-
29th September 2014, 09:06 PM
#1821
Junior Member
Senior Hubber

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2014 09:06 PM
# ADS
Circuit advertisement
-
29th September 2014, 09:12 PM
#1822
Junior Member
Senior Hubber

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2014, 09:21 PM
#1823
Junior Member
Regular Hubber
நடிகர்திலகத்தின் பிறந்தநாளுக்கு
கோவை மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர்,
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
-
29th September 2014, 09:24 PM
#1824
Junior Member
Regular Hubber
நடிகர்திலகத்தின் பிறந்தநாளுக்கு
கோவை மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர்,
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/[IMG][/IMG]
-
29th September 2014, 10:03 PM
#1825
Junior Member
Senior Hubber
மதுரையில் மழை மற்றும் பந்த் நடந்த போதும் வெள்ளைரோஜா வசூல் மழை
படம் வெளியான வெள்ளி அன்று பெரிய வசூலுடன் தனது பயணத்தை ஆரம்பித்த நமது தலைவர். சனி அன்று காலை மற்றும் மதியம் மட்டும் ஓடியது. மாலை மற்றும் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. மறு நாள் ஞாயிறு அன்று காலை, மாலை காட்சி நல்ல வசூல். மாலை காட்சிக்கு மாலை 4 மணி முதல் பரவலான மழை, இருந்தபோதும் மழையில் நனைந்து கொண்டே ரசிகர்கள், மற்றும் பொதுமக்கள் குவிய தொடங்கினர். பஸ் போக்குவரத்து கிடையாது, மழை இதையெல்லாம் தகர்த்தெறிந்து மாலை காட்சிக்கு 421 பார்வையாளர்கள் வந்து திரை அரங்கையே அதிர வைத்தனர். பட வெளியீட்டாளர் நல்ல விளம்பரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரமேஷ்பாபு, சோமசுந்தரம், வெங்கடேஷ், பழனி, குமார், ராஜன் போஸ், பாண்டி, வைகை சுந்தர் மற்றும் ரசிகர்களின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. இதை பார்ப்பதற்கென்றே தியேட்டர்க்கு ஒரு கூட்டம் வந்தது என்பது மற்றொரு விஷயம்.
மொத்தத்தில் விநியோகஸ்தர்கள் மத்தியில் நமது தலைவரின் வெள்ளைரோஜா வசூல் வியப்பை தந்தது.





இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:56 AM
#1826
நண்பர்கள் KCS மற்றும் RKS ஆகிய இருவருக்கும்,
என் பணிவான வேண்டுகோள். இந்த விவாதத்தை தவிர்க்கலாமே!
சந்திரசேகர் சார்,
தன்னிடம் கூறப்பட்ட ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொண்டார் rks. அதற்கு சற்று அதிகப்படியாகவே உங்கள் எதிர் வினை அமைந்து விட்டதோ என்று ஒரு ஐயம். சினிமா விநியோகத்தை தொழிலாக கொள்ளாதவர்கள் சொன்ன செய்தி. அதைதான் உங்களிடம் சொல்லியிருக்கிறார். தொழில் முறை விநியோகஸ்தராக இல்லாமல் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாக வேண்டும் அதை இக்கால இளைஞர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள். இதில் லாபம் நட்டம் என்பதை தாண்டி பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த பொது மன்றத்தில் விவாதப் பொருளாக வைக்க முடியாது என்பதனாலும் எந்தவித லாப நோக்கின்றி செயலபடும் ஒரு சில மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை இங்கே பொது மேடையில் விளக்க முடியாது என்பதனாலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். சுமார் 6,7 வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை நீங்களே வினியோக துறையில் ஒரு முயற்சி செய்து பார்த்தவர் என்ற முறையில் நான் அதிகம் உங்களிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.
RKS,
நண்பர் சந்திரசேகர் அவர் நடத்தும் அமைப்பின் மூலமாக ஆற்றி வரும் பணி மிக சிறப்பானது பாராட்டுக்குரியது. அதை நீங்களும் ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். சமூக நலம் என்ற இலக்கை முன் வைத்து அதற்கு ஒரு பாதையை வகுத்துக் கொண்டு பயணம் செய்கிறார். ஆகையால் அவர் தலைமையேற்று நடத்தும் அமைப்பின் உறுப்பினர்களை சினிமாவை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல அவருக்கு ஒரு தயக்கம் இருப்பது புரிந்துக் கொள்ளக் கூடியதே! ஆகவே உங்கள் வினியோகஸ்த நண்பர்களிடம் படத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஆவன செய்யுமாறு சொல்லவும். நமக்கு எப்போதும் பொது மக்கள்தான் துணை!
இருவரும் இதை விடுத்து நடிகர் திலகம் பற்றிய பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
30th September 2014, 01:00 AM
#1827
மதுரை மாகரம் குறிப்பாக திரையரங்குகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடும் என்று எண்ணி இருந்த நேரத்தில் இன்றும் சில பிரச்சனைகளை எதிர்க் கொண்டிருக்கிறது வெள்ளை ரோஜா திரைப்படம். இன்றைய தினம் வினியோகஸ்த சங்க தலைவர் அன்புச்செழியன் உண்ணாவிரதம் இருப்பதை காரணம் காட்டி மதுரை மாநகரிலே நண்பகல் காட்சியையும் பகல் காட்சியையும் ரத்து செய்ய சொல்லி தாக்கீது வரவே இரண்டு காட்சிகள் ரத்து என்று சென்ட்ரல் திரையரங்கில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு காலைக் காட்சிக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பகல் காட்சியும் இல்லை என்று இருந்த நேரத்தில் மதியம் இரண்டு மணி அளவில் நாளை தமிழகம் தழுவிய அளவில் நண்பகல் மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறவிப்பு வரவே அவசர அவசரமாக இன்றைய பகல் காட்சி நடைபெறும் என்று சொல்லி திரையிட்டு இருக்கிறார்கள். காலைக் காட்சிக்கு வந்து காட்சியில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற கணிசமான மக்கள் சரியான தகவல் சொல்லியிருந்தால் பகல் காட்சிக்காவது வந்திருப்பார்கள். சரியான முறையில் இந்த விஷயத்தை கையாளாமல் இப்படி சொதப்புவதின் மூலம் பாதிக்கப்படுவது படத்தை வெளியிட்டவர்தான். இனி நாளையும் இரண்டு காட்சிகள் இல்லை என்று சொன்னால் அது சரியான ஒரு முறைதானா என்ற சந்தேகம் எழுகிறது! ஒழுங்காக அனைத்தும் நடந்திருந்தால் மிகப் பெரிய வசூலை ஈட்டியிருக்க வேண்டிய படம் இப்படிப்பட்ட செய்கைகளினால் பாதிக்கப்படுகிறது.
கோவை சென்னை ஆகிய ஊர்களிலும் இது போன்ற பிரச்சனைகளே!
எப்போதும் போல அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் நடிகர் திலகம் வெற்றி வாகை சூடுகிறார்!
அன்புடன்
-
30th September 2014, 01:03 AM
#1828
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு ஸ்ரீதேவி திரையரங்கம் குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தியேட்டரை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும் திலகர் திடல் அமைந்திருக்கும். தியேட்டரின் ஒரு புறத்தில் விபி சதுக்கம் என்ற இடமும் மற்றொரு பக்கம் ராஜா மில் பாலமும் அமைந்திருக்கும். நாங்கள் அன்று தர்மம் எங்கே படத்திற்கு செல்லும்போது கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் தியேட்டருக்கு எதிரே அமைந்திருந்த தெருவில் பாதி தூரம் வரை மக்கள். ஒர்க் ஷாப் ரோட்டில் இந்த பக்கம் விபி சதுக்கம் வரை மக்கள் கூட்டம். அந்த பக்கம் அதே அளவிற்கு கூட்டம். அவ்வளவு பெரிய அரங்க வளாகமோ எள் போட்டால் எள் விழாது என்பது போல் பிதுங்கி வழிகிறது. எப்படியாவது டிக்கெட் வாங்கி விட மாட்டோமா என்று இரண்டு முறை உள்ளே போய் விட்டு வெளியே வருவதற்குள் உன் பாடு என் பாடு ஆகி விட்டது.
உள்ளே வரிசையில் நிற்கும் கூட்டம் நடுநடுவே ஆட்கள் உட்புக முயற்சிக்க அதன் காரணமாக வரிசை சிதற ஏற்கனவே பெருங்கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த காவல் துறையினர் லத்தியை சுழற்ற கூட்டம் சிதறி மக்கள் மெயின் ரோட்டிற்கு ஓடி வர அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க ஒரு கட்டத்தில் போலீசார் அந்த ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு மாற்று வழியில் திருப்பி விட்டனர். அதன் பிறகும் கூட்டத்தின் ஆவேசம் குறையாமல் வளாகத்துக்குள் செல்ல முயற்சிக்க மீண்டும் அங்கே தடியடி. டிக்கெட் ஏற்பாடு செய்வதாக உள்ளே சென்றிருந்த நண்பரை காணவில்லையே என்று நாங்கள் மீண்டும் உள்ளே செல்ல முயற்சிக்க அப்போது வரிசையில் நின்றிருந்த ஒரு சில ஆட்களின் நிலையை கண்டதும் மயக்கமே வந்து விட்டது. கால் முட்டியிலிருந்து ரத்தம் வழிந்தோட ஒருவர் நிற்க, லத்தி வீசியபோது கீழே விழுந்து கைகளில் காயத்தோடு இருவர் நிற்க எல்லாவற்றிருக்கும் மேலாக தலையிலிருந்து ரத்தம் வழிய அப்படியும் வரிசையை விட்டு விலகாமல் படம் பார்த்தே தீருவேன் என்று கூட வந்தவர்களுடன் வாதம் செய்துக் கொண்டிருந்த நபர். இது தவிர சட்டை கிழிந்தவர்கள், வேட்டி கிழிந்தவர்கள், சிதறி ஓடும்போது விட்டுப் போன செருப்புகள் ஆங்காங்கே கிடக்க இவை அனைத்தையும் தாண்டி படம் பார்க்க நின்ற அந்த மக்கள் வெள்ளத்தை இன்று வரை மறக்க முடியவில்லை. அதாவது நடிகர் திலகத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்த கூட்டம் அது. அப்படிபட்ட ஒரு loyal crowd நடிகர் திலகத்திற்கு மதுரையில் இருந்தது. கால ஓட்டத்தின் சுழற்சியில் சிக்கினாலும் கூட இப்போதும் அந்த loyal crowd மதுரையில் நடிகர் திலகத்திற்கு இருக்கிறது என்பதுதான் நிஜம். இதற்கிடையில் எங்களுக்கு பின்னர் தியேட்டருக்கு வந்த என் மாமன் அந்த கூட்டத்தில் எங்களை தேடி கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி சென்றதை இரவு வீட்டிற்கு செல்லும்போது தெரிந்துக் கொண்டோம்.
அரங்க வளாகத்திற்கு வெளியே ஒரு பெருங்கூட்டம் நின்று அந்த வருடத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகள் பற்றியும் வெளிவரப் போகும் படங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க என் கசின் எக்ஸ்ட்ரா டிக்கெட் வைத்திருந்த அறிமுகமான ஒரு ரசிகரிடம் கேட்க அவர் உடனே நீதான் ஏற்கனவே இரண்டு தடவை பார்த்து விட்டாயே உனக்கு எதற்கு? வேண்டுமென்றால் இந்த பையனுக்கு [என்னை சுட்டிக் காட்டி] தருகிறேன் என்று சொல்ல அவன் சின்ன பையன் அவனை தனியாக அனுப்ப முடியாது என்று என் கஸின் சொல்ல சரி இருக்கும் இந்த இரண்டு டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு உள்ளே போய் விடுவோம். அங்கே எப்படியாவது தேற்றி விடுவோம் என சொல்லி கையில் வைத்திருக்கும் டிக்கெட்டுகள் மன்ற டோக்கன் என்பதால் அதற்குண்டான வரிசைக்கு போனால் அங்கேயும் கூட்டம் மென்னியை நெரிக்கிறது. நான் முன்னரே குறிப்பிட்டது போல் ஒரு நேரத்தில் ஒரு ஆள் மட்டுமே நகர்ந்து செல்ல முடியும் என்பது போன்ற அமைப்பு கொண்ட வரிசை. அந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிற்கும் போது கூட்டம் அப்படியே நெருக்க முதன் முறையாக நான் பயந்தேன். அதுவரை கூட்டத்தில் போகும்போது ஏற்படாத பயம் அப்போது ஏற்பட்டது. அந்த மூர்க்கத்தனமான நெருக்கலில் மூச்சு திணற நமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்தது. வேண்டாம் வெளியே போய் விடலாம் என்று பார்த்தால் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறோம், வரிசையை விட்டு வெளியே போக முடியாது எனபது புரிந்தது. நான் சிறுவன் என்பதால் எனக்கு முன்னும் பின்னும் உள்ளவர்கள் என்னை விட உயரம் என்பதால் ஏற்படும் இந்த சிக்கலை போக்க இரண்டு பக்கமும் இருந்த கம்பிகளின் மேல் கால் வைத்து மேலேறி கவுன்ட்டர் வரை அப்படியே முன்னேறினோம். கவுன்ட்டரில் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து மீண்டும் டிக்கெட் வேட்டையை தொடர்ந்தோம். பெண்கள் டிக்கெட், தியேட்டர் நிர்வாக அலுவலகம் ஒன்றையும் விடவில்லை. ஆனால் பலன் பூஜ்யம்.
இதற்கிடையில் படம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட அனைவரும் உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்று ஐந்து காட்சிகள் நடைபெற்றதாலும் மாலை மணி 6.30 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் நியூஸ் ரீல் மற்றும் விளம்பரங்கள் ஏதுமின்றி படம் நேரடியாக துவங்கும் என்று தியேட்டர் ஆட்கள் சொல்லிக் கொண்டிருக்க அது ஒரு பக்கம் ஆவலும் மறுபக்கம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற பதட்டமும் ஒரே நேரத்தில் ஏற்பட, இவ்வளவு முயற்சி எடுத்து இத்தனை தூரம் வந்து விட்டு டிக்கெட் கிடைக்காமல் போவதா என்ற ஏமாற்றம் மனதை பிசைய இருவரும் அலைகிறோம். எக்ஸ்ட்ரா டிக்கெட் கொடுத்த நண்பர் உள்ளே சீட் கிடைக்காது. ஆகவே நான் உள்ளே செல்கிறேன் என போய்விட அரங்கத்தினுள்ளேயிருந்து பயங்கர கைதட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. படம் சென்சார் சான்றிதழ் காண்பிக்கிறார்கள். கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது. ஆபிஸ் ரூம் பக்கத்தில்தான் குளிர்பான தின்பண்ட கடை. அங்கே உள்ளே உட்கார்ந்திருந்த ஒருவர் எங்களைப் பார்த்துவிட்டு [வெகு நேரமாக எங்களை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்] டிக்கெட் வேண்டுமா என்று கேட்க அப்படியே நாங்கள் மலைத்துப் போக [சென்ட்ரல் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமாவிற்கு நடந்தது போல] தெரிந்த ஒருவர் டிக்கெட் வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்காக எடுத்து வைத்தது. அவர் இந்த கூட்டத்தில் சிக்கி கொண்டார் போல, நீங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல தெய்வமே என்று அவரை வணங்காத குறையாக அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் இடத்தில டிக்கெட் கிழிக்கும் தியேட்டர் ஊழியர், ஒரு constable மற்றும் இரண்டு நபர்கள் நின்று எங்களையும் மற்றும் எங்கள் முன் உள்ளே செல்ல முயன்றவர்களையும் தடுக்கிறார்கள். காரணம் என்னவென்றால் படம் பார்க்க வந்த அந்த இரண்டு நபர்களில் ஒருவரின் கை கடிகாரம் தொலைந்து போய் விட்டதாம். ஆகவே ஒவ்வொருவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க எங்களுக்கோ தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே என்ற கவலை. ஒரு வழியாக சோதனை முடிந்து டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 06:37 AM
#1829
Senior Member
Seasoned Hubber
நம் அன்புச் சகோதரர் பம்மலாரின் காலண்டர் மிகச் சிறப்பான முறையில் வெளிவந்துள்ளதோடு மட்டுமின்றி சிறப்பான வரவேற்பையும் பெற்று வருகிறது. அவருக்கு நமது பாராட்டுக்கள்.
நமது நீண்ட நாள் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணம் விரைவில் வெளிவருகிறது நடிகர் திலகம் புகழ் மாலை. இதோ புகழ் மாலை விளம்பரம்...

பம்மலாருக்கு நமது உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2014, 11:46 AM
#1830
Junior Member
Veteran Hubber
Tributes to NT : ensuing B’day remembrance!
இதிகாச , வரலாற்று, புதின மற்றும் சாதனை நாயகர்களின் ஆடையலங்கார வடிவமைப்பில் பொருந்தும் Top 10 get-ups of நடிகர்திலகம்
1. மராட்டிய மாமன்னர் சிவாஜி coming alive right before our eyes in the form of NT with his magic touch and mesmerizing acting skill to depict the traits of Shivaji, the warrior!
Enjoy the original amazing horse riding skills and sword wielding style of NT without any body double!
Last edited by sivajisenthil; 30th September 2014 at 01:02 PM.
Bookmarks