Page 253 of 401 FirstFirst ... 153203243251252253254255263303353 ... LastLast
Results 2,521 to 2,530 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2521
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    ரமா சகோதரி லதா முகம் நினைவில் இல்லை
    படம் கிடைத்தால் போடவும்

    என் உயிர் தோழன் தென்னவன்(Ramesh Duraisamy) -விக்ரம் ஜெமினியின் கை கதாபாத்திரம் நடித்த நினைவு

    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2522
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அனுராதா .. ஜோதி மீனா (ச்ச் அம்மா பொண்ணுன்னு சொல்லவந்தேன்)

    சக்ர பாணி புத்திசாலி..அவனுக்கு வாழ்க்கையில் பிடித்தது இரண்டே இரண்டு.. ஒன்று பணம்..இரண்டாவதுஅவனது அருமைப் பெண் பாலா எனப் படும் பாலா திரிபுரசுந்தரி.. இந்தப்பணத்திற்காக அவன் செயல் படும் வழிமுறைகள் வியாபாரத் தந்திரங்கள் எல்லாம் க்ரூயல் தான் இருந்தாலும் சொத்த்து சொத்து மேலும் சொத்து செல்வம் செல்வம் மேலும் செல்வம் என அவனை அடைந்தன.. ஒன்றைத் தவிர ..தூக்கம்..பயபுள்ளக்கு தூக்கமே வராது ராத்திரியிலும்.

    இதற்காகவே அலுவலகம் பை நைட்டும் அவனுக்கு உண்டு..

    பாலா..தேனும் வெனிலா ஐஸ்க்ரீமும்கலந்த கலர்..குளிர்ச்சி தெரிய வேண்டுமா உச்சரித்துப்பாருங்கள்..பா..லா.. உதடு குளிரும்..அழகி ஒரே பெண்..பாலும் தெளிதேனும்பாகும் பருப்புமாய் நாலும் கலந்து உண்டு உடற்பயிற்சியெல்லாம்செய்ததால் அழகான உடல்..படிப்பும் கூட..

    சந்தர்ப்ப வசத்தில் தன் அப்பா ஒரு சிலரை வஞ்சித்தது தெரியவர அவர்களின் குடும்பத்துக்கே சென்று தன்னைஅடையாளம் காட்டாமல் ஒரு வேலைக்காரி போல் இருந்து அந்த க் குடும்பத்தை முன்னேற்றி பின் தன் அத்தை பையனான மோகனையே திருமணம் செய்துகொள்ளப் போகுமுன்..

    (சொல்ல விட்டுவிட்டேனே..தந்தை செய்த பாபங்களுக்கு இவள் பிராயச் சித்தம்செய்ய ஆரம்பிக்கும் போதே சக்ரபாணிக்கு நன்கு தூக்கம் வருகிறது..!)

    வில்லனால் குண்டடி பட்டு விட மூச்சுக்காற்றுக்காகப் போராடி அவளது உயிருக்காக வைத்தியர்கள் போராட..சக்ரபாணிக்குள் நடக்குது மனப் போராட்டம்... தானாகவே புலம்புகிறான்..தெரிந்த கடவுள் எல்லாம் பணம் பணம் தான்.. நிஜமாகவே கடவுளை நாடிக் கோவிலுக்குப் போகிறான்.புலம்புகிறான்.. ஓ காட் என் உயிரை எடுத்துக்கோ என் பொண்ணக் காப்பாத்து எனச் சொல்லி வே..க..மா..கக்
    காரை ஓட்டிச் சென்று உச்சியிலிருந்து விழ...

    க்ளைமாக்ஸ்..சக்ரபாணிக்குக் கால் போகிறது..பாலா உயிர் பிழைக்கிறாள்..மோகனைக் கல்யாணம்செய்து கொள்கிறாள்..

    இது ஜாவர் சீதாராமனின் பணம் பெண் பாசம் என்ற நாவலின் சுருக்க்க்கம்.. வெகு நன்றாயிருக்கும்..பைண்ட் புத்தகமாய்ப் படித்த நினைவு.. படமாய் முத்துராமன் ஒரு லட்சியம் போல எடுத்து நல்ல நடிகர்களைத் தேர்வு செய்யாததால்.. மோகனாய் ஸ்டெப் கட்டிங் விஜயன், பாலாவாய் கருந்திராட்சை சரிதா என ஒருவித அலட்சியத்தில் எடுத்ததாலோ என்னவோ( நான்படம் பார்க்கவில்லை..கோபம்) படம் ஃபெய்லியர் என நினைக்கிறேன்..

    இந்தப் பணம் பகை பாசமென்று எந்தப் படமும் வந்தது போல் நினைவில்லை வாசு சார்..மே.பி..ஏதாவது தெலுகு டப் படமாய் இருக்கலாம்

  4. #2523
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சி கே sir

    ஜோதி மீனா ஜோதிலட்சுமி பொண்ணு இல்லையோ
    அனுராதா பொண்ணு அபிநயஸ்ரீ இல்லையோ

    பணம் பகை பாசம் அப்படின்னு ஒரு படம் 1980-81 காலகட்டம்
    நம்ம தங்கபதக்கம் ஸ்ரீகாந்த் ,துணிவே துணை ஜெயப்ரபா நடிக்க
    பூஜை போட்ட படம் . வாசு சார் போட்ட அந்த பாட்டு
    'எனக்கு பிடித்த ரோஜா பூவை எடுத்து செல்லவா '
    பாலா சுசீலா குரல்களில் ஒரு சூப்பர் மெலடி
    இசை ஷங்கர் கணேஷ்
    இந்த படம் வந்த நினைவும் இல்லை
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #2524
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓஹ். க்ருஷ்ணா ஜி..என்னவொரு வரலாற்றுப் பிழை செய்துவிட்டேன்..ஜோ.ல ஜோ மீ தான் கரெக்ட்.

    பணம் பகை பாசம் பற்றிய தகவலுக்கு நன்றி.. ஸ்ரீகாந்தக் கேட்டுப் பார்க்கணும்
    Last edited by chinnakkannan; 17th September 2014 at 04:14 PM.

  7. #2525
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  8. Likes chinnakkannan liked this post
  9. #2526
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்கள் தான் திரு சிவகுமார் அவர்கள் நடிகர் ஆக வருவதற்கு உதவிகள் செய்ததாக அவரது 'இது ராஜபாட்டை அல்ல ' புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், குங்குமம் போன்ற படங்களைத் தயாரித்த மோகனகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி காலமானார்.

    இவருடைய தந்தையார் பிரபல நீதிபதியும், பிரபாத் திரையங்கின் மேலளாருமான திரு கண்ணபிரான் ஆவார். அவரே பிரபல மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்த நிறுவனம் 1951 ஆம் ஆண்டுமுதல் கட் அவுட் மற்றும் பேனர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.
    தமிழ்த்திரையின் மிகப்பழமையான இந்நிறுவனம், மிக உயராமான கட் அவுட்களை உருவாக்கி சாதனை படைத்தது. வணங்காமுடி திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 80 அடி உயர கட் அவுட் பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.எலிசபெத் அரசி இந்தியா வந்த போது இவர் வைத்த பல கட் அவுட்கள் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அரசியே தனியே அழைத்து நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
    காந்தி திரைப்படத்திற்கான இவரின் உழைப்பு உலகெங்கிலும் பலரின் பாரட்டுதலைப்பெற்றது. இந்திய ஒவியத்தின் தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டவர் திரு.மோகன். நடிகர் சிவகுமார் உட்பல பல ஓவியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர், நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி பல விருதுகளை வென்றிருக்கிறார்.இவருக்கு இந்திய அரசு விகாஸ் ரத்னா விருது வழங்கி சிற்ப்பித்தது.

    Last edited by gkrishna; 17th September 2014 at 05:18 PM.
    gkrishna

  10. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  11. #2527
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுஜி

    ரிக்வெஸ்ட்.

    பாலா, சுசீலா பின்னியெடுக்கும்

    'எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
    எடுத்துச் செல்லலாமா'

    பாடல் 'பணம் பெண் பாசம்' படமா?

    அல்லது

    'பணம் பகை பாசம்' படமா?

    அல்லது இரண்டும் ஒன்றா?

    மண்டை காய்கிறது. தயவு செய்து வீடியோ ஒரிஜினல் கிடைக்குமா?
    பணம் பகை பாசம் படம் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை.
    சிலோன் ரேடியோவில் இந்தப் பாடல் சில காலம் "தர்மங்கள் சிரிக்கின்றன" என்ற படத்தில்
    இடம் பெற்றதாக சொல்லி ஒலிபரப்பப் பட்டதாக நினைவு.

    பணம் பெண் பாசம் படத்தில் முத்துராமன், வடிவுக்கரசி, விஜயன், சரிதா நடிக்க ( ஒரு வீடியோ பாட்டு கூட சிக்கவில்லை )
    "லக்ஷ்மி வந்தாள்", "கலைமாமணியே","அன்போடும் பண்போடும்","அழகிய முகம் முழுமை நிலா ( படத்தில் பார்த்ததாக நினைவில்லை ) ஆகிய பாடல்கள் இருந்தன.

    என்னைக்காவது வலைத் தளத்தில் மாட்டிக்காமல் போகாது.

  12. #2528
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    கவிஞர் கண்ணதாசன் இருபொருள் கொண்ட பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்களில் இலக்கிய நயமும் இருக்கும்.

    "பாசமலர்' படத்தில் திருமணத்திற்குச் செல்லும் ஒரு பெண்ணின் மனநிலையை சொல்லுவது போல் கவியரசர் ஒரு பாடலில் எழுதியிருந்தார். பாடல் படமாக்கப்பட்ட பின்னர் தணிக்கைக்குச் சென்றது.

    "மலராத பெண்மை

    மலரும்

    முன்பு தெரியாத உண்மை

    தெரியும்'


    படத்தில் பாடப்பெற்ற இந்தப்பாடல் வரிகளைக்கேட்ட தணிக்கை அதிகாரி சாஸ்திரி, ""இந்தப்

    பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி இந்த வரியின் உள் அர்த்தத்தை பார்த்தால் வெட்டத் தோன்றுகிறது. ஆனால் இதன் அழகைப் பார்த்தால் வெட்டாமல் விட்டுவிடத் தோன்றுகிறது'' என்றாராம்.

    சபீதாஜோசப் எழுதிய "கண்ணதாசன் 100' நூலிலிருந்து.

    தேங்க்ஸ் டு தினமணி கதிர் 07/09/14
    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #2529
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    என்னைக்காவது வலைத் தளத்தில் மாட்டிக்காமல் போகாது.
    சூப்பர் reply மது ஜி
    gkrishna

  15. #2530
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கண்ணதாசனைப் பற்றிக் கிளறி விடாதீங்க கிருஷ்ணா ஜி.. டயம் இல்லை இப்போ

    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்ல் சென்சாரே வெட்டி விட்டிருக்காங்க சில வரிகளை.படத்தில் அவை இருக்காது..இருந்தாலும் அவ்வளவா ஒண்ணும் விரசமாத்தெரியாது..படம் பார்க்கறவங்கள்ளாம் 75 % வயது வந்தவர்கள் தானே..

    உன்னை ஒன்று கேட்பேனையே எடுத்துக் கொள்ளுங்கள்..

    கண்ணை மெல்ல மூடும்
    தன்னை எண்ணி வாடும்
    பெண்ணைப் பாடச் சொன்னால்
    என்னபாடத் தோன்றும்..


    காதலன் வர்றான் காதலியைப் பார்க்கறான்..சந்தோஷமா இருக்காங்க..அந்தம்மாக்கு சந்தோஷத்துல கண் மூடுது.. அப்புறம்
    பொழுதாகிப் போனதால டாட்டா காட்டிட்டு காதலன் போயிடறான்..

    அச்சோ..இவன் யார் என் லவ்வர் தானே..இவன் கிட்ட என்னை இழந்துட்டேனே அப்படீன்னு பகீர்னு ஒரு பயம் நெஞ்சுக்குள்ற கோயம்புத்தூர் பாஷையா வந்து ஒக்கார்றது.. மனசு சொல்லுது நீயும் என்ஸாய் தானே டி பண்ண அப்படின்னு.. கொஞ்ச செகண்ட்ல அதே மனசு சே சே யூ ஆர் எ வெரி பேட் கேர்ள்..கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துருக்கலாமேடி அப்படிங்குது.. இவளுக்கோ வாட்டமாப் போய்டுது..தன்னையே நினைச்சு நொந்துக்கறா..

    அப்படிப் பட்ட காதற்பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் கறார் கவிஞர் கண்ணதாசன்..இந்த லைன் பாடறச்சே குட்டிப் புறா தன் சிறகை அடிப்பது போல் கன்னடத்து ப் பைங்கிளி கண் சிமிட்டும் அழகே அழகு!

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •