-
8th October 2014, 09:05 PM
#2041
Junior Member
Seasoned Hubber
நாகேஷ் :
படத்தின் தூண்களில் ஒருவர் , ஜாலி ஜிம்கானா கம்பெனி மேனேஜர் . இவர் பேசும் வசனங்களில் timing அபாரம்
எனக்கு வேறு இடமா இல்லை , நீயே சொல்லு டா வேற இடம்
மாப்பிளைக்கு சமைக்க தெரியனும் ரசம் வெச்ச போதும்
என்னக்கு வந்த கோபத்துக்கு , என்ன பண்ணிங்க பல்லை கடிச்சேன்
ஒரு சாம்பிள் க்கு இந்த வசனங்களை எழுதி உள்ளேன் . கல்யாண வீட்டில் மதன் என்ன டா சமையல்காரன் கிட்ட ஜாங்கிரி போட சொன்னா முழிக்கிறான் என்று கேட்க அவர் சொல்லும் பதில் சிரிப்பு அலை . என் டா அடிச்சா என்று வீராப்பாக போய் ஜம்புவிடம் அடி வாங்கும் காட்சி இப்படி சொல்லி கொண்டே போகலாம்
தங்கவேலு :
இவரும் timing ல் அசத்தும் நடிகர் தான் intelligent என்பதை intelligentely என்று சொல்லும் போதும் , சோ உடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் காட்சிகள்
நடிகைகளுக்கு இந்த படத்தில் நடிக்க scope கம்மி தான்
மனோரமா மட்டும் விதிவிலக்கு, அல்லிராணியாக அவர் போடும் ஆட்டம் அபாரம் , SN பார்வதி ஒரே காட்சியில் வந்தாலும் , முத்திரை பதிகிறார்
சிவாஜி அவர்கள் பார்வதியை எங்கு பார்த்தாலும் இந்த படத்தை நினைவு கூர்ந்து சாயா என்று அழைத்தார் (ஒரு பேட்டியில் பார்வதி அவர்கள் கூறியது )
இந்த படத்தின் உண்மையான ஹீரோ வசனம் எழுதிய திரு கோபு அவர்கள் தான்
இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் எழுதி விட்டேன் . மிக பெரிய நகைச்சுவை படத்தை பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலில் தான் கொஞ்சம் எழுதி உள்ளேன்
உங்கள் அனைவரின் பங்களிப்பு இருந்தால் இந்த நகைச்சுவை விருந்தை மீண்டும் அசை போடலாம்
Last edited by ragulram11; 12th October 2014 at 12:58 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
8th October 2014 09:05 PM
# ADS
Circuit advertisement
-
8th October 2014, 09:06 PM
#2042
Junior Member
Seasoned Hubber
Thank you Gopu Sir, KC Sekar sir, Khalnaayak Sir & Vasudevan sir
-
8th October 2014, 09:36 PM
#2043
Junior Member
Veteran Hubber
Mustache makes a man manly! NT's diversified mustaches and moods!!
ஆசைக்கு அளவில்லை! ஆண்மைக்கு அழகுசேர்க்கும் மீசைக்கு......? உலகிலேயே நடிகர்திலகம் மட்டுமே மீசைக்கும் அளவில்லை என்று நிரூபித்தவர்!
சொர்க்கம் , ராஜா, எங்க மாமா, தெய்வமகன்.......குறும்பான அரும்புமீசை! ராஜராஜசோழன், கட்டபொம்மன், தங்கபதக்கம், தேவர்மகன் ......முறுக்குமீசை! நவராத்திரி ஒட்டாத பொயமீசை! ஹிட்லர் மீசை......
தில்லானா, வியட்நாம் வீடு, கெளரவம் மீசையில்லாமல் கம்பீரம் காட்டிய படங்கள்
Last edited by sivajisenthil; 9th October 2014 at 02:19 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2014, 10:31 PM
#2044
Senior Member
Devoted Hubber
என்றென்றும் நடிகர்திலகத்தின் நினைவுகளுடன் வாழும் இந்த எளியவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்கள் திரு kcs சார் , திரு வாசுதேவன் சார் , திரு கோபால் சார் மற்றும் திரு சாரதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Last edited by J.Radhakrishnan; 8th October 2014 at 10:36 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
8th October 2014, 10:55 PM
#2045
Senior Member
Seasoned Hubber
அன்புள்ளம் கொண்ட ராதாகிருஷ்ணன்
தங்களுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th October 2014, 12:47 AM
#2046
மிக மிக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராதா!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
-
9th October 2014, 12:49 AM
#2047
அருமை நண்பர் செல்வகுமார் அவர்களே,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் பதிவிட இருந்த முக்தா அவர்களின் பேட்டி ஒரு provocation ஆக இருக்குமோ என்று நான் நினைக்க காரணம் நீங்கள் பயன்படுத்தியிருந்த [நீங்களே குறிப்பிட்டிருந்த] கலையுலக எதிரிகள் என்ற வார்த்தை பிரயோகம்தான். அந்த வார்த்தை சற்றே சங்கடத்தை தந்தது. அந்த பேட்டி நடிகர் திலகத்தைப் பற்றியது அல்லவென்றால் நீங்கள் தாராளமாக அதை பதிவிடுங்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அதாவது 1988-ல் நீங்கள் ஜானகி அணியில் இருந்தபோது திருவொற்றியூர் தொகுதியில் திரு பூமிநாதன் அவர்களுக்காக நீங்கள் தேர்தல் பணியாற்றியதை முன்னரே ஒரு முறை நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் திரியில் பதிவிட்டிருந்ததை நான் படித்திருக்கிறேன். அதில் கூட நீங்கள் நடிகர் திலகம், மேஜர் விகேஆர் போன்றவர்களை பெரிதும் நம்பினார் என்றும் அதற்கு பதில் ராஜசேகரன் போன்ற களப்பணியாளர்களை முன்னிறுத்தி செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். மேலும் அவர் கட்சியை தொடர்ந்து நடத்தியிருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தையும் எழுதியிருந்ததும் நினைவில் இருக்கிறது.
நீங்கள் உங்கள் விளக்கத்தை சொல்லி விட்டீர்கள். நண்பர் RKS அவர்களும் தன தரப்பை சொல்லி விட்டார். எனவே மீண்டும் சொல்கிறேன் அந்தப் பேட்டியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களோ அல்லது எதிர் மறை விமர்சனங்களோ இல்லாத பட்சத்தில் அதை பதிவிடுங்கள்.
RKS,
உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளீர்கள். ஏற்றுக் கொள்கிறேன். நான் முன்னரே சொன்னது போல் எந்த எதிர் வினையும் புரிய வேண்டாம். இந்த நேரத்தில் வேறொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். இந்த உலகத்தில் ஒரே விஷயத்தைப் பற்றி ஒரு லட்சம் பேருக்கு ஒரு லட்சம் கருத்துக்கள் இருக்கும். அவற்றுக்கெல்லாம் எதிர் வினை புரிந்து நாம் பதிலளிப்பது என்பது நேர விரயம். காரணம் அனைவருமே நம் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.
உதாரணத்திற்கு நேற்று நண்பர் சந்திரசேகர் பதிவிட்டிருந்த Times Of India கட்டுரை. நீங்கள் கூட அந்த கட்டுரையாளரின் கருத்தை மறுத்து பதிவிட்டிருந்தீர்கள். நேற்று காலையில் அதை வீட்டில் வைத்துப் படிக்கும்போதே என் கண்ணில் பட்டது கட்டுரையின் முடிவில் கொடுத்திருந்த disclaimerதான். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. TOI அந்த disclaimer-ல் என்ன சொல்லியிருந்தார்கள் என்றால் இந்த கட்டுரையின் கருத்து இந்த பத்திரிக்கையின் கருத்தல்ல, கட்டுரையாளர் பணி புரியும் நிறுவனத்தின் கருத்துமல்ல என்று. சற்று விளக்கமாக சொன்னால் கட்டுரையாளர் தனஞ்செயன் எழுதியிருப்பது அவரின் சொந்தக் கருத்தேயன்றி அது TOI வின் கருத்தோ அல்லது தனஞ்செயன் பணி புரியும் UTV யின் கருத்தோ அல்ல என்று அர்த்தம். இந்த கட்டுரையை பிரசுரித்த பத்திரிக்கையும் சரி அவர் பணி புரியும் நிறுவனமும் சரி இது எங்கள் கருத்தல்ல என்று சொல்லும்போதே இது ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்தாகி விடவில்லையா?
இப்படி சில தனி மனிதர்கள் சொல்லுவதற்க்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பதில் அளிக்கிறேன் என்று உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் கொண்டால் நன்று. இது போன்ற ஒரு சில மனிதர்களின் கருத்துகளினால் நமது கலைக்கு நமது சமூக அமைப்பிற்கு நம்முடைய தேசத்திற்கே நடிகர் திலகத்தின் relevance இல்லாமல் போய்விடப் போவதில்லை. அவர் என்றென்றும் இந்த தேசத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு relevant ஆக விளங்குவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
ஆகவே மேற்சொன்னவற்றை மனதில் கொண்டு பஷிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th October 2014, 12:56 AM
#2048
The Next Programme of NT FAnS
Screening of Muradan Muthu
Date: 12.10.2014 - 5.30 pm.


Regards
-
9th October 2014, 02:20 AM
#2049
Junior Member
Veteran Hubber
NT's Veerapaandiya Kattabomman mustache: மீசையும் துடிப்பாக நடிக்கிறதே!
நடிகர்திலகத்தின் ஒரிஜினல் சிவாஜி தாடிமீசை getup!
சீமை மீசைகள்!
சீமை மீசைகளில் பிரபலமானவை சார்லி சாப்ளினின் ஹிட்லர் மீசை, James Bond Sean Connery's The Great Train Robbery மற்றும் gone with the wind (one of the favourite movies of NT) படத்தில் கிளார்க் கேபிள் , ஒரிஜினல் மீசை! மற்றபடி சீமை மீசைகள் (Burt Reynolds, Tom Selleck )வெகுசொற்பமே!
Last edited by sivajisenthil; 9th October 2014 at 02:56 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2014, 03:46 AM
#2050
Junior Member
Veteran Hubber
NT's fantastic fencing performance
என்தம்பி திரைப்படத்தில் ஒரு Highlight நடிகர்திலகத்தின் வாள் கையாளும் (fencing) திறன் மற்றும் Style! Climax ல் அவர் கீழிருந்து மேலாக வாளை மெதுவாக ஆனால் ஒரு perfected styleல் நிமிர்த்தும்போது....அரங்கமே அதிரும்! Hollywood stars Errol Flynn, Douglas Fairbanks Jr., மற்றும் தமிழில் சந்திரலேகா புகழ் ரஞ்சன், விஜயபுரிவீரன் ஆனந்தன் ஆகியோரும் fencing கலையில் வல்லவர்களே!
In the Telugu movie 'Baktha Thukaaram' with ANR, NT appears as the Warrior King Shivaji and has proved his ability in sword fight balancing on a running, jumping and bouncing horse!
Hollywood thespians in fencing and fierce sword fights!
Tributes to our own fencing gems! Ranjan and CL Aanandhan
For Vijayapuri veeran anandhan
https://www.google.co.in/url?sa=t&rc...L_GuQhPG7JvbDg
Last edited by sivajisenthil; 9th October 2014 at 10:40 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks