதனால் எந்த பயனும் விழையப்போவதில்லை என உறுதியாக நம்புவதால் ..Let us agree to disagree என்பதோடு இதற்கு முற்றுப்புள்ளி . இது குறித்து மேலும் பதிலுக்கு பதில் என்னிடமிருந்து வராது .
என்னுடைய பதில் முரளி அவர்களுக்கு மட்டுமே ..நன்றி.
-
4th August 2014, 10:38 PM
#693
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gopal,s.
முரளி,
இதற்கு எதிரணியில் இருந்தாலும் பாலும் பழமும் முதல் காட்சி பார்த்து பாராட்டிய அண்ணா,125 அவது பட விழாவில் கலந்து பேசிய அற்புத பேச்சு, நண்பனை டி.வீயில் பார்க்கும் போதெல்லாம் நீதாண்டா நடிகன் என்று சொல்லும் கலைஞர் இவர்கள், நன்றி கெட்ட ஒவுரங்கசீப் காங்கிரஸ் தலைவர்களை விட மேல்.
பாலும் பழமும் தான் திரை உலக இறைவன் நடித்த முதல் படமா ? அல்லது 124 முடித்தவுடன் தான் 125வது படத்தின் விழாவில் வந்து பாராட்ட வேண்டுமா ? நடிக்க வந்த 7 வருடத்தில் ஒரு international விருது பெற்றுக்கொண்டு தமிழர்களின் கௌரவத்தை உலகறிய செய்த தமிழனுக்கு எந்த அறிஞரும் அப்போது பாராட்டு தெரிவிக்க வில்லையே விழா எடுத்து ? ஏன்...அப்போது தெரியவில்லையா சிறந்த நடிகர் என்று ?
நண்பன் உயிரோடு இருக்குபோது சமயம் கிடைக்கும்போது முதுகில் குத்தி உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டு, இறந்த பிறகு tv க்கு முத்தம் கொடுத்து என்ன பயன் ? இது இன்னொரு stunt !
என்னதான் தொழிலில் தனக்கு போட்டியாக கருதிய நடிகராக இருந்தாலும் ஒரு பொது விழாவில், பல ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் இன்னொரு முதல்வரும் நடிகர் திலகதிற்கு முத்தம் கொடுத்தார் ! அந்த பண்பிற்கு முன்னால் மற்றவர் எம்மாத்திரம் !
உயிர் நண்பன் என்று கூறி..உயிரற்ற ELECTRONIC பொருளுக்கு முத்தம் கொடுத்தாராம் ...இப்படி தான் உயிர் நண்பனுக்கு எல்லாரும் முத்தம் கொடுப்பார்கள் !
நன்றி கெட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஒவ்ரங்கசீப் காங்கிரஸ் மற்றும் நம்பியவர்களை முதுகில் குத்தி ரத்தம் குடிக்கும் திராவிட கட்சிகள் என்று திருத்தி கூறுங்கள் !
நாசர் சென்னையில் வந்து நமது தெய்வம் அவர்களுக்கு மரியாதை செய்தது நேரு அவர்கள் அனுமதி கொடுத்ததாலயே. காரணம் அவர் நடிகர் திலகம் அவர்கள் மீது வைத்த மரியாதை மற்றும் நடிகர் திலகம் நிகழ்த்திய சாதனையை உணர்ந்ததால் ! அவர் நினைத்திருந்தால் அல்லது டெல்லி காங்கிரஸ் நினைத்திருந்தால் john f kennedy நடிகர் திலகம் அவர்களை அழைத்ததை கூட எப்படியாவது முடக்கியிருக்கலாம்..அப்படி செய்யவில்லையே...அவர்கள் என்ன ..இங்குள்ள திராவிட கட்சி கனவான்களா ? இங்குள்ள நீங்கள் கூறிய கனவான்கள் நடிகர் திலகத்தை ஒரு தமிழன் என்ற முறையில் வழியனுப்பினார்களா ? இல்லையே ? அப்போதும் நடிகர் திலகத்தை பாராட்டு விழ நடத்தி அமெரிக்காவிற்கு வழியனுப்பியது மும்பை நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இதர சங்கம் தான் !
வேலை செய்யும் இடத்தில் SENTIMENT பேசும்போது நமது மேலாளர்கள் கூட WHAT BLOODY SENTIMENTS ? DONT CARRY EMOTIONAL BAGGAGE என்று பல முறை கூற கேள்விப்பட்டதில்லையா நாம் ? அப்போது எப்படி ரியாக்ட் செய்கிறோம் ? அதில் என்ன தவறு ?
தனிமனிதன் கூறி இருந்தால் அதில் தவறு கண்டிருக்க மாட்டோம் ..அதையே நேரு கூறும்போது தவறு என்போம்...
சரி...! ராமர் எந்த இன்ஜினியரிங் காலேஜ் படித்தார் பாலம் கட்ட என்று புத்திசாலிதனமாக கேள்வி கேட்டதாக நினைத்து ஒரு திராவிட கனவான் கேள்வி கேட்டபோது இந்த LOGIC நேஹ்ருவை குறை கூறியவர்களுக்கு மறந்தது ஏன் ? வாய் என்ன தைத்து இருந்ததா ?
இந்த திராவிட கனவான்களை விட நீங்கள் கூறிய காஷ்மீர் எவ்வளவோ சிறந்தவர்கள் !
Last edited by RavikiranSurya; 4th August 2014 at 11:13 PM.
-
4th August 2014, 10:46 PM
#694
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு முரளி சார்
ஹிந்து நாளிதழில் வந்த தமிழ் திரை உலகின் பொற்காலம் 1961-1970 பற்றிய கட்டுரையை மக்கள் திலகம் திரியில்
பதிவிட்டு , அந்த கால கட்டத்தில் சாதனைகள் புரிந்த படங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் சாதனைகள் பற்றி பதிவிட்டேன் திரு கார்த்திக் அவர்களும் நடிகர் திலகத்தின் பட்டியலை பதிவிட்டதை திரு கோபால் இந்த திரியில்
மறு பதிவிட்டார் .இத்துடன் முடிந்தது .ஆனால் ரவிகிரண் நீண்ட சாதனை பட்டியல் என்ற பெயரில் சில தவறான்
தகவலை பதிவிட்டதால் நானும் அதற்கு மக்கள் திலகம் திரியில் நகைச்சுவையாக பதிவிட்டேன் .யார் மனமும் புண் படும்படி கிண்டல் செய்யவில்லை ..திரு ரவியும் பதிலுக்கு நகைச்சுவையாக என்னை தாக்கி பதிவிட்டார் . நான் ரசித்தேன் ..
உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . இது அனைவருக்கும் பொருந்தும் .
சார்
தவறான பதிவு என்றால் STATISTICAL PROOF பதிவு செய்து தவறு என்று நிரூபித்திருக்கலாமே ?
உங்களுடைய பதிவிலும் சில தவறுகள் உள்ளன என்பது உங்களுக்கே தெரியும் !
நான் தவறே இல்லாமல் பதிவு செய்யமாட்டேன் என்று கூறவில்லை எந்தகாலத்திலும். எனக்கு தெரிந்த தகவல் பதிவிடும்போது..அதில் தவறு இருந்தால்...
அதை இந்த தகவல் ..இதனால் தவறு என்று விளக்கி ஆதாரத்துடன் கூறுங்கள்..நானும் தவறுக்கு மனிப்பு கேட்பேன்...infact கேட்டும் இருக்கிறேன் என்பதை நீங்களும் அறிவீர்கள் !
அதை விடுத்து...எல்லா பதிவுகளிலும் அது என்னதான் ஆதாரத்துடன் பதிவு செய்தாலும் அதை தவறு என்று கூறுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும் ?
வீடியோ சமாசாரம் : நாடக பாணி நய்யாண்டி...நானும் அதை ரசிக்க தவறியதில்லை உங்களுடைய திரியில் பலர் அதை வரவேற்று, உங்களுக்கு சபாஷ் போட்டு, என்னை வேருபெற்றுவதாக நினைத்துகொண்டு மட்டம் தட்டினாலும் !
அதற்க்கு பதிலும் அதே பாணியிலேயே பதிவும் செய்திருக்கிறேன்..நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் ! ரசித்தும் இருகிறீர்கள் என்று உரைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
நீங்கள் கூறியது வாஸ்தவம்தான் ! உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . மறைக்கவும் முடியாது இது அனைவருக்கும் பொருந்தும் !
Last edited by RavikiranSurya; 4th August 2014 at 11:03 PM.
-
4th August 2014, 11:01 PM
#695
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
நண்பர் RKS,
எந்த விவாதத்துக்கும் சில அடிப்படை புரிதலில் ஒப்புமை அடிப்படை .. அது நாமிருவருக்கும் சாத்தியமில்லை எனும் போது ,உங்களுக்கு தெளிவாக என்னால் பதில் சொல்ல முடியும் என்றாலும் , அதனால் எந்த பயனும் விழையப்போவதில்லை என உறுதியாக நம்புவதால் ..Let us agree to disagree என்பதோடு இதற்கு முற்றுப்புள்ளி . இது குறித்து மேலும் பதிலுக்கு பதில் என்னிடமிருந்து வராது .
என்னுடைய பதில் முரளி அவர்களுக்கு மட்டுமே ..நன்றி.
ஜோ சார்
கேள்வி கேட்டால்..இப்படி எல்லாம் தான் பதில் வரும்...காலம் காலமாக கேள்வி கேட்பவர்களுக்கு கிடைக்கும் பதில் இது போல தான்..!
SO ...NO USE ! and am definitely not capable to provide as diplomatic answer like you !
Regards
RKS
-
4th August 2014, 11:16 PM
#696
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.
சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].
இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.
அன்புடன்
-
4th August 2014, 11:17 PM
#697
Junior Member
Veteran Hubber
-
4th August 2014, 11:17 PM
#698
Junior Member
Veteran Hubber
-
4th August 2014, 11:18 PM
#699
Junior Member
Veteran Hubber
-
4th August 2014, 11:19 PM
#700
Junior Member
Veteran Hubber
Bookmarks