-
28th September 2014, 04:11 AM
#11
Junior Member
Devoted Hubber
Venkkiram,
மஞ்சபொடி தேக்கையிலே பாடல் ராஜா சாரின் பெஸ்ட் ஒப் தி பெஸ்ட் பாடல்களில் நிச்சயம் இடம் பெரும். ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்க வைக்கும் பாடல்.
RP விஸ்வத்தை நன்றாய் நினைவில் வைத்திருக்கிறீர்களே.. இந்த படம் மட்டுமல்ல, அறுவடை நாளில் ரத்னவேலாக வரும் அவருடைய பாத்திரத்தை மறக்க முடியுமா? பாவம் இளவயதிலேயே மறைந்து விட்டார்.
ரேகா ஒரு விதமான அழகு, பார்க்க சற்று முதிர்க்கன்னி போல் தோன்றும். சிறு சிறு முகபாவங்கள் கொடுத்து அசத்திவிடுவார். கொடியிலே மல்லியப்பூ பாடலில் ரேகாவை உட்கார வைத்துவிட்டு இதோ வருகிறேன் என்று கடலுக்குள் சத்யராஜ் போய் விடுவார். போனவரை காணவில்லையே என்று ரேகா துடிப்புடன் எழுந்து ஓடி பயத்துடன் நிற்க, அவருக்கு பின்புறம் சத்யராஜ் ஒரு பெரிய மீனுடன் நின்று பயம் காட்ட, அடுத்த சில நொடிகளில் பயம், அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தோஷம் என அடுக்கடுக்காய் பாவங்கள் கொடுத்து அசத்தி இருப்பார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2014 04:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks