-
6th October 2014, 09:17 PM
#741
Junior Member
Diamond Hubber
-
6th October 2014 09:17 PM
# ADS
Circuit advertisement
-
6th October 2014, 10:28 PM
#742
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Chandrasekar Iyer
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.
தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.
'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.
அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)
மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.
நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது..
Super arumana pathivu chandrasekar sir endrum engal kuladeivam MGR
-
6th October 2014, 10:35 PM
#743
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
பக்ரீத் நினைவுகள்
நண்பர்களுக்கு, பக்ரீத் வாழ்த்துக்கள்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர் முஸ்லிம் வேடத்தில் நடித்த படங்களின் பட்டியலை திரு.எஸ்.வி.சார் பதிவிட்டிருந்தது மகிழ்ச்சி. அந்தப் படங்களைப் பற்றிய சில காட்சிகள் மனதில் மின்னலாய் தோன்றின.
*குலேபகாவலி படத்தில் காட்டுவாசிகளிடம் பிடிபட்டு அவர்கள் தலைவரை பலி கொடுப்பதற்காக, பலி பீடத்தில் தலையை வைத்து கத்தியை ஓங்கும்போது, பலி பீடத்தில் தலை இருக்கும் நிலையில், கண்களை இறுக மூடி, பல்லைக் கடித்து முகத்தை சுருக்கி ஒரு expression கொடுப்பார் பாருங்கள். நிச்சயம் உண்மையாகவே வெட்டப் போவதில்லை என்பது நமக்கும் தெரியும். தலைவருக்கும் தெரியும். இருந்தாலும் மரண பயத்தை வெளிப்படுத்தி நமக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறாரே அதுதான் நுட்பமான நடிப்பு. இதில், தலைவர் கில்லாடி.
*ராஜா தேசிங்கு படத்தில் தம்பி தேசிங்கு (அதுவும் தலைவர்தான்) சண்டை போடும் அழகை பார்த்து அவரை கொல்ல மனமின்றி அவரை தாக்க எடுத்த ஈட்டியிலேயே சாய்ந்து கொண்டு தாவூத்கான் (இதுவும் தலைவர்தான்) ரசிக்கும் அழகு.
*பாக்தாத் திருடன் படத்தில் ‘சொக்குதே மனம், சுத்துதே ஜகம்’ பாடலில் குடிபோதையில் இருக்கும் நம்பியார் முன் வைஜெயந்தி மாலா பம்பரமாய் ஆட, சரோடு வாத்தியத்தை வாசித்துக் கொண்டே தலைவர் காட்டும் முகபாவங்கள்.
*சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் அப்துல் ரகுமானாக தலைவர் வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பு. இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் நடிப்பு, சாயல் முஸ்லிம் பாத்திரத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஒரு கடமை தவறாத முஸ்லிமைப் போல நேர்த்தியாக தொழுகை செய்யும் அற்புதம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் தலைவரை விட, அப்துல் ரகுமான் பாத்திரத்தில் சற்று குண்டாக தெரிவார். குரலை கரகரப்பாக்கி பேசியிருப்பார். லுங்கியை பின்னால் லேசாக தூக்கிப் பிடித்தபடி காலை அகட்டி வைத்து நடந்து அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார். (நடிகன்டா!)
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ஜன்ஜீர் படத்தின் தழுவலே சிரித்து வாழ வேண்டும். ஜஸ்டினுடன் பாத்ரூம் சண்டைக் காட்சியில் வேகமாக ஓடி சுவற்றில் காலைப் பதித்து பந்து போல எழும்பி ஜஸ்டின் மீது மோதி விழச் செய்வார். (இந்த சண்டைக் காட்சியை நேரம் கிடைக்கும்போது விரிவாக அலசலாம். இந்த உத்தியை பின்னர், பல படங்களில் விஜயகாந்த் பயன்படுத்தி இருப்பார்)
VIDEO COURTESY- VINOD SIR
இந்த சண்டைக்கு முன் எலக்ட்ரிகல் ஷேவர் மூலம் தலைவர் ஷேவ் செய்து கொண்டிருப்பார். நவீன கண்டுபிடிப்புகளை புதுமையை தலைவர் தனது படங்களில் காட்டுவார். 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் படங்களில் முதல் முதலில் எலக்ட்ரிகல் ஷேவரை அறிமுகப்படுத்தியது தலைவர்தான். நீதிக்கு தலைவணங்கு படத்திலும் எலக்ட்ரிகல் ஷேவரை பயன்படுத்தும் காட்சி வரும். மேலும், கடைசி சண்டை காட்சியில் ஒரு புதுமையாக ஸ்லோ மோஷனில் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ‘ஆடுவது கடமையின் நினைவாக’ பாடலில் எந்தப் படத்திலும் இல்லாத புதுமையாக ஒரு பாடல் காட்சியில் ஒரு நடிகருக்கு இரண்டு பாடகர்கள் பாடியிருப்பதும் இதில்தான். டிஎம்எஸ் பாடலை பாடியிருந்தாலும், முஸ்லிம் குரல் effect-க்காக ‘மண்ணுக்குள் மறைவாக என்ன விதை போட்டாலும், போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ... கண்ணை மறைத்தென்ன காரியத்தை செய்தாலும் காலக் கணக்கனவன் சாட்சி வைக்க மாட்டானோ?’ வரிகளை பாடகர் ஷேக் முகமது பாடியிருப்பார். அபூர்வ ராகங்கள் படத்தில் ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ பாடலை பாடியது இவர்தான்.
தலைவர் mass நடிகராகவே முன்னிறுத்தப்பட்டதால் அவரது class நடிப்பு பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றுதான் சொல்கிறேன். கவனிக்கப்படவே இல்லை என்று கூறவில்லை. அப்படி ஓரளவு கவனிக்கப்பட்டதற்கே அவரது இயற்கையான நடிப்பின் நுட்பத்தையும் திறமையையும் பாராட்டி அவருக்கு, இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்ததென்றால், பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால்... திரு. லோகநாதன் சார் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் உள்ளபடி, நடிக்கத் தெரியாது என்று கேலி பேசப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜான் வெயினுக்கு மற்றவர்கள் வாயை அடைக்கும் வகையில் ஆஸ்கர் விருது கிடைத்ததுபோல, தலைவருக்கும் கிடைத்திருக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Arumai nandri kalaiventhan Sir
Endrum engal kuladeivam MGR
-
6th October 2014, 10:38 PM
#744
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
பக்ரீத் வாழ்த்துக்கள் 
Attakasam muthaiyan sir
Endrum engal kuladeivam MGR
-
6th October 2014, 10:43 PM
#745
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
Arputhamana pathivu loganathan Sir
Endrum engal kuladeivam MGR
-
6th October 2014, 10:46 PM
#746
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
Realy super sir
Endrum engal kuladeivam MGR
-
7th October 2014, 05:34 AM
#747
Junior Member
Platinum Hubber
திருக்கழுகுன்றம் - மறக்க முடியாத ஊர்.
1972 அக்டோபரில் மக்கள் திலகம் அவர்கள் திருக்கழுகுன்றத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய பேச்சு திமுகவில் புயலை கிளப்பி அவரை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு சென்றது .புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின்
பேச்சால் கட்சியின் தலைமை அதிர்ந்தது . விளைவு?
புரட்சி நடிகர் எம்ஜிஆரை 10 நாளில் 17.10.1972 அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆராக உயர்த்தியது .திரை உலகில் முடி சூடா மன்னனாக வலம் வந்த மக்கள் திலகத்தை அரசியல் உலகில் ''முடி சூடிய ''மன்னனாக புரட்சித்தலைவராக உருவாக மூலக்காரணமாக திகழ்ந்த இடம் ''திருக்கழுகுன்றம் ''
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 05:44 AM
#748
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' திரைப்படம் முதலில் 6.10.1972 அன்று திரைக்கு வருவதாக இருந்தது .பேப்பரில் விளம்பரமும் வந்தது . 1972 அக்டோபர் முதல் வாரத்தில் உருவான அரசியல் பரபரப்பான சூழ் நிலையில் மக்கள் திலகத்தை திமுகவில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் உள்ளுக்குள் நடந்த நேரத்தில் இதய வீணை பட வெளியீடு 14 நாட்கள் தள்ளி 20.10.1972 அன்று திரைக்கு வருகிறது என்ற தகவல் கிடைத்தது . இதய வீணை பட பிடிப்பு நிறைவு பெற்ற நேரத்தில் 'ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே '' என்ற புதியதாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு படத்தை 20.10.1972 அன்று அதிமுக இயக்கம் தோன்றிய 4வது நாளில்'' பாரத்''- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பட்டதுடன் இதய வீணை படம் வந்து மாபெரும் வெற்றி அடைந்தது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 09:31 AM
#749
Junior Member
Platinum Hubber
from net
-
7th October 2014, 09:32 AM
#750
Junior Member
Platinum Hubber
Bookmarks