எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
Courtesy - net
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் ....
IMG]http://i60.tinypic.com/efihww.jpg[/IMG]
Last edited by boominathanandavar; 30th August 2014 at 11:08 AM.
Reason: de
என்.எஸ்.கிருஷ்ணன் எம்ஜிஆர் கஷ்டபட்ட காலத்தில் சைக்கிள் வாங்க உதவி புரிந்தார், அந்த நன்றி மறவாத எம்ஜிஆர் N.S.K.பேரனுக்கு அவர் முதல்வராக இருந்தபொழுது டாக்டருக்கு படிக்கவைத்து.,அமெரிக்காவில் வேலையும் கிடைக்கச்செய்தார்.
தலைவர் நடித்த மிக சிறந்த படங்களில் நல்லவன் வாழ்வான் படமும் ஒன்று. தலைவருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சந்தித்து பேசும் இடங்களில் வசனம் மிக அருமை.
எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் இடம் தேர்தலில் தோற்றது தெரியும்போது காட்டும் முகபாவங்கள் பின்னர் தேர்தலில் தனக்கு வாக்கு அளித்தவர்கள் பணக்காரர்கள், எம்.ஜி.ஆர் இக்கு வாக்கு அளித்தவர்கள் ஏழைகள் என்று சொல்லி தன் தோல்வியை பேச்சினால் மாற்றும் விதமும் அன்றும் இன்றும் அரசியல்வாதிகள் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். இந்த இரு இடங்களில் தலைவர் காட்டும் முக பாவங்கள் மற்றும் வசனம் குறிப்பிடதக்கது.
இரண்டு பேருடைய combination வசன போரில் வந்த படங்களில் இந்த படமும் ஒன்று.
Bookmarks