Page 190 of 400 FirstFirst ... 90140180188189190191192200240290 ... LastLast
Results 1,891 to 1,900 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1891
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Recognition for our veteran hubber Mr Raghavendra Sir at NT's Birthday function. I take this opportunity to congratulate Mr Raghavendra for the
    memonto received from Mr G Ramkumar. Remaining details I request Mr Murali to post here for the benefit of Millons of NT's fans.

    a function will be remembered for the thought provoking speech by Mr Pon Radhakrishnan.

    Now overto Mr Murali.

    Regards

  2. Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1892
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இன்று முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக திருச்சி தகவல் கூறுகின்றன. இன்றைய தமிழக சூழ்நிலையிலும் வேலை நாளிலும் ஆயுத பூஜைக்கு முன்னேற்பாடுகள் நடக்கும் நிலையிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக இருந்த நேரத்திலும் இன்றைய தினம் 450 பேர் கண்டு களித்திருக்கின்றனர். இதில் வியப்பூட்டும் விஷயம் வந்தவர்களில் 100 பேர் பெண்கள் என்பதாகும். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு மற்றும் வசூல் பற்றி மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  5. #1893
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Recognition for our veteran hubber Mr Raghavendra Sir at NT's Birthday function. I take this opportunity to congratulate Mr Raghavendra for the
    memonto received from Mr G Ramkumar. Remaining details I request Mr Murali to post here for the benefit of Millons of NT's fans.

    a function will be remembered for the thought provoking speech by Mr Pon Radhakrishnan.

    Now overto Mr Murali.

    Regards
    வாசு,

    முந்தைய வருடங்களில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நடைபெறும்போது அவ்விழாவைப் பற்றிய செய்திகளை திரியில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். காரணம் அன்றைய காலத்தில் அவை முழுமையாக மக்கள் மத்தியில் சென்று அடைய வழி இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2,3 வருடங்களாக விழா நிகழ்வுகள் You Tube போன்ற இணையதளங்களில் இவை தரவேற்றப்படுவதால் நாம் விழாவையோ அல்லது சிறப்பு விருந்தினரின் பேச்சையோ எழுத தேவையில்லாத சூழல்.

    மிக மிக முக்கியமான மூன்று சந்தோஷங்கள் இன்றைய விழாவின் மூலம் கிடைத்தது. முதலும் முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது. இன்றைய பிறந்த நாள் விழாவில் சிவாஜி விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் நடிகர் திலகத்துடன் இனைந்து நடித்த காட்சிகளை தொகுத்திருந்தது நமது ராகவேந்தர் சார்தான். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தைப் பற்றிய தனிப் பாடல் பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகத்தின் பல்வேறு வகையான கெட் அப்கள் அடங்கிய புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் மின்னியதை தொகுத்தவரும் அவரே. வ்வாழ்துகள் ராகவேந்தர் சார்.

    இரண்டாவது சந்தோசம் வெளி நாட்டிலிருந்தும் கூட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கலந்துக் கொண்டது. பர்மா இன்றைய மியன்மார் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஒரு புறம் என்றால் என்னோடு நீண்ட நாட்களாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் கனடா வாழ் இலங்கை தமிழர் ஞானேந்திரன் தன குடும்பத்தோடு இதற்காகவே வந்தது. கிளிப்பிங்க்ஸ் திரையிட்ட போதெல்லாம் மகிழ்வும் அது தந்த ஆனந்தக் கண்ணீரும் பொங்க பார்த்தவர் விழா முடிந்ததும் மனம் நெகிழ பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒத்த ரசனையுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு அவர் நன்றி சொல்ல, விழாவிற்கு வந்ததற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்லி அவரை சந்தோஷத்தோடு வழியனுப்பியது இரண்டாவது பெரிய சந்தோசம்.

    Last but not the least சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை. 30 நிமிடம் பேசிய அவர் தன்னை முழுக்க முழுக்க ஒரு சிவாஜி ரசிகராகவே இனம் காட்டிக் கொண்டு பேசினார் என்பதுதான் சிறப்பு. நடிகர் திலகத்தின் பல்வேறு வேடங்களை சுட்டிக்காட்டி [குறிப்பிட வேண்டிய விஷயம் அனைவருக்கும் தெரிந்த படங்களைப் பற்றி மாவு அரைக்காமல் ரங்கோன் ராதா திரும்பிப் பார் போன்ற படங்கள் மற்றும் வாழ்க்கை படத்தைப் பற்றியும் சிலாகித்து பேசி] இன்றைய திரை உலகத்திற்கு மட்டுமல்ல இன்றைய தமிழக இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்குக் கூட நடிகர் திலகம் எப்படி relevant ஆகப் பொருந்துகிறார் என்பதை எடுத்துரைத்து நடிப்பு என்பது ஒரு மதமானால் அதற்கு நடிப்புக் கடவுள் நடிகர் திலகம் அவரின் பிறந்த நாளை கொண்டாடாத நடிகர் சங்கத்திற்கு பலமாக குட்டு வைத்து, வரும் காலங்களில் நடிகர் திலகத்திற்கு புகழ் சேர்க்கும் விதம் அவருக்குரிய கெளரவம் செய்யப்படும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவர் பெயில் அரசாங்க விருதுகள் வழங்கப்பட வேண்டும் அதற்கான நேரம் காலம் கனிந்து வருகிறது என்று உற்சாகப்படுத்தி சுருக்கமாக சொன்னால் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் மனத்திலும் நல்ல இடத்தைப் பிடித்தார் இந்த நாகர்கோவில் ராசாக்கமங்கலம் ஊர்காரர்.

    வீடியோ தரவேற்றப்படும்போது இவரின் பேச்சை முழுமையாக அனைவரும் கண்டு கேட்டு ரசிக்கலாம்.

    அன்புடன்

  6. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  7. #1894
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இணைபிரியாத இரு மேதைகள்... ஒருவரின் பிறந்த நாளும் இன்னொருவரின் நினைவு நாளும் ஒரே மாதம்.. அதே போல் ஒருவரின் நினைவு நாளும் இன்னொருவரின் பிறந்த நாளும் ஒரே மாதம்...

    பெருந்தலைவரின் உண்மையான ஒரே தொண்டன் என்பதற்கு இதைவிட சாட்சி இல்லை..

    தூய்மையான அரசியலின் அடையாளங்கள்...

    தங்களின் புகழ் வாழ்க...
    Last edited by RAGHAVENDRA; 2nd October 2014 at 08:21 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #1895
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்
    தங்களுடைய சிறப்பான பதிவின் மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பினை மீண்டும் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி.
    நடிகர் திலகம் இணைய தளத்தைப் பற்றிக் கூறியதன் மூலம் இணைய வழி நடிகர் திலகம் புகழைப் பரப்பும் முயற்சிகளுக்கு பிரபு அவர்கள் கூறிய நன்றியாகவே இதை நான் நினைத்துக் கொள்கிறேன். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1896
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    My Life Is My Message : Mahaathmaa Gandhiji

    Today for Gandhian Thoughts! Gandhi himself became a philosophy that teaches us to win through 'Ahimsaa', the term which has almost become a lip service only on the occasion of his birth day celebrations. Though not a direct disciple of Gandhi, NT served the nation through his films upon the Gandhian messages adopted by his mentor Kamaraj. We all try to understand Gandhian thoughts as if six blind men trying to understand how an elephant looks! The true tribute to Gandhiji is the implementation of total 'madhuvilakku' and 'pulaal unnaamai' besides the 'ahimsaa' way of our struggles to any cause! The 'white' elephant is possible?!(Wikipedia: Gandhiji considered the consumption of alcohol as a major social evil and encouraged complete prohibition in India.Prohibition in India exists in the states of Gujarat and Nagaland; parts of Manipur; as well as the Union Territory of Lakshadweep. Kerala is implementing prohibition in phased manner. All other Indian states and union territories permit the sale of alcohol.)

    A small film made for children, but certainly, it teaches everyone!




    Last edited by sivajisenthil; 2nd October 2014 at 10:21 AM.

  11. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1897
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT Thread's tributes to the Father of our Nation:

    Last edited by sivajisenthil; 2nd October 2014 at 10:32 AM.

  13. #1898
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT Thread's tributes to the Father of our Nation:



    the only tamil movie song devoted to Gandhiji!?



    Last edited by sivajisenthil; 2nd October 2014 at 10:34 AM.

  14. #1899
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது. இன்றைய பிறந்த நாள் விழாவில் சிவாஜி விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் நடிகர் திலகத்துடன் இனைந்து நடித்த காட்சிகளை தொகுத்திருந்தது நமது ராகவேந்தர் சார்தான். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தைப் பற்றிய தனிப் பாடல் பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகத்தின் பல்வேறு வகையான கெட் அப்கள் அடங்கிய புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் மின்னியதை தொகுத்தவரும் அவரே. வ்வாழ்துகள் ராகவேந்தர் சார்.
    திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்குக் கிடைத்த இந்தப் பெருமை, கெளரவம், நடிகர்திலகம் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க, மகிழத்தக்க ஒரு நிகழ்வு. வாழ்த்துக்கள் ராகவேந்தர் சார்.
    Last edited by KCSHEKAR; 2nd October 2014 at 10:38 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. Thanks RAGHAVENDRA thanked for this post
  16. #1900
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Video rendering of a poem on Nadigar Thilagam

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes joe liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •