Page 20 of 54 FirstFirst ... 10181920212230 ... LastLast
Results 191 to 200 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #191
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா- King of Vibrating Veenai



    இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.





    வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி.திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார்.”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.



    கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன்.நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.





    சில எண்ணங்கள்:



    பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”

    இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
    பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.


    இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.
    பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
    இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
    நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம் ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது.
    வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை exploit செய்திருக்கிறார்
    இளையராஜாவின் வீணை நாதம்............


    பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.

    எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.




    வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.





    போவதற்கு முன்......

    Veenai Ennule.mp3


    துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
    Veenai Sugamoaayiram.mp3

    ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
    VeenaiKanmaniye.mp3

    தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
    சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
    Veenai Anthapurathill.mp3

    கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
    வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
    VeenaiNeervizhchi-KanneKalai.mp3

    இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
    மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

    இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
    VeenaiMalaipozhuthin.mp3

    பிறகு தன் இசையில் கற்பனை கலந்து fusion ஆகி வருகிறது.
    அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
    இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
    Veenai Kalainera katre.mp3



    நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
    இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
    Veenai-O Vasantha Raja.mp3

    சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
    VeenaiPoomaalai-Sindhu.mp3

    புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
    வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின் இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
    Veenai thamthananam.mp3

    கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
    VeenaiSugaRagame.mp3

    அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
    அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
    Veenai NathiyiladumKathal Oviyam.mp3

    இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
    Veenai Kathal Oviyam.mp3

    பழசிராஜா(2009)-குன்னத்தே
    நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம்.
    VeenaiPazhazi-Kundrathu.mp3

    இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
    VeenaiSridevienvazhvil.mp3

    மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
    0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
    VeenaiChinnachiru-Vaya.mp3

    எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
    Veenai- Alaipayuthe Kanna.mp3

    நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
    Veenai Dhooraathil.mp3

    வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
    நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.

    Veenai Indraikkuenintha.mp3


    ராஜபார்வை(1981)-அழகே அழகே
    VeenaiAzhake azhake.mp3

    வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை
    சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
    VeenaiVietnam Colony.mp3

    மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து
    எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
    Veenai-Sollaayo-Moga.mp3

    பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
    "அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.

    VeenaiThogaiIlamayil.mp3

    நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
    VeenaiPaadumVanam.mp3

    உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
    தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது.மாத்துங்கப்பா..!

    VeenaiThogaiIlamayil.mp3

    பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
    Veenai-KannanOru.mp3

    தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
    சின்னத் துளிகள் அருமை.
    Veenai- Vizhiyil Oru.mp3

    கோயில்புறா(1981) வேதம் நீ
    Veenai Vedham nee.mp3

    நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
    Veenai Neeorukathal.mp3

    காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
    Veenai NathiyiladumKathal Oviyam.mp3


    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
    Veena(MSV) Veenai Pesum.mp3


    டெயில் பீஸ்


    பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?

    Thanks to RA
    Last edited by poem; 8th September 2014 at 06:11 AM.

  2. Likes rajaramsgi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #192
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா King of Mellifluous Flute



    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் இளையராஜாவின் புகழ் பாடுங்களேன் என்று பாடத்தான் வேண்டும்.பிரபஞ்சத்தில் புல்லாங்குழலுக்கு இந்த அளவிற்கு திரை இசையில் அணி(அழகு) சேர்த்தவர் மேஸ்ட்ரோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.





    பிரமிக்கத்தக்க அளவில் புல்லாங்குழலுடன் விதவிதமாக லீலைப்புரிந்திருக்கிறார்.அதே பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய இசைக்கருவி புல்லாங்குழலாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

    குழல் பேசும் மொழிகள் பல.ஓவ்வொன்றும் வேறுபட்டவை.சில
    ரகசியமானது.சில புரியாதவை.ரசிக்கக்கூடியவை.வேற்று பிரபஞ்ச மொழிகளும் இதில் அடக்கம்.



    இந்த நாதங்கள் மனதில் ஊடுருவி கிளர்த்தும் காட்சிகள்/தீட்டும் ஓவியங்கள் விவரிக்க முடியாதவை.

    He is a dictionary for cinema light music flute.Magic Flute magician.

    ஒரு இசைக்கலைஞனின் உன்னதம் அவன் இசைக்கும் இசையில் மட்டுமில்லாது தன் வசப்படுத்திய(mastering instruments) இசைக்கருவிகளின் மேன்மைகளும் வெளிப்படவேண்டும் அவன் இசையில்.

    அந்த வகையில் All the musical instruments are at Ilaiyaraja"s delight.

    இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

    உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.

    போவதற்கு முன் இசைஞானியின் விதவிதமான வேணுகாணத்தில் நனைந்தபடி போவோம்.







    Flute-Ooranjaaram-Kakkaisirakinile.mp3

    Flute-Sollividu Vellinilave-Amaithi Padai.mp3

    Flute-Orampo Orampo.mp3

    Flute-Aur Ek Prem Kahani - Naina.mp3

    Flute-Gnan Gnan Paada-Poonthalir.mp3

    Flute-Shri Eadukondalaswami.mp3

    Flute-Unnaivazhathi Paadukiren-OhoKaalaiKuyilgale.mp3

    Flute-Madhuramari.mp3

    Flute-Sharadendupaadi-Kaliyoonjalu.mp3

    Flute-Pularkindrapozhuthu-Uliyin Oosai.mp3

    Flute-84-Oh Vasantha Raja-Neengal Kettavai.mp3

    Flute-Chinnakannan Azhaikiran-Kavikkuyil.mp3

    தன் புல்லாங்குழல் இசைப் பயணத்தை அன்னக்(குயில்)கிளியுடன்தான் ஆரம்பித்திருக்கிறார்.முன்னால் இசை மேதைகளிடமிருந்து வாங்கி அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

    முதல் கட்டம்:

    நதியைத் தேடிவந்த கடல்-1980- எங்கேயோ ஏதோ
    ராஜாவிற்கு முன் இசையில் புல்லாங்குழல் இந்தப் பாடலில் (இதுவும் ராஜாதான்)வருகிற மாதிரிதான் சம்பிரதாயமாக இருக்கும். சில விதிவிலக்குகளும் இருக்கிறது.

    ஜெயலலிதாவும் “படாபட்” ஜெயலட்சுமியும்

    Flute-NathiyaiThediVandhaKadal-Engeyo.mp3

    அடுத்தக் கட்டங்கள்முதலில் நாம் நனைந்ததும் அடுத்தக் கட்டம்தான்)

    இந்த மனதை வருடும் உணர்ச்சிகள் நவீன தொனியுடன் இசைக்கப்பட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.

    புல்லாங்குழல் -1
    அன்னக்கிளி-1976-அன்னக்கிளி உன்ன தேடுதே
    0.12-0.18க்குள் இரண்டு தடவை குழல் நாதம் வருகிறது.வருவதற்கு முன் இரண்டுக்கும் எப்படி ஒரு இசை பில்ட் அப் கொடுக்கிறார் பாருங்கள்!

    “தேடுதே” (0.24)என்று முடிக்கும் இடத்தில் மெலிதாக குழல் வருடிக்கொடுக்கிறது.
    Flute-Annakkili Unna Theduthu1.mp3

    புல்லாங்குழல்-2





    ஜானி-1980 -காற்றில் எந்தன் கீதம்
    Flute-KaatrilEnthan.mp3

    புல்லாங்குழல் -3
    ஹே ராம் - 2000-நீ பார்த்த பார்வை
    பின்னணியில் புல்லாங்குழல் சிறு சிறு விரகதாப அலையாக எழுவது அதீத கற்பனை.Out of the world flute interlude!
    Flute-Neepaartha-Hey Ram.mp3

    புல்லாங்குழல்-4
    சாதனை-1986 -ஓ வானம்பாடி
    இசைத்துளியை கவனமாக கேளுங்கள்.0.03 இருந்து இசைக்கப்படும் ஷெனாய் நாதத்தில் 0.08-0.09லும் மற்றும் 0.11-0.12லும் பு.குழல் இசைத் துளிகள் தொடுக்கப்படுகிறது.இது என் யூகம்.

    முக்கால் ஷெனாய்யும் கால் புல்லாங்குழலும் (இசை)கூட்டணி.
    Flute-Saadhanai-OhVaanampaadi.mp3

    புல்லாங்குழல்-5
    கடவுள்- 1997 -ஆதிசிவன் தோளில்
    குழலின் நாதத்தில் ஜீவகளை சொட்டுகிறது.
    Flute-Kadavul-AadhiSivan.mp3

    புல்லாங்குழல்-6
    மண்வாசனை -1983- பொத்திவச்ச மல்லிகமொட்டு
    பட்டாம்பூச்சிகள் படபடத்தபடி பூவில் தேனை உறிஞ்சுவது போல் ஒரு நாதம்.ஆச்சரியப்படுத்துகிறார்.பாரதிராஜா இந்த மாதிரி இசைத்துளிகளுக்கு காட்சி அமைக்கத் தடுமாறுவாராம்.

    வித்தியாசமான சின்னச் சின்ன அசட்டுத்தனம் இல்லாத hifi ஊதல்கள்.
    Flute-PothiVechcha.mp3

    புல்லாங்குழல்-7
    இது நம்ம பூமி -1992 - ஆறடி சுவருதான்
    0.17/0.21/0.25/0.29ல் நாதம் உச்சஸ்தாயில் போய் நம்மிடம் பேசுகிறது. ஆனால் உச்சஸ்தாயில் வேறு ஒரு இசைக்கருவியும் கலவையாக வாசிக்கப்படுகிறது என்பது என் யூகம்.உச்சஸ்தாயில் அதன் ஜீவனே மாறுகிறது.
    Flute-AaradiChuvarthan.mp3

    புல்லாங்குழல்-8
    நிழல்கள் - 1980-பூங்கதவே தாழ்திறவாய்
    0.11 பிறகு மென்மையான புல்லாங்குழல் படபடக்கப்போகிறது என்பதை யூகிப்பது கஷ்டம்.
    Flute-PoongathaveThazh.mp3

    புல்லாங்குழல்-9
    ருசிகண்ட பூனை-1980 - என் நெஞ்சம் உன்னோடு
    Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3



    புல்லாங்குழல்-10
    தம்பி பொண்டாட்டி -1992 - என் எண்ணம்
    Mind blowing romantic musical Flute! எவ்வளவு வர்ணங்கள் காட்டுகிறார் ராஜா.
    Flute-Un Ennam-Thampi Ponndatti.mp3

    புல்லாங்குழல்-11
    தீர்த்தக்கரையினிலே -1987- விழியில் ஒரு கவிதை படித்தேன்.
    அடுத்தக் கட்டம் என்பதற்கு பல பல உதாரணங்களில் ஒன்று. கதம்ப இசையில் குழல் சிறிதாக ஒத்தப்பட்டு அலங்காரப்படுத்தப்படுகிறது.

    0.03-0.10 பிரமிக்க வைக்கிறார்.real stunner!தேஷ் ராக சுரங்களும் தெறிக்கிறது.
    Flute-Vizhiyil Oru Kavithai-Theerthakkaraiyinile.mp3


    கிட்டத்தட்ட முதல் 15 வருட மேஸ்ட்ரோவின் முக்கால்வாசிப் பாடல்களில் வயலினுக்கு அடுத்து புல்லாங்குழல் நாதத்தில் தடுக்கி விழுவீர்கள்.இதில்நிறைய கிராமம் சார்ந்தப் படங்கள்.

    மேஸ்ட்ரோவின் இசையின் எப்பவுமே ஆச்சரியப்படுவது :-
    ஒரு இசையிழையும் அதனுடன் துரிதகதியில் இன்னொரு இசையிழை சேரும்போது அசட்டுத்தனம் இல்லாமல் இணைவது... இசைவது...
    அபஸ்வரம் தட்டாமல் இணைவது
    ”ஆத்மா”(soul) கலந்து இந்த இணைவதும் இசைவதும்

    வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் ஒரு பு.குழல் நாதம்:
    அஜந்தா-2007 -தூரிகை இன்றி.
    Flute-Thoorigaiindri-Ajantha.mp3

    முதல் மரியாதை-1985:
    மேஸ்ட்ரோ புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்.அத்தனை புல்லாங்குழல் நாதங்கள். தமிழ்நாடு மறக்கவே முடியாது இந்தப் புல்லாங்குழல் நாதங்களை.




    ராசாவே வருத்தமா! கூ கூ!

    நவீனப்படுத்தப்பட்ட கிராமிய சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.குழலின் துளைகளினிடையே கசியும் உணர்ச்சிகள் விவரிக்க முடியாதவை.

    Flute-Antha Nilavathan-Mudhal Mariyathai.mp3

    Flute-Vettiveru Vaasam-Mudhal Mariyathai.mp3

    Flute-Mudhal Mariyathai-PoongatruThirumbuma.mp3

    பிரமிக்கத்தக்க விஷயம்:

    63 வகையான புல்லாங்குழல் இடையிசைகள்(interludes) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை.back to back xeroxம் இல்லை. It is a amazing achievement!

    காரணம்:
    பல வித கலவைகளில் (combinations) இசை கோர்க்கப்படுகிறது.

    எப்படி சாத்தியமாகிறது இந்த கலவைகள்?

    இசைக்கருவிகளைப் பற்றிய நுண்ணிய அறிவு
    நோட்ஸ் எழுதும் வேகம்/திறமை
    வெஸ்டர்ன் கிளாசிகல்/கர்நாடக இசை/கிராமியம்,இந்துஸ்தானி.. எல்லாம் விரல் நுனியில்
    மாற்றிப்போடும் தாளங்கள்/இசைக்கருவிகள்
    permutation & combination
    மாத்தி யோசி கான்செப்ட்
    காட்சியமைப்பு
    சில வித்தியாசமான இயக்குனர்கள்
    அனுபவம்
    டூயட்டில் புல்லாங்குழல்:
    சின்னத்தாயி-1992- நா ஏரிக்கரைமேலிருந்து.
    மனதுக்கு நெருக்கமான பாட்டு.
    Flute-Naan Eraikkaraimel-Chinnathayee.mp3

    கோபுர வாசலிலே-1991- காதல் கவிதைகள்
    அமர்க்களமான அரேஞ்மெண்ட்.0.46-0.47 ல் கலக்கல்.054-1.18 பரந்த வானில் ஏகாந்தமாக கூவிக்கொண்டுச் செல்லும் ஒற்றைப்பறவையின் மொழி.
    Flute-Kadhalkavithaigal-Gopura Vaasalile.mp3

    ஆராதனை-1981 - ஒரு குங்கும செங்கமலம்
    காட்டில் இந்த இசையை இசைத்தால் பதிலுக்கு சத்தியமாக கூவத்தான் செய்யும் பெயர் தெரியாத பறவைகள்.
    Flute-Oru Kunguma-Aaradhnai.mp3

    கனிவு உணர்ச்சி:
    உதிரிப்பூக்கள்-1979-அழகிய கண்ணே
    Flute-UthiriPookal-AzhagiyaKanne.mp3

    கண்ணே கலைமானே-1988-நீர் விழ்ச்சி தீமூட்டுதே
    Flute-Neervizhchi-Kanne Kalaimane.mp3

    வித்தியாசமான உணர்ச்சிகள் வித்தியாசமான நாதங்களில்:

    மோகமுள்-1995-கமலம் பாத கமலம்
    Flute-KamalamPaadha-Mogamull.mp3

    பாக்யாதேவதா - 2009-அல்லிப்பூவே மல்லிப்பூவே
    Flute-Allipoove-Bhagayadevatha.mp3

    மணிப்பூர் மாமியார்-1982 -ஆனந்த தேன்காற்று
    Flute-Aanandhathenkaatru-ManipurMamiyar.mp3

    வருஷம்-16 -பூ பூக்கும் மாசம்
    ராஜாவின் மாஸ்டர் பீஸ்.வீணையும் புல்லாங்குழலும் தனியாக உரையாடிபடியே கடைசியில் இணைவது அருமை.Awesome maestro! He is music magician.இந்த மாதிரி இசைக்கோர்ப்புகள் அனாசியமாகப் போடுகிறார்.
    Flute-Varusham-16-PooPookkum.mp3

    முரட்டுக்காளை-1980- மாமன் மச்சான்
    தாளம் புல்லாங்குழலை தோற்கடிக்கிறது.
    Flute-MamanMachan-Murattu Kalai.mp3

    அரண்மனைக்கிளி-1993-ராசாவே உன்னை விட


    ”அன்னக்கிளி உன்ன தேடுதே”வின் 1993 வெர்ஷன். ரெண்டுமே ஜானகிதான்.0.35-0.54 அட்டகாசம்.இந்தப் பாட்டின் மெட்டை மிகவும் ரசிப்பவன்.
    Flute-Raasave Unnai-Aranmanaikili.mp3

    சிங்காரவேலன் - 1992 -தூது செல்வதாரடி.
    புல்லாங்குழலோடு தபலாவும் தட்டப்படும் இடம் 0.10 அருமை ரம்யம்.
    Flute-ThoodhuSelvadharadi-Singaravelan.mp3

    என்றும் அன்புடன் - 1992 - நிலவு நிலவு வந்தது

    Flute-Nilavuvandhadhu-Endrum Anbudan.mp3

    மெல்லத் திறந்தது கதவு -1986 - குழலூதும் கண்ணனுக்கு
    Flute-KuzhaloothumKannanukku.mp3

    மோகமுள்-1995-சொல்லாயோ
    Flute-Sollayoo-Mogamull.mp3



    Flute-Sevanthipoomudicha-16Vayathinile.mp3

    Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3

    Flute-SalangaiOli-VaanPole.mp3

    Flute-Bharathi-EthilumIngu.mp3

    Flute-ThendraNeePesu-Kadavul Amaitha Medai.mp3

    Flute-SandhyavukkuVirinja-Manjum Kulirumi.mp3

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979-என்னுள்ளில் எங்கோ
    இந்தப்பாட்டின் ஒரு துளியும் அதன் உணர்ச்சிகளும் மனதைக் பிசையக் கூடியது.b>0.36-0.55 இரு புல்லாங்குழல் பேசும் மொழி ரகசியமானவை.அதன் அந்தரங்கம் புனிதமானவை.

    இளையராஜாவின் முதல் ஐந்து பாடல்களில் இது கட்டாயம் இடம் பிடிக்கும்.


    Flute-Ennullilengo-Rosappu Ravikaikari.mp3

    மெட்டி-1982-சந்தக்கவிகள் பாடிடும்
    புல்லாங்குழலுக்கு இணையாக கோரஸ் வயலின்கள் டால்பின் மீன்கள் போல துள்ளி விளையாடுகின்றன.
    Flute-Sandhakavigal-Metti.mp3

    Flute-KalaKalakkum-Eramana Rojave.mp3

    கிளாசிகல் ரொம்ப ஸ்டைலாக(மல்லுவேட்டி).
    Flute-MalluvettiMinor-Kathiruntha Malli.mp3

    செந்தாழம் பூவில் வந்தாடும் புல்லாங்குழல் நாதங்கள்.
    Flute-Senthazham Poovil-Mullum Malarum.mp3

    வித்தியாசமான சின்னச் சின்ன நாதங்கள்:-

    லேடிஸ் டெய்லர்-1986(தெலுங்கு)-பொரப்பட்டித்திதி
    Flute-Ladies Tailor-Porapaatidhi.mp3

    ஆ ராத்திரி -1983-நீலிமதன்(மலையாளம்)
    Flute-Aa Rarathri(movie)-Ee Neelimathan.mp3

    மகளிர் மட்டும்-1994 கறவ மாடு மூணு
    Flute-KaravaiMaadu-Magalirmattum.mp3


    மரகதவீணை-1986 -மரகதவீணை இசைக்கும்
    Flute-MaragathaVeenai.mp3

    உள்ளம் கவர்ந்த கள்வன் - 1988
    Flute-Ullam Kavarntha Kalvan-Naadirukkum Nilamai.mp3

    குணா-1991 - உன்னை நானறிவேன்
    Flute-Unnainanariven-Guna.mp3

    குருசிஷ்யன் -1988 - உத்தமபுத்திரி நானு
    Flute-Uthama Puthiri-GuruShishyan.mp3

    உதிரிப்பூக்கள்-1979-ஹேய் இந்த பூங்காற்று
    Flute-UthiriPookkal-HeyIndhaPoonkaatru.mp3

    கோடை மழை-1986 -துப்பாக்கி கையிலெடுத்து
    Flute-KodaiMazhai-ThupakiKayil.mp3

    என் அருகில் நீ இருந்தால் - 1991
    Flute-Udhayam Neeye-En Arugil Nee.mp3


    டெயில் பீஸ்:
    (30-03-11)ஆ.விகடன் கேள்வி:“ மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?”






    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பதில்: “ ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு “மாஸ்ட்ரோ”னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடறோம்!’


    Thanks to RA
    Last edited by poem; 8th September 2014 at 06:12 AM.

  5. #193
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா- King of Heavenly Hummings"




    சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில் சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின் பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

    இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

    இது தேவதைகளின் மொழி.பாடலை உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

    உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.


    ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.

    HUmm_AnnaiUnnaThed.mp3


    ”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
    முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

    HUmm_RasaveUnnaNambi.mp3

    ”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
    ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

    ”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
    Humm_manjalnilavukku.mp3

    “ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன் பெண் ஹம்மிங் சூப்பர்.

    ”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
    Humm-EnIniya Pon.mp3

    கிடாரைத் தொடர்ந்து தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

    ”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
    Humm-Rathiriyil Poo.mp3

    இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

    "பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
    Humm_Poovilvandu.mp3

    பாலுவின் ஆரம்ப மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?








    கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

    Humm - Neepaartha.mp3

    ”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
    முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில் ஏதோ பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது. பிரமிப்பு.

    பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

    "செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

    Humm_SenthaPoovil.mp3

    யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

    ( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

    "காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
    Humm-KalidasanKanna.mp3
    ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

    ”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

    Humm-Mettimetti.mp3
    அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும் வித்தியாசமான ஹம்மிங்

    "ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
    எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
    24Humm_anandthen.mp3


    "என்னுள்ளே”-1993-வள்ளி Heavenly humming
    Humm-ennulle ennule.mp3

    "ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
    Humm_OruRagam1.mp3

    வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில் ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

    "தெய்வீக ராகம்”-1980-உல்லாசப்பறவைகள்

    (ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

    0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

    ”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

    ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

    3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

    ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.



    ”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
    ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
    I love you Jency!
    Humm-AayiramMalargale.mp3

    ”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
    Humm-Nan oru pon.mp3

    இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

    ”ABC நீ வாசி”-1984-ஒரு கைதியின் டைரி
    ”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ” பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள் மாறி மாறி ஹம் செய்வார்கள்.

    ஆரம்ப இசையை கவனியுங்கள் இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

    ”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
    Humm_KeladiKancom.mp3

    எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

    இன்னும் பல அவற்றில் சில
    1.தம் தம் தன்னம்
    2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
    3.பொன்வானம் பன்னீர்
    4.எனதுவிழியில்
    5.காற்றில் எந்தன் கீதம்


    Thanks to RA

  6. #194
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜாவின் -நாத உரையாடல்கள்



    மேஸ்ட்ரோவின் பாடல்கள் ஆரம்பம் முதல் முடியும் வரை மெலடியான வர்ணஜாலம்தான்.மிக முக்கியமானது இசைக்கருவிகளுக்குள் நடக்கும் இனிமையான நாத உரையாடல்கள். “கலகல” வென்று இவைகளின் இடையில் நடக்கும் பல வித ரசங்கள் படர்ந்த உரையாடல்கள் மனதை வருடும். Full of emotions and soul stirring!

    சின்ன சின்ன நாதங்கள் ஆச்சரியமாக சந்தில் சிந்து பாடி கண்ணாமூச்சி ஆடும்.எலக்ட்ரானிக்சில் எழுப்பப்பட்ட செயற்கையான நாதம் கிடையாது.ஆதமார்த்தமாக பார்த்துப்பார்த்து இயற்கை இசைக்கருவிகளில் மீட்டெடுத்தது.உரையாடல்களில் மியூசிகல் சேர் இசை போல் அமெச்சூர் நெடி அடிக்காது.

    இசைக்கோர்ப்புகள் இணையும் இடங்களில் அசட்டுத்தனம் இருக்காது.

    எண்பதில் வந்த பாடல்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ஏன்? எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்(?).

    சில உரையாடல்கள் eternal bliss!

    புதுப்பட்டி பொன்னுத்தாயி
    ஊர் அடங்கும் சாமத்திலே (உமாரமணன்-ஸ்வர்ணலதா)

    இதமான தாளக்கட்டு..”யாரு அது யாரு யாரு” ஸ்வர்ணா கேட்க பதிலாக உமாவின் ஹம்மிங் அருமை.1.05 - 1.16 வரை ஹிந்தோள சாயலில் புல்லாங்குழலும் வயலினும்(செல்லோ?)நடத்தும் பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கிறது.
    அமானுஷ்யமாக வரும் வயலினின் மேற்கத்திய நாதம் வித்தியாசம்.

    தாளத்தின் ரிதத்திலேயே ”நீ தந்த பட்டுச் சேலை” என்று உமா முதல் சரண வரிகளை எடுப்பது அருமை.

    கிழே படத்தில் இருக்கும் காயத்ரி ஆரம்பகாலத்தில் ராஜாவுக்கு வீணை வாசித்தவர். ..!ராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமே!)







    படம்:பூந்தளிர்
    பாடல்-ஞான் ஞான் பாடனும் ( ஜென்சி)

    பாடல் 1979.இன்னும் கமகமவென இப்போது பறித்த கறிவேப்பிலை மணம்.இது ஒரு வித்தியாசமான கலர்புல் கம்போசிங்.ஜென்சியின் இளசான ரம்மியமான குரல்.

    மலையாளமும் தமிழும் கலந்து வருவது ஒரு வசீகரம்.இந்த பாட்டில்இசை நாதங்கள் பூத்துக்குலுங்கியபடிதொங்கிக்கொண்டிருக்கும்.

    ஆரம்பமே ரொமாண்டிக் தபலா.. 00.00-0.23 முதல் 0.10ல் வயலினில் அழகு படுத்தி 0.23ல் பாடகி பல்லவி வரும் என்று நினைப்போம் ஆனால் 0.24ல் வேறு ஒரு நாதத்தில் (synth)ஒரு பைனல் டச் கொடுத்துவிட்டுதான் பல்லவியில் சேச்சி பாட்டு படிக்கும் .அடுத்து 1.10 -1.39 வர்ணஜால உரையாடலைக் கவனியுங்கள்.அதுவும் 1.31 -1.36 புல்லாங்குழல் - வயலின் உரையாடல் சுகந்தம்.அடுத்த பேச்சு வார்த்தை 2.31 -3.07








    படம்:புதிய வார்ப்புகள்
    பாடல்-தம்தனனம் (ஜென்சி/வசந்தா)







    பாடகி வசந்தா(”மணமாலை வரும்..! சுப வேளை வரும்..!மண நாள் திருநாள்)





    சின்ன சின்ன சந்தங்களில் ஒரு இனிமை கம்போசிங்.

    முதலில் வீணையில் மீட்டெடுத்த ராகம் ஷண்முகப்ரியாவின் நாதங்கள் அலையாக அலையாக வரும்.இதில் குரல் உரையாடல்கள் ஒன்றை ஒன்று இனிமையாக பின்னியபடி வரும்.இதில் ஜென்சியின் மூக்கிசை சூப்பர்அடுத்து முதல் 1.08 -1.44 வரை ”ஒரு ரூம் போட்டு” நாதங்களின் வயலின்,வீணை,புல்லாங்குழல்,synth,பெலஸ்,ஹம்மிங்கலந்த ுரையாடலைகவனியுங்கள்.ஆச்சரியமாக மேற்கத்திய talkக்கும் வரும்.

    தெலுங்கச்சி(வசந்தா) vs மலையாளச்சி (ஜென்சி)உச்சரிப்பையும் கவனியுங்கள்.

    படம் -மோகமுள்பாடல் :சொல்லாயோ வாய் திறந்து -ஜானகி

    ”தம்தனனம்” மெட்டும் இந்தப் பாட்டின் மெட்டும் ஒரே சாயல் அடிக்கும்.காரணம் ரெண்டுமே ஷண்முகப்பிரியா ராகத்தில் கம்போஸ் செய்யப்பட்டது.”தம்தனன”பாட்டின் எமோஷன் ஒரு விதம்.

    இது ஒருசோகஎமோஷன்.எப்படி?.அதான் மேஸ்ட்ரோ.

    இந்த ராகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்ககூடியது.பிரித்து மேயலாம்?1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்?)யின் நாதத்திற்கு எக்கோவாக வயலின் நடுவே புல்லாங்குழலின் சந்தில் சிந்து. உருக்கும் பாடல் வரிகள்.

    படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.


    பாடம்: நீங்கள் கேட்டவை(ஜானகி/எஸ்பிபி)
    ஒ.. வசந்த ராஜா!

    ஆரம்பமே ராஜா கம்பீர ட்ரம்சில் குமுறல்.1.03 - 1.35 இந்திய இசையில்மிருதங்கம்,சிந்தசை,புல்லாங்குழல்,வயலின ்,
    வீணை (மிருதங்கம் -புல்லாங்குழல் ஸ்டைல் உரையாடல் அட்டகாசம்)உரையாடல்.

    2.39 -3.14 மேற்கத்திய இசையில் உரையாடல்.ஒரு இடத்தில் நின்னு பேசுவார்.ஓ ... ராஜா சூப்பர்!


    படம்: தம்பிக்கு எந்த ஊரு
    பாடல்:என் வாழ்விலே வரும் அன்பே

    0.00 -0.44 பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்!

    படம்:தீர்த்தக்கரையினிலே
    பாட்டு::விழியில் ஒரு கவிதை மனோ-சிதரா


    ஆரம்பமே ஷெனாயின் நாதக் கிளர்ச்சியில் வயலினின் உரையாடல் பிறகு கிடார்....1.20 -1-29 என்ன ஒரு மங்களகரமான இசை சங்கமம்? stunning! தேஷ் ராகத்தின் ஸ்வர சாயல்கள் (?) தெறித்தப்படி .........

    அடுத்த இசை அதிர்ச்சி அண்ட் கவுண்டர் பாயிண்ட்ஸ் 2.40 - 3.03 .

    தபலா அசத்தல்.சித்ரா குரல் இனிமையோ இனிமை.! அட்டகாசம்.

    நெருடல் “இத”ளி”ல் ஒரு அமுதம் குடித்தேன் - மனோ

    சோகத்திற்கு ஷெனாய். ஆனால் இதில் மகிழ்ச்சிக்கு வாசிக்கப்பட்டிருக்கும். தல! லொள்ளு ஜாஸ்தி!இது மாதிரி நிறைய லொள்ளு பண்ணுவார்.

    ஹெட்போனில் கேட்டால் வேறு சில கருவிகளின் நாதங்களும் கேட்கலாம்.










    இவர்தான் அருண்மொழி பாடுவார்.ராஜாவுக்கு புல்லாங்குழல் வாசிப்பார்


    காதல் ஓவியம்

    பூவில் வண்டு - SPB

    முதலில் ரம்மியமான ஹம்மிங்கைத் தொடர்ந்து மோகன சாயலில் 0.27.....................0.56 ?.அடுத்து 2.56 ...3.10 ?
    Last edited by poem; 10th September 2014 at 09:07 AM.

  7. #195
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Poem அவர்களே! உங்களது பதிவுகள் ( நேற்றிலிருந்து இன்றுவரையிலான) அனைத்தையும் "நிகரற்றவர் ராஜா" திரியில் பதியச் செய்தால் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். ராஜாவின் இசை சிரப்பம்சங்க்களுக்கான திரி அது. அதில் ஏற்றுங்கள் உங்களில் அகல் விளக்குகளை. அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். பதிவுகள் அனைத்தும் சிறப்பு!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. Likes Russellhaj liked this post
  9. #196
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Venkkiram, I will do it. but, Please give me some time.

  10. #197
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    போயம், மகேந்திரன் பற்றிய தங்கள் தகவலை தான்டி வெளியில் வர இயலாத படி செய்து விட்டீர்கள்.மீன்டும் மின்டும் படித்து கொன்டிருக்கிறேன். இன்னும் யாழ், வீனை, குழ்ல் எல்லாம் இருக்கிறது, இந்த வாரம் இதிலே ஒடி விடும். நன்றி, நன்றி.


    அசோக் குமார் தான் பாவம், உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார், ராஜா சார் இசையை அவர் விரும்பி கேட்பதாக அவர் மகன் சொல்லி இருந்தார்...எனக்கும் அது வேன்டும், மரன படுக்கையிலும் அவர் இசையை மறக்காத வரம் வேன்டும்.

  11. Likes Russellhaj liked this post
  12. #198
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. #199
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Gangai amarans marriage - rare pic





  14. #200
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sitting in the crowd.



    Last edited by poem; 10th September 2014 at 08:34 AM.

Page 20 of 54 FirstFirst ... 10181920212230 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •