Page 180 of 401 FirstFirst ... 80130170178179180181182190230280 ... LastLast
Results 1,791 to 1,800 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1791
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    எஸ்வீ ஜி... அப்படிப் போட்டீங்க அருவாளை...

    கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
    நானறியேன்..

    மொத்தத்தில் எத்தனை யுகங்கள் போனாலும் இந்தப் பாட்டின் தாக்கம் மட்டும் குறையவே குறையாது ( of course... அதை ரசிப்போருக்கு : ) )

  2. Thanks Richardsof thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1792
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
    நானறியேன்..
    ஒருத்தர் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடிவரப்போகிறார். சீக்கிரமே மாற்றுங்கள். அதாவது 1966-க்கு முன் வந்ததெல்லாம் ராமமூர்த்தியுடையது. விஸ்வநாதனுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

  5. Thanks Gopal.s thanked for this post
  6. #1793
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமை எஸ்வி சார் சர்வதிகாரி மேலான தகவல்களுக்கு

    கார்த்திக் சார் சி கே சார்,எஸ்வி சார்,மது சார்

    கலைக்கோயில் மணி சத்தம் ஒலிச்சிக்கிட்டே இருக்கு அதாவது ஈஸ்வரியின் பாடல் மற்றும் மெல்லிசை மன்னர்களின் அபார இசை ஞானம்
    gkrishna

  7. #1794
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கார்த்திக் சார்..cee kay sir
    சமீபத்தில் மங்கையர் மலர் மாத இதழில் சரோஜாதேவி,கே ஆர் விஜயா,ஈஸ்வரி போன்றோரின் வாழ்கை அலைகள் தொடர் கட்டுரைகளாக வந்தன

    குமுதத்தில் கண்ணதாசன் சந்தித்தேன் சிந்தித்தேன் என்று ஒரு கட்டுரை நினைவு உண்டு
    மேலும் தமிழக முதல்வர் மாண்பிமிகு அம்மா அவர்கள் கூட 'மனம் திறந்து பேசுகிறேன் ' ஒரு 38 வாரம் எழுதிய நினைவு. பிறகு நின்று விட்டது
    Last edited by gkrishna; 3rd September 2014 at 07:26 PM.
    gkrishna

  8. #1795
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like


    On December 17, 1964 the country saw the birth of its first multi-screen theatre in Madras with the grand opening of Safire cineplex (Blue Diamond and Emerald) screening Cleopatra in deluxe colour. Safire screened English films exclusively, while Blue Diamond fashioned as an ‘art theatre’ presented movies of quality otherwise not shown in the city. Emerald on the other hand ran popular films in Hindi and Tamil.

    A fully air-conditioned 70mm picture house, Safire boasted of Bauer U2 projectors fitted to a 62’x 29’ screen, the largest ever in the country, and a seating capacity of an impressive 909 people in cushion chairs. Continuous shows, a feature popular in the West, was a practice the cineplex brought in vogue. This allowed one to walk in and out of the theatre at any time between 1 p.m. and 1.30 a.m. and watch the same film as many times as one wanted to. A hit among young students and couples, many are known to have spent entire days within the cineplex! The canteens, Nine Gems and Navaratna famous for their North Indian snacks were an added attraction drawing in crowds. Hailed as the ‘showpiece of the motion picture exhibition world’, the cineplex changed the experience of consuming cinema in the country.

    First Tamil movie-1965


  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #1796
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமை எஸ்வி சார் safire திரை அரங்கு பற்றிய ஆரம்ப செய்தி
    gkrishna

  11. #1797
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    அருமை எஸ்வி சார் safire திரை அரங்கு பற்றிய ஆரம்ப செய்தி

  12. Likes chinnakkannan, gkrishna liked this post
  13. #1798
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    "பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரெங்கநாதா......". ராஜாதேசிங்கு படத்தில் எம்.எல்.வி பாடியது.
    நாட்டிய பேரொளி பத்மினி படத்தில் பாடி ஆடுவார்.

    அதில் சில வரிகள்:
    "எங்கிருக்கிறான்? ஹரி எங்கிருக்கிறான்.." என்று ஹிரண்யன் கேட்க, "எங்குமிருப்பான். தூணில் இங்குமிருப்பான் என்று மகன் பிரகலாதன் சொல்ல, நரசிம்மமாகவே தோன்றி பத்மினி ஆடுவார் பாருங்கள்.

    ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே அர்த்தசாம நேரத்திலே அவதரித்தோனே..ஆயர்பாடி மேவிய யசோதை நந்தபாலா..."என்று கிருஷ்ணன் அவதரிக்க, கோபியரும் சேர்ந்துகொள்ள அருமையான நடனம்.

    நடன அமைப்பு யார் என்று நினைவில்லை.

    பத்து அவதாரங்களையும் சொல்லும் பாடலின் சந்தங்களை பல ராகங்களில் அமைத்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன். பாட்டைக் கேட்டு என்னென்ன ராகங்கள் என்று குருஜி ராகவேந்தர் அல்லது கோபால் ஜி பிரித்து மேயுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்

    http://www.youtube.com/embed/StcPEr1ZqL8

    மக்கள் திலகம்,லட்சிய நடிகர்,பானுமதி,பத்மினி,oak தேவர் பெரும் கூட்டம் நடித்த படம் 1960 வெளியீடு
    gkrishna

  14. Likes Richardsof liked this post
  15. #1799
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,

    நேற்றே சொல்ல மறந்து விட்டேன்

    தம்பி பொண்டாட்டி மிகவும் அற்புதமான படம். ஏனோ மக்கள் அதற்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கவில்லை என்பது வருத்தமே..

    நல்ல கதையம்சமுள்ள ஒரு படம்

    நீங்கள் சொன்னது போல் மிகச்சிறந்த படம், கதை என எல்லாமும் கொண்டது. கூட்டுக்குடும்பம் அதிலும் கூட எப்படி ஒருவருக்கொருவர் அன்பாகவும் அதே சமயம் நண்பர்கள் போலவும் நடப்பதாக காட்டியது அருமை
    விவேக் சமையல்காரனாக இருந்தாலும் இவர்களுடன் சேர்ந்து டி.வி பார்ப்பது கேலி செய்வது, வயதானாலும் கவிதாவை நாகேஷ் கொஞ்சுவது, தன்னுடன் வேலை செய்யும் பெண்ணையே தன் அண்ணனுக்கு பார்ப்பது, அண்ணியை கொண்டே தனக்கு பெண் பார்க்க சொல்வது என படு யதார்த்தம்.. அன்றைய சூழலில் அது கொஞ்சம் புதியதும் கூட.
    இப்படி ஒரு சூழலில் கண்டிப்ப்பான அப்பா(வழக்கறிஞர் ராஜேஷ்), கணவன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அம்மா சுலக்*ஷனா இப்படி ஒரு குடும்பத்திலுருந்து வரும் சுகன்யா இந்த வீட்டில் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள் அதானல் நடக்கும் சண்டைகள் என கதை நகரும் விதம் அழகு

    எப்பவுமே கணவனை மதிக்கும் சுலக்*ஷனா தன் மகள் வாழ்வு கெட்டுவிடக்கூடாது என்பதால் சொல்லும் உண்மை சுகன்யாவை குலை நடுங்கத்தான் வைக்கிறது.
    குழந்தைகள் பாட்டி தாத்தாவை பார்க்க வருவதும், அவர்களுடன் சேர்ந்து ஏறுமயில் ஏறி விளையாடும் பாடலை நவீனப்படுத்தி பாடுவது என அமர்க்களம்.

    மொத்தத்தில் அருமையாn் படம்

  16. #1800
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அக்கரை பச்சை 1974
    என் வெங்கடேஷ் இயக்கம் . இவர்தான் இளமை கோலம் பட இயக்கனர் என நினைவு (சுமன் ராதிகா நடித்து 79-80 கால கட்டத்தில் வெளிவந்த படம் )
    ஜி கே தர்மராஜன் தயாரிப்பு - யோகசித்ரா (நடிகர் திலகத்தின் இளைய தலைமுறை தயாரித்தவர் )

    ஜெய் ஜெயசித்ரா ரவி லக்ஷ்மி நாகேஷ் நடிப்பில் வெளிவந்த படம்
    மெல்லிசை மன்னர் இசை கண்ணதாசன் பாடல்கள்

    நல்ல வரவேற்பை பெற்ற படம் .

    ஜெயசித்ரா,லக்ஷ்மி இருவரும் சகோதரிகள் இவர்களின் சகோதரர் நாகேஷ் .ஜெயசித்ரா ஜெய்யையும் ,லக்ஷ்மி ரவியையும் காதலிப்பார்கள்
    ஜெய் மிக பெரிய பணக்காரர் .ரவி கதை எழுதும் ஏழை .
    ஜெயசித்ரா ஜெய் யை திருமணம் செய்து கொண்டு கணவர் தன்னுடன் நிறைய நேரம் கழிக்காமல் எப்போதும் பிசினஸ் தொழில் என்று அலைகிறார் .அந்த வாழ்க்கை பிடிக்காமல் லக்ஷ்மி போல் ஏழை வாழ்கைக்கு ஆசைபடுவார். லக்ஷ்மியோ ஏழை ரவியை கல்யாணம் செய்து கொண்டு ஜெயசித்ரா போல் பணக்கார வாழ்கைக்கு ஆசைபடுவார் . இறுதியில் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற உண்மையை உணர்ந்து இருவரும் தங்கள் சுய வாழ்கைக்கு திரும்புவார்கள் .

    பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்து இருக்கும்

    பாடகர் திலகம் சுசீலா குரல்களில் 'அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பார்க்க பிடிக்காது .அரசனை பற்றி தெரிந்சுகிட்டா புருஷனை நெஞ்சு மறக்காது .அது சரி சரி அது சரி சரி புரியுது புரியுது '

    பாலா ஈஸ்வரி குரல்களில் 'ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டம் எல்லாம் ஊரர்க்கு சொல்லுங்கள் இன்று '

    மெல்லிசை மன்னரின் அசரீரி பாடல் 'இக்கரைக்கு அக்கரை பச்சை '

    சுசீலா குரலில் 'பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே'
    மிக அருமையான பாடல்


    ஆஆஆ....
    பொதிகை மலை சந்தனமே
    பூஜை செய்யும் மந்திரமே
    பொதிகை மலை சந்தனமே
    பூஜை செய்யும் மந்திரமே
    மதுரை நகர் வீதியிலே
    வளைய வரும் இளங்க்காற்றே
    மதுரை நகர் வீதியிலே
    வளைய வரும் இளங்க்காற்றே

    பொதிகை மலை சந்தனேஸ்
    பூஜை செய்யும் மந்திரமே

    மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
    ஒரு மலர் நானாவேன்
    மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
    ஒரு மலர் நானாவேன்
    மங்க்கல சங்க்கொலி பொங்க்கிடும் இசையில் மணமகள் நானாவேன்
    மங்க்கல சங்க்கொலி பொங்க்கிடும் இசையில் மணமகள் நானாவேன்
    பஞ்ச்கணையில் உனைக் கொஞ்ச்குகையில் பசும் பாலினில் பழமாவேன்
    இசை பண்ணொலி காக்க நீ மென்மொழியில் தமிழ் வீணையைப் போலாவேன்

    பொதிகை மலை சந்தனமே
    பூஜை செய்யும் மந்திரமே

    கங்க்கையைப் போலொரு புண்ணிய நதியில் காதலில் நீ ஆட
    கங்க்கையைப் போலொரு புண்ணிய நதியில் காதலில் நீ ஆட
    கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும் காவியக் கவி பாட
    கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும் காவியக் கவி பாட
    கை வளையும் இரு மை விழியில் அந்தக் கலையினில் அரங்க்கேற
    இளம் கன்னி மகள் இவள் பொன்னழகு விளையாடட்டும்
    மெதுவாக

    பொதிகை மலை சந்தனமே
    பூஜை செய்யும் மந்திரமே
    மதுரை நகர் வீதியிலே
    வளைய வரும் இளங்க்காற்றே

    பொதிகை மலை சந்தனமே
    பூஜை செய்யும் மந்திரமே

    http://www.tamilsong.eu/tamil-album/...ai-pachai.html
    gkrishna

  17. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •