Page 130 of 401 FirstFirst ... 3080120128129130131132140180230 ... LastLast
Results 1,291 to 1,300 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1291
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    டி.ராஜேந்தர் இசையமைத்த தொடக்க கால படப் பாடல்கள் ஆஹா... ஒவ்வொன்றும் நெஞ்சை வருடிச் செல்லும் பாடல்கள்.. (சில சமயம் பாடல் வரிகள் நம்மைப் படுத்துவதுண்டு என்றாலும் கூட). அந்த வரிசையில் இசையரசியின் குரலில் நம் உள்ளத்தை உருக்கும் பாடல் வசந்த அழைப்புகள் படத்தில் இடம் பெற்ற கங்கை பொங்குதே கண்களோரம் என்ற இப்பாடல்.

    கேளுங்கள் நீங்களும் உணர்வீர்கள்..

    http://www.inbaminge.com/t/v/Vasantha%20Azhaippugal/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1292
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    தைப்பொங்கல்.... இளையராஜாவின் புகழ்க் கிரீடத்தில் ஒரு வைரக்கல்... ஒவ்வொரு பாடலும் நெஞ்சின் உள்ளே ஊடுருவிச் செல்லும் ... குறிப்பாக தீர்த்தக்கரைதனிலே பாடல்.. சொல்லவே வேண்டாம்.. அதுவும் ஜென்சியின் குரலில் இருக்கும் அந்த ஜீவன்... ரத்தநாளங்களையும் துளைத்து உள்ளே செல்லக் கூடியது... அதற்கு உதாரணம் இப்பாடல்... அவருடைய உச்சரிப்பினைப் பற்றி வெவ்வேறு அபிப்ராயம் இருந்தாலும் அவருடைய குரலில் உள்ள அந்த vibration மற்ற அனைத்துப் பாடகியரிடமும் உள்ளதை விட அதிகமே... அந்த வரிசையில் இதோ ...

    தைப்பொங்கல் படத்திலிருந்து தீர்த்தக் கரைதனிலே..

    http://www.inbaminge.com/t/t/Thai%20Pongal/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1293
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    இசையரசி எஸ்.பி.பாலாவின் குரல்களில் காலத்தால் அழிக்க முடியாத இன்னொரு பாடல்..

    சங்கர் கணேஷ் இசையில் ஸ்ரீதேவி திரைப்படத்தில் இடம் பெற்ற வாசமுள்ள சந்தனமே பாடலாகும்..

    கேட்டு அப்படியே மெய்மறந்து விடுங்கள்..

    http://www.inbaminge.com/t/s/Sree%20Devi/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Russellmai liked this post
  7. #1294
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    விஜயபாஸ்கர் இசையில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த சௌந்தர்யமே வருக வருக படத்திலிருந்து என்றும் இனிய ஜீவ கீதம்..

    இரவில் இரண்டு பறவைகள்...

    எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல்களில்...

    இப்பாடலும் ராஜரிஷி படத்தில் இடம் பெற்ற மான் கண்டேன் மான் கண்டேன் பாடலும் கிட்டத்தட்ட ஒரே ராகம் என நினைக்கிறேன்.. கோபால் சார் ஓவர் டூ யூ...

    http://www.inbaminge.com/t/s/Soundar...ruga%20Varuga/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes Russellmai liked this post
  9. #1295
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    மேனகா என்ற திறமைசாலியான நடிகையை அறிமுகப் படுத்திய படம்... பேர் தான் ஒரு மாதிரி என்றாலும் பாட்டு சூப்பர் ஹிட்...

    ஜெயச்சந்திரன் எஸ்.ஜானகி பாடிய கங்கை அமரன் இசையமைத்த ராமாயி வயசுக்கு வந்துட்டா படப் பாடல்..

    நாலு வகைப் பூக்கள்... மலர் கோட்டை அதில் ராணியாகிறாய்..

    http://www.inbaminge.com/t/r/Ramaiye...u%20Vanthutta/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #1296
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    தன்னை உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளும் மகேந்திரன் அவர்கள் அதை விட பூட்டாத பூட்டுக்கள் மகேந்திரன் என்று கூறிக்கொண்டால் இன்னும் பெருமையாக இருக்கும். ஒவ்வொரு பாத்திரமும் மனித வாழ்க்கையில் எவ்வாறு சிந்திக்குமோ அதே கண்ணோட்டத்தில் படைக்கப் பட்டு உதிரிப்பூக்களை விட இன்னும் சிறப்பாக மகேந்திரன் படைத்த படம் பூட்டாத பூட்டுக்கள். இதில் இளையராஜா அவர்களின் பங்கு மகத்தானது. படம் முடிந்து வெளிவரும் போது கனத்த இதயத்துடன் வெளியேறுவது தவிர்க்க இயலாதது.

    சுந்தரின் வாழ்க்கையில் இப்படம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம்.

    பாடல்கள் படத்தின் சிறப்பை பலமடங்கு தூக்கி நிறுத்தின என்றால் அது மிகையாகாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகவும் படத்தின் பெயரை இன்று வரை மக்கள் மறக்காமல் இருப்பதற்கு மிகவும் உறுதுணையாகவும் விளங்குவது வண்ண வண்ண வண்ண பூஞ்சோலை பாடல்...

    எப்படிப் பாராட்டினாலும் தகும் அந்த இனிமையான பாடல் இதோ நாமும் கேட்டு மகிழ..

    http://www.inbaminge.com/t/p/Pootatha%20Pootukal/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #1297
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    திருவிளையாடல் ஒரு நாள் போதுமா பாடலையும் பூவா தலையா மதுரையில் பிறந்த மீன்கொடியை பாடலையும் நினைவூட்டும் ராகத்தில் எஸ்.பி.பாலாவின் குரலில் என்றும் மறக்க முடியாத இனிமையான பாடல் கங்கை அமரன் இசையில் பருவத்தின் வாசலிலே படத்தில் இடம் பெற்ற இப்பாடல்...

    கோவிலின் தேரென தேவதை வருகையோ...

    http://www.inbaminge.com/t/p/Paruvathin%20Vasalile/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #1298
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    மீண்டும் சங்கர் கணேஷ் வாணி ஜெயராம் கூட்டணி... இம்முறை இன்னொரு வித்தியாசமான பரிமாணத்தில்...அப்பப்பா... எத்தனை விதமான Compositions...

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, நினைத்தேன் வந்தாய், துள்ளுவதோ இளமை பாடல்களை நினைவூட்டும் மெட்டில் வாணி ஜெயராமின் சூப்பர் வாய்ஸ் மற்றும் மறக்க முடியாத ஹம்மிங்கில்...

    அழகிய முகம் முழுமை நிலா...

    முதன் முறை கேட்பவர்கள் நிச்சயம் ஆச்சரியப் படுவீர்கள்.. இப்படிப் பட்ட பாடல் ஏன் ஹிட்டாகவில்லை என்று மட்டுமல்ல.. கலைமாமணியே, லட்சுமி வந்தாள் போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்ற அதே பணம் பெண் பாசம் படத்தில் இந்தப் பாடலும் இடம் பெற்றதா என்று... நிச்சயம் நினைப்பீர்கள்..

    http://www.inbaminge.com/t/p/Panam%20Penn%20Pasam/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #1299
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    உறங்கப் போகும் முன் ... எஸ்.ஜானகியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு உறங்கப் போகலாமே...

    ஒத்தையடிப் பாதையிலே படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஒன் எண்ணந்தான் என் நெஞ்சிலே வெதை போட மரமானது...

    http://www.inbaminge.com/t/o/Othayadi%20Pathaiyile/

    இப்பாடலைக் கேட்க வேண்டிய நேரம் காலை 2.00 மணி... இடம்.. வெளியூர் பஸ்ஸில் இரவு 10 மணிக்கு ஏறி எங்காவது அத்வான காட்டில் சாப்பாட்டிற்கு அல்லது டீக்கு நிறுத்துவார்கள்.. அந்த இடத்தில் போட வேண்டிய பாடல்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post
  17. #1300
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ராகவ் ஜி.. இரவின் மடியில் தாலாட்ட வந்த பாடல்கள் அத்தனையுமே கல்கி அவர்களின் வர்ணனை போல அமுதம் உண்ட குயிலின் கீதம் சந்தன மணம் வீசும் தென்றலைப் போல பதினாயிரம் வண்ண மலர்களாக மாறி பனிச்சாரலாய் மனதை வந்து தீண்டின.

    இரவில் இரண்டு பறவைகள் பாடலை எஸ்.பி.பி., வாணி ஜெயராம் மட்டுமல்லாமல் சுசீலா, ஜாலி ஆப்ரஹாம் ஆகியோரும் இணைந்து பாடி இருக்கிறார்கள்

    பணம் பெண் பாசம் படத்தில் " அழகிய முகம் முழுமை நிலா" பாடலைப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் சுசீலாம்மாவின் "அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்" என்ற அருமையான பாடல் உண்டு. அனேகமாக இந்தப் பாடல்களுக்கு வீடியோ கிடைப்பதில்லை. ஒரு சில பாடல்களுக்கு மட்டும் யாராவது புண்ணியவான் போஸ்ட் செய்தால் அதையும் யூடியூப் சந்தோஷமாக உடனே எடுத்து தூக்கிப் போட்டு விடுவார்கள். தேடிப் பார்க்கலாம். கிடைத்தால் எல்லோரும் கண்டு ரசிப்போம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •