Results 1 to 10 of 420

Thread: Anjaan - Surya - Samantha - Yuvan - Santosh sivan - Lingusamy

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    #‎சூர்யாவை‬ கோபப்படுத்திய ரசிகர்கள்

    வேட்டை படத்தில் கோட்டை விட்டிருந்த லிங்குசாமி அஞ்சான் படத்தில் அசத்தி இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு சரியான தீனி போடத்தவறிவிட்டார் லிங்குசாமி. இதனால் 120 ரூபாய் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள் பலர் படத்தை பற்றி நெகட்டிவான விமர்சனங்களை எழுதி சமுகவளைதலங்களிலும், இணையத்தளங்களிலும் உலாவவிட்டுள்ளனர். இதனால் கடும் வருத்தத்தில் இருந்தார் சூர்யா. அவரை மேலும் அப்செட் ஆக்குவதுபோல் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

    நேற்று முன் தினம் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.

    படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்கள் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்தார்களாம். அதைக் கண்ட நடிகர் சூர்யா கடுப்பாகி கமெண்ட் அடித்த ரசிகர்களிடம் கோபமுடன் பேசியுள்ளார்.

    சூர்யாவின் கோபத்தை சட்டைப்பண்ணாமல் ரசிகர்கள் சூர்யாவை மீண்டும், மீண்டும் கிண்டல் பண்ணி அவரை அதிக கோபத்துக்கு ஆளாக்கியுள்ளனர். ரசிகர்களின் கமெண்ட் எல்லை மீறிப்போனதால் படக்குழுவினர் இந்த விஷயத்தை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். காவல்துறையினர் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து ரசிகர்களை விரட்டி உள்ளனர். இதனால் கோபமான சூர்யா, அஞ்சான் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறி சென்றுவிட்டாராம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •