Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எனக்காக உங்கள் பதிவை நீக்கியது உண்மை என்றால் இனி மேல் மக்கள் திலகம் திரியில் நீங்கள் எம்ஜிஆர் பற்றிய
    திரை உலக ஆளுமைகள் பற்றிய கருத்துக்களை பதிவிட்டால் நல்லது .

    எதெற்கெடுத்தாலும் ஆவணம் - பொய் - சவால் - என்று சகட்டு மேனிக்கு , உடனுக்குடன் வந்து போராட்டம் நடத்தும்
    குணத்தை மாற்றுங்கள் .உங்கள் பதிவுகளில் நாங்கள் கண்டு பிடித்த பொய்கள் - தவறான , ஆதாரமில்லாத ,கிண்டல்
    கேலி பதிவுகளை வைத்து உங்களுக்கு பதிலுக்கு பதில் கச்சேரி நடத்த எங்களுக்கும் தெரியும் .

    மக்களுக்கு தெரியும் - நாடு நிலையாளர்களுக்கு புரியும் என்று இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அறிக்கை .

    மக்கள் திலகம் திரியிலும் சில தவறான தகவல் கொண்ட விளம்பரங்கள் - புள்ளி விவரங்கள் - தனி மனிதரின் தாக்குதல் கொண்ட வாசகங்கள் இருந்த விளம்பர பதிவுகள் வந்தது தவறு என்பதை ஏற்று கொள்கிறோம் . இனி எங்கள் சாதனைகள் பற்றி நாங்கள் பார்த்து கொள்கிறோம் .பதிவிடுகிறோம் .


    உங்கள் திரியில் உங்களுக்கு நிறைய பணிகள் உள்ளது .முதலில் அதை கவனியுங்கள் .
    எங்கள் திரியை மறந்து விடுங்கள் - ஒரு வழி பாதை - உங்களுக்கு நல்லது .பயணம் சுகமாக இருக்கும் .
    புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ரவிகிரன் அவர்களே .
    esvee சார்

    என்னுடைய பதிவை புரிந்துகொண்டு, உங்கள் தரப்பில் நடந்த தவறுகளை ஒத்துகொண்டதற்கு முதற்க்கண் எனது நன்றிகள்.

    என்னுடைய பதிவில் ஏதேனும் சொற்ப தவறுகள் இருந்திருக்கலாம் ..இல்லை என்று சொல்லவில்லை காரணம் நானும் மனிதன் தான். ஆனால் பொய் தகவல்கள் என்றும் இருந்ததில்லை...பதில் பதிவு செய்தவைகள் எல்லாம் ஆதாரத்துடன் தான் பதிவு செய்துள்ளேன். உங்கள் தரப்பில் இருந்து எழுந்த தவறான பதிவுகள் என்று அந்த ஆதாரத்தின் மூலம் நிரூபித்தும் இருக்கிறேன், இதுவரையில்.

    ஆகையால் இனியும் எனது பதிவுகளை வேறு விதமாக சித்தரிக்கவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

    உடனுக்குடன் போராட்டும் நடத்தும் குணத்தை மாற்றுங்கள் என்று அறிவுரைகிரீர்கள். 50% ஞாயம் உள்ள அறிவுரை. மிக்க நன்றி..நிச்சயமாக முயற்சிக்கிறேன். அதே போல மற்றவர்கள் வந்து உடனுக்குடன் போராடும் வகையில் பதிவுகளை தவிருங்கள் என்று உங்கள் திரி சில நண்பர்களுக்கும் அறிவுரை கூறுங்கள்..அதுதான் 100% ஞாயம் உள்ள அறிவுரை. ஒருதலைபட்சம் எவருக்குமே நல்லதல்ல அல்லவா ?

    பதிலுக்கு பதில் கச்சேரி என்பது நிச்சயம் என்னுடைய பாணியல்ல. ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் நிர்பந்தம் செய்யும்போது, அப்படி ஒரு விஷயம் ஒரு வேளை நடுக்குமாயின் அதற்க்கு பதில் அளிக்க எந்த நேரத்திலும் தங்களை போல என்னாலும் முடியும் என்பது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன்.

    "திரை உலகம் அறிந்த ஒன்று"..."உலகம் அறிந்த ஒன்று" என்று உங்கள் தரப்பில் பதிவுகள் வரும்போது, மக்களுக்கு தெரியும், நடுநிலயாலர்களுக்கு தெரியும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறன்.

    உங்களுடைய கடைசி வரி பொருள் புரிந்தது. இனி நீங்கள் கூறியதை போல அவர் அவர் வேலையே அவர் அவர் பார்க்கலாம். யாரையும் யாரும் வம்புக்கு இழுக்காத வரையில் எந்த பதில் பதிவும் யாரும் பதிவு செய்யமாட்டார்கள் என்று நம்புவோம் !

    மீண்டும் உங்கள் புரிதலுக்கும், அறிவுரைக்கும் இங்கு நடந்த தவறுகளை, அந்த உண்மையை பரந்தமனதுடன் ஒத்துகொண்டதற்கு எனது நன்றி

    rks
    Last edited by RavikiranSurya; 21st August 2014 at 10:44 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •