-
20th September 2014, 09:02 AM
#3991
Junior Member
Veteran Hubber

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
20th September 2014 09:02 AM
# ADS
Circuit advertisement
-
20th September 2014, 09:12 AM
#3992
Junior Member
Platinum Hubber
100 என்ற எண்ணுக்கு பெருமை சேர்த்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1936ல் நடிக்க வந்து , 1947ல் கதாநாயகனாக உயர்ந்து , 21 ஆண்டுகள் தன்னுடைய கடின உழைப்பினால் பல வெற்றி சிகரங்களை கடந்து தன்னுடைய 100 வது படம ''ஒளிவிளக்கு ''
திரைப்படத்தை வழங்கினார் .
100 வது படம்
100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து
100 நாட்கள் மேல் பல இடங்களில் ஓடி வெற்றி வாகை சூடி
இலங்கையில் மறு வெளியீட்டில் மீண்டும் 100 நாட்கள் ஓடி
1968 முதல் 2014 இன்று வரை தொடர்ந்து ஓடி கொண்டும்
சாதனைகள் புரிந்த நம் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு படத்தின் அன்றைய விளம்பரங்கள்
திரை அரங்கு படங்கள் - மறு வெளியீடுகளின் திரை அரங்குகள் படங்கள் - மலர்கள் -நோட்டீஸ்
போஸ்டர்ஸ் - கட் அவுட்ஸ் - ஒளிவிளக்கு விமர்சனம் - பத்திரிகை தகவல்கள் - வீடியோ
போன்றவற்றை பதிவிட்ட இனிய நண்பர்கள் திரு ரவிசந்திரன் , திரு லோகநாதன் , திரு
ராமமூர்த்தி , திரு ரூப் குமார் மற்றும் நண்பர்களுக்கும் அன்பு நன்றியினை தெரிவித்து
கொள்கின்றேன் .
-
20th September 2014, 09:12 AM
#3993
Junior Member
Veteran Hubber
தைரியமாகச் சொல் நீ ....

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்
தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா
அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்
தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா
பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்
தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
20th September 2014, 09:18 AM
#3994
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் திரியின் பாகம் 3 சகோதரர் திரு. வினோத் அவர்களால் அக்டோபர் மாதம் 2012ல் துவக்கப்பட்டு, அசுர வேகத்தில் 8 பாகங்களை வெற்றிகரமாக ( 24 மாதங்களில் 32,000 பதிவுகளுடன்) கடந்தது ஒரு பெரிய சாதனை
10-07-2014 அன்று துவக்கப்பட்ட "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 10 வது பாகம் ", 73 நாட்களில் 82,000 பார்வையாளர்களுடன் இன்று நிறைவு பெறுகிறது.
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் கடந்த 8 பாகங்களில், நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி, இதுவரை கேள்விப்படாத பல அபூர்வ செய்திகளையும், அரிய நிழற்படங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வைத்தோம்.
இத்திரியினில், தங்களது பதிவுகளை ஆவலுடன் பதிவிட்டு, குறுகிய கால அளவுக்குள் முழுமை பெறுவதற்கு காரணாமாக திகழ்ந்த திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், ரூப்குமார், ராமமூர்த்தி, சைலேஷ் பாசு, யூகேஷ் பாபு, சுஹாராம், எம். ஜி. ஆர். பாஸ்கரன், பிரதீப் பாலு, தெனாலி ராஜன், பூமிநாதன் ஆண்டவர், ரவி கிரண் சூரியா, ஜீவ், ராகவேந்திரா, சிவா உள்ளிட்ட பெயர் விடுபட்ட பதிவாளர்கள் பலருக்கும் எனது பணிவான நன்றி !
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 11 வது பாகத்தை துவக்கிட, வழக்கம் போல் seniority அடிப்படையில் திரு.யூகேஷ் பாபு அவர்களை, இத்திரியின் அன்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.
திரியின் 11 வது பாகத்தை துவக்க விருக்கும் திரு.யூகேஷ் பாபு அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். புதிய பாகத்தில் தங்களது பதிவுகளை உத்வேகத்துடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் மங்காத புகழ் ஓங்குக !
மகோன்னத தலைவர் புகழ் வாழ்க !
இப்படிக்கு
ஆர்.லோகநாதன்
இணை செயலாளர்,அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம்
Last edited by puratchi nadigar mgr; 20th September 2014 at 09:24 AM.
-
20th September 2014, 09:24 AM
#3995
Junior Member
Veteran Hubber
-
20th September 2014, 09:26 AM
#3996
Junior Member
Veteran Hubber

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
20th September 2014, 09:45 AM
#3997
Junior Member
Veteran Hubber
நன்றி ஒலிக்கிறது உரிமைக்குரல்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
20th September 2014, 09:56 AM
#3998
Junior Member
Veteran Hubber
மக்கள்திலகம் எம்ஜிஆர் பகுதி 10 துவக்கி வெற்றிகரமாக நிறைவு செய்த திரு லோகநாதன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
20th September 2014, 10:01 AM
#3999
Junior Member
Platinum Hubber
THANKS- URIMAIKURAL
-
20th September 2014, 10:47 AM
#4000
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
ரவி கிரண் சூரியா, ஜீவ், ராகவேந்திரா, சிவா உள்ளிட்ட பெயர் விடுபட்ட பதிவாளர்கள் பலருக்கும் எனது பணிவான நன்றி !
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 11 வது பாகத்தை துவக்கிட, வழக்கம் போல் seniority அடிப்படையில் திரு.யூகேஷ் பாபு அவர்களை, இத்திரியின் அன்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.
திரியின் 11 வது பாகத்தை துவக்க விருக்கும் திரு.யூகேஷ் பாபு அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். புதிய பாகத்தில் தங்களது பதிவுகளை உத்வேகத்துடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் மங்காத புகழ் ஓங்குக !
மகோன்னத தலைவர் புகழ் வாழ்க !
இப்படிக்கு
ஆர்.லோகநாதன்
இணை செயலாளர்,அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம்
You are most welcome Sir. It was my pleasure in contributing whatever i could despite few exchange of views between our friends and myself.
Wishing Mr. Yukesh Babu a humongous success of his upcoming start of the next part.
Regards
RKS
Bookmarks