-
23rd September 2014, 05:01 AM
#3281
Senior Member
Veteran Hubber
Venkkiram - that song was a collaboration with guitarist Prasanna (who also did some memorable work with ARR).
IR's creativity visualizes the electric guitar played like a veena and Prasanna does it beautifully ! and still it is in perfect sync with the song and its mood.
check this out from Malayalam -
you dont have to understand the lyrics, but IR takes us to Kerala backwaters with the combination of the tune /melody, and orchestration !
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd September 2014 05:01 AM
# ADS
Circuit advertisement
-
24th September 2014, 12:18 AM
#3282
Junior Member
Devoted Hubber
படம்: மஞ்சள் நிலா (1982)
பாடல்: பூந்தென்றல் காற்றே வா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
எழுதியவர்: கங்கை அமரன்
இந்த பாடலுக்கு விளக்கமே தேவை இல்லை. இன்று இதை உங்களுக்கு நினைவூட்டுவதில் மிகவும் பெருமை படுகிறேன். கிடார் பயில்வோருக்கு இந்த பாடல் ஒரு பயிற்சி பாடம்
Last edited by rajaramsgi; 24th September 2014 at 12:23 AM.
-
24th September 2014, 12:52 AM
#3283
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajaramsgi
படம்: மஞ்சள் நிலா (1982)
பாடல்: பூந்தென்றல் காற்றே வா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
எழுதியவர்: கங்கை அமரன்
இந்த பாடலுக்கு விளக்கமே தேவை இல்லை. இன்று இதை உங்களுக்கு நினைவூட்டுவதில் மிகவும் பெருமை படுகிறேன். கிடார் பயில்வோருக்கு இந்த பாடல் ஒரு பயிற்சி பாடம்
ஆரம்ப இசைக்கு இருக்கிற சொத்தையெல்லாம் எழுதிவைக்கலாம் போல.. அதைக் கேட்கும்போது மனசில் எழும்பும் உணர்ச்சிகளை எப்படி வார்த்தையால் வருணிப்பது என திக்குமுக்காட வைத்துவிடுகிறார் ராஜா. இது காலத்தைக் கடந்து நிற்கும் ஆரம்ப இசை என இயக்குனருக்கும் எடிட்டருக்கும் தெரிந்திருக்கிறது போல.. காணொளியை பார்க்கும் ரசிகர்களுக்கு இரண்டு முறை அந்த ஆரம்ப இசையை கேட்டு ரசிக்கலாம். இதுபோன்ற இசைகளை கடந்துவந்த பிறகு இப்போதைய நடப்பு கால இசையை (புதுமையாம் சிலருக்கு!) rip என சுருக்கமாக விமர்சனம் செய்த சமீபத்தில் வந்த ட்வீட்டர் சரியென்றே தோன்றுகிறது.. .
Last edited by venkkiram; 24th September 2014 at 01:14 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 08:26 AM
#3284
Senior Member
Diamond Hubber
மூக்கியர மூக்கம்மா..
https://play.spotify.com/album/6p7HKiuTIqlBfS8udzazq5
ராஜாவின் மற்றுமொரு கொண்டாட்டப் பாடல்.. மண்வாசனை படத்தில் முதலாக இடம்பெறும் பாடல். ஆரம்பித்து முடிக்கும் வரையில் அப்படியொரு ஓட்டம். எனர்ஜி. தெம்மாங்கு இசை வாத்தியக் கருவிகளைக் கொண்டு ஒரு நாட்டுப்புற கதம்ப பூமாலையை மேற்கத்திய கிடார் இசை நாறால் கோர்க்கும் கலை ராஜாவுக்கே கைவரும் கலை. ம.வாசுதேவன் - சசிரேகா குரலில் நகைச்சுவையாக ஒருவரை ஒருவர் கேலிபேசுவதாக அமைக்கப்பட்ட இசையாக்கம். எப்போதெல்லாம் எனக்கு மனதளவில் எனர்ஜி தேவைப்படுகிறதோ , அப்போதெல்லாம் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th September 2014, 09:29 AM
#3285
Senior Member
Diamond Hubber
NSK பாடலொன்றைப் போல ஆரம்பித்து, செண்டைக்கொரு கோலுன்டெட-யில் நின்றாலும் பரவாயில்லை. ஆயிரம்தாமரை மொட்டுக்களே வரை பாயுது ராஜாவின் சந்தவீச்சு.
கச்சேரியில் பகிர்ந்தது..
திரைப்பாடல்...
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th September 2014, 09:36 AM
#3286
Senior Member
Devoted Hubber
@venkkiram,
Could you please provide alternate source (mediafire.com etc) to listen to that track? Spotify says it isn't available in India. Wasn't able to listen, please. Thanks,
-
25th September 2014, 09:57 AM
#3287
Senior Member
Diamond Hubber

Originally Posted by
dochu
@venkkiram,
Could you please provide alternate source (mediafire.com etc) to listen to that track? Spotify says it isn't available in India. Wasn't able to listen, please. Thanks,
Its available in Raaga.com
http://play.raaga.com/tamil/album/mann-vasanai-t0000092
Happy listening!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th September 2014, 09:55 AM
#3288
Senior Member
Diamond Hubber
எனக்குத் தெரிந்து.. நான் வளர்ந்த கிராமப் பகுதியில் ஒரு படம் அதிகநாட்கள் ஓடியது என்றால் 'செண்பகமே செண்பகமே'. 42 நாட்கள் ஓடியது. அப்படியென்ன இந்தப் படத்தில் விசேஷம் என்றால் ராஜாவின் பாடல்கள், ராமராஜன்-ரேகா-விஸ்வம் நடிப்பில் சலிப்படையாமல் செல்லும் திரைக்கதை, நகைச்சுவை காட்சிகள். குறிப்பாக ராமராஜனின் அப்பாவாக விஸ்வம் தனது இயல்பான நடிப்பினால் ஒரு முற்றிலும் எதிர்பாராத பாத்திரமாக வலம்வருவார். மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த அந்தக் கொட்டகைக்கு மாட்டு வண்டியில் குடும்பமாக இரவுக் காட்சிக்கு சென்றுவந்தோம்.
'மஞ்சப் போடி தேய்க்கையிலே' - சீம்லஸ் என்பார்களே! அதன் அருஞ்சொற்பொருளாக ராஜா கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று. கங்கை அமரன் வரிகளில் எதுகை மோனை ஓசைநயம் இப்பாடலுக்கு அணி சேர்க்கும். கொள்ளை கொள்ளும் ரேகாவின் அழகு. "தேனாறு உன்னுதடு வந்ததென்ன" (@3.06-3.10) என்ற அந்த வரிகளில் திரைமுழுதும் வியாபித்திருக்கும் ரேகாவின் முகத்திற்கு ஈடு எது? கடலோர கவிதையில் என்னுள் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த அந்த ரசிப்பூ தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மணம் வீசிக் கொண்டெ இருந்தது.
மஞ்சப்பொடி தேய்க்கையில என் நெஞ்ச தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்த கண்ணன் தொடும் காலம் எப்போ
கண்ணுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள
குத்தால சாரலுக்கு யோகமடி
குண்டுமல்லி பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதடி பாரமடி
தொட்டு தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி
ஒன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி
ஒன்னாச்சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானா தீரும்
மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன் உதடு வந்ததென்ன
தேன் எடுத்து நான் அருந்த நேரம் என்ன
ஒன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாக தூவும்போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்
நடைக்கு ஓய்வே கிடையாது. தபேலா ஆரம்பிக்கும் போதே அது எங்கிருந்து ஆரம்பித்தது இப்படி பாய்ந்து வருகிறது என்ற கேள்வி எழும். மெலடி நாயகனுக்கு. தபேலா கல்யாணம் செய்தும் அப்பாவினால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் அவனது காதல் பசி.. மறைபொருளாக காமம் இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாஸ் கிடாராக. முதல் இடையிசையில் வயலின் கற்றைகளால் அலங்கரிப்பு அருமை. குடையில்லாமல் திடிரென பெய்யும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவோமே..அதுபோன்ற ஒரு பாடல் இது.. மழை வந்ததும் தெரியாது, நின்றதும் தெரியாது..அதுபோல பாடல் ஆரம்பித்ததும் தெரியாது, முடிந்ததும் தெரியாது. மழை உடலை நனைத்துவிடுவதுபோல, நான்கு நிமிடத்தில் நமது மனம் இப்பாடலில் கரைந்துவிடுகிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th September 2014, 08:46 PM
#3289
Senior Member
Senior Hubber
-
28th September 2014, 04:11 AM
#3290
Junior Member
Devoted Hubber
Venkkiram,
மஞ்சபொடி தேக்கையிலே பாடல் ராஜா சாரின் பெஸ்ட் ஒப் தி பெஸ்ட் பாடல்களில் நிச்சயம் இடம் பெரும். ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்க வைக்கும் பாடல்.
RP விஸ்வத்தை நன்றாய் நினைவில் வைத்திருக்கிறீர்களே.. இந்த படம் மட்டுமல்ல, அறுவடை நாளில் ரத்னவேலாக வரும் அவருடைய பாத்திரத்தை மறக்க முடியுமா? பாவம் இளவயதிலேயே மறைந்து விட்டார்.
ரேகா ஒரு விதமான அழகு, பார்க்க சற்று முதிர்க்கன்னி போல் தோன்றும். சிறு சிறு முகபாவங்கள் கொடுத்து அசத்திவிடுவார். கொடியிலே மல்லியப்பூ பாடலில் ரேகாவை உட்கார வைத்துவிட்டு இதோ வருகிறேன் என்று கடலுக்குள் சத்யராஜ் போய் விடுவார். போனவரை காணவில்லையே என்று ரேகா துடிப்புடன் எழுந்து ஓடி பயத்துடன் நிற்க, அவருக்கு பின்புறம் சத்யராஜ் ஒரு பெரிய மீனுடன் நின்று பயம் காட்ட, அடுத்த சில நொடிகளில் பயம், அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தோஷம் என அடுக்கடுக்காய் பாவங்கள் கொடுத்து அசத்தி இருப்பார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks