Page 340 of 400 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #3391
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3392
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #3393
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  5. #3394
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    1940களின் இறுதியில் தமிழில் பேசும்படம் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பத்தாண்டுகளுக்குள் ஒரு சாதாரண நடிகராக அறிமுகமான எம்.ஜி. ஆர் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவின் இணையற்ற நாயகர்களில் ஒருவராக உயர்ந்தது சினிமாவைத் தன் முதன்மையான கலாச்சார அடையாளமாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஆச்சரியமான நிகழ்வல்ல. அவரளவுக்கு இல்லையென்றாலும் அவரோடு ஒப்பிடத் தக்கவர்கள் என வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியாது எனச் சொல்லும் அளவுக்கு முக்கியமானவர்.
    ' மக்கள் திலகம் ' என்றோ' புரட்சி நடிகர் ' என்றோ அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும்கூடக் கேட்கக் கிடைப்பவை. அவர் தர்மத்தின் தலைவன், தமிழ்ச் சமூகத்திற்கு ஆயிரத்தில் ஒருவன், அதன் மன்னாதி மன்னன், இன்றுவரை மாறாத அடையாளம் இது. அவரது ஒரு சொல்லேகூட அதிகாரத்தின் ஆணி வேரை அசைக்கும் அசாதாரணமான சக்தி கொண்டதாக இருந்தது. தி.மு. கழகத்தால் 1967இல் காங்கிரசின் அதிகாரத்தை வீழ்த்த முடிந்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த அடையாளமும் ஒரு முக்கியமான காரணம் எனச் சொல்ல முடியும். இந்த வகையில் பார்த்தால் அவர் தாவீதுடன் ஒப்பிடத் தகுந்தவர்.
    ஆனால் தாவீதாக அல்ல அவர் தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏழைகளால் கருணையே வடிவான இயேசுவாகவே பார்க்கப்பட்டார். அவர் ஒரு கொடை வள்ளல். கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை. ஆனால் தேவையானபோது அவர் போர்க்கோலம் கொள்ளக்கூடியவர். வெறும் திரைப்படப் பிம்பமல்ல அது. அப்படியிருந்திருந்தால் அதைக்கொண்டு 1977இல் பலம் பொருந்திய திமுகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வராக நீடித்திருக்க அவரால் முடிந்திருக்காது.
    .தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
    நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
    பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
    காலத்தை வென்றவன் நீ,
    காவியமானவன் நீ,
    வேதனை தீர்ப்பவன்,
    விழிகளில் நிறைந்தவன்,
    வெற்றித் திருமகன் நீ நீ
    என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
    நடந்தால் அதிரும் ராஜநடை,
    நாற்புறம் தொடரும் உனது படை
    என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
    நன்றி : தி இந்து .

    Thanks to Sri. Chandran Veerasamy, FB.

  6. #3395
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy: FB

  7. #3396
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3397
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு கலை வேந்தர் சார்

    இன்ப அதிர்ச்சி .
    இப்போது தான் உங்கள் பதிவு பார்த்தேன்.
    வாசு மிகவும் சந்தோசம் அடைவார் .

    நடிகை திருமதி ரங்கம்மாள் தற்போதைய வடிவேல்,கஞ்சா கருப்பு,சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்த திரை படங்களில் தென் படுகிறார்.அடையாளம் காண முடிகிறது. அவர் பேட்டியை படித்தால் பழைய திரை படங்களில் நடன குழுவில் இடம் பெற்று இருப்பாரோ என்று கொள்ள வைக்கிறது. ராஜ ராஜ சோழன் நினைவில் இல்லை . மீண்டும் ஒருமுறை பார்த்தால் உறுதியாக சொல்ல முடியும் .நிச்சயம் ஒரு முறை பார்த்து விட்டு பதில் தெரிவிக்கிறேன்

    ராஜா தேசிங்கு திரை படத்தில் நீங்கள் குறிப்பிட்டு உள்ள பாடல் சுருட்டி ராகத்தில் அமைந்த பாடல். மிக அபூர்வமாக தமிழ் திரை பாடல்களில் உபயோகபடுதபட்டுள்ள ராகம் . சற்று சந்தேகத்துடன் சரச ராணி கல்யாணி பாடலை குறிப்பிட்டு எனக்கு கர்னாடக இசை ஆசான் ஒருவர் சென்னையில் வசிக்கிறார். அவரிடம் அவ்வபோது உரையாடுவேன். அவரிடம் கேட்டு உறுதியும் செய்து கொள்வேன். அவரும் இதை உறுதி செய்தார் .

    http://www.youtube.com/embed/BlXxSZaISGc?

    முழு பாடல் வரிகள் நமது நண்பர்களுக்காக


    சுக சரச ராணி கல்யாணி
    சங்கீத ஞான வாணி மதி வதனி
    சரச ராணி……….

    புனித ராஜ குல திலகா
    தவ புனித ராஜ குல திலகா
    பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
    புனித ராஜ குல திலகா………

    கனியில் மேவும் ரச இனிமைப்போலே
    இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
    கனியில் மேவும்…

    நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
    உந்தன் மகிமையால் வருவதல்லவா
    நான் எனது………….
    எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
    எனை புகழ்ந்து………
    மனம் மகிழ்ந்து கூறும் மொழி
    நிஜமாய் ராணி
    மனம்……….

    நிலை மறந்தேன் கண்ணா
    உளம் தெரிந்தேன் கண்ணே
    இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
    இணையான இருவரால் மலரும் நேசம்
    அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
    இருவரால் மலரும் நேசம்..

    சிவபெருமான் கிருபை வேண்டும் என்று பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் ஒன்று நீங்கள் கேள்வி பாட்டு இருக்கலாம் . அது இந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்

    மிக்க நன்றி .நேரம் கிடைக்கும் போது எல்லாம் நிச்சயம் மக்கள் திலகம் திரிக்கும் வருவேன் . உங்கள் பண்பான அழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் கலை வேந்தர் சார்

    நட்புடன்

    கிருஷ்ணா
    gkrishna

  9. Thanks Russellzlc thanked for this post
    Likes ainefal liked this post
  10. #3398
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post


    Courtesy: FB
    ஆஹா... என் மனம் கவர்ந்த ஹோட்டல் துசித் தானி. திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் அதை திரியில் பதிவிட்ட திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கும் நன்றி. முகப்பே இவ்வளவு அழகாக இருக்கிறதே. உள்ளுக்குள் இப்போது எப்படி இருக்குமோ தெரியவில்லை. ஆனால், நம்மூர் மாதிரியே அங்கும் முகப்பு பலகைக்கு மேல் பல்லி. அதுவும் அழகுதான்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. Likes ainefal liked this post
  12. #3399
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்களுடைய அன்பான பதிலுக்கு மிக்க நன்றி திரு.கிருஷ்ணா சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. #3400
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post


    Courtesy: FB
    "உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தில், நம் மக்கள் திலகம் அவர்கள் பாங்காங் நகரின் ஹோட்டல் " துசித் தானி " முன்பு தோன்றிய காட்சி நெஞ்சை விட்டு அகலாத காட்சி. இன்று அதே ஹோட்டல் முன்பு அவரின் தீவிர பக்தர், மக்கள் திலகம் திரியின் பங்களிப்பாளர், பதிவாளர், சகோதரர் பாக்கியசாலி திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள்.

    புகைப்படத்தை பதிவிட்டமைக்கு நன்றி திரு. சைலேஷ் அவர்களே !
    Last edited by makkal thilagam mgr; 18th November 2014 at 06:02 PM.

  14. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •