-
5th October 2014, 10:11 PM
#1971
Junior Member
Seasoned Hubber
Wonderful song for NT's fans from Babu. If anyone watches the movie even today it will bring tears on his face. That is the greatness of NT who lives forever in
the hearts of tamil speaking people all over the world. The once scene where he shares the food with Baby sridevi is a touching one. Now you can see one dead face
in today's actors who does not know how to give expression or modulate in a particular situation.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th October 2014 10:11 PM
# ADS
Circuit advertisement
-
6th October 2014, 12:34 AM
#1972

Originally Posted by
SPCHOWTHRYRAM
தற்போது நடைபெறும் அரசியல் சூழலால் எப்போது பேருந்து ஓடும் எப்போது ஓடாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்
எந்த திரைஅரங்கிலும் புதுப்படங்களுக்கே கூட்டம் இல்லாத நிலையிலும் தலைவரின் அண்ணன் ஒரு கோவில் துளி கூட தடுமாறாமல்
நான்காவது நாளாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று ஞாயிறு மதியம் காட்சி வரை வினியோகஸ்தர் பங்கு ரூ. 7500 தாண்டிவிட்டது.கண்டிப்பாக நாளைக்குள் ரூ.10000 ஐ தொட்டுவிடும் என்பதில் தயக்கமில்லை.
இந்த வருடத்தில் வெளியான எங்கள் தங்க ராஜா, உயர்ந்த மனிதன், வெள்ளை ரோஜா, தங்கப்பதக்கம், அண்ணன் ஒரு கோவில் அனைத்துமே வினியோகஸ்தருக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் சிறந்த லாபத்தை தந்துள்ளது என்பது மகிழ்ச்சியான் செய்தி.
மேலும் சிவாஜி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் நிர்வாகமே தெய்வமகன், இருவர் உள்ளம் படங்களை தேடி அலைகிறார்கள்

திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக சொல்லியிருந்தேன். அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சரியான தகவலை வெளியிட்ட ராமச்சந்திரன் சாருக்கு நன்றி. பட வெளியிட்டாளர் பங்கை ராமச்சந்திரன் சார் சொல்லியிருக்கிறார். படம் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை எடுத்தோமென்றால் இந்த 5 நாட்களில் 2100 பேர் பார்த்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னால் படம் எந்தளவிற்கு steady-ஆக போயிருக்கிறது என்பது புரியும். கெயிட்டி தியேட்டர் அமைந்திருக்கும் ஏரியாவில் திரையரங்கிற்கு முன்னால் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடைபெற்று அதன் காரணமாக அங்கே பந்தல் சேர்கள் போன்றவை போடப்பட்டதால் அரங்க முகப்பே மறைக்கப்பட்டு படம் பார்க்க வந்த பலர் இதன் காரணமாக திரும்பி செல்ல நேர்ந்திருக்கிறது.
நடிகர் திலகத்தின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுவதை தடுக்கத்தான் எத்துனை முயற்சிகள்? இங்கேயெல்லாம் நடக்கும் நுண்ணரசியல் 99% மக்களுக்கு தெரிவதில்லை. சிவாஜி படங்கள் வராமல் தடுக்க முயற்சி எடுத்த பலரும் அது முடியாமல் புறமுதுகிட்டனர். இப்போது ஒரு சிலர் திருச்சியில் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மண்ணின் மைந்தர் concept. என்னவென்றால் இப்போது திருச்சியில் அண்ணன் ஒரு கோவில் படத்தை வெளியிட்டிருப்பவர் மதுரையை சேர்ந்தவர். சிவாஜி படங்கள் வருவதை விரும்பாத ஒரு சில மனிதர்கள் [இவர்கள் எண்ணிக்கையில் குறைவான நபர்களே. ஆனாலும் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்] அதை காரணம் காட்டி வெளியூர்காரர்கள் இங்கே வந்து படம் எப்படி போடலாம் என்ற கேள்வியை அரங்க உரிமையாளரிடம் எழுப்பி மறைமுகமாக ஒரு மிரட்டல் தொனியில் பேசி நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போடுவது அதையும் மீறி படம் வெளியிடப்பட்டால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற படங்களை கழுத்தை நெரித்து அதன் காரணமாக படங்களை குறைந்த நாட்களில் மாற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிவாஜி படங்கள் நன்றாக வசூலிப்பதால் அவற்றை திரையிட அரங்க உரிமையாளர் ஆவல் காட்டுகிறார், முயற்சி எடுக்கிறார் என்றபோதினும் இது போன்ற சூழ்ச்சிகளையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.
எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!
சென்னை மகாலட்சுமியில் சென்ற வாரம் வெள்ளி முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். சென்ற வாரம் [ இப்போதும் கூட] நிலவிய அரசியல் சூழல், பல இடங்களிலும் தெருவெங்கும் நடந்த போராட்டங்கள், சில பல சங்கங்கள் நடத்திய பந்த்கள் அதன் காரணமாக நிறுத்தப்பட்ட காட்சிகள் என்று பலவகையான குழப்பத்திலும், மொத்தம் திரையிடப்படுவதாக இருந்த 14 காட்சிகளில் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 11 காட்சிகளே நடைபெற்ற நிலையிலும் சங்கிலி திரைப்படம் அந்த 11 காட்சிகளில் ரூபாய் 55,000/- வசூல் செய்திருக்கிறது. இரண்டு காட்சிகள் என்ற concept அறிமுகப்படுத்தப்பட்டபின் எந்த படமும் 11 காட்சிகளில் இந்தளவிற்கு வசூலிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது அமைதியும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கும் இந்த அருமையான வசூல், அனைத்துக் காட்சிகளும் ஓடியிருந்தால் இன்னும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கும் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
கோபால்,
பல ஊர்களிலும் இது போன்று நடக்கும் பிரச்சனைகளை ஆங்காங்கே இருக்கும் நண்பர்கள் RKS அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள அந்த சூழ்ச்சிகளை முறியடிக்கத்தான் RKS, நண்பர் சந்திரசேகர் அவர்களின் பேரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வேண்டினார். அதன் உட்பொருள் தெரியாமல் நீங்கள் [நீங்கள் கூட] என்னவோ RKS சந்திரசேகர் அவர்களை தவறாக பேசியது போல் நினைத்துக் கொண்டு பதிவிட்டது வருந்ததக்கது. நமது திரியில் பங்களிப்பாளர்கள் அனைவரும் யார் யார் எந்த எந்த பதிவுகளை என்ன தொனியில் பதிவிடுகிறார்கள் என்பதை புரிந்து எதிர் வினை புரிந்தாலே இங்கே எந்த குழப்பமும் வராது.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
6th October 2014, 07:23 AM
#1973
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th October 2014, 08:13 AM
#1974
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas;1169818
[COLOR=#FF0000
நடிகர் திலகத்தின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுவதை தடுக்கத்தான் எத்துனை முயற்சிகள்? இங்கேயெல்லாம் நடக்கும் நுண்ணரசியல் 99% மக்களுக்கு தெரிவதில்லை. சிவாஜி படங்கள் வராமல் தடுக்க முயற்சி எடுத்த பலரும் அது முடியாமல் புறமுதுகிட்டனர். இப்போது ஒரு சிலர் திருச்சியில் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மண்ணின் மைந்தர் concept. என்னவென்றால் இப்போது திருச்சியில் அண்ணன் ஒரு கோவில் படத்தை வெளியிட்டிருப்பவர் மதுரையை சேர்ந்தவர். சிவாஜி படங்கள் வருவதை விரும்பாத ஒரு சில மனிதர்கள் [இவர்கள் எண்ணிக்கையில் குறைவான நபர்களே. ஆனாலும் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்] அதை காரணம் காட்டி வெளியூர்காரர்கள் இங்கே வந்து படம் எப்படி போடலாம் என்ற கேள்வியை அரங்க உரிமையாளரிடம் எழுப்பி மறைமுகமாக ஒரு மிரட்டல் தொனியில் பேசி நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போடுவது அதையும் மீறி படம் வெளியிடப்பட்டால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற படங்களை கழுத்தை நெரித்து அதன் காரணமாக படங்களை குறைந்த நாட்களில் மாற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிவாஜி படங்கள் நன்றாக வசூலிப்பதால் அவற்றை திரையிட அரங்க உரிமையாளர் ஆவல் காட்டுகிறார், முயற்சி எடுக்கிறார் என்றபோதினும் இது போன்ற சூழ்ச்சிகளையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.
[/COLOR]
எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!
.
இப்படி தடை எல்லாம் செய்துகொண்டுதான்
வீரப்பிரதாபங்கள் செய்கிறார்களா?
Last edited by sivaa; 6th October 2014 at 08:16 AM.
-
6th October 2014, 08:37 AM
#1975
Junior Member
Veteran Hubber
அம்மம்மா ....உன்னதநடிப்பின் உச்சநாயகன்!
Value Addition to Rajapart Rangadhurai (1973) rerelease in 2014!
தெய்வமெனத் தான் மதித்த நடிப்புத்தொழிலில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நேரம் தவறாமை என்னும் சீரிய பண்பை ஏனைய சக கலைஞர்கள் மட்டுமன்றி எத்தரப்பினரும் கடைப்பிடிக்கும் வண்ணம் கற்றுத்தந்து வழிகாட்டிய ஆசான் நடிகர்திலகம். ராஜபார்ட் ரங்கதுரையில் கையில் இரு கட்டைகளை
வைத்துக்கொண்டு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டு 'அம்மம்மா...' பாடலுக்கு அவர் தந்திருக்கும் அவருக்கே உரிய பிரமிக்க வைக்கும் வாயசைப்பும் முகபாவனைகளின் தேக்கமும் வெளிப்பாடுகளும்......உன்னத நடிப்பலையின் உச்சம்! (சிறுவயது ரங்கதுரையாக நடிகர்திலகத்தின் பராசக்தி திரைப்படத் தோற்றத்தை நினைவுறுத்தும் விதமாக வரும் சிறுவன் Master Rajkumar மிகப்பொருத்தமான தேர்வு.....இவர் ராமு(1966) திரைப்படத்தில் ஜெமினியின் மகனாக நடித்தவர். See how the legend of NT descends on even a child artist when he enacts the younger part of NT! that is the magical touch and the silky neurotic charm of NT's acting prowess!!)
Last edited by sivajisenthil; 7th October 2014 at 12:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
6th October 2014, 09:03 AM
#1976
Junior Member
Veteran Hubber
Another Tip of the Acting Iceberg in Raajapaart Rangadhurai!
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
6th October 2014, 10:19 AM
#1977
Junior Member
Seasoned Hubber
Mr Siva
Thanks for the initiative taken by you in uploading the Kungumam article on NT. I have requested last week itself if anyone have the facility can upload the same.
Once again thanks for your support.
Regards
-
6th October 2014, 10:19 AM
#1978
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sivaa thanked for this post
-
6th October 2014, 10:26 AM
#1979
Junior Member
Seasoned Hubber
From the old issue of Ananda Vikatan
இந்த வார ஆனந்த விகடனில் இயக்குநர் சேரன் நம் நடிகர் திலகத்தை சந்தித்ததை இப்படி எழுதுகிறார்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது!
இயக்குநர்கள் அத்தனை பேரும் வாழ்த்தப் போயிருந்தோம்.'அன்னை இல்லம்'...எங்கேயோ தொலைதூரத்துக் கிராமத்துச் சிறுவனாக இருந்தபோதே ,என் கனவுகளில் உலவிய நாயகனின் அரண்மனை.என் எத்தனையோ சாயங்காலங்களைச் சந்தோஷப்படுத்திய ராஜகுமாரனை நேரில் சந்திக்கப் போகிறேன்.
"வாங்கப்பா டைரக்டர்ஸ்" எழுந்து நின்று வரவேற்கிறார் சிவாஜி.ஜிப்பா வேட்டியில் சிகப்பான பெரியப்பா போல இருக்கிறார்..கூச்சத்தில் ஓரமாக ஒதுங்கிய என்னை முன்னே இழுத்து "இவன் சேரன்.இவன் தான் இப்போ பெரிய டைரக்டர்" என்று சிவாஜியின் காலடியில் தள்ளுகிறார் பாரதிராஜா சார். விழுந்து வணங்கிய என் கை பற்றி "நல்ல்ல்ல்ல படம்ப்பா.நல்ல்ல்ல்லா பண்ணியிருந்தே .நல்ல்ல்ல்லா இரு!" என்று சிம்மக் குரலில் ராகம் போட்டு சிவாஜி சார் என்னை வாழ்த்த..இதைப் பார்க்க என் அம்மாவும் அம்மாச்சியும் பக்கத்தில் இல்லயே என ஏங்கினேன்.
சிவாஜி அய்யாவை வைத்து ஒரு படம் இயக்கவும் ஆசைப்பட்டேன்.'தேசிய கீதம்' படத்துக்கு என் முதல் சாய்ஸ் சிவாஜி சார்தான்.கதை சொல்லப் போயிருந்தேன்.
முழுசாக இரண்டரை மணி நேரம் நான் கதை சொல்ல சொல்ல ..என் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்தார்.எமோஷனலாக நான் சில காட்சிகளை விவரிக்கும் போது ,அவர் புருவங்கள் விளையாட..கண்கள் உருண்டோட முகபாவங்கள் மாறுவதை பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டுமே..அத்தனை அழகு!
நடுவே ஏதோ வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்த அவரது பேத்தி ,தாத்தாவிடம் ஆசி வாங்க வந்து தயங்கி நிற்க "எக்ஸ்க்யூஸ் மி டைரக்டர் சார்..ஒரே ஒரு நிமிஷம் ப்ளீஸ்" என்று பேத்தியின் தலை தொட்டு ,கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பினார்.
"நல்ல கதை.பெருந்தலைவர் காமராஜர் ,என் நண்பன் கக்கன் மாதிரி நல்ல மனுஷங்க அரசியல்ல இருந்த காலமெல்லாம் எங்கடா போச்சுன்னு கேக்க வந்திருக்கே..நான் நிச்சயமா நடிக்கிறேன்..அந்த கிளைமாக்ஸ் சொன்னல்ல..ந்தா பாரு..இப்பிடி!" என்று எழுந்தார்.
ஒரே ஒரு ரசிகனுக்காக நடிகர் திலகமே நடிக்க எழுகிறார். முதுமையில் உடல் தள்ளாட,பெருங்கோபத்தில் உள்ளம் கொதிக்க .."நான் இப்படி நிக்கிறேன் .நீ எதிர்ல பேனை புல்லா போடு .காத்துல என் தாடி ,தலைமுடியெல்லாம் பறக்குது. என் கண்ணு செவக்குது .கன்னம் துடிக்குது .எதிர்ல இருக்குற ஒவ்வொருத்தனையும் பார்வையாலயே பஸ்பமாக்குற மாதிரி என் நெஞ்சு கொதிக்குது .'இதுக்காடா நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சொதந்திரம் வாங்கினோம்?" னு அழுகையும் ஆத்திரமுமா நான் கேக்கிறேன். நல்லா இருக்கா? இது ஓ.கே.யா?'
எத்தனை உயர்ந்த மனிதர் .என்னைப் போன்ற ஒரு சின்ன பையனிடம் ,ஏதோ தன் முதல் படத்துக்கு வாய்ப்பு கேட்பதைப் போன்ற வேகத்துடன் தாகத்துடன் நடித்துக்காட்டுகிறாரென்றால்..அது தானே தொழில் பக்தி!
இன்றைக்கு கேரவேன்களுக்கு வெளியே இயக்குநர்களைக் காக்கவைத்துவிட்டு திமிருடன் திரியும் சில நடிகர்களை நினைத்தால் எனக்குள் வேதனை வழியும்.
காரைக்குடியில் கொளுத்தும் வெயில் காலத்தில் படப்பிடிப்பு .கதைக்களம் அப்படி .அப்போது உடல்நலக்குறைவில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிவாஜி சாரை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்பதால் ,எனக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போயிற்று.
நன்றி : விகடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
6th October 2014, 02:29 PM
#1980
Junior Member
Devoted Hubber
NT 86th Birthday celebration new video
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks