-
9th November 2014, 06:33 PM
#11
Junior Member
Seasoned Hubber
சென்னை டிரெண்டில் உத்தமவில்லன்
கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த படங்களில் உத்தம வில்லன் முதலில் ரிலீஸாகும் என தெரிகிறது. வரும் 2015ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் "உத்தம வில்லன்" ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை "உத்தம வில்லன்" திரைப்படத்தில் ஒரு ஸ்டில்லை இயக்குனர் ரமேஷ் அரவிந்த் வெளியிட்டுள்ளார். அறுபது வயதான கமல், இளையதலைமுறை நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் மிக இளமையாக பூஜா குமாருடன் காட்சி அளிக்கும் இந்த ஸ்டில் வெளியான ஒரே மணி நேரத்தில் சமூக இணையதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
டுவிட்டரின் சென்னை டிரெண்ட்டில் பூஜாகுமார் என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபத்தின் இரண்டு பாகங்களிலும் கமலுடன் நடித்துள்ள பூஜாகுமார் இந்த படத்தில் கவர்ச்சியில் கலக்கியிருக்கலாம் என்பது ஸ்டில்லை பார்த்தாலே தெரிகிறது.
என்.லிங்குசாமி மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
-
9th November 2014 06:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks