-
19th October 2014, 10:13 AM
#11
Junior Member
Platinum Hubber
உனக்கு மட்டுமே தெரியும்!
சாரதா ஸ்டுடியோவில் “மகாகவி காளிதாஸ்” படப்பிடிப்பு பிரமாண்டமான செட்டில், பிரமக்க வைக்கிற அளவில் கைதேர்ந்த சிற்பியால் நிர்மாணிக்கப்பட காளிசிலை. அந்தச்சிலை முன்பு நடிகர் திலகம் சிவாஜி, பாடுவதாக காட்சி. சிலரின் கவனக்குறைஆல் காளிசிலையில் தீப்பிடித்து செட் எரிந்து சாம்பலாகிறது. அந்தத் தீ விபத்தில் டெக்னீஷியன்கள் ஐந்து பேர் எரிந்து இறந்து விட்டார்கள்.
இந்தச் சோகச் செய்தி, வேறொரு படப்பிடிப்பில் இருந்த வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விபத்தில் இறந்தவர்களைப் பார்க்க விரைகிறார் வள்ளல்.
உயிரிழந்த டெக்னீஷயன்களை, ஏ.வி.எம். சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடந்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு யார் யாரெல்லாமோ ஆறுதல் சொல்கிறார்கள். அதில் அவர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. ஆனால், பொன்மனச் செம்மலைப் பார்த்தவுடன் அவர்களுக்குப் பீறிட்டு வருகிறது அழுகை.
வள்ளல் “நானிருக்கிறேன்” என்று வார்த்தைகளால் சொல்லாமல் விழிகளால் சொல்லி, அவர்களின் விழிநீரைத் துடைக்கிறார். பாரம் குறைந்தவர்களாய் அவர்கள் பாடை சுமந்து செல்கிறார்கள். இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த பொழுது இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்க அந்தப் பட சம்பந்தப்பட்டவர்களில் இருந்து, அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் வரை, எல்லோரிடமும் நோட்டை நீட்டி பணம் வசூல் செய்கிறார்கள்.
அவரவர் தகுதிக்கேற்பவும், தாராள மனதிற்கு ஏற்பவும், ஐம்பது ரூபாயில் இருந்து ஆயிரம், ஐயாயிரம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்து எழுதியிருக்கிற அதகி பட்சத் தொகையில் ஐம்பது மடங்கு கூட்டி எழுதுவாரா! நூறு மடங்கு கூட்டி எழுதுவாரா? என்கிற எதிர்பார்ப்பில் நோட்டை நீட்டியவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வள்ளல் எதுவுமே எழுதாமல் விட்டு விடுகிறார்.
வந்தவர்களுக்கெல்லாம் வியப்பு, எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிற வள்ளலா இப்படிச்செய்து விட்டார். வறியவர்கள் வாசல் தேடி வராத நாட்களில் , அவர்கள் வீட்டு வாசல் தேடிப் போய்க் கொடுக்கிற வள்ளல், கேட்டும், கொடுக்கவில்லையே என்று, தமக்குள் மட்டும் கேட்டுக்கொள்கிறார்கள்.
மறுநாள் ராமாவரம் தோட்டத்து மாடியில் இருந்த மக்கள் திலகம், “அவர்கள் வந்து விட்டார்களா?” என்று உதவியாளரைக் கேட்கிறார். வந்துவிட்டதாகச் சொல்கிறார் உதவியாளர். பசித்தவர்களுக்கு படியளக்கிற வள்ளல், படியிறங்கி வருகிறார். இறுதிச் சடங்கு முடிந்து தோட்டத்துக்கு வந்த வள்ளல், விடிவதற்குள் இறந்தவர்களின் வீட்டு விலாசம் தேடி, காலையில் சந்திக்க உதவியாளரிடம் உத்தரவிட்டது, எவருக்கும் தெரியாது.
ஐந்து குடும்பங்களிருந்து வந்த அனைவருக்கும், அமுது படைத்து அமர வைக்கிறார். யார் யாருக்கு என்ன வேண்டும்? படித்திருந்தால் வேலை, படிக்காதிருந்தால் தொழில் என்ற அடிப்படையில் அவர்களைத் தீர விசாரிக்கிறார். அதன்படி வாழ்க்கையில் நிரந்தர வருமானம் கிடைக்க சிலருக்கு வேலையும்,சிலருக்குத் தொழில் துவங்க கருவிகளும் கொடுக்க ஏற்பாடு செய்தோடு, ஒவ்வொரு குடுபத்திற்கும், ஐயாயிரம் ரூபாயும் கொடுக்கிறார். நேற்று வரை வள்ளல் மீது வருத்தத்துடன் இருந்த அவர்கள் சோகம் மறந்து சுகம் பெறுகிறார்கள். வேதனை தீர்ந்து விளக்கேற்றி வைத்த வள்ளலை வாயார, நெஞ்சார வாழ்த்திக் கொண்டே அவர்கள் விடை பெறுகிறார்கள். அந்த இறுதி ஊர்வலத்திலேயே கொடுக்காமல், ஏன் இவ்வளவு சிரம்ம் எடுத்துச் செய்ய வேண்டும் என்று உதவியாளர் யோசிக்கிறார்.
மற்றவர்கள் யோசிப்பதைக் கூட யூகம் செய்து கொள்ளும் வள்ளல், உதவியாளரிடம்-
“நேற்று நடந்த தீ விபத்தில் வீடு மட்டும் இழந்திருந்தால், வீடு கட்டப்பணம் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் வீட்டுத் தலைவனையே எதிர்காலத்துக்குப் பயன் அளிக்காது. அவர்களுக்கு ஓரளவுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்தால்தான், அவர்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும். அதனால், அவர்களின் தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதற்காகத் தான் நேற்று பணமாகக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் வள்ளல், வள்ளலே! பசிக்கிறவனுக்கு மீன் கொடுப்பது எப்போது, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எப்போது என்று, உனக்கு மட்டுமே தெரியும்!
“vallal varalaru ''
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2014 10:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks