Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #10
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    பென்கழூர் ரீன்ஏஜ் பையன் எஸ்வீ என அழைக்கப்படும்
    வினோத் சார் வணக்கம்

    கலைவேந்தனுக்கு நான் எழுதிய பதிவிற்கு
    நீங்கள் எழுதிய பதிவை பார்த்தால்

    நீங்கள் நுனிப்புல் மேய்பவராக இருக்கின்றீர்கள் அல்லது
    ஆத்திரம் உங்கள் கண்களை மறைத்துவிட்டது

    ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
    அறிவுக்கு வேலை கொடுங்கள் சார்

    சரி விடயத்திற்கு வருவோம்

    நான் எழுதிய விடயத்திற்குமட்டுமல்ல ரவிகிரண்சூரியா
    எழுதும் விடயங்களுக்கும் கூட நீங்கள் உட்பட உங்கள்
    பக்கத்தில் இருந்து அதற்கான பதிலை தராமல்
    மழுப்பலான திசை திருப்பும் பதில்களையே எழுதுகிறீர்கள்

    நாங்கள் எழுதுவதை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டு
    பதில் எழுதாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப்போடுவதுதான் உங்கள் வேலையாக இருக்கிறது

    நீங்கள் எழுதும் தவறான செய்திகளுக்கு விளக்கம் தந்தால்
    அதற்கு பதில் எழுதாமல் குழப்பம் விளைவிக்கின்றோம்
    அது இது என்று கூக்குரல் இடுகின்றீர்களே தவிர
    அதற்குரிய சரியான பதில் தருவதாக இல்லை

    நான் பழையனவற்றை தேடி எடுத்துப்பதிவதால்
    உங்கள் முகத்திரை கிழிகின்றதே அதனால் உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா?

    எனக்கு மனக்குறை நிறைய உண்டு

    சில

    சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
    என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்

    ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
    ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
    என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

    உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
    மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்

    பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
    மனச்சாந்தி அடையுங்கள்

    சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
    படுகிறோம் .

    quote பண்ணணி எதற்கு நல்ல கொள்கை என பதிவிட்டுள்ளேன்
    என்பதை கூர்ந்து கவனியுங்கள்
    எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாதனையை தமிழ் திரையுலகில் படைத்திருப்பார்கள். நடிகர் ராமராஜன் கூட " கரகாட்டக்காரன்" படம் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் "பணமா பாசமா" வெள்ளி விழா படத்தின் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் "கல்யாண பரிசு" படத்தினை வெள்ளி விழா படமாக அளித்து சாதனை படைத்தார். எம். கே. தியாகராஜ பாகவதர் கூட 3 தீபாவளி கண்ட " ஹரிதாஸ் " படத்தின் மூலம் சாதனை படைத்தார். வெள்ளிவிழா பட நாயகன் என்று சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் கூட சாதனைகள் படைத்தவர் தான். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும் பல வெற்றிப்படங்களை அளித்து சாதனை படைத்தவரே. இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் சாதனை படைத்தவர்களே!

    இந்த திரைக்கலைஞர்கள் எவருமே, " தமிழக முதல்வர்" ஆனதில்லை. அந்த கால கட்டத்தில் வெளியான எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மறு வெளியீடுகளில் மீண்டும் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இதுவும் மேற்கூறிய கலைஞர்களின் படங்கள் புரியாத சாதனை தான். இதை தாங்க முடியாத எரிச்சல் தங்களின் பதிவு மூலம் புலப்படுகிறது.

    பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடையும் கூட்டம் நாங்கள் அல்ல. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பல பதிவுகள் உங்கள் திரியின் பிற பாகங்களில் இருப்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

    115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.

    எங்களுக்கு ஒரு நடிகர் நாடாண்ட சாதனையே போதும். இந்த புவியுள்ளவரை பேசிக்கொண்டே இருப்போம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பெறாத எங்கள் தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாதவர்.

    எங்களிடம் மழுப்பலான பதில் எப்போதும் இருந்ததில்லை. நெத்தியடி பதில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தான் தருவோம். அதற்காக அர்த்தமில்லாத பதிவுகளுக்கெல்லாம் பதில் சொல்லவும் மாட்டோம். எல்லாவற்றுக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னேயும் வரமாட்டோம்.

    எனது இந்த பதிவுக்கு பதிலிட்டாலும் அதை அலட்சியம் செய்வோம்.

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

    கலைவேந்தன்

    பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.
    Last edited by KALAIVENTHAN; 11th August 2014 at 03:20 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •