-
25th September 2014, 12:24 PM
#3091
வாங்க வாங்க என்ன ஸ்மால் கண்ணரே சுகமா ? இவ்வளவு நேரம் எங்கே ஏதும் ஸ்மால் வேலையா
-
25th September 2014 12:24 PM
# ADS
Circuit advertisement
-
25th September 2014, 12:30 PM
#3092
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 12:38 PM
#3093
நன்றி நண்பர் ஆதித்த கரிகாலன் அவர்களுக்கு
திருவையாறு P ராஜலக்ஷ்மி , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார். இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்


படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்
புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். 1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார்.

காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில் தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம் வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்
இவர் நடித்த திரைப்படங்கள்:
01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 12:43 PM
#3094
Senior Member
Senior Hubber
ஆமாங்க க்ருஷ்ணா ஜி.. அப்புறமா வர்றேன்..டி.பி ராஜலஷ்மி ஃபோட்டோல்லாம் வரலை அதனால பார்க்கலை.. டிம்பிள் ஃபோட்டோஸும் நான் பார்க்கலை ! (இதுக்கும் விக்ரம் க்கும் என்னா வித்யாசம்)
-
25th September 2014, 12:51 PM
#3095
Junior Member
Regular Hubber
கிருஷ்ணா சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் பாபியும்,ராயல் திரையரங்கில்
யாதோங்கிபாரத்தும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றிகரமாக ஓடியதாக நினைவு.நெல்லையில் மட்டுமல்ல,தமிழகம் முழுவதும்.
கோபு
-
25th September 2014, 12:53 PM
#3096
நன்றி நண்பர் ஆதித்த கரிகாலன் அவர்களுக்கு
தமிழில் திரைப்படம் தயாரித்த முதல் தமிழர்
150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.

இவர் முதன்முதலில் 1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின் மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும் காமிராவை இயக்கக் கற்றார். படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக மற்றொருவரையும் வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால் லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப்பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம். நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.

திரௌபதி வஸ்த்ராபுராணம், கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார்.
பேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
கட்டுரையின் இறுதி வரிகளை படிக்கும் போது மனது கனக்கும் .அருமை நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் சமீபத்தில் மறைந்த பாசமலர் மோகன் அவர்களை பற்றி பேசும் போது பாசமலர் திரைபடத்தை டிஜிட்டல் செய்வது தொடர்பாக திரு மோகன் அவர்களை தேடி போகும் போது அவர் கெல்லீஸ் அருகில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு இருந்ததாக கூறியது நினைவிற்கு வந்தது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 12:57 PM
#3097

Originally Posted by
gopu1954
கிருஷ்ணா சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் பாபியும்,ராயல் திரையரங்கில்
யாதோங்கிபாரத்தும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றிகரமாக ஓடியதாக நினைவு.நெல்லையில் மட்டுமல்ல,தமிழகம் முழுவதும்.
கோபு
மிக சரியான தகவல் கோபு சார்
அதே போல் ஷோலே நெல்லை ராயல் திரை அரங்கிலும் ,khel khel main நெல்லை லக்ஷ்மியிலும் வெளி வந்து நிறைய நாட்கள் ஓடியது நினைவில் உண்டு
-
25th September 2014, 12:59 PM
#3098

Originally Posted by
chinnakkannan
ஆமாங்க க்ருஷ்ணா ஜி.. அப்புறமா வர்றேன்..டி.பி ராஜலஷ்மி ஃபோட்டோல்லாம் வரலை அதனால பார்க்கலை.. டிம்பிள் ஃபோட்டோஸும் நான் பார்க்கலை ! (இதுக்கும் விக்ரம் க்கும் என்னா வித்யாசம்)

பார்த்தீங்களா ஸ்மால் eye
விக்ரம் எங்கே வந்தார் dimple பதிவில்
அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள்
-
25th September 2014, 01:38 PM
#3099
உடுமலை நாராயணகவி பிறந்த தினம் -நினைவு கூர்ந்த மாலை மலர் நாள் இதழுக்கு நன்றி - 25/09/1899

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி-முத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.
இளம் வயதிலேயே தம் தாய், தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் வாடினார். தனது சகோதரர் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.
விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.
1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார் கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 01:39 PM
#3100
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks