Page 278 of 401 FirstFirst ... 178228268276277278279280288328378 ... LastLast
Results 2,771 to 2,780 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2771
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    'மழை வருவது மயிலுக்கு தெரியும் '

    ரிஷிமூலத்தில் இடம் பெற்ற ஷண்முகப்ரியா ராக பாடல்
    மிருதங்கம்,வீணை,புல்லாங்குழல் போன்ற கருவிகளுடன் இசைக்கபட்ட இனிய இடை இசை .ராஜாவின் ராஜாங்கத்தை இந்த பாடலில் நன்கு அறியலாம் .


    gkrishna

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2772
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சி கே சார்
    அட்டகாசம் . உங்கள் மலரும் நினைவுகள்
    ஒரு சோக செய்தியை இவ்வளவு சுகம் பட எழுதும் திறைமை
    கண்ணதாசனின் 'திரை போட்ட போதும் அணை போடவில்லை '
    கண்களில் ஒரு துளி நீர் வரவழைக்க வைத்தது
    gkrishna

  5. #2773
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வென்கிராம் சார்,சி கே சார்

    நான் சமீபத்தில் படித்த வேதம் புதிது படத்தின் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் . (நன்றி மாலைமலர்) நீங்களும் படித்து இருப்பீர்கள்



    "வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான "வேதம் புதிது'' படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

    "முதல் மரியாதை'' படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. "கடலோரக் கவிதைகள்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மதங்களை கடந்தது மனிதநேயம்'' என்ற கருத்தை வெளிப்படுத்தும் "வேதம் புதிது'' படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

    இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

    "என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்' கேரக்டர்.

    பாரதிராஜாவின் "வேதம் புதிது'' கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், "கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.

    "நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்'' என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

    இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

    நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்' என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

    படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்' என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

    "பராசக்தி'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'', "மனோகரா'' போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. "காக்கி சட்டை'' படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு' வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

    இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் "கிடைச்சிட்டானா?'' என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, "கிடைச்சிட்டுது'' என்பதாக இருக்கும்.

    மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

    மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்' கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

    படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான "ஜீவா''வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்' படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த "மக்கள் என் பக்கம்'' படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

    "வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

    மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

    ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

    படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான்.

    இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

    படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

    முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

    "வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    gkrishna

  6. #2774
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இரட்டை வேடம்

    நாம் நிஜ வாழ்வில் சந்திக்கும் நிறைய மனிதர்களில் இரட்டை வேடம் போடுபவர்கள் இருக்கிறார்கள் .சந்தர்பம் வரும் போது தான் தெரிகிறது அவர்களின் இரட்டை வேடம் . சரி சரி வேதாந்தம் வேண்டாம் என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது.

    தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கரில் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், என அத்தனை முன்னணி நடிகர்களும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் கதாநாயகிகளுக்கு இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மிகவும் சொற்ப அளவிலே கதாநாயகிகளுக்கு அத்தகைய வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

    பொதுவாக நடிகர்கள் அனைவரும் எதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து விடுவார்கள். அதை எல்லா நடிகர்களுமே விரும்புவார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் கூட, இயக்குநர்களிடம் வற்புறுத்தியாவது ஏதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவிடுவார்கள். ஆனால் நடிகைகள்? யோசித்து பார்த்தால் கேள்விக்குறிதான் மிஞ்சும். எந்த நடிகையும் இரட்டைவேட கதாபாத்திரத்தை வற்புறுத்துவது இல்லை. அவர்கள் வற்புறுத்துவதற்கான வியாபார சூழ்நிலையும் அவர்களுக்கு அமைவதில்லை. இந்த முட்டுக்கட்டை நிலைகளை தாண்டியும் சில நடிகைகள் இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். சில இயக்குநர்கள் அப்படிப்பட்ட கதைகளை அமைத்து இருக்கிறார்கள். இது கதாநாயகர்களுக்கான உலகம். அவர்களை சார்ந்துதான் வியாபாரம் என்று சுட்டிக்காட்டப்படும் தமிழ்சினிமாவில், அத்தகைய சில தடைகளை தாண்டி சில நாயகிகளுக்கு இரட்டைவேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் அவ்வாறு இரட்டை வேடத்தில் நடித்த சில கதாநாயகிகளை பற்றி பார்க்கலாமா ?

    நடிகையர் திலகம் சாவித்திரி - காத்திருந்த கண்கள்
    கலை செல்வி மாண்பிகு அம்மா அவர்கள் - அடிமை பெண், வந்தாளே மகராசி,யார் நீ
    வாணிஸ்ரீ - இருளும் ஒளியும்,வாணி ராணி

    இப்படி மற்ற நடிகைகள் தொடருங்களேன் ப்ளீஸ்

    gkrishna

  7. #2775
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி சார்,
    இதயக்கமலம் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை
    வேடத்தில் நடித்துள்ளார்.
    கோபு

  8. #2776
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopu1954 View Post
    கிருஷ்ணாஜி சார்,
    இதயக்கமலம் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை
    வேடத்தில் நடித்துள்ளார்.
    கோபு
    ரொம்ப சரி கோபு சார் .மிக்க நன்றி சார்

    நீங்கள் சொன்ன உடன் நினைவிற்கு வருகிறது

    காவியத்தலைவி - சௌகார்ஜானகி
    gkrishna

  9. #2777
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி நன்றி..(டினா முனிம் அமோல் பலேகர் பாட்டு நினைவுக்கு வருதா) எஸ்.வாசுதேவன் சார் காணோமே..

    வேதம் புதிது கட்டுரைக்கு நன்றி.பட் அந்தப் படத்தில் சில காட்சிகள் எனக்குப் பிடிக்காது..மனித நேயம் என்றால் சக மனிதர்களைப் புண்படுத்தாமல் இருப்பதுவும் தான்..

    சே..கிருஷ்ணாஜி..இது ஒரு ஆணாதிக்க உலகம் போல இருக்கிறதே இரட்டை வேட நடிகைகள் என வரிசையில் வரவே மாட்டேன் என்கிறதே நினைவில் சரி சரி.. ஹேமாமாலினி – சீதா அவுர் கீதா..

  10. #2778
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சுஜாதா - முத்தான முத்தல்லவோ
    gkrishna

  11. #2779
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1965 - kalangarai vilakkam - saroja devi - duel role.

  12. #2780
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    esvee sir

    excellant
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •