-
27th October 2014, 01:19 PM
#2471
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது - 44
மருமகள் :
1986 ல் நடிகர் பாலாஜி மற்றும் சிவாஜியின் கூட்டணியில் வந்த ஒரு வித்தியாசமான படம் . படத்தின் கதை என்பது படத்தின் டிக்கெட் பின்னாடி எழுத கூடிய அளவு சின்ன கதை தான் , தாத்தா சேகர் (சிவாஜிக்கும்) , பேரன் ராஜா (சுரேஷ்) இருவருக்கும் இடையில் இருக்கும் பந்தம் தான் கதை , தாத்தா உயிருக்கு போராடும் நிலையில் இருக்க , பேரன் காதலிக்கும் பெண் வெளிநாட்டில் இருக்க , காதலியாக நடிக்க வரும் ராதா (ரேவதி) தன் நடவடிக்கையால் , நல்ல குணத்தால் தாத்தாவிடம் நல்ல பெயர் எடுக்கிறார் , ஊருக்கு போன காதலியும் வர , ராஜா யாரை திருமணம் செய்து கொள்ளுகிறார் என்பதே கதை
படம் முழுவதும் சிவாஜி சாரின் ராஜாங்கம் தான் . தான் வரும் காட்சிகளில் படுகையில் படுத்து கொண்டே நடிப்பில் முத்திரை பதிகிறார் . முதல் காட்சியில் தன் பேரனுக்கு தெரியாமல் ஸ்வீட் சாப்பிடும் பொது இவர் கண்ணில் தெரியும் குறும்பு திருஷ்டி சுத்தி போட வேண்டும் , இவர் நண்பர் ஜெய்ஷங்கர் தான் இவர் குடும்ப டாக்டர் , இவரும் , சிவாஜி சாரும் தோன்றும் காட்சிகளில் இருவரும் விட்டு கொடுத்து காட்சிகள் நன்றாக வர நடித்து இருக்கிறார்கள் என்பது நன்றாக உணர முடிகிறது , டாக்டர் இவருக்கு கட்டுப்பாடு விதிக்கும் பொது , சிவாஜி சலித்து கொள்ளுவது ஆகட்டும் , செல்லமாக இருவரும் கட்டி பிடித்து அடித்து கொள்ளுவது ஆகட்டும் , தன் பேரன் உண்மையாக காதலிக்கும் பெண் மற்றும் அவள் தாய் இருவரும் வந்து பேசும் பொது , இவர்கள் அடிக்கும் கமெண்ட் சிரிப்பை வரவழைப்பவை , அதுவும் , இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று Y விஜயாவிடம் மாட்டிவிடும் காட்சி , தன் வருங்கால மருமகள் பிரியாணி சமயத்து தர , அதை சாப்பிடும் சமயம் ஜெய்ஷங்கர் தடுக்க , இப்போ இதை என்ன பண்ணுவது என்று சிவாஜி கோபிக்கும் பொது நான் சாப்பிடுறேன் என்று இவர் சாப்பிடுவதும் , நம்மவர் helpless லுக் கொடுப்பதும் priceless
தன் தாத்தா நடிக்க வந்த பெண்ணை தன் மருமகள் என்று எண்ணி வீட்டின் சாவியை கொடுக்கும் பொது ராஜா அதை தடுக்க ஜெய்ஷங்கர் அதை தப்பாக புரிந்து கொண்டு ரியாக்ட் செய்வது , தொடர்ந்து எனக்கு பண தேவை வந்தால் என் நண்பன் கிட்ட வந்து உரிமையாக கேட்டு வாங்கி கொள்வேன் என்று சொல்லும் இடம் மெய் சிலிர்க்க வைத்து , தன் நண்பன் தான் செத்து போய் விடுவேன் என்று புலம்பும் பொது , இவர் helpless ஆக Stop it சேகர் என்று கூறும் இடத்தில தன் subtle performance மூலம் நாம் அனைவரையும் ஆச்சிரிய படுத்தி இருப்பார்
தமிழ் சினிமா ஜெய்ஷங்கர் சாரை இன்னும் பயன் படுத்தி இருக்கலாம்
ரேவதிக்கும் , சிவாஜிக்கும் நடக்கும் பாச பந்தம் தான் படத்தின் உயிர்நாடி அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாம் என்பது என் எண்ணம்
ரேவதி நடிக்க வந்தவள் தான் என்றாலும் தன் தாதாவின் மனதில் மருமகள் என்ற ஸ்தானத்தில் இருப்பவர் இவர் தான் என்று தெரிந்து சுரேஷ் அமைதியாக இருப்பதும் , சுரேஷ் காதலிக்கும் பெண் மற்றும் அவள் அம்மா இருவரும் ரேவதியை illtreat பண்ணும் போதும் emotionally upset ஆவதும் ,ஆனால் காதலியை பிரிய முடியாமல் தவிப்பதும் - கிடைத்த காட்சிகளில் நடித்து இருக்கிறார்
மொத்தத்தில் சிவாஜி சாரின் வித்யாசமான நடிப்பில் , அதாவது வயதுக்கு தகுந்த நடிப்பில் தானும் முத்திரை பதித்து , மற்ற நடிகர்களையும் பதிக்க செய்து நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
27th October 2014 01:19 PM
# ADS
Circuit advertisement
-
27th October 2014, 05:54 PM
#2472
Junior Member
Veteran Hubber
சண்டைகாட்சிகளில் அதீத மிகையும் வில்லனை அவன் எவ்வளவு பலசாலியானாலும் ஒரு சில கதா நாயகர்கள் தங்களுடைய இமேஜ் காபாற்றிகொள்ள அந்த வில்லனை வெறும் அடிவாங்கும் சதை பிண்டங்களாக மட்டுமே தங்களுடைய முக்கால்வாசி படங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.
மிஞ்சி மிஞ்சி போனால் மூன்று அடி மட்டுமே அடிக்கும் சலுகை இவர்களுக்கு உண்டு...! மேலும் ஒரே மாதிரி அமைக்கப்பட்ட சண்டை காட்சியாக மட்டுமே அது இருக்கும்...!
தமிழ் திரை உலகில் அதில் ஒரு இயற்கைதனம் கொண்டு வந்த நாயகர்களில் நடிகர் திலகம் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய் ஷங்கர் அவர்களுக்கு மிகுந்த பங்கு உண்டு.
அதிலும் திரு ஜெய் ஷங்கர் அவர்கள் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவருடைய வித்தியாசமான மின்னல் வேக சண்டை காட்சிகள் அமைப்பு மக்களிடையே மற்ற எவரை காட்டிலும் மிக பெரும் வரவேற்ப்பை பெற்றது என்றால் அதில் மிகையில்லை.
ஆனால் நடிகர் திலகம் அவர்கள் அவர் காலங்களில் மற்ற எவரை காட்டிலும் குதிரை சவாரியாகட்டும், வாள் பயிற்சி முறையாகட்டும், சிலம்பம் சுழற்றுதலாகட்டும், மல்யுதம் ஆகட்டும் முறையே திரைப்படத்தின் தேவைகேற்ப ஆர்வமுடன் அதன் விற்பன்னர்களிடம் கற்றுக்கொண்டு நடித்தது திரை உலகில் உள்ள அனைவரும் அறிவர். அதிலும் குதிரை சவாரி செய்வதில் நடிகர் திலகம் பக்கம் எவருமே நெருங்கமுடியாத வண்ணம் தன்னுடைய ஆளுமையை கொண்டிருந்தார்.
பெரும்பாலும் நடிகர்கள் குதிரை சவாரி காட்சிகளில் back projection முறையில் நடித்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம். அதாவது பாட்டோ அல்லது சண்டையோ அல்லது துரத்தும் காட்சியோ ...இந்த நடிகர்கள் ஸ்டூலில் அமர்ந்துகொண்டு தலையை தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு சவாரி செய்வதை பார்த்தால் சிரிக்காதவன் கூட சிரித்திவிடுவான். காரணம் அப்படி செய்யும்போது அதை எப்படி செய்யவேண்டும் என்று கூட நடிக்க தெரியாதவர்கள் அவர்கள். அப்படி பட்டவர்கள் பலர் பிற்காலத்தில் நடிகர் திலகம் நடிப்பை விமர்சனம் செய்ததை நினைக்கும்போது...சீ..சீ...இந்த பழம் புளிக்கும் என்ற கதை தான் ஞாபகம் வரும் !
1950 களில் இருந்தே நடிகர் திலகம் அவர்களுக்கு சண்டை வாரது. அவர் நடிப்பதிலே மட்டுமே வல்லவர் என்று ஒரு பொய்யை சில சுயநல கூட்டம் பரப்பி வந்தது.
நடிகர் திலகம் அவர்களுடைய படங்கள் பெரும்பான்மை குடும்ப படங்களாக இருக்கும் அதில் சண்டை காட்சிகள் வலுக்கட்டாயமாக திநிக்கபடமாட்டாது.
காலபோக்கில் தனக்கு சண்டை காட்சி வராது என்று கூறியவர்களின் கூற்றை பொய்யாக்கி, அப்படி கூறியவர்களே வாயடைத்து போகும் அளவிற்கு தன்னுடைய வல்லமையை காட்டியுள்ளார் நமது நடிகர் திலகம். இருந்தாலும் நடிகர் திலகம் படங்கள் குடும்ப சூழலை சார்ந்தே இருந்ததனால் ஒரு ACTION HERO என்ற அங்கீகாரம் இருந்ததில்லை. மாறாக ACTING HERO என்ற அங்கீகாரமே கிடைத்தது.
