Page 24 of 400 FirstFirst ... 1422232425263474124 ... LastLast
Results 231 to 240 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #231
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Today (24.09.2014) Malai Malar

    எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருகிறது

    பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 24, 3:43 PM IST

    எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருகிறது


    எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. 1965–ல் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களை தாண்டி ஓடியது.

    இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒலி, ஒளி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தரமானதாக மாற்றப்பட்டு வருகிறது.

    இந்த படம் 1973–ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்து இருந்தார். நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்து இருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.

    இந்த படத்தில் இடம் பெற்ற ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’, ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிர்க்க வாழ்ந்திடாதே’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உன்னை பார்க்கையிலே பன்சாயி’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.

    உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருவதால் படத்தை பார்க்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
    Last edited by kaliaperumal vinayagam; 25th September 2014 at 12:37 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #232
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
    Tmt. Sheela, Johor Bahru, Malaysia

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #233
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
    Tmt. Sheela, Johor Bahru, Malaysia

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  5. #234
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.ராமமூர்த்தி சார் பதிவிட்டுள்ள அரிய ஆவணங்கள் பிரமாதம். நாளிதழ், வார இதழ்களில் தலைவரைப் பற்றி வெளியாகியுள்ள எந்த செய்தியாக இருந்தாலும் அதை சுடச் சுட பதிவிடும் லோகநாதன் சார், திரு.கலிய பெருமாள் சாருக்கு நன்றி. தலைவரின் மொழிமாற்று படங்கள் பற்றிய பதிவுகள் அருமை. ஒவ்வொன்றையும் தேடி எடுத்து பதிவிட எவ்வளவு நிமிடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டால் தங்கள் உழைப்பு தெரிகிறது எஸ்.வி.சார். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #235
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘வாலிபன் என்றென்றும் வாலிபன்’


    உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வருகிறார் என்ற இனிக்கும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பொதுவாகவே, நான் lift பயன்படுத்துவதில்லை. எவ்வளவு மாடியாக இருந்தாலும் படிக்கட்டில் ஏறியே செல்வேன். என்றாலும் ஒவ்வொரு படியாக நிதானமாக ஏறிச் செல்லும் வழக்கமுடைய நான், இன்று ஒருபடி விட்டு ஒரு படி தாவிக்குதித்து ஏறிச் சென்றேன். வாலிபன் தந்த மகிழ்ச்சிதான் காரணம்.

    படம் விரைவில் வெளியாக உள்ள செய்தியறிந்ததும் படத்தைப்பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடின. கழகக் கொடி ஏந்தி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இலச்சினை திரும்புவதில் இருந்து, ‘எமது அடுத்த தயாரிப்பு கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ’ என்ற கார்டு காட்டப்படும் வரை படத்தை அணு அணுவாய் அலசியெடுக்க ஆசை ஆனால் நேரமின்மை தடுக்கிறது.

    படம் வெளியான போது களப்பிரர் கால ஆட்சியில் (களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது உண்டு) போஸ்டர்கள் ஒட்டக் கூட கெடுபிடி இருந்த நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் வீட்டுக்கு அருகே தெரு முனையில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டேன். அந்த மாரியம்மன் உண்மையிலேயே நல்ல சக்தி உள்ள மாரியம்மன். அப்படித்தான் ஒரு முறை மழையே இல்லாதபோது எங்கள் பகுதி மக்கள்..... என்னது இது? வண்டி டிராக் மாறி பக்தி ரூட்டில் போகிறதே? ஹை... ஹை.. க்..க்..ஓவ்...ஓவ்... டுர் (பயப்படாதீர்கள். வண்டியை நம்ம ரூட்டுக்கு திருப்பினேன். அதான்)

    அதனால் படத்தின் ஹைலைட்டான நம் எல்லோருக்கும் பிடித்த புத்த பிட்சு வீட்டில் நம்பியாருடன் தலைவர் போடும் சண்டைக் காட்சியை மட்டும் அசைபோடுவோம். மேலும், திரு.யுகேஷ்பாபு அவர்கள் நேற்று கூறியிருந்தபடி சமீபத்தில்தான் ‘ஆடாத மனமும் உண்டோ?’ பாடலை அலசியிருந்தேன். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த அந்த பாடல் ஒரு தனிச்சுவை என்றாலும் தயிர்சாதமும் வடுமாங்காயும் சாப்பிட்டது போன்ற உணர்வு. அசைவ சாப்பாடு என்றால் நாவை சப்புக் கொட்டி ஒரு கட்டு கட்டாமல் இருப்போமா? அந்தக் கட்டலே இந்த சண்டைக்காட்சி அலசல்.

    முதலில் அட்டகாசமான அந்த புத்தர் கோயிலைப் போன்ற செட்டுக்காகவே ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து அவர்களுக்கு ஒரு சபாஷ். கழகக் கொடியை வடிவமைத்த பெருமைக்குரியவர் இவரே. புத்தரின் சின்ன சின்ன மோல்டிங்குகளை நிர்மாணித்து அழகாக அரங்கம் அமைத்த அங்கமுத்துவை ஆட்சிக்கு வந்ததும் குடிசை மாற்று வாரியத் தலைவராக்கி அழகு பார்த்தார் புரட்சித் தலைவர்.

    தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் மாணவர்களின் பயிற்சியை முதுகை காட்டியடி நின்று கொண்டு மேற்பார்வையிடுபவரின் தோளை அசோகன் தொட, அவர் ‘யா’ என்று கத்தியபடி திரும்பினால் அட! நம்பியார். துருத்திக் கொண்டிருக்கும் நீண்ட கோரைப் பற்களுடன் இருக்கும் நம்பியாருக்கு மேக்கப் கனகச்சிதம். தோளை அசோகன் தொட்டதும் கத்தியபடியே நம்பியார் திரும்புவது அவரது அலர்ட்னெசையும் கோபத்தையும் உணர்த்துவதில் இருந்தே தலைவருடன் அவரது சண்டை ஆக்ரோஷமானதாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடும்.

    புத்த பிட்சுவின் வீட்டுக்கு நம்பியார் வரும்போது கோயிலின் அமைதியை உணரவைக்கும் கோரசுடன் சேர்ந்த பின்னணி இசை. புத்தபிட்சுவாக வரும் நபரின் முகத்தில் பெளத்த துறவிகளுக்கே உரித்தான புன்முறுவலுடன் கூடிய சாந்தம். நல்ல தேர்வு.

    புத்த பிட்சு வீட்டுக்கு தலைவர் என்ட்ரீ ஆகும்போதே சண்டைக்காட்சி விருந்துக்கு தயாராக நாம் சீட் நுனிக்கு வந்து விடுவோம். தலைவர் வரும்போது அவர் அணிந்துள்ள சிவப்பு கலர் full shirt, அதே வண்ணத்தில் pant, shoe அணிந்து வருவார். அங்குதான் அவரது உயரிய பண்பாட்டை விளக்கும் வகையிலான காட்சியாக கோயில் போன்ற அந்த வீட்டுக்குள் நுழையும்போது shoe வை கழற்றி விட்டு செல்வார். shoeவை கழற்றினால் socks-ம் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு கலரில் முழு உடை அணிவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இதுபோன்ற கலர் உடைகள் பொருந்தாது. எந்த கலரில் உடை அணிந்தாலும் அவர் ஒருவருக்குதான் பொருத்தமாக இருக்கும்.

    அந்த சந்தனக் கலருக்கும் தேக்குமரத் தேகத்துக்கும் (இந்த வார்த்தைகளை பயன்படுத்தி சமீபத்தில் மக்கள் திலகத்தைப் புகழ்ந்த திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி) சிவப்பு நிறம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். (இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். திரு.ஜி.கிருஷ்ணா அவர்களைப் போல எங்கிருந்தாலும் மக்கள் திலகத்தை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ; திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உட்பட. அவர் திமுகவில் இருந்தாலும் தலைவரின் ரசிகர். மாணவப் பருவத்தில் திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தவர். தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது கு.ப.கிருஷ்ணன், கல்லுக்குழி கந்தன், மரியம் பிச்சை போன்ற தீவிர ரசிகர்கள் திமுகவில் இருந்து விலகினாலும் திருச்சி சிவா மட்டும் அங்கேயே தங்கி விட்டார். இருந்தாலும் தலைவர் விசுவாசம் காரணமாக தலைவரைப் பற்றி விமர்சித்து பேசமாட்டார். தலைவரது பாதிப்போ, என்னவோ? அந்தக் காலத்தில் இருந்தே அவரைப் போலவே இறுக்கமான ஜிப்பா அணிவார். இப்போது, கிடைக்கும் மேடைகளை லாவகமாக பயன்படுத்தி கைதட்டல்களை வாங்கும் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்கிறார். திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்)

    வீட்டுக்குள் தலைவர் நுழைந்ததும், புத்த பிட்சுவை கட்டிப்போட்டு விட்டு அங்கே கருப்பு அங்கியை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் நம்பியாரை புத்தபிட்சு என்று தவறாக நினைப்பார். அவர் போர்த்தியபடி அமர்ந்திருப்பதை பார்த்து ‘‘அய்யாவுக்கு உடம்புக்கு என்ன?’ என்று கேட்பார். எப்போது நம்பியார் தாக்குவாரோ என்ற திகில் ஒருபக்கம் இருந்தாலும் ‘‘கொஞ்சம் குளிர் ஜூரம்’’ என்று அவர் அளிக்கும் பதிலால் தியேட்டர் சிரிப்பால் அதிர்வது உண்மை.

    இந்தக் காட்சியில் நம்பியாரின் கண்கள் மேல்நோக்கி நிலைகுத்தியதுபோல இருக்கும். அதாவது அவர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார். தலைவர் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார். நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சியை தலைவர் எதிரே நிற்காத போது தனியாகக் கூட எடுத்திருக்கக் கூடும். ஆனால், உட்கார்ந்திருப்பவர் பத்தடி தூரத்தில் நிற்பவரைப் பார்க்கும்போது பார்வை சற்று மேல்நோக்கியபடிதான் இருக்கும். இதை நம்பியார் நுணுக்கமாக செய்திருப்பார்.

    பின்னர், ரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்பையும் ஜப்பானிய வார்த்தைகளான, தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்பதை நம்பியாரே குறிப்பிடுவார். அதை இவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாதபோது ஏன் குறிப்பிடுகிறார்? என்ற சந்தேகத்தை விழிகளில் தேக்கியபடி லேசாக புருவம் நெரிய, ‘‘தெரியுமே’’ என்று தலைவர் கூறுவது படு இயல்பாக இருக்கும். இங்கு இன்னொரு விஷயம். ஜப்பானிய வார்த்தைகளை சங்கேதக் குறிப்புகளாக படத்துக்காக பயன்படுத்தினாலும் ‘கிமோனா’ என்பது ஜப்பானியர்களின் தேசிய உடை.
    சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா? என்று நம்பியார் தொடர்ந்து கேட்க தலைவர் அதன் அர்த்தத்தை (தொஷிகா - பெரிய புத்தருக்கு இடது பக்கம், கிமாகோ - மேற்கிலிருந்து 5வது கல், மிகாயோ - வலதுபக்கமிருந்து 4வது கல். கிமோனா - அந்தகல்லுக்கு அடியில்தான் ரகசியம் இருக்கிறது ) சொல்லியதும் முகம் பிராகசிக்க ‘‘நீயே எடுத்துக் கொள்’’ என்று நம்பியார் கூறுவது தனது வேலையை சுலபமாக்கத்தான். தலைவர் கல்லைத் தோண்டுவதை பார்க்கும் நம்பியார் கொஞ்சம் கொஞ்சமாக தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்து விளக்குகள் ஏற்றப்படும் பித்தளை standக்கு பின் ஒளிந்து கொண்டு பார்ப்பது, அவரது ரகசியத்தை களவாட வந்திருக்கும் போக்கை உணர்த்தும். சூட்கேஸ் கண்ணில் தட்டுப்பட்டதும் ரகசியத்தை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் தலைவரின் பெருமூச்சுடன் நிம்மதி கலந்த சிரிப்பும், நம்பியாரின் பேராசை சிரிப்பையும் ஒரே பிரேமுக்குள் காட்டப்படும் காட்சியில் மனிதர்களின் மனோபாவத்திலும் அதை வெளிப்படுத்தும் முக பாவத்திலும்தான் எத்தனை வேறுபாடுகள். அவரவர் மனோ நிலையை உணர்த்தும் இந்தக் காட்சி அற்புதம்.
    பெட்டியை தலைவர் கையில் எடுத்ததும் நம்பியார் ஓடி வந்து உதைப்பார். அதிர்ச்சியுடன் நிற்கும் தலைவரைப் பார்த்து ‘மரியாதையா அந்தப் பெட்டியை கொடு’ என்று கர்ஜிப்பார். அதிர்ச்சி விலகாத தலைவர் இரண்டு அடிகள் முன்னாள் வந்து சூட்கேசை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி, ‘‘புனிதமான தவக்கோலத்தில் இருக்கும் நீங்களா இப்படி பேசறீங்க?’ என்று கேட்க, ‘‘இந்த ரகசியத்தை பைரவனிடம் (அசோகன்) கொடுத்தால் எனக்கு ஒரு கோடி டாலர் கிடைக்கும்’’ என்று நம்பியார் பதிலளிக்க ‘‘முற்றும் துறந்த தாங்களா இந்த அற்ப ஆசைக்கு அடிமை ஆயிட்டீங்க?’’ என்று தலைவர் கேட்டதும் ‘‘நான் புத்தபிட்சு அல்ல. இதெல்லாம் வேஷம்’’ என்று கூறியபடி கருப்பு அங்கியை வீசி எறிந்து மஞ்சள் நிற கச்சையுடன் நிற்கும் நம்பியாரைப் பார்த்தால்....

    சும்மா சொல்லக் கூடாது. ஆரம்ப காட்சியில் ரகசியத்தை கொண்டு வரமுடியுமா? என்று சந்தேகமாக கேட்கும் அசோகனிடம் ‘‘இந்த மதயானையைப் பார்த்தா அப்படி கேட்கறீங்க?’’ என்று நம்பியார் கேட்பார். அதற்கேற்ப மத யானை போலவே நம்பியார் காட்சி தருவார்.

    அப்போது, புரட்சித் தலைவர் இரண்டடி பின்வாங்கி நெஞ்சுக்கு நேரே பிடித்திருந்த சூட்கேசை பின்னால் மறைத்துக் கொள்வார். கதைப்படி தலைவர்தான் வெற்றி பெறுவார் அந்த சூட்கேஸ் நம்பியாருக்கு கிடைக்காது என்று நமக்குத் தெரியும். நமக்கே தெரியும்போது தலைவருக்கு தெரியாதா? இருந்தாலும், உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த ரகசியத்தை காக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சூட்கேசை பின்னே மறைத்துக் கொள்ளும் நுணக்கமான நடிப்பை தலைவர் வெளிப்படுத்தியிருப்பார். வெகு ஜனங்களுக்கு இந்த நுணுக்கங்கள், நகாசு வேலைகள் புரியாவிட்டாலும் தன்னை மறந்து படத்தோடும் காட்சிகளோடும் அவர்களை ஒன்றுபடுத்துவது இதுபோன்ற காட்சிகள்தான்.

    இரண்டு, மூன்று அடிகள் வாங்கிய பிறகு கோயிலை விட்டு வெளியே வந்ததும், மாடியில் இருந்து குதித்து சுதாரித்துக் கொள்வார் தலைவர். படி வழியே இறங்கி வந்து தொடைகளை தட்டியபடி நிற்கும் நம்பியாரை அளவெடுப்பதுபோல், தலைவரின் தீட்சண்யமான பார்வையை காட்டும் ஷாட்டில் தலைவர் சண்டைக்கு தயாராகி விட்டதை அறிந்து விசில் பறக்கும்.

    ‘‘என் பலத்தை பார்த்திருப்பே. மரியாதையா அந்த பெட்டியை கொடு’’ என்று கேட்கும் நம்பியாரிடம் ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன்’’ எனக் கூறி தாடையை கையால் அசைத்து (அடி வாங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பால் உணர்த்துகிறார்) ‘‘என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரே ஒரு சான்ஸ் குடேன்’’ என்று கூறும்போது சற்று பழைய தியேட்டராக இருந்தால் கைதட்டலில் கூரை இடிந்துதான் விழும்.

    பின்னர், நடக்கும் ஆக்ரோஷமான சண்டை. அதிலும் சூட்கேசை தூரப் போட்டு அதை எடுக்க முயற்சிக்கும் நம்பியாரை கீழே தள்ளி அவரது வலதுகால் முட்டிக்குப் பின்னே தனது ஒருகாலால் அழுத்தி மற்றொரு காலால் நம்பியாரின் காலை மடக்கிப் போடும் தலைவரின் அந்தப் பிடி. இருவருமே தனது முழு பலத்தை பிரயோகித்து கைகளை கோர்த்து ஒருவரை ஒருவர் தள்ளும் காட்சி. இத்தனைக்கும் ‘நமது வாலிபனுக்கு’ அப்போது வயது 56 என்று நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

    ஓடிவந்து உதைத்து நம்பியாரை சாய்த்து அவர் மீண்டும் எழும்போது தாக்கி வீழ்த்தும் காட்சியில்தான் தலைவரின் தொழில்நுட்பம் புலப்படும். நம்பியாரை குத்தியதும் அவர் வட்டமான மேஜையில் கையை ஊன்றியபடியே கீழே விழுவார். உண்மையில் அது நம்பியார் அல்ல. அவரது டூப். ஆனால், கீழே விழுந்ததும் தலைவர் இடது பக்கமாக நகர்ந்து வருவார். சரியாக 3வது விநாடியில் தலைவருக்கு கீழே படுத்திருக்கும் நம்பியாரை கேமரா காட்டும்.

    விஷயம் இதுதான். கீழே விழுந்திருக்கும் டூப்பை காட்ட முடியாது என்பதால் அத்துடன் காட்சியை கட் செய்ய வேண்டியிருக்கும். நேரமும் பிலிமும் வேஸ்ட் ஆவதை தடுக்க, தலைவர் இடது பக்கம் நகர்ந்து (கேமராவும் அவருடனே நகரும்) ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு நேரே வந்து நிற்பார். ஏனென்றால், டூப் விழுந்த இடத்தில் இருந்து நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு கேமரா ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், 3 விநாடிகளில் கேமராவில் படாமல் உருண்டபடியே வர முடியாது. அந்தக் காட்சியை நண்பர்கள் பதிவிட்டால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

    அடிதாங்காமல் மூர்ச்சையாகி கிடக்கும் நம்பியாரை மீண்டும் வீட்டுக்குள் தலைவர் அநாயசமாக தோளில் போட்டு தூக்கி சென்று கிடத்தி, புத்த பிட்சு நம்பியாருக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிந்ததும் அந்த பிட்சு, புத்தர் சிலையைப் பார்த்து தனக்கே உரிய கருணையை காட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘‘அப்பா’’ என்பாரே! அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்திருக்கிறார் தலைவர்.

    மூர்ச்சை தெளிந்து எழுந்து செல்லும் நம்பியார், பாதி தூரம் சென்று உடம்பை அரை வட்டமாக திருப்பி தலைவரையும் புத்த பிட்சுவையும் பார்க்கும் அந்த பார்வையில்தான் எத்தனை இயலாமை.... வெறுப்பு.... பணியை முடிக்காததால் இனி பணம் கிடைக்காதே என்ற ஏமாற்றம்..... ஒரு எம்.ஜி.ஆர்.தான்., ஒரு நம்பியார்தான்.

    தலைவரும் இப்படி தாக்கவேண்டி ஆகிவிட்டதே என்று வருந்தும் வகையில் கவலை தோய்ந்த முகத்துடன் புத்தர் சிலைக்கு அருகே சென்று கீழே நின்று குனித்து வணங்குவார். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து விறுவிறுப்பான அதே நேரம் வன்முறையில்லாத, என்ன ஒரு அருமையான சண்டைக் காட்சி.

    இதேபோன்று ஒவ்வொரு காட்சியையும் அலசி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் பணிச்சுமை தடுக்கிறது. அதனால்தான் regular ஆக திரியில் பங்கேற்க முடிவதில்லை. நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

    திரு. எஸ்.வி.சார். தமிழ் இந்து நாளிதழில் தாங்கள் கூறியிருந்ததை பார்த்தேன். அது....‘‘இந்த திரைப்படத்தை வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் என்றும் வாலிபன்தான்’’....... நன்னா சொன்னேள் போங்கோ!

    ‘ஷூக்ரியா!’

    .......... பார்த்தீர்களா? ஜப்பான் மொழியை பற்றி மேலே சில வார்த்தைகளை குறிப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ? நன்றி என்பதற்கு பதிலாக அதே பொருளைக் கொடுக்கும் ‘ஷூக்ரியா’ என்ற இந்தி வார்த்தையை கூறி விட்டேன். நான் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட இந்தி வார்த்தை. அதற்காக இந்தியில் நான் ரொம்ப weak என்று நினைக்காதீர்கள். எனக்கு மேலும் சில வார்த்தைகள் தெரியும்.... அவை ‘‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா’’....... முடிஞ்சா நாளைக்கு வரேன்..............டாட்டா!

    அன்புடன் : கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #236
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    TELE SERIAL KUDUMBAM - GOOD FOR LAUGHS

    sn.com/watch/video/episode-1/2b1af8jxu?preview=true&cpkey=75a26735-a94f-4592-8b9b-40ba9cefb309%257c%257c%257c%257c

    http://video.xin.msn.com/watch/video...257c%257c%257c

  8. #237
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    I request Kalaiventhan to continue to write about Ulagam Sutruam Valiban, I very much enjoyed his writing.

  9. #238
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Vinod sir you have done a very good job of uploading most of the MGR telugu dubbed movies ad which are very painstaking work.

  10. #239
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #240
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
    Tmt. Sheela, Johor Bahru, Malaysia

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Thank u Mr.Kaliaperumal sir for uploading this matter.

    Regds,

    S.Ravichandran

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •