-
31st October 2014, 06:52 PM
#2381
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
KALAIVENTHAN
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞரின் கருத்தை நிரூபித்து வரும் பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு, ரகசிய போலீஸ் 115 படத்தில் 6 சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். திரு. வாலி பாடல்கள் எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், திரு. கண்ணதாசன் மகன் திருமண விழா புகைப்படத்தை வெளியிட்டீருந்தீர்கள். திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியது போல அவர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள். தந்தை கண்ணதாசன் பெயரில் பதிப்பகம் நடத்தி தரமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தலைவர் மீது அபிமானம் கொண்டவர். கடந்த ஜனவரி 17 தலைவரின் பிறந்த நாளன்று அவரது நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
காட்சிகள், புத்தக பதிவுகள் மூலமே தனது கருத்தை விளக்கிவிடும் ஆற்றல் கொண்ட நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு,
ரகசிய போலீஸ் 115 படத்தின் பால்.. தமிழ்ப் பால் பாடல் காட்சி வீடியோவை பதிவிட்டதன் மூலம் அந்தப் பாடலை திரு. வாலி எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கீழே உள்ள செய்தி இணையதளத்தில் நான் படித்தது. அந்த இணையதள முகவரியையும் அளித்துள்ளேன். அதை வைத்துத்தான் ரகசிய போலீசில் எல்லா பாடல்களையும் கவியரசர் எழுதியதாக கருதிக் கொண்டிருந்தேன். பால் தமிழ்ப்பால்... பாடல் வாலி எழுதியதாக இருந்தால் எனது தவறை சுட்டிக் காட்டியதற்காக நன்றி. இது நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கான விளக்கமாகவும் இருக்கும். நன்றி.
-----------------------------
இணையத்தில் இருக்கும் அந்த தகவல்....
பால்! தமிழ்ப்பால்!
1968 ஆம் ஆண்டில், புரட்சி நடிகர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.
ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!
http://www.puratchithalaivar.org/tam...s/kannadhasan/
--------------------
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2014 06:52 PM
# ADS
Circuit advertisement
-
31st October 2014, 07:31 PM
#2382
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
பல்லாண்டு வாழ்க - படத்தின் விமர்சனம் படத்தை பார்த்த உணர்வு ஏற்படுத்தியது . நீங்கள் மிகவும் ரசித்து படத்தில் இடம் பெற்ற காட்சிகளை கோர்வையாக படம் பிடித்து மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் .பாராட்ட வார்த்தைகள்
இல்லை .
ஒரு காட்சியில் நம்பியார் வேறு ஒருவரின் உணவை திருடி உண்ண முற்படும் போது மக்கள் திலகம் அவர்கள்
நம்பியாரை பார்த்து '' உழைக்காத எந்த மனிதனுக்கும் சாப்பிட உரிமை இல்லை ''. என்று கூறும் காட்சியில் திரை அரங்கில் கை தட்டல் பலமாக இருந்தது .
உண்மை சம்பம்
பல்லாண்டு வாழ்க படத்தை பார்த்த சில நாட்களில் பெங்களுர் எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் பலர் 20-23 வயது நிரம்பியவர்கள் அவரவர் படிப்பிற்கு ஏற்றவாறு வேலைக்கு முயற்சி செய்ததில் எல்லா நண்பர்களுக்கும்
வேலை கிடைத்தது - முதல் இனிய செய்தி .
பல்லாண்டு வாழ்க - 100 வது நாளில் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் கிடைத்தது .அன்றைய தினம் நாங்கள்
ஒன்று சேர்ந்து 100வது நாளில் சென்னை வந்து தேவிபாரடைஸ் அரங்கில் பல்லாண்டு வாழ்க படம் பார்த்தோம் .
39 ஆண்டுகள் உருண்டோடி விட்டது .இன்றும் நாங்கள் [ பலர் ஒய்வு பெற்று விட்டார்கள் ] மக்கள் திலகத்தின்
நினைவாக அடிக்கடி சந்தித்து மகிழ்ந்து வருகிறோம் .
எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை உண்டாக்கிய படம் மக்கள் திலகத்தின் ''பல்லாண்டு வாழ்க ''
மறக்க முடியாத காவியம் .
திரு.வினோத் சார், உழைக்காத எந்த மனிதனுக்கும் சாப்பிட உரிமை இல்லை என்று தலைவர் கூறிய வார்த்தைகள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கு வேலையை தேடிக் கொள்ள ஊக்கமளித்திருக்கும் என்று கருதுகிறேன். அப்படி உழைக்க முன் வந்த உங்கள் அனைவருக்கும் படத்தின் 100வது நாள் பரிசாக, தலைவர் தனது ஆசிகள் மூலம் வேலை கிடைக்கச் செய்துள்ளார். தலைவரின் அந்த ஆசிதான் இன்றும் உங்களை பம்பரமாக உழைக்கச் செய்கிறதோ? புரிந்து கொண்டேன். இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
31st October 2014, 07:43 PM
#2383
Junior Member
Platinum Hubber
நவம்பர் மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்
1. விவசாயி - 01.11-1967
2. படகோட்டி - 03.11.1964
3. தாய் சொல்லை தட்டாதே - 07.11.1961
4. நம்நாடு - 07.11. 1969
5. உரிமைக்குரல் . 07.11.1974
6. பறக்கும் பாவை - 11.11.1966
7. ஊருக்கு உழைப்பவன் 12.11.1976
8. பரிசு . 15.11-1963
9. மகாதேவி - 22.11.1957
10. சிரித்து வாழ வேண்டும் - 30.11 .1974
உரிமைக்குரல் - 200 நாட்கள் ஓடி 1974ல் வசூலில் பிரமாண்ட சாதனைகள் .
நம்நாடு - மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடியது .
படகோட்டி - பரிசு - தாய் சொல்லை தட்டாதே - சிரித்து வாழ வேண்டும் - 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் .
-
31st October 2014, 07:52 PM
#2384
Junior Member
Platinum Hubber
VIVASAYI
1.11.2014
48TH ANNIVERSARY
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2014, 08:25 PM
#2385
Junior Member
Diamond Hubber
-
31st October 2014, 08:31 PM
#2386
Junior Member
Platinum Hubber
-
31st October 2014, 08:31 PM
#2387
Junior Member
Diamond Hubber
-
31st October 2014, 10:12 PM
#2388
Junior Member
Veteran Hubber
Enjoyed reading the reviews written by Jaishankar and Kalaiventhan.
-
31st October 2014, 10:14 PM
#2389
Junior Member
Veteran Hubber
I am wondering Kalaiventhan sir where are you all these days.
-
31st October 2014, 10:16 PM
#2390
Junior Member
Veteran Hubber
Bookmarks