-
10th November 2014, 01:54 AM
#281
Senior Member
Diamond Hubber
பிறந்தநாள் சம்பந்தமான அனைத்து ஊடகச் சுட்டிகளும் இங்கே ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டிருக்கிறது.
http://www.twitlonger.com/show/n_1si8e1r
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
10th November 2014 01:54 AM
# ADS
Circuit advertisement
-
10th November 2014, 01:55 AM
#282
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Unmai Vilambi
venki sir thank you. superb.
one correction.."ஏக் துஜே கேலியே பாடலின் க்ளைமாக்ஸ் ஒரே காட்சியில் 350 அடி படமாக்கப் பட்டது"..its not that . KH mentions about one lengthy shot in which he speaks in many slang of Hindi.
thanks for the input. will update my post.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
10th November 2014, 05:31 AM
#283
Senior Member
Diamond Hubber
கதைக்களனோடு நெய்யப்பட்ட தேர்ந்த நகைச்சுவைக் காட்சிகள் எனப் பட்டியலிட்டால் கண்டிப்பாக இதற்கு எனது ஒட்டு உண்டு. பாலச்சந்தரின் சிறப்பான இயக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று. கீழ்க்காணும் உரையாடல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கமல் திரியொன்றில் நான் பகிர்ந்ததுதான். மூத்தக் கலைஞர் மீசை முருகேசன் மறைவினை ஒட்டி இன்று மீள் பதிவு செய்கிறேன். சினிமாவில் அவரின் பங்கு இதுபோன்ற காட்சிகளால் குறிப்பிடத்தக்க ஒன்றாக நம்மில் பதிகிறது.
படம் : உன்னால் முடியும் தம்பி
காட்சி : காதலி கமலத்தின் அப்பாவை(அட்வகேட் அஞ்சய்யா) முதன் முதலாக பார்க்க உதயமூர்த்தி வருகிறார். அஞ்சய்யா தவிலில் ஒரு நடையை வாசித்துக்கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் யார் யார் என்று தெரியாமல் இருக்கும் தருணம்.
அஞ்சய்யா: எப்புடி?
உதயமூர்த்தி: ம்ம்.. இன்னொரு வாட்டி வாசிங்க.
அஞ்சய்யா: ஏன்?
உதயமூர்த்தி: இல்ல.. வீச்சு நிக்குது.. தீர்மானம் தப்பு. சரியில்ல.
அஞ்சய்யா: சரியில்லையா! யாரை பாத்தியா அது மாதிரி கேக்குற? பஞ்ச நட தெரியுமா உனக்கு?
(தவில் இசை..)
அஞ்சய்யா: இது என்ன நடை?
உதயமூர்த்தி: திஸ்ரம்.
(தவில் இசை..)
உதயமூர்த்தி: சதுஸ்ரம்.
(தவில் இசை..)
உதயமூர்த்தி: மிஸ்ரம்.
(தவில் இசை..)
உதயமூர்த்தி: கண்டம்.
அஞ்சய்யா: சங்கீர்னம் தெரியுமா உனக்கு?
தக திமி தக தகிட தாம். எங்க வாசிங்க?
அஞ்சய்யா: சரியா வாசித்துக் காட்டுகிறார்.
உதயமூர்த்தி: (சிரிப்புடன்) இதெல்லாம் நல்லாதான் வாசிக்கிறீங்க.. ஆனா இப்பவும் சொல்றேன். மொதல்ல வாசிச்ச தீர்மானம் தப்புத்தாளம்.
அஞ்சய்யா: இவர் பெரிய அறிவாளி! விமர்சனம் பண்ண வந்திட்டியோ?
உதயமூர்த்தி: நான் அறிவாளிதான். ஆனா விமர்சனத்தை தாங்கிக்க முடியாதவனெல்லாம் கலைஞன் இல்லை.
அஞ்சய்யா: அதிகமா பேசின உன் முதுகுல பஞ்ச நடைய வாசிச்சுடுவேன்.
உதயமூர்த்தி: நீங்க அங்கேயே பஞ்ச நடை வாசிங்க. தவுல வுட்டுருங்க. பாவம்.
அஞ்சய்யா: அறிவு கெட்ட முண்டம்! இந்த மீசையோட போட்டிபோட வந்துட்டியா? சின்ன மீசை! சின்னப்பயலே!
உதயமூர்த்தி: டேய்! வெள்ள மீசை!
அதுக்கு அப்புறம் நடந்தேறும் சூடான வார்த்தை பரிமாறலில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பல்சுவை!
சத்தம் கேட்டு கமலம்(சீதா),
"Stop"
அப்போது சண்டையின் முற்றுப்புள்ளியா ஒரு வார்த்தை..
உதயமூர்த்தி: "ராஸ்கல்!"
கமலத்தின் அப்பாதான் இந்த ஆளு எனத் தெரிந்தவுடன், ஒரே வியப்பு!!
உதயமூர்த்தி: என்ன நீ? இப்படியெல்லாம் இருப்பார்னு சொல்லவே யில்லையே?"
கமலம் : அய்யோ! நாந்தான் அப்பவே சொன்னனே! எங்க வீட்டுல ஒரு சுவாரஸ்யமான மனுஷன பாக்கப் போறிங்கன்னு!"
உதயமூர்த்தி: அது சரி! அதுக்காக இப்படியா? உனக்கு இப்படி கருப்பா ஒரு அப்பா இருப்பார்ன்னு.. (அஞ்சய்யாவைப் பார்த்து..) அப்படி சொல்லலிங்க.. மீசை நல்லா வெள்ளையாருக்கா.. கருப்பு இன்னும் தூக்குது!.
-------------------------------------------------------------
Last edited by venkkiram; 10th November 2014 at 08:13 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
10th November 2014, 10:03 AM
#284
Junior Member
Seasoned Hubber
ha ha ha. very hilarious indeed. i couldnt recollect any other movie acted by him.
Last edited by Unmai Vilambi; 10th November 2014 at 10:15 AM.
-
10th November 2014, 03:49 PM
#285
Member
Senior Hubber
He is Meesai Murugesh ....... he comes as Janakaraj father in law in Agni natchathiram in the famous blue film sequence ..... and also as the morsing artiste in Peygala nambaathey song interlude in mahanadhi.
Kalaikkadavul Kamalin Bakthan
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th November 2014, 04:34 PM
#286
Senior Member
Veteran Hubber

Originally Posted by
radiochandra1977
He is Meesai Murugesh ....... he comes as Janakaraj father in law in Agni natchathiram in the famous blue film sequence ..... and also as the morsing artiste in Peygala nambaathey song interlude in mahanadhi.
Welcome back RC sir..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
10th November 2014, 04:51 PM
#287
-
10th November 2014, 06:09 PM
#288
Junior Member
Seasoned Hubber
never seen kh in this get up. what movie?
-
10th November 2014, 06:26 PM
#289
Senior Member
Seasoned Hubber
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th November 2014, 07:29 PM
#290
Junior Member
Devoted Hubber
மகாபாரத கதைக்கு இளையராஜா இசை வடிவம் தர வேண்டும்: கமலஹாசன் பேச்சு
மகாபாரத கதைக்கு இளையராஜா இசை வடிவம் தர வேண்டும் என்று கமலஹாசன் பேசினார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசுவின் முதல் நான்கு பாகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று நாவலின் முதல் பாகத்தை வெளியிட்டார். இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டார்.
விழாவில் கமலஹாசன் பேசியதாவது:–
மனிதர்கள் எல்லோரும் கதைகளால் பின்னப்பட்டு இருக்கிறார்கள். நாம் எல்லோருமே கதை கேட்பவர்களாக இருக்கிறோம். நமக்கெல்லாம் மதம் தேவையாக இருக்கலாம் அல்லது தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நிச்சயம் தேவை. இசை வடிவத்தில் சொல்லப்படுவதுதான் வேதங்கள். அதனால் சுருதி என்கிறோம். மகாபாரதத்தை ஜெயமோகன் நாவலாக எழுதி இளையராஜா அதை இசை வடிவத்தில் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். வேறு எதுவும் தேவை இல்லை. நம் காலத்தில் வணங்கத்தக்க படைப்பாளனாக ஜெயமோகன் நமக்கு கிடைத்து இருக்கிறார்.
இவ்வாறு கமலஹாசன் பேசினார்.
விழாவில் இளைய ராஜா பேசும்போது, ‘‘மகாபாரத கதையை நாவலாக எழுதுகிற முயற்சிக்கு பெரிதும் உழைப்பு தேவை. ஜெயமோகன் பெரிய அளவில் உழைத்து நாவல்களாக எழுதுகிறார். மகாபாரதத்துக்கு நான் இசை வடிவம் கொடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய உழைப்பை கோரும் பணியாக இருக்கிறது. ஆனாலும் அந்த பணியை செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு வருகிறது’’ என்றார்.
Bookmarks