
Originally Posted by
Gopal,S.
இப்போது நடிகர்திலகத்தை கவனிப்போம். அசல் கட்டுரை ஒன்று வந்து ரொம்ப நாளாகிறது. சில நண்பர்கள் இசையில் தோய்ந்து விட்டார்கள் அல்லது அறமற்ற வியாபாரி ஆகி விட்டார்கள் அல்லது வேலைக்கு சென்று விட்டார்கள் அல்லது moderator என்ற பெரும் பதவியை மட்டும் கவனிக்கிறார்கள்.நாமாவது இந்த பணியை கவனிப்போம்.
முதலில் over Acting ,Under Play ,natural Acting என்பதை கவனிப்போம். முக்கியமாக கவனிக்க வேண்டியது ,ஒரு நல்ல நடிகன் ,இந்த மூன்று முறைகளையும் கையாண்டே ஆக வேண்டும்.மூன்றுமே நடிப்பின் பரிமாணங்களை விளக்கும் மூன்று உத்திகள். இவை எது ,எப்போது பயன் பட வேண்டும் என்று தீர்மானிப்பது ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் பணியே .ரசிக்க வேண்டியது அல்லது புறம் தள்ளுவது மட்டுமே விமர்சகனின் ,ரசிகனின் வேலை.
நாம் வாழ்க்கையிலேயே ,இந்த மூன்றையும் செய்து கொண்டிருப்போம். ஒருவன் நம்மை இகழ்ந்து விட்டால் ,சட்டையை பிடித்து பாய்ந்து அடிப்பது முதல் வகை. பதிலுக்கு இகழ்வது இரண்டாம் வகை. சீ...போ...என்று அசட்டையாக செல்வது மூன்றாம் வகை.
over acting - ஒரு நடிகன் செய்யக் கூடிய நடிப்பு வகைகளில் மிக கடினமானது ,இந்த வகை நடிப்பை கச்சிதமாக கையாளுவதுதான்.
ஒரு சினிமா என்பது ,ஒரு பெரிய வாழ்க்கையின் முக்கிய பதிவுகளை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பது. compressed mode எனப்படும் விதத்தில். அப்போது பல வருட நிகழ்வுகளின் விளைவை ஒரே காட்சியில் உணர்த்த விரும்பினால்?வாழ்க்கையில் போல உணர்வுகளை படி படியாக காட்டும் கால அளவு ,திரையில் சாத்தியமில்லை.
வேறு பட்ட மனிதர்களையோ,சரித்திர புருஷர்களையோ,மனநிலை பாதிக்க பட்ட,வினோத குணநலம் நிறைந்த சராசரியிலிருந்து வேறு பட்ட தன்மை உள்ளவர்களையோ,idio -syncrasy ,eccentricity என்பதை உணர்த்தும் போது ,முக்கியமாய் ஸ்டெல்லா ஆல்டர் முறை larger than life பாத்திரங்கள்,chekov முறை மனோ-தத்துவ ஆழம் செல்லும் interpret பண்ண வேண்டிய பாத்திரங்கள் ,Astraud முறையில் உள் மன வேதனையை முகத்தில் cruelty முறை பிரதிபலிப்பு இவற்றில் இந்த மறை நடிப்பு வகை தேர்வு செய்ய பட்டே ஆக வேண்டும்.
காமெடி என்பதில் ,முக்கியமாக slapstick ,situational என்றால் உடல் மொழி,உச்சரிப்பு முறையில் ஈர்க்க,இந்த வகை நடிப்பு அவசியமே.
நோயுற்றவனின் வேதனை, அதீத மனநிலை கொண்ட காதலன் ,இயல்பு மாறி தடம் புரண்டவன்,இவற்றையெல்லாம் காட்ட அவசியம்.
முக்கியமாக ,வேறு பட்ட நடிப்பை தர விரும்பும் எந்த நடிகருமே ,பின் பற்ற வேண்டிய பாணி. ஆனால் இதை நன்கு செய்ய, அங்கீகரிக்க வைக்கும் வகையில் நடிக்க,தேர்ந்த,மிக சிறந்த நடிகர்களால் மட்டுமே முடியும்.
Natural Acting - இது ஒரு சில படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சம கால பாத்திர proto -type சித்தரிப்பு, ரியலிஸ்டிக் படங்கள், மற்றும் தன் இயல்பை மீறி வேறு பட்டு நடிக்க தெரியாத நடிகர்களை இயக்குனர் பயன் படுத்தும் போது ,இதை தவிர வேறு வழியில்லை.இது மிக சுலபமானது.தன்னை போலவே,வந்து போய் கொண்டிருப்பது கஷ்டமா என்ன?
ஆனால் இதிலும், ஒரு புது பரிமாணம் காட்டும் வித்தை ,தேர்ந்த கலைஞனால் மட்டுமே முடியும். உதாரணம் சமகால சரித்திர நாயகர்கள் வ.வு.சி ,ஒரு சமகால கலைஞன் தில்லானா சண்முக சுந்தரம், ஒரு வாழ்க்கை பிறழ்வு கொண்ட கிராம பெரிய மனிதர் முதல் மரியாதை ,என்று பாத்திரங்களுக்கேற்ற வேறு படுத்தல் ,உன்னத உயர்ந்த நடிகர்களுக்கே சாத்தியம்.
underplay - இது கம்பி மேல் நடக்கும் வித்தை. ஆனால் இத்தகைய நடிப்பை ,ஒரு தேர்ந்த கதாசிரியர்,இயக்குனர்,காமெரா கலைஞர்,எடிட்டர் தங்கள் பணியை செவ்வனே செய்தால் மட்டுமே ,நடிகனுக்கு சாத்திய படும் ஒன்று. அமைதியான கதாபாத்திரங்களுக்கு,மற்ற படி இயக்குனர்களின் நடிகனுக்கென்று ,அமைந்த பாணி. deliberate under play ,non -Acting அல்லது non -performance என்பதோடு குழப்பி கொள்ள கூடாது.
இந்த மூன்றையும் தேர்ந்து செய்ய தெரியாதவன் ,நடிகன் என்று சொல்லவே யோக்யதை அற்றவன்.
அத்துடன் எப்படி இந்த மூன்றை இணைப்பது ,அல்லது எந்தெந்த படத்திற்கு எவை என்பதை ,நடிகர்திலகம் அளவு புரிந்து வைத்த நடிகர்கள் உலகளவில் யாருமில்லை.(இத்தனைக்கும் இயக்குனர் பங்கில்லாமல்)
மிக வலுவான கதைக்கு,அல்லது தணிய வேண்டிய பாத்திரங்களுக்கு natural Acting .(தில்லானா மோகனாம்பாள்,மோட்டார் சுந்தரம் பிள்ளை)
வேறு பட்ட பாத்திரத்தின் மீது மட்டும் சுமையேற்ற பட்ட படங்களுக்கு over Acting முறை(வியட்நாம் வீடு,கவுரவம்,தங்க பதக்கம் )
இயக்குனர்களின் பணி செவ்வனே நிறையும் படங்களுக்கு underplay .(தேவர் மகன்,உயர்ந்த மனிதன்,முதல் மரியாதை,அந்த நாள்,ராஜபார்ட் ரங்கதுரை )
ஒரு காட்சியில் ,இந்த மூன்றையும் கலப்பார். நீலவானம் ஆபரேஷன் செல்லு முன் குரூப் போட்டோ எடுக்க ஆசைபடும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் மாமனாரிடம் வேண்டும் காட்சி. முதலில் natural Acting பாணியில் மாமனாரிடம் வேண்டுவார்.மறுக்கும் மாமனாரிடம் பொங்கி உணர்ச்சி வசப் படுவார் over acting பாணியில். திரும்பி நடக்க முற்பட்டு ,மறுபடியும் திரும்பும் போது ,கீழ்குரலில் வந்துருங்க என்று underplay செய்வார். இந்த சீன் மெருகு பெற்று விடும்.என்ன நடிகரைய்யா?
ஆனாலும் ஒரு ஸ்டார் என்ற விதத்தில் ,சில சராசரி படங்களில்,சராசரி இயக்குனர்களுடன் பணியாற்றும் போது (தமிழ் படங்கள்)அவர் மேல் நாட்டு நடிகர்கள் மாதிரி ,அந்த பாத்திர இயல்பை மட்டும் சித்தரித்து கடந்து செல்ல முடியாது.(அதுவும் அரசியல்,போதனை,கொள்கை,தற்புகழ்ச்சி என்ற பஞ்ச்கள் நிறைந்து கலையை ஆக்கிரமித்து நின்ற தமிழ் பூமியில் , சி சென்டர் ரசிக கண்மணிகள் வேறு,அறியாமை நிறைந்த பூமி) .இங்கே சில நடிப்பை மீறிய சில scene capturing gimmicks ,inappropriate Acting செய்ய பட்டால்தான் ஸ்டார் ஆக நிலைக்க முடியும். அறிந்தே செய்த தவறுகளும் ரசிக்க பட்டன பலரால். இதை
புன்(ண்)முறுவலுடன் நடிகர்திலகமே சொல்லியுள்ளார் பலரிடம்.
Bookmarks