ஒரு திரைப்படத்திற்கு சண்டைகாட்சி ஒரு சாப்பாட்டில் ஒரு SIDE DISH போன்றதாகும். SIDE DISH மட்டுமே அனைவரும் உணவாக உட்கொள்ள முடியாது. நடிகர் திலகம் அவர்களுடைய படங்கள் நல்ல உணவாக இருந்திருக்கிறதே தவிர வெறும் SIDE DISH ஆக இருந்ததில்லை. !
காத்தவராயன் என்ற ஒரு திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்களுடைய மல்யுத்த காட்சி ஒன்று உண்டு. அதை பார்த்தால் புரியும்,. தன்னுடன் மல்யுத்தம் புரிபவரை கதாநாயகன் மட்டுமே சும்மா அடிப்பது போல அல்லாமல் மிக இயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு காட்சி !
எந்த ஒரு மிகையும் இல்லாமல் நல்ல உடர்கட்டுகொண்ட ஒரு ORIGINAL மல்யுத்த வீரருக்கு அவருக்கு கொடுக்கும் மரியாதை தென்படும்.
நடிகர் திலகம் அவர்கள் கதாநாயகன். இருப்பினும் மல்யுதம் அமைத்த முறை 50-50 யாக இருக்கும்.
சம பலம் கொண்ட இருவர் மோதும் இயற்கையான மல்யுத்தம்.
பொதுவாக படங்களில் இது போல காட்சிகள் அமைக்கும்போது LONG SHOT யுக்தி பயன் படுத்தப்படும். காரணம் LONG SHOT வைக்கும்போது சண்டையிடுவது நாயகனா அல்லது நாயகனின் DOOP ஆ என்பது மக்களுக்கு முக்கால்வாசி தெரியாது. உருவசம்பந்தம் இல்லையென்றால் கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் பெரும்பாலும் நாயகனின் உருவ அமைப்பு உடற்கட்டு இவை MATCH ஆகும் வகையில் DOOP நடிகர் இருப்பார்.
இந்த மல்யுத்த காட்சி பார்பவர்கள் ஒரு விஷயத்தை உணரலாம். நடிகர் திலகம் ஏறக்குறைய முழு மல்யுதத்தையும் அவரே செய்திருப்பார். மேலும் மல்யுத்தத்தின் பல TECHNIQUE இந்த காட்சியில் பயன்படுத்தபட்டிருக்கும் !
வேறு எந்த படங்களில் வந்த மல்யுத்த காட்சியையும் இதையும் ஒப்பிட்டு பார்த்தால் ...மல்யுத்த காட்சிகள் சிறந்த முறையில் காத்தவராயன் திரைப்படத்தில் படமாக்கபட்டதையும், நடிகர் திலகம் அவர்களுடைய மிக இயல்பான, இயற்கையாக மல்யுத்தம் புரிந்திருப்பதை நீங்கள் உணரலாம் !
செயற்கை சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் வந்த காலகட்டம் ...அனைவராலும் இந்த மல்யுத்த காட்சி அன்று பேசப்பட்ட ஒன்றாகும் ....
நண்பர்கள் பார்வைக்கு !
Last edited by RavikiranSurya; 27th October 2014 at 09:49 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
27th October 2014, 09:52 PM
#2473
Junior Member
Senior Hubber
எத்தனை முறை திரையிட்டாலும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் தமிழ் திரைஉலகின் ஒரே வசூல் சக்ர வர்த்தி சிவாஜி அவர்களின் வசந்த மாளிகை மிக குறுகிய இடைவெளியில் திருச்சி கெயிட்டியில் விரைவில் வெளிவர இருக்கிறது.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
27th October 2014, 09:52 PM
#2474
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
பார்த்ததில் பிடித்தது - 44
மருமகள் :
1986 ல் நடிகர் பாலாஜி மற்றும் சிவாஜியின் கூட்டணியில் வந்த ஒரு வித்தியாசமான படம் .
மொத்தத்தில் சிவாஜி சாரின் வித்யாசமான நடிப்பில் , அதாவது வயதுக்கு தகுந்த நடிப்பில் தானும் முத்திரை பதித்து , மற்ற நடிகர்களையும் பதிக்க செய்து நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி
சாதனை மற்றும் மருமகள் இரெண்டும் ஒரு போல வெளியாகி இரெண்டும் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் !
Hats off to the doyen of tinsel town - nadigar thilagam !
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
27th October 2014, 09:55 PM
#2475
Junior Member
Veteran Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
எத்தனை முறை திரையிட்டாலும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் தமிழ் திரைஉலகின் ஒரே வசூல் சக்ர வர்த்தி சிவாஜி அவர்களின் வசந்த மாளிகை மிக குறுகிய இடைவெளியில் திருச்சி கெயிட்டியில் விரைவில் வெளிவர இருக்கிறது.
.jpg)
Vasantha Maaligai when it was made to Digital and re-released, the first week collection was Rs.3,28,690.
The Highest collection in Albert for the first week till date for any old film !!!
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th October 2014, 10:16 PM
#2476
Junior Member
Veteran Hubber
வெகு சுலபத்தில் பகைவர்களாக மாறுபவர்கள் வெகு சீக்கிரம் அழிந்துபோகிறார்கள் - நடிகர் திலகம் ராஜ ராஜ சோழன் !!
தமிழகத்தின் ராஜ ராஜ சோழன் !! - இந்த கம்பீரம் எவருக்கு வரும் ? - நடிகர் திலகம் அவர்களை தவிர !
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th October 2014, 10:23 PM
#2477
Junior Member
Veteran Hubber
எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும்...இருந்தாலும் ....இந்த ஒரு பாடலுக்கு உண்டான பாவம்...அபிநயம் முன் நிற்குமா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
இந்த ஒரு வரிக்கு கொடுக்கும் அபிநயம் ...ஒருவரின் ஆயுள் முடியும் வரை பயிற்சி செய்தாலும் வராது !
வணங்கவேண்டிய கலை தெய்வம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
27th October 2014, 10:30 PM
#2478
Senior Member
Devoted Hubber

Originally Posted by
ravikiransurya
சாதனை மற்றும் மருமகள் இரெண்டும் ஒரு போல வெளியாகி இரெண்டும் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் !
Hats off to the doyen of tinsel town - nadigar thilagam !
வருடம் - 1986
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7
100 நாட்களை கடந்த படங்கள் - 3
சாதனை
மருமகள்
விடுதலை
50 நாட்களை கடந்த படங்கள் -2
ஆனந்தக் கண்ணீர்
தாய்க்கு ஒரு தாலாட்டு
2. திரையுலகிற்கு வந்து முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகும் 7 படங்கள். அதுவும் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்கள் ரீலீஸ்.
3. முதன் முதலாக ஒரு சினிமா இயக்குனராக நடிகர் திலகம் நடித்த படம் - சாதனை.
4. 10.01.1986 அன்று வெளியான சாதனை சென்னை நாகேஷ் திரையரங்கில் ஒரு சாதனை புரிந்தது.
5. அந்த அரங்கின் வரலாற்றில் அதிகமாக தொடர் ஹவுஸ் புல் ஆனது சாதனை படத்திற்கு தான்.
அந்த அரங்கில் தொடர்ந்து 133 காட்சிகள் அரங்கு நிறைந்தது
6. அந்த அரங்கில் அதிக நாட்கள் ஓடிய படமும் சாதனை தான்.
சாதனை படம் ஓடிய நாட்கள் - 112
சாதனை திரைப்படம் 100 நாட்களை கடந்த அரங்குகள்
சென்னை - தேவி பாரடைஸ்/தேவி பாலா
சென்னை - நாகேஷ்
7. சாதனை திரைப்படம் வெளியான 15 நாட்கள் இடைவெளியில் 26.01.1986 அன்று வெளியான படம் - மருமகள்.
8. படத்தின் மொத்த நேரத்தில் சுமார் 80 சதவீதம் நேரம் நடிகர் திலகம் படுக்கையில் படுத்து கொண்டே நடித்த பாத்திரம் இடம் பெற்ற படம் - மருமகள்.
ஆயினும் கூட "நடிகர் திலகம் படுத்துக் கொண்டே ஜெயித்த" படம் - மருமகள்
மருமகள் 100 நாட்களை கடந்த அரங்கு
சென்னை - தேவிகலா.
9. இதன் மூலம் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை புரிந்தார் நடிகர் திலகம்.
படிக்காதவன்
சாதனை
மருமகள்.
10. இந்த வெற்றியின் பின்னணியை பார்க்க வேண்டும். முதல் மரியாதை வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. படிக்காதவன் வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் வெளியான நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் 100 நாட்களை கடந்து ஓடுகின்றன அதுவும் நடிக்க வந்த 34-வது வருடத்தில் என்றால், இதை விட நடிகர் திலகத்தின் bo பவருக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?
(முரளி சிறினிவாசன் அவர்களின்
சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொகுப்பில் இருந்து)
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th October 2014, 10:30 PM
#2479
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th October 2014, 10:37 PM
#2480
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RavikiranSurya
Vasantha Maaligai when it was made to Digital and re-released, the first week collection was Rs.3,28,690.
The Highest collection in Albert for the first week till date for any old film !!!
வசூலில் சக்கரவர்த்தி
சாதனையில் சக்கரவர்த்தி
சிவாஜி கணேசன் ஒருவரே
Bookmarks