-
27th October 2014, 10:49 PM
#2481
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RavikiranSurya
எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும்...இருந்தாலும் ....இந்த ஒரு பாடலுக்கு உண்டான பாவம்...அபிநயம் முன் நிற்குமா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
இந்த ஒரு வரிக்கு கொடுக்கும் அபிநயம் ...ஒருவரின் ஆயுள் முடியும் வரை பயிற்சி செய்தாலும் வராது !
வணங்கவேண்டிய கலை தெய்வம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும்...இருந்தாலும் ....இந்த ஒரு பாடலுக்கு உண்டான பாவம்...அபிநயம் முன் நிற்குமா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
இந்த ஒரு வரிக்கு கொடுக்கும் அபிநயம் ...ஒருவரின் ஆயுள் முடியும் வரை பயிற்சி செய்தாலும் வராது !
வணங்கவேண்டிய கலை தெய்வம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th October 2014 10:49 PM
# ADS
Circuit advertisement
-
28th October 2014, 08:41 AM
#2482
Junior Member
Seasoned Hubber
Thanks for your valuable feedback Ragavendran Sir, Sivaji senthil sir, Khalnaayak sir,Vasudevan sir, Sivaa sir , Gopu sir, SP Chowdry sir
Thanks for posting about the theatrical run of Marumagal movie RKS sir
-
28th October 2014, 10:38 AM
#2483
Junior Member
Seasoned Hubber
Courtesy: Mr Murali Srinivas
In the above mentioned function organised on 16.05.2009, one Mr.Tenkasi Ganesan had rendered a poem on NT. Here it is
இங்கிவனை யாம் பெறவே !
இந்தியாவின்
இரண்டு அதிசயங்கள்!
வடக்கே தாஜ்மகால்
தெற்கே நடிகர் திலகம்
அதிசயம் மட்டும் அல்ல
அதற்கும் அப்பாற்பட்ட அற்புதமும் நீயே
அன்னை ராசாமணி
அன்று சுமந்தது கருப்பையா - இல்லை
கலைமகளே வடிவான கலைப்பை
பராசக்தி அருளால்தான் நீ
திரைக்கு வந்தவன் என்றாலும்
திருமால் பெருமை நிரம்பவே
இருந்ததால்தான்
பெருமாளால் - பெரும் ஆள் ஆனாய்
நடிப்பில் எத்தனை வகை
நடையில் எத்தனை வகை
குரலில் எத்தனை வகை
குறும்பில் எத்தனை வகை
அழுகையில் எத்தனை வகை
ஆத்திரத்தில் எத்தனை வகை
புன்னகையில் எத்தனை வகை
புழுங்குதலில் எத்தனை வகை
மோகத்தில் எத்தனை வகை
காதல் தாகத்தில் எத்தனை வகை
கண்டிப்பில் எத்தனை வகை
கனவினில் எத்தனை வகை
அத்தனையும் அடக்கி வைத்த
அளப்பரிய கலைப்புதயல் நீ
நீ நடந்தது வந்த ராஜபாட்டைதான்
திரையுலகின் நடைப்பாதையானது
நடிப்பு கர்ணனே
அந்த நாள் திரை உலகின்
இரும்பு திரையை அகற்றி
திருப்பம் தந்த விடிவெள்ளி நீ
தாயோடு அறுசுவைபோம்
தந்தையோடு கல்விபோம்
என்பது பழைய பாட்டு
நான் கூறுவேன்
பந்துலுவோடு வரலாற்று படம்போம்
சக்தி கிருஷ்ணசாமியோடு நற்றமிழ் வசனம்போம்
ராமநாதஐயரோடு ரம்மிய சங்கீதம் போம்
எங்கள் நெஞ்சம் நிறை தலைவா
உன்னோடு -
விழியால் பேசும் கலை போம்
மொழி சிறக்கும் வசனம் போம்
வழி வியக்கும் நடைபோம்
மொத்தத்தில் நடிப்புக் கலையே போம்
காரணம் -
வெற்று படங்கள் வந்த காலத்தில்
நீ ஒருவனே வெற்றிப் படங்களை தந்தவன்
ஒரே நாளில் இரண்டு படங்கள் !
இரண்டும் வெற்றி !
ஒரே மாதத்தில் நான்கு படங்கள்
அத்தனையும் 100 நாட்கள்
ஒரே வருடத்தில் 11 படங்கள்
அனைத்தும் வெற்றி
அது மட்டுமா
அடுத்த மாநிலத்தில் 100 நாட்கள்
அந்நிய தேசத்தில் 200 நாட்கள்
என்று
உன் படங்கள் தவிர
எவர் படம் ஓடியது
என்றும் நிலைத்த புகழை தேடியது
அற்புத ஒப்பனையா
அபார கற்பனையா
அழகு விழியா - அடுக்கு மொழியா
அனாயாச நடையா - அசத்தல் பார்வையா
எது பேசப்படவில்லை
உன் அடர்ந்த சிகை நடிக்கும் -
அம்பிகாபதியும் கட்டபொம்மனும்
உதாரணங்கள்
நீ அணிந்த நகை நடிக்கும்
வணங்கமுடியும் சரஸ்வதி சபதமும்
உதாரணங்கள்
ஏன், நீ உள்வாங்கி வெளியிடும் புகையும்
நடிக்கும்
புதிய பறவையும் சாந்தியும் உதாரணங்கள்
இன்றைய விழா நாயகன்
கட்டபொம்மனை பற்றிய ஓரிரு வரிகள்
அத்தனை பள்ளிகளின்
ஆண்டு விழாக்களில்
அவசிய வேடம் கட்டபொம்மன்
அறம் செய்ய விரும்பு எனும்
ஆத்திச் சூடிக்கு முன்
அத்தனை மாணவனின் அரிச்சுவடி
கட்டபொம்மன்
தனி நபர் போட்டியின்
தவறாத பாடம் கட்டபொம்மன்.
தரணி புகழ் தமிழ் துள்ளிவர
தக்கதொரு வசனம் கட்டபொம்மன்.
எகிப்து அதிபர் நாசரை
நம்மூர் பக்கம்
எட்டிப் பார்க்க வைத்தவன் கட்டபொம்மன்
கெய்ரோ விருதால் உலகையே வியக்க
வைத்தவன் கட்டபொம்மன்
அத்தனை பெருமைகளுக்கும் அடிப்படை
நடிப்பு சித்தனே நீதான்
உன் தலைமயிர் தொட்டு
கால்நகம் வரை நடித்ததால்
கலைத்தாயின் தவப்புதல்வன் ஆனாய்
காமிரா முன் மட்டுமே நடிக்கத்
தெரிந்ததால்தான்
காலம் போற்றும் உயர்ந்த மனிதன் ஆனாய்
விளம்பரம் விரும்பாமல்
அள்ளி தந்து பலர் வாழ்வை
வளம்பட செய்ததால்
கொடை நின்ற கர்ணன் ஆனாய்
குணம் நிறை மனம் நிறைந்ததால்
நல்லதோர் குடும்பம் கண்டாய்
இல்லற ஜோதியாய் கமலா இருக்க
இரண்டு நல புதல்வர்கள் சீரோடு சிறக்க
தேன் மொழியாம் தமிழ் போல்
தெவிட்டாத சாந்தி பெற்றாய்
கௌரவமாய் வாழ்கையை
கண்டதால்தான்
அன்னை இல்லம் அது
வசந்த மாளிகை ஆனது
உன் படங்களே
பாடங்கள் ஆனதால்
பலர் நடிப்பில் பட்டம் பெற
நீயே
பல்கலைக்கழகம் ஆனாய்.
தங்கமே! தமிழ்ச்சரமே
எங்கள் அங்கம் புல்லரிக்க
அற்புத நடிப்பு தந்தாய்
நீ வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்ததால்
வள்ளுவன் காலத்தில்
வாழ்ந்தவன் போன்ற
பெருமை எங்களுக்கு உண்டு
ஒரு வள்ளுவன்
ஒரு ஷேக்ஸ்பியர்
ஒரு மைக்கேல் அஞ்சலோ
ஒரு பிதோவன்
ஒரு காளிதாசன்
ஒரு பாரதி
ஒரு சிவாஜி
உலக வரலாறு இப்படித்தான்
எழுதப்பட முடியும்
நிறைவாக
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
இது உலக நீதி
ஆருயிர் அண்ணனே
உன் நினைவிருந்தால்தான்
எங்களுக்கு நெஞ்சமே இருக்கும்
இதுதான் உண்மை நீதி
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
28th October 2014, 10:48 AM
#2484
Junior Member
Seasoned Hubber
Courtesy: Mr P R old post
காத்தவராயன்
கதை
ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள். வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்.
மிகச்சிறந்த வீரனாக வளரும் காத்தவராயன் தன் தாயைத் தேடிக் கண்டடைகிறான். வேண்டும் உருவம் பெற ஆசீர்வதிகப்படுகிறான். வெளி ஊர்கள் பலவற்றுக்குப் பயணப்படுகிறான். மலையாள மாந்த்ரீகர் பாலையாவை அடிமையாக்குகிறான். அவன் மனைவி MN ராஜம், அவள் தம்பி சந்திரபாபு.
பிறகு ஆரியகுல இளவரவி ஆரியமாலாவை (சாவித்ரி) சந்தித்து, புகழ்பெற்ற "வா கலாப மயிலே" பாடலைப் பாடுகிறான். அவளை சந்திக்க கிழவனாக வருகிறான். அவனைப் பிடித்து அரசவையில் ஒப்படைக்க சாக்குப்பையிலிருந்து குடுகுடுப்பைக்காரனாக உருமாரி எழுகிறான்.
சிறையிலடைப்பட்டு பிறகு பட்டத்து யானையோடு தப்பிக்கிறான். கிளியாக உருமாரி மறுபடி ஆரியமாலாவை சந்திக்கிறான். மறுபடி தப்பியோட்டம். கல்யாண நிச்சயமான ஆரியமாலாவை சந்திக்க வளையல்காரன் வேடம் இட்டு வருகிறான் (படகோட்டி !).மறுபடி தப்பியோட்டம், இம்முறைி பிடிபடுதல். பிணைத்து அவனை அரசன் கொல்ல முனையும் போது, ஆரியமாலா கத்திக்குத்து பட்டு விழுகிறாள்.
அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி ஊரை துவம்சம் செய்கிறான் காத்தவராயன். கண்ணாம்பா கடிந்து கொள்ள அடங்கும் அவன் கைது செய்யப் ப்படுகிறான். பிணைத்த அவனை யானை தரையோடு இழித்துச் செல்கிறது. பின் சாட்டையடி வாங்கிக்கொண்டு ஊரார் காண தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய பெருவெளிக்கு செல்கிறான். அங்கு ஒரு பிரம்மாண்டமான அய்யனார் (?) சிலை. கண்ணாம்பா முறையிட அருள மறுக்கிறான் அரசன். மனோகரா பாணியில் பொங்கி எழச்சொல்லும் அன்னையின் ஆணைக்கு இணங்கி பிரம்மாண்ட சிலைய உடைத்து பேரழிவை ஏற்படுத்துகிறான். ஓடிவரும் ஆரியமாலாவும் அதில் சிக்குகிறாள்.
சிவபெருமான் அருளால் பார்வதி, காத்தவராயன், ஆரியமாலா யாவரும் வானுலகம் ஏறுகிறார்கள்.
கடைசி அரை மணி நேர அவசரகதி திருப்பம் மேல் திருப்பங்களைத் தவிற மிக சுவாரஸ்யமான திரைப்படம்.
குறிப்பாக: பல அபாரமான காட்சிகள் நிறைந்த படம் இது.
Spectacle
-> வேடர்களை அறிமுகம் செய்யும் காட்சி. கோழி உடை தரித்து (சிறுவர்கள் ?) நடனம். குழு நடன அமைப்பின் ஒற்றுமை. தக்கை செட் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதன் மீது அமர்ந்து ஒருவர் முரசு அடித்துக் கொண்டிருந்தார் !
--> படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம். தொழில்முறை நடனக்காரர்கள் என்று நினைக்கிறேன்.(பயப்படாதீர்கள் கண்ணாம்பா இல்லை. பாட்டு முடிந்ததும் சிவன்/பார்வதி மாறிவிடுவர்..தொலைக்காட்சித் தொடர்களில் பாத்திரங்கள் மாறுவது போல) தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே !
--> சக்கரம் சுழன்று, பாடலினூடே பெரியவனாகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். சண்டையினூடே ? சிறுவன் காத்தவராயன் வாள்பயிற்சி பெறுகிறான். அவன் நிழல் காண்பிக்கப் படுகிறது. நிழல் வளர்கிறது. வாளுடன் சிவாஜி. நிழலிலிருந்து நிஜத்துக்கு வரும்போது 'கட்' மிகக் கூர்மையாக கவனித்தால் மட்டுமே தென்படும் சிறப்பான படத்தொகுப்பு
--> யானை மோதி கதவு திறக்கிறது. கூர்ந்து கவனித்தால் யானை கதவை வேகமாக நெருங்குவதைக் காண்பித்து, பிறகு எதிர்பக்கம் அதிரும் கதவைக் கண்டு மிரளும் தங்கவேலும் சிப்பாய்களும் காட்டப்படுகிறார்கள். அதாவது யானை மோதாமல் அந்த உணர்வைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த காட்சி முழுவதும் இவ்வாறே காட்டப்படுகிறது. மிக புத்திசாலித்தனமான உத்தி.
--> மிக தத்ரூபமான மல்யுத்தக் காட்சி. சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5-6 நிமிடங்கள் நீளும் அக்காட்சியில் சிவாஜியின் வெற்றி இயல்பான படிப்படி முன்னேற்றமாக நம்பும்படி காண்பிக்கப் படிகிறது. பல முறை சிவாஜியும் (டூப் அல்ல!) எதிராளியும் ஒருவரை ஒருவர் வீழ்த்துகிறார்கள். களத்துக்குள் இறங்கும் பொழுது சிவாஜி தோளை வளைத்துக் கொண்டு இறங்குவது, ஆயத்தத்தை போகிற போக்கில் மிக சிறப்பாக காண்பிக்கும் காட்சித்துளி. குன்னக்கோல் சிவாஜி 'பாட்டும் நானே'வின் தன் முறை வரும்பொழுது லேசாக தொண்டையை செறுமிக்கொள்வது போல.
--> மணிரத்னத்தில் அலைபாயுதே திரைப்படத்தில், காதல்-சடுகுடு பாடலில் பின்னோக்கி ஓட்டப்படும் காட்சிகள் இடம்பெற்று கவனத்தை பெற்றது. காத்தவராயனின் ஒரு சண்டைக்காட்சியில் சிவாஜி பல படைவீரர்களை எதிர்கொள்ளும்போது தரையிலிருந்து படிப்படியாக மேலே குதித்து, பல நிலைகளைத் தாண்டி கோட்டைசுவரை எட்டுவதாக இரு காட்சி வருகிறது. அது மேலிருந்து குதித்ததைப் படமாக்கி பின்னோக்கி ஓட்டி காட்டப்படுகிறது. ஒரு 5 வினாடிகள் வரும் அக்காட்சியின் துவக்கத்தில் படச்சட்டகத்துக்குள் இடத்திலிருந்து வலமாக ஒரு சில அடிகள் சிவாஜி ஓடி வரவேண்டும். அது 'ரிவெர்சில்' ஓடியது என்று பார்த்து வியக்க டிவிடி தேவைப்படுகிறது.
--> அரண்மனையிலிருந்து தப்பி ஓடும் சிவாஜி தனது குகைக்குள் விரைந்து ஓடி வருவார். அங்கு, படுத்துக்கொண்டிருக்கும் பாலையாவுக்கு ராஜம் கால் அமுக்கிக்கொண்டிருப்பார். ஓடிய வேகத்தில் உள்ளே வரும் சிவாஜி ஒரு அரை விநாடித் தயங்கி திரும்பி (அதற்குள் அவர்கள் எழுந்துகொண்டு சிவாஜியைக் கூப்பிட) மீண்டும் உள்ளே செல்வார். மிக கவனமாக காட்சி அமைப்பு/நடிப்பு
- பல ஊர்கள் பயணப்படும் ஆரம்பக்காட்சி மிக புத்திசாலித்தனமாகக் காட்டப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், மதுரைக் கோவில், ஆலப்புழை படகுப் போட்டி என்று பல கோப்புக் காட்சிகள். அதன் மேலேயே அதை ரசிக்கும்/கண்டு வியக்கும் சிவாஜியின் முகபாவங்கள் என்று காட்சியின்-மேல்-காட்சி பதிக்கும் உத்தி. இது இதற்கு முன்னர் (1958) கையாளப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.
--> குடுகுடுப்பைக்காரனாக வரும்போது பேச்சும், பாவனையும் முற்றிலும் மாறிப்போவதெல்லாம் சிவாஜியின் அன்றாட அதிசயம்.
--> பொம்மலாட்டம் போன்ற நடனம் (இது சமீபத்தில் ஓரிரு படங்களில் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம்). சந்திரபாபுவும், ராஜமும் ஆடும் ஜோடி நடனம். குறிப்பாக சந்திரபாபு பொம்மையைப் போலவே குறைந்த அசைவுகளுடன் சிறப்பாக ஆடுவார்.
--> காத்தவராயன் கோபம் கொண்டு ஊரை துவம்சம் செய்யும் போது தூணைப் பிடுங்க வீடே விழும் காட்சிகள்
--> பிரமாண்ட அய்யனார் சிலை உதிர்ந்து விழும் கடைசி காட்சி
இப்படி பல சிறப்பான காட்சிகள்.
இன்ன பிற..
--> தங்கவேலுவின் நீண்ட நெடுங்கால நகைச்சுவை முயற்சிகள் எதற்கும் இதுவரை என்னால் சிரிக்க முடிந்ததில்லை. இதிலும் அனேகம் அப்படியே. ஆனால் ஓரிரு காட்சிகள் சிரித்து வியந்தேன்: ராஜம் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போது மிடுக்காக "பட்டத்து யானை எங்கே" என்று கேட்டபடி மிக இயல்பாக மேசைக்கு அடியில் பார்ப்பார்
--> சந்திரபாபுவின் slapstick நன்றாக வந்திருக்கிறது.
--> கதையின் காலத்துக்கு முரணாக ஓ/சி, கோலா லம்பூர் என்கிற வார்த்தைகள் பாடல்களில் வருகின்றன. சந்திரபாபுவின் கஸ்மாலமும் !
சோகம் தோய்ந்த சமூகப் படங்களில் எனக்கு மிகையாகத் தோன்றும் காட்சிகள் மிகுந்திருக்கின்றன. அவற்றின் தேவைகளுக்குத் தோதாக சிவாஜி நடிக்கும்பொழுது என்னால் அதை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. உதாரணமாக நான் இதற்கு முன் பார்த்த படம் புனர்-ஜென்மம். சிவாஜியும்-கண்ணாம்பாவும் போட்டிப் போட்டுக்கொண்டு உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தார்கள்.
மாறாக காத்தவராயனில் கதை தான் மிகை, ஆனால் காட்சியமைப்பும், நடிப்பும் மிகச் சரளமானவை (கடைசி சில நீமிடங்கள் தவிற). இது போன்ற சிறப்பாக எடுக்கப்பட்ட கேளிக்கைசித்திரங்கள் நடிப்பு மட்டுமல்லாது, மேற்சொன்ன பல விஷயங்களினாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. இத்திரியின் இப்படத்தைப் பற்றி நான் அதிகம் படித்ததில்லை என்பதால் இந்த நீண்ட இடுகை.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th October 2014, 10:55 AM
#2485
Junior Member
Seasoned Hubber
a recap from Saradha Madam old post
வசந்த் தொலைக்காட்சியின் 'சந்திப்போமா' நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட, நாடக, சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான நித்யா வின் பேட்டி ஒளிபரப்பானது. (நித்யாதான் தற்போது 'வியட்நாம் வீடு' நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் ஜோடியாக நடிக்கிறார்) பேட்டி கண்டவர் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரமான ஐஸ்வர்யா...
பேட்டியின்போது நடிகர்திலகத்தைப்பற்றி நித்யா சொன்னது....
"பாலாஜி சாருடைய 'தீர்ப்பு' படத்தில் சிவாஜி சாருடைய மகளாக நடித்திருந்தேன், சரத்பாபு, விஜயகுமார் இருவரும் என் அண்ணன்கள். படத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகும் காட்சி வரும். என் உடலை தகனம் செய்யும் காட்சி சத்யா ஸ்டுடியோவின் வெட்டவெளி பொட்டலில் நடந்தது. என்னைக் கற்பழித்தவைக் கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் என் தந்தை சிவாஜி சார், பரோலில் வந்து என் சிதைக்கு தீ வைப்பதாக காட்சி. விறகுகளால் சிதை அமைத்து அதில் என்னைப்படுக்க வைத்து உடல் முழுக்க வரட்டி அடுக்கி முகத்தை மட்டும் திறந்து வைத்து குளோசப் ஷாட்களை எடுத்தனர். பின்னர் முகத்தையும் வரட்டியால் முடி , சிவாஜி அப்பா தீ வைபது போல காட்சி.
அதை எடுத்து முடித்ததும், டைரக்டர் பில்லா கிருஷ்ணமூர்த்தி சார், சிவாஜி சாருடைய குளோசப் காட்சிகளை எடுத்து முடித்து அனுப்பி விடலாம் என்று மும்முரமானார். அதைக்கவனித்த சிவாஜி சார், டைரக்டரிடம் "ஏம்ப்பா, அந்தப்பொண்ணை என்ன மலர்ப்படுக்கையிலா படுக்க வச்சிருக்கீங்க?. பாவம் சிதையில் படுத்திருக்குப்பா. முதல்ல அதோட ஷாட்களை எடுத்து முடிச்சு, குழந்தையை அங்கிருந்து கிளப்புங்கப்பா. அப்புறம் என்னோட ஷாட்களை எடுத்துக்கலாம். அந்தப்பொண்ணோட சீன்கள் முடிய எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டார்.'ஒரு மணி நேரமாகும்ணே' என்று இயக்குனர் சொன்னதும், "இரண்டு மணி, மூணு மணி நேரமானாலும் அப்பா நான் வெயிட் பண்றேன். முதல்ல அந்தக்குழந்தையின் சீன்களை முடிச்சு சிதையிலிருந்து எழுப்புங்க" என்று சொன்னவர், அந்த வெட்டவெளியில் ஒரு குடையை மட்டும் பிடித்துக்கொண்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
திரைப்படங்களில், இதுபோன்ற சாவுக்காட்சிகள் எடுத்தால், அது முடிந்ததும் அதில் நடித்தவருக்கு திருஷ்டி கழிப்பார்கள். என்னுடைய காட்சிகள் எடுத்து முடிந்ததும் எழுந்துவந்த சிவாஜி சார், 'குழந்தைக்கு நான் திருஷ்டி கழிக்கிறேன்' என்று திருஷ்டி கழித்தவர் "உனக்கு சாவே வரக்கூடாதுன்னு ஆசீர்வதிக்கிறேம்மா" என்று ஆசீர்வதித்தார். (இந்த இடத்தில் நித்யாவின் கண்கள் பனித்தன). அவரோடு ஒப்பிடும்போது நானெல்லாம் ஒண்ணுமேயில்லை. இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களில் சின்னவங்க, பெரியவங்க என்ற வித்தியாசமெல்லாம் பார்க்காம அவர் மதிப்பு கொடுப்பது எல்லோரும் அவர்கிட்டே கத்துக்க வேண்டிய விஷயம்".
அப்போது பேட்டி கண்ட ஐஸ்வர்யா சொன்னது "அவரோட படங்களைப் பார்க்கும்போது சிவாஜி அங்கிள் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய கலைஞர், எவ்வளவு பெரிய சாதனையாளர் என்றுதான் தெரிஞ்சுக்கறோம். ஆனால் அவரோடு பழகிய உங்களைப்போன்றவர்கள் சொல்லும் இதுபோன்ற சம்பவங்கள் மூலம்தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் நமக்கு தெரிகிறது"
இனி வரும் தலைமுறைகளும் அவரைப்பற்றி அறிந்து வியக்கத்தான் போகின்றன...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2014, 11:20 AM
#2486
Junior Member
Regular Hubber
[IMG][/IMG]
Sent from my GT-S7562
-
28th October 2014, 11:33 AM
#2487
Junior Member
Regular Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2014, 01:20 PM
#2488
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th October 2014, 01:23 PM
#2489
Senior Member
Devoted Hubber
Rajkumar memorial to be open on 29th of Nov. Govt. of Kar. inviting Tamil SS also for this function. But these SS earning and living in TN never raised any voice on NT Memorial. If their movie face any problems for release only they raise their voices. RK memorial come within a period of 8 years not only the support of their family but also from Kannada Film Ind., and fans of Rajkumar and more over Kar. Politicians (though he was not supported any political parties in Kar.) In case of vishu memorial, only 3 years.
But in TN, only Sivaji Pervai and some Nt fans are fighting for NT Memorial. When will our Dream comes true ? In TN, Nt statue itself not allowing, then were will Memorial ?
Last edited by abkhlabhi; 28th October 2014 at 01:30 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th October 2014, 01:27 PM
#2490
Junior Member
Veteran Hubber

Originally Posted by
s.vasudevan
Courtesy: Mr P R old post
காத்தவராயன்
--> மிக தத்ரூபமான மல்யுத்தக் காட்சி. சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5-6 நிமிடங்கள் நீளும் அக்காட்சியில் சிவாஜியின் வெற்றி இயல்பான படிப்படி முன்னேற்றமாக நம்பும்படி காண்பிக்கப் படிகிறது. பல முறை சிவாஜியும் (டூப் அல்ல!) எதிராளியும் ஒருவரை ஒருவர் வீழ்த்துகிறார்கள். களத்துக்குள் இறங்கும் பொழுது சிவாஜி தோளை வளைத்துக் கொண்டு இறங்குவது, ஆயத்தத்தை போகிற போக்கில் மிக சிறப்பாக காண்பிக்கும் காட்சித்துளி. அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.
--> குடுகுடுப்பைக்காரனாக வரும்போது பேச்சும், பாவனையும் முற்றிலும் மாறிப்போவதெல்லாம் சிவாஜியின் அன்றாட அதிசயம்.
--> காத்தவராயன் கோபம் கொண்டு ஊரை துவம்சம் செய்யும் போது தூணைப் பிடுங்க வீடே விழும் காட்சிகள்
--> பிரமாண்ட அய்யனார் சிலை உதிர்ந்து விழும் கடைசி காட்சி
இப்படி பல சிறப்பான காட்சிகள்.
-------
Bookmarks