-
13th November 2014, 09:59 PM
#2831
Junior Member
Junior Hubber
வெற்றி விழா படத்துல பூங்காற்று உன் பெயர் சொல்ல அப்படின்னு ஒரு பாட்டு வரும். Kamal dance with Amala. In the middle of the song (i think in the lines anantha ellaigal kaattum) he walked like N.T. அப்பட்டமா சிவாஜி மாதிரியே நடப்பார். தப்பில்லே. யாரா இருந்தா என்னா. காப்பி பண்ணாம இருக்கவே முடியாது. That's N.T.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
13th November 2014 09:59 PM
# ADS
Circuit advertisement
-
13th November 2014, 10:27 PM
#2832
Junior Member
Veteran Hubber
Originally Posted by
pattaakkathi
naan irumbu kottaiya sernthavanum illa.
Qutar ai sernthavanumilla.
Saudi arabia kaararum illa.
என்ன குழப்பம் எனக்கு ? எனக்கு ஒரு குழப்பமும் இல்லையே ! இன்னும் சொல்லபோனால் மிக மிக தெளிவாகவே இருக்கிறேன்.
நீங்கள் பதிவிட்டிருக்கும் இரும்புகோட்டை என்றால் என்னது ? ஜார்ஜ் கோட்டையை சொல்கிறீர்களா? என்ன குறிப்பிட ஆசைபடுகிறீர்கள் ? ,
கத்தார், சவுதி அரேபியா இரண்டு நாடு என்பது புரிகிறது...அந்த நாட்டின் பெயரை பார்த்து நான் எதற்கு குழம்பவேண்டும் ?
நீங்கள் குழப்ப பார்த்தீர்கள் ஆனால் நான் குழம்பவில்லை என்பது உண்மை. மேலும், திரு கோபால் அவர்களுக்கும் எனக்கும் உரிமையுடன் சொற்போர் நடத்தும் பழக்கம் நான் இந்த திரியில் எழுத தொடங்கியதிலிரிந்து உண்டு.
அவரும் வயதில் மூத்தவன் என்ற உரிமையில் என்னை திட்டியதுண்டு...நானும் வயதில் இளையவன் என்ற செல்லத்தில் அவரை மரியாதையுடன் திட்டியதும் உண்டு.
அப்படி செய்யும்போது எங்கள் இருவருக்கு மட்டுமே பரஸ்பரம் சொல்லாமல் புரிந்துகொள்ளகூடிய ரகசியம் ஒன்றும் அதில் உள்ளது !
ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு குழம்பியுள்ளீர்கள் என்றுதான் புரியவில்லை. !
வாழ்த்துக்கள் ! Truth is stranger than fiction !!!
Last edited by RavikiranSurya; 13th November 2014 at 10:31 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
13th November 2014, 10:45 PM
#2833
Junior Member
Devoted Hubber
Originally Posted by
joe
சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . சிவாஜி என்றால் பிரபுவின் அப்பா , விக்ரம் பிரபுவின் தாத்தா என புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு .. தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் . ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் இன்றைய தலைமுறை அறிந்த மாபெரும் நடிகர்கள் கமல் , ரஜினி இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருப்பது .. கமல் அளவுக்கு ரஜினி அடிக்கடி சிவாஜி பற்றி பேசவில்லையெனினும் தானும் சிவாஜியின் வழி வந்தவன் , அவர் ரசிகன் என ரஜினியும் பல முறை தெளிவாக பதிந்திருக்கிறார். எனவே கமல் , ரஜினி போன்றவர்கள் நம் சக நடிகர் திலகம் ரசிகர்கள் .. நாம் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்களின் ஒரு வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் ..அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் நடிகர்திலகத்தின் பெருமையை அறிந்து தெரிந்து கொள்ள முற்படுவோர் பலர் .. அவர்களை இன்னும் நம் பக்கம் ஈர்ப்பது தான் அழகே தவிர கமல்ஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .
true..
Last edited by Murali Srinivas; 23rd November 2014 at 12:19 AM.
-
13th November 2014, 10:53 PM
#2834
Senior Member
Seasoned Hubber
இனிமேல் சிவாஜியைப் பற்றி நமது ரசிகர்கள் யாரும் இங்கே சிலாகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த வேலையை கமலும் ரஜனியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்களால் தான் இனிமேல் சிவாஜியை மக்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள். இல்லையென்றால் சிவாஜியா, யாரது, ஏதோ வடநாட்டில் ஜிலேபி விற்பவர் போலிருக்கிறது என்ற நிலை வந்தாலும் வரலாம்..
இறைவா... இதற்கு மேலும் இந்தத் திரியில் பங்கேற்க வேண்டுமா ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th November 2014, 11:00 PM
#2835
Junior Member
Devoted Hubber
Dear Mr. Pattaakkathi,
What you are coming to say, I am not understanding.
-
13th November 2014, 11:03 PM
#2836
Junior Member
Veteran Hubber
நாளை முதல் சென்னை ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி மதியம் 2-45 மணி மற்றும் மாலை 6-45 மணிக்கு நடிகர் திலகம் & நாடிய பேரொளி நடிப்பில் வெளிவந்த ஜெமினியின் விளையாட்டு பிள்ளை.
JRL நிறுவனத்தின் வெளியிடு.
நடிகர் திலகத்தின் பல மயிர்கூச்செறியும் சாகசகாட்சிகள் நிறைந்த படம்.
நடிகர் திலகத்துடன் நாட்டிய பேரொளி
அழகு நிலா காஞ்சனா
நடிகர் சிவகுமார்
மற்றும் புதிய முயற்சியாக வில்லனாக திரு சோ அவர்கள்.
நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் பங்குகொள்ளும் ரேக்ளா ரேஸ் தத்ரூபமானமுரையில் இருவருமே டூப் நடிகர்கள் பயன்படுத்தாமல் நடித்திருப்பார்கள்.
நடிகர் திலகம் அவர்கள் இந்த திரைப்படத்தில் இயற்கையான அழகு மன்மதனாக வலம் வருவார்...!
95% டூப் பயன் படுத்தாமல் காளையுடன் வீர விளையாட்டு ...
மேலும் மதம் கொண்ட யானையை அடக்கும் காட்சியும் 90% டூப் பயன் படுத்தாமலே நடிகர் திலகம் கையாண்டிருப்பார்..!
இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் வெளியுலக விற்பன்னர்களை ஆங்கிலத்தில் வரவேற்று சுமார் 3 நிமிடம் உரையாற்றும் காட்சி படத்தின் மற்றொரு highlight !!!
FILM NOT TO BE MISSED !!!
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th November 2014, 11:28 PM
#2837
Junior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
இனிமேல் சிவாஜியைப் பற்றி நமது ரசிகர்கள் யாரும் இங்கே சிலாகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த வேலையை கமலும் ரஜனியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்களால் தான் இனிமேல் சிவாஜியை மக்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள். இல்லையென்றால் சிவாஜியா, யாரது, ஏதோ வடநாட்டில் ஜிலேபி விற்பவர் போலிருக்கிறது என்ற நிலை வந்தாலும் வரலாம்..
இறைவா... இதற்கு மேலும் இந்தத் திரியில் பங்கேற்க வேண்டுமா ...
ஆமாம்..வந்தாலும் வரலாம்..!
அவர்கள் தான் தமிழ்நாட்டின் முகவரிகள் !
அதே போல மற்றொரு சம்பவம்...!
ஒரு பழமை வாய்ந்த பட நிறுவனம் பட துறையில் பல ஆண்டுகள் நிலைத்து இருக்கும் ஸ்தாபனம் விழா நடத்தியது..! அந்த விழாவில் அனைத்து நடிகர்களும், நடிகர் திலகம் உட்பட வந்திருந்து வாழ்த்தும் ஒரு விழா.
நடிகர் திலகம் அதில் ஒரு நடிகரை (அந்த நடிகர், நடிகர் திலகத்தால் தான் தன்னுடைய வாழ்கையில் முக்கியமான ஒரு கட்டத்தில் தமிழ் திரைப்படத்தில் மறுவாழ்வு பெற்றவர் அவருடைய மறுமலர்ச்சியும் அந்த படத்திலிருந்துதான்)
ஒரு சமயம் அவர் தாடி வைத்துள்ளதை பார்த்து புன்வுருவலுடன் மிகவும் வாஞ்சையுடன் , "என்னடா...எனக்கு போட்டியா என்று கூரியிர்க்கிறார் தனது தாடியை தடவியபடி....அதற்க்கு அந்த நடிகர் சிரித்துவிட்டு..அந்த நகைச்சுவை ரசித்து சென்றுள்ளார். ஆனால் அதை மனதிலயே பூட்டிவைத்து அதற்க்கு பதில் தக்க தருணத்தில் திருப்பவேண்டும் என்று எண்ணியபடியே.
இந்த விழா நிகழ்ச்சியில் நடிகர் திலகம் மேடையில் அமர்ந்திருக்கும்போது அவருக்கு முன் பேசிய அந்த நடிகர் அந்த விழாவிற்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் அந்த நிகழ்ச்சியை அனைவர் முன்னிலையிலும் நினைவு கூர்ந்து.....
" இங்கே இருக்கறவங்களுக்கு நாம சொல்றது என்னனா ...அய்யா..நாம யாருக்கும் போட்டி இல்லீங்க ,,,,நாம ஏதோ நம்ப வழிலே போயிற்றுக்கோம்...யாரு வம்புக்கும் போகாம ...ஆனா நம்பளே தான் எல்லாரும் சீண்டபாக்றாங்க ...நாமளும் பதிலுக்கு சீண்ட ஆரம்பிச்சா விஷயம் வேரே மாதிரி ஆயிடும்....அப்டீன்னு சொல்லிக்கிட்டு ..இந்த நிறுவனம் மேலும் மேலும் வளரணும்னு நான் ஆண்டவனே வேண்டிகிறேன்...!"
என்று கூறி விறு விறு என்று சென்றுவிட்டார்...!
கேமரா அந்த நடிகர் அப்படி கூறும்போது நடிகர் திலகம் முகத்தை focus செய்வதை நாம் பார்த்தோமேயானால் நடிகர் திலகம் முகம் ஒரு சில வினாடிகளில் அதிர்ச்சியும் புன்வுருவலும் கலந்த ஒரு EXPRESSION புரிவதை காணலாம் !
அந்த நடிகர் தமிழகத்தில் அன்றும் அதன் மூலமாக இன்றிருக்கும் நிலைக்கு காரணம் நமது நடிகர் திலகம் அவர்கள் ....அதை கணநேரத்தில் மறந்து...தனக்குள் வேறு ஏதோ இருக்கும் பிரச்சனையை அந்த PRESSURAI நடிகர் திலகம் வாயிலாக ரிலீஸ் செய்துகொண்டது, அனைவரும் அன்று அந்த நடிகர் தேவையில்லாமல் நடிகர் திலகத்தை அவமானபடுத்துவதாக நினைத்து தன்னை அவமானபடுத்திகொண்டார் என்று பேசியது இன்றும் மறக்க முடியாத ஒன்று !!
திராவிட கட்சிகளுக்கு, நாத்திகம் விளம்புகிரவர்களுக்கு "ஜிங்க்சக்" அடிக்கும் நடிகர்கள் முக்கால்வாசிபேர் நடிகர் திலகத்தை பின்னால் குத்தியும், நடக்கும் வழியில் குழி நொண்டியும், புகழ்வதுபோல இகழ்வதிலும் PHD எடுத்தவர்கள்தான். அந்த நடிப்பில் நடிகர் திலகத்தையே சாப்பிட்டு ஏப்பம் விட்டு செல்பவர்கள்தான் !
Last edited by Murali Srinivas; 15th November 2014 at 06:04 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th November 2014, 02:04 AM
#2838
Junior Member
Veteran Hubber
Ungalai nijama ninachathakku neega vera maathiri ninachutteengale! Naan irumbu kottaiya sernthavanum illa. Nenga ninaikkira mathiri Qutar ai sernthavanumilla. Saudi Arabia kaararum illa. Athuthan unga kuzhapputhunnu nenaikkiren.
by newbee Pattaakkaththi.
அன்பு நண்பர் பட்டாக்கத்தி அறிவது. நடிகர்திலகத்தின் திரி வெறும் புகழ் மட்டுமே பாடும் விஷயங்களிலிருந்து விலகி சிறிது வித்தியாசமானது. அறிவுசார்ந்த அலசல்கள் அதன்காரணமாக பதிவர்களிடையே வாதப்பிரதிவாதங்கள்....குடுமிப்பிடிசண்டைகள்... ஜாலியாக வாரிவிடுதல்...மூலவர் நடிகர்திலகத்தையே ஒவ்வாத கமர்ஷியல் விஷயங்களில் தயங்காமல் விமர்சிப்பது....ஒரு ஒருவாரம் இதுவரை வந்த அனைத்து திரிபாகங்களையும் நேரம் ஒதுக்கி படித்துப் பாருங்களேன். எப்பேர்பட்ட எழுத்துலக எம்டன்கள், ஜாம்பவான்கள், இந்திரஜித்துக்கள், மைதாஸ்கள், ஆவணத்திலகங்கள்,... இசைராவணர்கள்...... மயன்கள்...மந்திரதந்திரவாதிகள்..எப்பேற்பட்ட உழைப்பை நல்கி பதினான்கு திரி பாகங்களை....... காலத்தால் சிதையாத கல்வெட்டுக்கள் என்பதை உள்ளத்தால் உணருவீர்கள். சில ரசாபாசங்கள் நடந்திருக்கலாம். அனைத்துமே நடிகர்திலகம் என்னும் ராணித்தேனீயைமையப்படுத்தி நாமெல்லாம் சேவகத்தேனீக்களாக உருமாறி கட்டப்பட்ட தேன்கூடுகள். தேன்கூடு கலைக்கப்பட்டால் தேனீக்கள் கொட்டுவது இயல்பே.
ஏற்கனவே உங்களிடம் வேண்டிவிரும்பி கேட்டுக் கொண்டபடி தங்க்லீஷ் / தமிங்கிலம் தவிருங்கள் ! முழுத்தமிழ்/ ஆங்கிலம் கலவையில் பதிவிடுங்கள்.
சகபதிவர்களை விமரிசிக்க (இது குட்கா பழக்கம்போல் நம்மை நடிகர்திலகத்தின் புகழார்வப் பாதையிலிருந்து தடம் புரள வைத்துவிடும்) எண்ணும் முன் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் கொண்ட பதிவுக் கோட்டையை கட்ட ஆரம்பிப்பது நலமே. சிறிய வேண்டுகோள் அவ்வளவே!
Last edited by sivajisenthil; 14th November 2014 at 08:58 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th November 2014, 10:17 AM
#2839
Junior Member
Junior Hubber
நன்றி செந்தில் அவர்களே!
உங்கள் நாகரீகமான பதிவுக்கு மிக்க நன்றி. ஒரு சீனியர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களின்படி நிச்சயம் நடக்க முயற்சி செய்கிறேன்.
நான் இந்த மையத்தில் உறுப்பினாக ஜனவரி ஆறாம் தேதி 2013 அனுமதி வேண்டி விண்ணப்பித்து இவ்வளவு நாட்கள் சென்று இப்போதுதான் தான் எனக்கு உறுப்பினர் உரிமம் கிடைத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்திலும் சரி! அதற்கு முந்தின காலத்திலும் சரி இந்த திரியை விடாமல் வாசித்து வந்தவன் நான். இந்தத் திரியில் நடக்கும் அத்தனை கூத்துக்களையும் கூர்ந்து கவனித்துத்தான் வருகிறேன். ஏதோ சும்மா வந்துவிட வில்லை. இன்றோ நேற்றோ நீங்கள் நினைப்பது போல அல்லாமல் பல நாட்களாக நடிகர் திலகம் திரியை வாசிக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல என்னாலான நடிகர் திலகம் கருத்துக்களை நிச்சயம் பதிவிடுவேன். ஆனால் நான் மதிக்கும் நடிகர் திலகம் பல வழிகளில் இங்கு அவமானப்படுத்தப் படுவது கண்டு மனம் கொதிக்கிறேன். உங்கள் பதில் எனக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. கேவலமான சண்டைகள் இட்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இங்கு நடந்த பல்வேறு விஷயங்களை நீங்கள் சாதரணாமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது சகோதர்கள் சண்டை என்று கூறுவது ஸ்ரிப்பைத்தான் வரவழைக்கிறது.
திருச்சி நண்பர் ராமச்சந்திரன், ஹைதராபாத் ரவி இவர்களெல்லாம் மனம் வெதும்பி போனதற்கும், திரியை விட்டு விளகியதற்கும் உங்கள் அன்பான சகோதர சண்டைகள் தான் காரணமா? பல பழைய உறுப்பினர்கள் எவரும் இங்கு பெரும்பாலும் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பதற்கு உங்கள் செல்லச் சண்டைகள்தான் காரணமா?
இங்கு ஒருவர் காரணமே இல்லாமல் என்னை வீண் வம்புக்கு இழுத்தார். சிவாஜி பற்றிய பதிவுகள் இட்டுத்தான் மற்றதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் சிரிப்புதான் வருகிறது. யாருக்கும் எந்தக் கருத்தையும் நாகரீகமாகக் கூற இந்த மையத்தில் இடம் உண்டு. சிவாஜியைப் பற்றிய பதிவுகளை இட்டுவிட்டுத்தான் இங்கு பிறகே தன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அடம் பிடித்தால் இந்தத் திரியில் மொத்தம் ஐந்து பேர் கூட தேற மாட்டார்கள். சிவாஜியைப் பற்றிப் பதிவிடுபவர்கள் மட்டும்தான் இங்கே பதிவிடுகிரார்களா? முதலில் இந்தப் போக்கை நிறுத்துங்கள். சிவாஜி ரசிகர் அல்லாதோர் பலர் இந்தத் திரியில் வந்து சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்திற்கு சிவாஜியை வசவு பாடி எழுதும் போது உண்மையான சிவாஜி ரசிகனான எனக்கு எழுத சுதந்திரம் இல்லையா? என்னாப்பா இது. எங்கும் நடக்காத அக்கிரமா இருக்கே.
இங்கு நடக்கும் சக்களத்தி சண்டைகள் எந்தப் பதிவரியுமே நிம்மதியாக பதிவிட விடுவதில்லை. இதை அருமை நண்பர் கோபால் பலதடவை சொல்லியிருக்கிறார்.
சிவாஜி ஓல்ட் மேன் என்று ஒருத்தர் எழுதுவார். வேறு நடிகர்களால் மட்டுமே சிவாஜி புகழ் பரவ முடியும் என்று இன்னொரு மேதாவி எழுதுவார். இங்கிருப்பவர்கள் சிவாஜியை சிலாகித்துப் புண்ணியமில்லை என்று ஒருத்தர் எழுதுவார்.
தைரியமிருந்தால் இப்படியெல்லாம் போய் எம்ஜிஆர் திரியில் எழுதச் சொல்லுங்களேன் பார்ப்போம். எம்ஜிஆர் ஓல்டாக தெரிவார். அப்புறம் எம்ஜார் புகழ் மு.க.முத்தால்தான் பரவியது என்று அங்கு போய் எழுதட்டுமே பார்க்கலாம். சிவாஜி அடிக்கடி தன் படங்களில் ஜாலியாக ஒரு வார்த்தை சொல்லுவார். டங்குவார் அறுந்திடும் அப்படின்னு. அது போல கிழித்து விடுவார்கள் கிழித்து.
நம் நமக்குள் ஒற்றுமையில்லாமல் அடிகடி சண்டையிட்டுக் கொள்வதனால்தான் சம்பந்தமில்லாத பலர் இங்கு வந்து சிந்து பாடுகிறார்கள். எதையுமே ஒரு கண்ட்ரோலில் வைக்க வேண்டும் செந்தில் அவர்களே. சிவாஜியப் பற்றி அவதூறாய் இங்கு வந்து எழுத பயம் இருக்க வேண்டும் செந்தில். மாற்றுத் திரி அன்பர்களிடம் இந்த விஷயத்தில் நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு சுதந்திரம் என்ற பெயரில் சிவாஜி இப்படி நடித்திருக்கக் கூடாது, சிவாஜி உடம்பு அப்படி இருந்திருக்கணும், சிவாஜி சகிக்கலை அப்படின்னு நாமலே எழுதறதனால தானே மத்தவங்க இங்க வந்து அவங்களே எழுதுறாங்க நமக்கென்ன அப்படின்னு கண்ணா பின்னான்னு எழுதுறாங்க.
இங்கு முதலில் தேவைப்படுவது ஒத்துமை.
ரெண்டாவது எந்த விஷயத்துக்கும் சிவாஜியை விட்டுக் கொடுக்கவே கூடாது. ஏன் விட்டுக் கொடுக்கனும். ஒண்ணுமே இல்லாத சில்லறைகளை எல்லாம் இந்த உலகம் தலையிலே தூக்கி வச்சி கொண்டாடும் போது நடிப்பால் நமக்கு பெருமை சேர்த்த அந்த மகா கலைஞன் இங்கே சுதந்திரம் என்ற பெயரில் நாம ஏன் குறை கூறனும். மத்தவங்களையும் அவமானப்படுத்த இடம் கொடுக்கணும். வழி வகை செய்து கொடுக்கணும்.
என்னடா புதுசா வந்தவுடன் இவன் நமக்கு அறிவுரையெல்லாம் எழுதுறான்னு தயவு செஞ்சி தப்பா நினைச்சுடாதீங்க. நடிகர் திலகம் கூட முதல் படமான பராசக்தியில் அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே நடிப்பின் அத்தனை கலை நுணுக்கங்களையும் வெளிப்படுத்தி விட வில்லையா?
புதிய பதிவர் என்று காலேஜ் மாணவர் ரேகிங் ரேஞ்சுக்கு கேலி கிண்டல் பண்ணுவதை விட்டு விட்டு சொல்லும் கருத்தில் தவறிருந்தால் சொல்லுங்கள். மனதார ஏற்றுக் கொள்கிறேன். என் மனதிலே உள்ள கருத்தைதான் தைரியமாக சொல்கிறேன். தப்பா இருந்தா மன்னித்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக யாரயும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இல்லை. அதனால் ஆகப் போவது என்ன.
உங்கள் அன்பான பதிவுக்கும், கருத்துகளுக்கும் நன்றிகள் செந்தில்.
ஆனால் கேவலமான சண்டைகளை சகோதர சண்டைகள் என்று சப்பை கட்டு கட்டாதீர்கள். இப்படியேதான் பல நல்ல உறுப்பினர்களை இழந்து நிற்கிறது இந்தத் திரி.
நிச்சயமாக சிவாஜி பற்றி எனக்குத் தெரிந்ததை இங்கே எழுதுவேன். ஆனால் அவர் அவமானப்பட்டால் தாங்கிக் கொள்ள மாட்டேன்.
அவமானப்படுத்த வேண்டும் என்று பதிவிடுபவர்களை ஓட ஓட விரட்டுங்கள். அப்புறம் சிவாஜியின் புகழைப் பாடலாம்.
பல நல்ல பதிவர்களை இந்தத் திரி இழந்து நிற்கிறது. இப்போது ராகவேந்திரன் அய்யாவும் ஒரு மட்டரகமான பதிவினால் மனம் புண்பட்டு விலகிவிட்டார். இப்படியே போனால் இங்கு இனி நிற்பது யார்.
ஆனால் இந்தத் திரியின் அத்தனை பேரையும் நான் கேட்டுக் கொள்வது
சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.
சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.
சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.
சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.
என்பதுதான்.
உங்கள் தொடர் பதிவுகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். தொடருங்கள். கோபால் அவர் பாணிக்குரிய அருமையான தொடரத் தரட்டும். ரவிகிரன் சார் வழக்கம் போல அதிரடியில் கலக்கட்டும். முரளி சார் பல புதிய பதிவுகளை அளிக்கட்டும். பழைய பதிவர்கள் அனைவரும் திருபி வரட்டும். ஆளாளாளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொள்வோம். ராகவேந்திரன் சார் வாருங்கள். இப்போதும் சொல்கிறேன். புதிய வரவான இவன் என்ன சொல்வது என்று எழுதாதீர்கள். இப்போது நமக்குத் தேவைப்படுவது ஒற்றுமை. ஒற்றுமையோடு மன வேறுபாடுகள் இல்லாமல் சிவாஜி புகழ் பாடுவோம். சிவாஜியை அவமானப்படுத்துவோர் எவராய் இருந்தாலும் ஓட ஓட விட்டுவோம்.
Last edited by pattaakkathi; 14th November 2014 at 10:20 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
14th November 2014, 01:34 PM
#2840
Senior Member
Devoted Hubber
Originally Posted by
joe
சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் .kamalஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .
i totally agree with u joe sir
Last edited by Murali Srinivas; 23rd November 2014 at 12:19 AM.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
Bookmarks