-
20th November 2014, 02:30 PM
#2941
Junior Member
Newbie Hubber
You have made nice suggestions to all to end the cold war. I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th November 2014 02:30 PM
# ADS
Circuit advertisement
-
20th November 2014, 02:32 PM
#2942
Junior Member
Newbie Hubber
You have made nice suggestions to all to end the cold war. I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.
-
20th November 2014, 07:15 PM
#2943
Junior Member
Seasoned Hubber
Thanks to Mr Neyveli Vasudevan
'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970
இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
எங்கள் ஊரான கடலூரில்தான் 'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதுதான் அந்த விசேஷம். இப்போது சொல்லுங்கள்.. இந்தப்படம் எனக்கு, ஏன் கடலூரையும், அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நெருக்கமான படம்தானே!
கடலூர் ஓல்ட் டவுன் அதாவது CUDDALORE O.T என்று குறிப்பிடுவார்கள். (கடலூர் துறைமுகம் என்றும் கூறுவார்கள்) கடல், ஆறுகள் சூழ்ந்த பகுதிகள் அதிகம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடம். மீன்பிடித் தொழிலை நம்பித்தான் இன்றளவும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. உப்பனாறு, கடிலம்,பெண்ணையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலுடன் சங்கமிக்கும் காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆற்றுப் பகுதிகளில்தான் பாதுகாப்பு ஷூட்டிங் நடைபெற்றது.
கடலூர் துறைமுக உப்பனாற்றுப் பகுதி.
'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான சீன்கள் படகில் நடப்பது போல் வருவதினால் படப்பிடிப்பு கடலூர் துறைமுகம் பகுதிகளில் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
1970-ன் ஆரம்பத்தில் ஷூட்டிங் நடந்ததாக நினைவு. என் தாயார் தினமும் ஷூட்டிங் பார்க்க என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். என் தாயார் நடிகர் திலகத்தின் தீவிர பக்தை. எனவே சந்தோஷத்திற்குக் கேட்கணுமா?...
அப்போதெல்லாம் ஷூட்டிங் பார்ப்பது என்றால் சொர்க்கத்தையே நேரில் காண்பது போல...கடல் அலைகளை விட மக்கள் தலைகள் அதிகம். அதுவும் 'நடிப்புலகச் சக்கரவர்த்தி' ஷூட்டிங் என்றால்?... சொல்லணுமா..நடிகர் திலகத்தை காணும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.
தெய்வத்தை தரிசிப்பது போல நடிகர்திலகத்தைப் பார்த்து மயங்கியது கூட்டம். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக படப்பிடிப்பில் கலந்து கொண்டது என் பிஞ்சு நெஞ்சில் ஆழமான ஆணிவேராக வேரூன்றிப் பதிந்துவிட்டது. அவர்மேல் பாசமான வெறி வர என்னுள் முதல் தளம் அமைத்துக் கொடுத்தது 'பாதுகாப்பு' பட ஷூட்டிங் தான்.
நடிகர் திலகம் படகோட்டுபவராக ( படகை விட சற்றுப் பெரிதான தோணி) நடித்ததால் பெரும்பாலும் படகுகளில் ஷூட்டிங் இருக்கும். உப்பனாற்றில்தான் நிறைய ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் சமயங்களைத் தவிர பிற சமயங்களில் கைலியையே கட்டிக் கொண்டு கொஞ்சமும் பந்தா இல்லாமல் படகில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நடிகர் திலகம். தனியாக அவருக்கென்று ஒரு படகு. ஒரு படகோட்டி...(வண்ண ஓடக்காரன் அல்ல. கார்த்திக் சாருக்கு நன்றி!)...சாதாரண ஒரு படகோட்டி. (கொடுத்து வைத்த படகோட்டி.) படகில் சரியான வசதிகள் கூடக் கிடையாது. தன்னுடைய ஷூட்டிங் நடைபெறாத சமயங்களில் நடிகர் திலகம் படகிலேயே கண்ணயர்ந்து உறங்கி ஓய்வெடுக்க, படகு ஆற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். ரசிகர்களின் அன்புத் தொல்லையை சமாளிக்க இப்படி ஒரு வழியை படகோட்டிதான் கூறினாராம். இருகரை மருகிலும் ஜனத்திரள் நடிகர் திலகத்தின் முகத்தை அருகில் பார்த்துவிடத் துடிக்கும். நடிகர் திலகமும் அவ்வப்போது படகோட்டியிடம் கரை ஓரமாக படகை ஓட்டச் சொல்லி கரை ஓரமாகவே படகில் நின்று (படகு மெதுவாக ஓடியபடியே இருக்கும்) அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கையை அன்புடன் அவருடய ஸ்டைலில் அசைத்து சைகை செய்தபடியே வலம் வருவார்.
நடிகர் திலகம் படப்பிடிப்பில் ஒட்டுவதாக வரும் CU 221 எண் தோணி.
CU 221 எண் தோணியை செலுத்துகிறார் நடிகர் திலகம்.
தோணியின் பாய்மரத்தை ஏற்றுகின்றார் நடிகர் திலகம்.(உடன் மேஜர் மற்றும் நம்பியார்)
உடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நம்பியார் அவர்கள்,மேஜர் சுந்தரராஜன் அவர்கள், இயக்குனர் பீம்சிங் அவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்கள். மேஜர் அவர்களின் கையில் எப்போதும் நீள் சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருக்கும்.
மீனவர்கள் அன்புடன் தரும் மீன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் நடிகர் திலகம். இறால் என்றால்அவருக்கு மிகவும் உயிர் என்பதால் மீனவர் தலைவர் திரு குப்புராஜ் அவர்கள் இறாலை பதமாக வறுத்து ஒரு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்துவிடுவாராம். நடிகர் திலகம் அதை ருசித்து சுவைத்து சாபிடுவாராம். (பின்னாட்களில் 'பாதுகாப்பு' எண்ண அலைகளில் மூழ்கும் போது திரு.குப்புராஜ் அவர்கள் பாதுகாப்பு பற்றிய பழைய நினைவுகள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்).
'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்ற அற்புதமான பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூண்டியாங்குப்பம் என்ற இயற்கை சூழல் நிறைந்த ஊரில் நடந்தது. ஒரு கைலி, மற்றும் ஒரு வெள்ளை பனியனுடன் நடிகர் திலகம் ஷாட்டுக்கு ரெடி. தன்னுடைய தோணியில் இருந்தவாறே அருகில் ஒரு சிறு படகில் புது திருமணத் தம்பதிகள் வரும்போது அவர்களைப் பார்த்து ஜெயலலிதாவை நினைத்து கனவு காணுவதாக சீன். அந்த புதுமணத் தம்பதிகளாக தன்னையும் ஜெயலலிதா அவர்களையும் கற்பனை செய்து அதே படகில் வருவதாக அந்தக் கனவுக் காட்சி. (அந்தக் குறிப்பிட்ட சீனைக் கூட நிழற்படமாகப் பதிவிட்டுள்ளேன்). இந்தக் காட்சியை ஆற்றின் அக்கரையில் எடுக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
புதுமணத் தம்பதிகளாக நடித்த எக்ஸ்ட்ரா நடிகர்கள்.
கனவுக் காட்சியில் நடிகர்திலகமும், ஜெயலலிதாவும்.
இக்கரையில் படகில் நடிகர் திலகமும்,ஜெயலிதாவும் ஏறி அமர படகு அக்கரைக்கு செல்ல ஆரம்பித்தது. இக்கரையில் இருந்த மக்கள் ஷூட்டிங் இங்குதான் நடக்கும் என்று மனக்கோட்டை கட்டியிருக்க, திடீரென்று படகு அக்கரை செல்ல, ஏமாற்றமடைந்த இளைஞர் பலர் (நீச்சல் தெரிந்தவர் நீச்சல் தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..) 'சொடேல் சொடேல்' என ஆற்றில் குதித்து அக்கரைக்கு நீந்த ஆரம்பிக்க ஒரே ஆனந்தக் களேபரம் தான்.
என்னுடைய தந்தை ஊர்க்காவல் படையில் இருந்ததனால் எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஊர்க்காவலர் படை யூனிபார்ம் அப்படியே போலீஸ் உடை போலவே இருக்கும் . போலீசுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களுக்கும் உண்டு. அந்த வசதியால் என் தந்தையுடன் வெகு ஈஸியாக நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகின் அருகில் சென்று நின்று கொள்ள முடிந்தது. நான் சிறுவனானதால் சடாலென எதிர்பாராத விதமாக என்னையும் நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகில் தூக்கி ஏற்றிவிட்டு, தானும் அப்படகில் ஏறிக்கொண்டார் என் தந்தை. (போலீஸ் பந்தோபஸ்து என்ற சாக்கில்.) படகில் படப்பிடிப்புக் குழுவினர் சிலரும், ஜெயலலிதா அவர்களும், சில காவல்துறையினர் மட்டும் இருக்க நடிகர் திலகத்தின் அருகில் நான். முதன் முதலாக நடிகர் திலகத்தை மிக அருகில் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் கைலியோடு படு காஷுவலாக அமர்ந்திருந்தார் நடிகர் திலகம். அவ்வளவாக அறியாத சிறு வயது எனக்கு. பின்னாளில் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறார் என்பது அறியாமல் அவரை விழுங்கி விடுவது போலப் பேந்தப் பேந்தப் பார்க்கிறேன் நான். நடிகர் திலகமும் என்னை உற்று நோக்கி ஒரு சிறு புன்னகை புரிகிறார்.(என்ன ஒரு கொடுப்பினை). என் தந்தை வாழ்நாட்களில் எனக்குச் செய்த பேருதவி இதுதான் என்று சொல்லுவேன்.( பின்னர் பல நாட்களில் வாரம் ஒருமுறை என 'அன்னை இல்லம்' சென்று அவரை தரிசித்து 'ஷொட்டும்' வாங்கியிருக்கிறேன். திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.(அவரிடம் திட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!) நினைத்தாலே கண்ணீர்ப் பிரவாகமெடுக்கிறது.
ஷூட்டிங் நடைபெற்ற பூண்டியாங்குப்பம் ஆற்றுப் பகுதி
அக்கரையில் சில காட்சிகள் எடுத்து முடிக்க அன்று மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. ஒரு மணிக்கெல்லாம் ஜெயலலிதா அவர்களின் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்தவுடன் அவர் தனியாக ஒரு படகில் இக்கரை வந்து சேர்ந்து மதியம் லஞ்ச்சுக்காக காரில் பாண்டிச்சேரி புறப்பட்டுப் போய் விட்டார். நடிகர் திலகம் நடித்த காட்சிகள் முடிந்து அவர் தனியாக ஒரு படகில் இக்கரை திரும்புகையில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. அக்கரையில் இருந்து இக்கரை வந்து சேர ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகும். காற்று அச்சமயம் பலமாக வீச, நடிகர் திலகம் வந்த சிறு படகின் பாய்மரம் கிழிந்து விட்டது. படகோட்டி சாதுரியமாக படகை ஓட்டி வந்தார். கிழிந்து போன அந்த பாய்மரம் செப்பனிட தேவையான செலவுக்கான தொகையை நடிகர் திலகமே படகோட்டியிடம் கொடுத்து உதவியது பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.
படகில் நின்று ஷூட்டிங் பார்க்க வந்த மக்களைப் பார்த்தவாறே நடிகர் திலகம் தன் வயிற்றைத் தடவி 'பசி' என்று சைகையால் அப்பாவித்தனமாகக் காண்பிக்க ,ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த கலர் சோடாவுடன் ஆற்றுக்குள் குதித்து நீந்திச் சென்று நடிகர் திலகத்திடம் கொடுக்க அவரும் அதை தேவாமிர்தம் போல வாங்கிக் குடிக்க, அந்த ரசிகரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைக் காண வேண்டுமே! ..... செம ஜாலியாய் இருந்தது.
நடிகர் திலகம் தனது ஆத்ம நண்பரான காங்கிரஸ் முன்னாள் கடலூர் எம்.பி. திரு.முத்துக் குமரன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஷூட்டிங் நடந்த பூண்டியாங்குப்பம் என்ற கிராமம் சற்றேறக்குறைய கடலூரிலிருந்து இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். ஷூட்டிங் முடித்து மாலையில் திரும்பும் போது ரோடின் ஓரத்தில் ஒரு ஆயா மசால் வடை சுட்டுக் கொண்டு வியாபாரம் செய்தார்களாம். காரில் வரும்போது அந்த மசால் வடை வாசத்தில் மயங்கி காரை நிறுத்தச் சொல்லி காரில் அமர்ந்தபடியே மசால் வடையை வாங்கி வரச் சொல்லுவாராம் நடிகர் திலகம். வங்கியில் பணி புரிந்து ஒய்வு பெற்ற நடிகர் திலகத்தின் அன்புக்குப் பாத்திரமான கடலூர் 'பேங்க் மோகன்' என்ற இனிய நண்பர்தான் வடையை வாங்கி வந்து கொடுப்பாராம். நடிகர் திலகமும் காரிலேயே தினமும் வடையை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே வருவாராம். ('பேங்க்' மோகன் அடிக்கடி இன்று பார்த்தாலும் கூட "நான் நடிகர் திலகத்திற்கு மசால் வடை வாங்கிக் கொடுத்தவனாக்கும்"...என்று பெருமையுடன் ஜம்பம் அடித்துக் கொண்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்).
ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர்திலகமே காரை விட்டு இறங்கி நேராகவே அந்த ஆயாவிடம் சென்று மசால் வடை கட்டி கொடுக்கச் சொன்னாராம். அந்த ஆயாவும் சரியாகக் கண் தெரியாததால் தன்னிடம் வடை வாங்குவது உலகப் புகழ் பெற்ற நடிகர் என்று தெரியாமல் வடையைக் கட்டிக் கொடுத்தார்களாம். பின் நடிகர் திலகம் அந்தப் பாட்டியிடம் "பாட்டி! என்ன யாருன்னு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க, பாட்டி "சரியாகத் தெரியலயேயப்பா" என்று கூற, அதற்கு நம் நடிகர் திலகம் நம் கார்த்திக் அவர்கள் கூறுவது போல குறும்பாக,"பாட்டி என்ன நல்லாப் பாரு! என்ன நல்லாப் பாரு!" என்று திருவிளையாடல் பாணியிலேயே சொல்ல பாட்டி சற்று யோசித்துவிட்டு உடனே புரிந்து கொண்டு, "தம்பி! நீ சிவாசிகணேசன் தானே! என்று கூறி நடிகர் திலகத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களாம். பின் மசால் வடைருசியைப் பற்றி அந்தப் பாட்டியிடம் பாராட்டிவிட்டு மீதம் இருந்த அத்தனை மசால்வடைகளையும் பார்சல் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பாட்டிக்கு ஒரு கணிசமான தொகையைத் தந்து மனமகிழ்ந்தாராம் நடிகர் திலகம்.
அதனால் தான் 'பாதுகாப்பு' படம் எங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாயிற்று. இன்னும் சொல்லப் போனால் கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும் அப்படத்தின் ஷூட்டிங்கால் தலைவரின் கோட்டையாயின என்று கூடச் சொல்லலாம். குறிப்பாக ஷூட்டிங் பார்க்க வந்த கிராமங்களின் மக்கள் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசி மகிழ்ந்தனர்.
குறிப்பாக ராமாபுரம் என்ற ஒரு கிராமமே தலைவர் புகழ் பாடும் கிராமமாயிற்று. அந்த கிராமத்தில் தான் என் தந்தையார் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தார்). ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடிகர் திலகம் தான் வேட்டை ஆடி பாடம் செய்த புலியுடன் நின்று ஸ்லிம்மாக காட்சி தரும் அந்த அற்புத புகைப்படம் கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும் இன்றளவிலும் கூட.
இன்று 'பாதுகாப்பு' வெளியாகி 41 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இப்போதுதான் அப்படத்தின் ஷூட்டிங் பார்த்தது போல அவ்வளவு பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நடிகர் திலகத்தின் தீவிர பக்தனாக என்னைப் பெருமையுடன் உலா வர வைத்த பாதுகாப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. 'பாதுகாப்பு' என்னைப் பொறுத்தவரயில் மிகச் சிறந்தபடம் என்றுதான் கூறுவேன். மிகவும் வித்தியாசமான முறையில் சிறந்த கதைக் கருவோடு எடுக்கப் பட்ட அற்புதமான இந்தப் படம் வழக்கம் போல வெகுஜன ரசனைக் குறைவால் சராசரிக்கும் கீழே தள்ளப் பட்டது வேதனைக்குரியது. மேலும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெறாமல் போனாலும், ஒரு சராசரி அளவிற்குக் கூட வெற்றி அடையவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும் எப்போதும் எங்கள் ஊர் மக்களின் அடிமனதில் இருந்து வலித்துக் கொண்டே தான் இருக்கும்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th November 2014, 09:53 PM
#2944
Junior Member
Veteran Hubber
Originally Posted by
Irene Hastings
Dear All
I feel bad in a way that may be my comments on the NPVU song might have created an unpleasantness here. I wish to offer my apologies to all if it had hurt Mr.Raghavendar . However, a true fan ( who should be bold enough to criticise the negative side of his idol ) will not wish to see such scenes . It might have looked great if our idol had done such in the 60s but not during end 70s when its very apparent.
The movie might have become a major hit . Still it doesnt absolve our idol . Wish to sign off saying that our hero could have been choosy in picking characters . I agree which he tried to do in the later years. Movies, like Thunai, MM, Devar Magan etc. I immensely liked his character in Jalli kattu, Lakshmi vandhachu etc.
I have more to write . Will do it.
Dear Irene,
Don't think you are playing a wise game by offering your apology. Your apology is all Fake which proves in the second and third sentence.
Our idol ?????? who is your idol ??? NT ?????
We do not need your confession on agreement !
Regretful Regards for you,
RKS
__________________________________________________ __________________________________________________ __________________
RKS,
Please refrain from using certain level of language that cannot be accepted in a Forum like this.
If you are disagreeing on something with others then there are better ways of doing it instead of writing un-parliamentary usages that are not acceptable.
Hope you will be more careful in future.
Regards
Murali
Last edited by Murali Srinivas; 21st November 2014 at 12:48 AM.
-
20th November 2014, 09:56 PM
#2945
Junior Member
Veteran Hubber
Dear Gopal Sir,
Regards
RKS
Last edited by Murali Srinivas; 21st November 2014 at 12:50 AM.
-
20th November 2014, 09:58 PM
#2946
Junior Member
Veteran Hubber
Originally Posted by
agra2014
You have made nice suggestions to all to end the cold war. I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.
Dear Sir,
Regards
RKS
__________________________________________________ __________________________________________________ __________________
RKS,
Mr.Raghupathy had written this with regard to Senthil's post where he had talked about NT movies and efforts to stand united. But you have not noticed that and again used words which should have been avoided.
Regards
Murali
Last edited by Murali Srinivas; 21st November 2014 at 12:53 AM.
-
20th November 2014, 10:22 PM
#2947
Junior Member
Veteran Hubber
சந்திப்பு, மோகனபுன்னகை ஆகிய படங்களை பார்பவர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் உள்ள தவறுக்கு, அந்த தவறின் மூலம் தவறான புரிதலுக்கு ஆளாகும் நிலையில் அதற்க்கு யாரும் பொறுப்பல்ல.
வீட்டில் இருப்பவர்கள் "சந்திப்பு" திரைப்படத்தில் அது வெளிவந்த காலகட்டத்திலோ அதற்க்கு பிறகோ "பீம்சிங் படத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தால் அப்படி தான் இருக்கும்.
அல்லது மோகனபுன்னகையில் ஒரு வசந்தமாளிகை பார்க்க நினைத்தால் எந்த நினைவுடன் பார்ப்பது என்று கூட பார்க்க தெரியாமல் படம் பார்த்தது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்த இடத்தில் நானாக இருந்தால் " நடிகர் திலகத்தின் இந்த படங்கள் மற்றவர்களின் அல்லது இக்கால நாயகர்களின் படங்களை விட 200 சதவிகிதம் மேல் என்று கர்வத்துடன் கூறியிருப்பேன்
இப்படி தங்கள் பார்வை கோளாறு காரணம் தவறு இழைத்துவிட்டு, நடிகர் திலகம் அவர்களின் தரத்தை விவாதிக்கும் அளவிற்கு அவரை இஷடப்படி விமர்சிக்கும் எவருக்கும் தரம் பற்றி பேசும் தகுதி கிடையாது !
Last edited by Murali Srinivas; 21st November 2014 at 12:57 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th November 2014, 10:42 PM
#2948
Junior Member
Veteran Hubber
Theme : நடிகர்திலகத்தின் நடிப்பியல் பேராண்மை
Concept : (Cell Division and Multiplicity) : ஒரே படத்தில் மாறுபட்ட பலவேட சித்தரிப்பு வன்மை !
PART 1 : Uththamapuththiran (1958) உத்தமபுத்திரன்
உத்தமபுத்திரன் பார்த்திபன் / உன்மத்த வில்லன் விக்கிரமன்!
நடிகர்திலகம் தனது close-up shots மற்றும் பாடல் காட்சிகளில் 100 சதவீதம் பொருந்திய உதட்டசைவுகளுட ன் கூடிய அற்புதமான முக பாவங்கள் மற்றும் பின்னணி இசைக்கேற்ப லயத்துடன் கூடிய நளினமான நடன அசைவுகள், நடையுடை பாவனைகள் என்று ரசிகர்களைக் கட்டிப்போட்ட காந்தப்புயல். ஒரேபடத்தில் நுணுக்கமான வித்தியாசம் காட்டி சிவாஜி என்பவர் ஒரே மனிதரல்ல.....உத்தமபுத்திரன்/ ரெண்டு சிவாஜி, தெய்வமகன்/ மூணு சிவாஜி...நவராத்திரி/ஒம்பது சிவாஜி....என்று நம் கண்ணை நாமே நம்ப இயலாமல் கண்கட்டு வித்தையாக பாத்திரங்களின் மாறுபட்ட குணாதிசயங்களை மனதில் ஆணி அடித்தது போல் நடிப்புப்பதிவு செய்வதில் தன்னை விஞ்சிய நடிகமேதை எவருமில்லை இவ்வுலகில் எங்குமில்லை இதுவரை இல்லை இனிமேலும் இல்லை என்பதை நிரூபித்தவர் !
உத்தமபுத்திரன் . புதியபறவை போலவே நடிகர் திலகத்தின் signature movie. இரட்டை வேட நடிப்பில் நடிகர்திலகம் முப்பரிமாணத்தையும் வெளிக்கொணர்ந்த evergreen and immortal movie. ஒரே உருவ அமைப்பில் உடல்மொழி வாயிலாகவே வேறு எந்த ஒரு உலக நடிகனும் கற்பனை கூட செய்ய முடியாத அளவு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்துவதில் ரசிகர்களை மெய்மறந்து பிரமிப்பில் ஆழ்த்திய திரைப்பெட்டகம். கதாநாயகன் பார்த்திபனை நேசிக்க வைப்பதிலும் வில்லன் விக்ரமனை வெறுக்க வைப்பதிலும் நடிகர்திலகம் வெளிப்படுத்திய வாழ்ந்துகாட்டிய ஆற்றல் மிக்க நடிப்பினை இவ்வையகம் உள்ளவரை மறக்க இயலுமா?
இப்போது என்னால் இப்படி நடிக்க முடியுமா என்று நடிகர்திலகமே தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்ட மகோன்னதமான திரைக்காவியம்
பார்த்திபன்விக்ரமனாகநடிக்க வேண்டியதையும் விக்ரமன் பார்த்திபனாக கூடுமாறுவதையும் துல்லியமாக வேறுபடுத்தி நடிக்கும் காட்சி அமைப்புகள் NT இப்புவி சுழலும்வரை நடிப்புக்கடவுள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறுதி செய்கின்றன. ஒரு தன்னிலை உணராத குடிகார மன்னனின் முகச்சோர்வு மற்றும் நடைத்தள்ளாட்டங்களை இவ்வளவு துல்லியமாக எந்தவொரு நடிகனாலும் வெளிப்படுத்தவே இயலாது! யாரடி நீ மோகினி மற்றும் உன் அழகை கன்னியர்கள் சொன்னதினாலே பாடல் காட்சிகளை பார்க்கும் போது இதை நம்மால் ரசித்து மகிழ முடிகிறது. சாகாவரம் பெற்ற நடிப்புக்கடவுளின் ஒப்புவமையோ ஈடு இணையோ இல்லாத காவியம்.
(This part of write-up focuses only on the acting prowess of NT in such movies with particular reference to his inimitable skills of portraying multiple roles at ease with the finest differences in characterizations. The relative contributions of other supporting artistes, behind the screen heroes like the musician, camera man, director,..movie run...heroines...etc will be analysed separately under the title நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் ! later so that NT's acting skills will be the front line interface to such details.)
Nadigar Thilagam will be back in "Bale Paandiyaa"
Last edited by sivajisenthil; 21st November 2014 at 11:05 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
20th November 2014, 10:55 PM
#2949
Junior Member
Veteran Hubber
விரைவில் !!!!
மையத்தில் இன்று வரை வந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வரிசை மற்றும் ஆவணங்கள் தொகுத்து சுமார் 260உக்கும் மேற்பட்ட திரைப்பட ரிலீஸ், 50, நூறு, வெள்ளிவிழா விளம்பரங்கள் மற்றும் நடிகர் திலகத்தை பற்றிய தகவல்கள், பத்திரிகையில் வந்த பேட்டிகள் இன்னும் பல விஷயங்கள் ஒரு cd அல்லது dvd வடிவில் நம்முடைய ரசிகர்களுக்கு, இந்த அறிய ஆவணங்களை பத்திரபடுத்தி வைக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மையம் திரியில் நடிகர் திலகம் அவர்கள் திரியில் பதிவுகளை படிக்க வரும் அனைவருக்கும் புத்தாண்டில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் ஒரு அரிய செயலாக "இலவசமாக" கொடுக்க நான் தீர்மானம் செய்துள்ளேன்.
இது தவிர என்னிடம் உள்ள நான் தனிப்பட்ட முறையில் சேகரித்துள்ள சுமார் 1000 துக்கும் அதிகமான அரிய புகைப்படங்கள் நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட காட்சிகள், personal போட்டோ ஆகியவையும் cd மற்றும் dvd வடிவில் நமது ரசிகர் மற்றும் அதனை பொக்கிஷமாக வைத்துகொள்ள விரும்புவோர் இளைய ரசிகர்கள் இவர்களுக்காக வழங்கவுள்ளேன்.
கூடிய விரைவில் அதற்க்கான மின் அஞ்சல் இதே மையம் திரியில் பதிவிடுகிறேன். அந்த மின் அஞ்சல் முகவரிக்கு, உங்களுடைய பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவை எழுதி அனுப்பினால். Courier இல் அந்த cd அல்லது dvd அனுப்பிவைக்கப்படும்.
இந்த ஆவணங்கள் பெரும்பான்மையானவை திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாகை , கோவை மாவட்ட நடிகர் திலகம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நண்பர்கள் முக்கால்வாசி பேர் நடிகர் திலகம் புகழ் பரப்பவேண்டும், இக்கால இளைஞர்கள் இளைய தலைமுறையினர் நடிகர் திலகம் சாதனைகள் பற்றி அறியவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக கொடுத்து உதவி, அது நமது மையம் திரியில் பதிவேற்றப்பட்டவையாகும் !
ஆகையால் இதற்க்கு கட்டணம் எதுவும் கிடையாது...!
rks
Last edited by RavikiranSurya; 20th November 2014 at 10:58 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
20th November 2014, 10:56 PM
#2950
Junior Member
Veteran Hubber
திரை உலகின் சிரஞ்சீவி !
நாளை முதல் நடிகர் திலகத்தின் 225வது படம் முதல் 305 வரை ஒரு அலசல். தீர்ப்பு 82 !
நடிகர் திலகத்தின் மகத்துவம் தெரியாதவர்களுக்கு, பகுத்தறிவு தெரியாத அனால் தெரிந்ததுபோல வியாக்யானம் விளம்புபவர்களுக்கு பகுத்து அறிவு புகட்ட நடிகர் திலகம் என்ற திலகத்தின் ஒரு துளியின் ஒரு துளியாக 82 பாகங்கள் அவருடைய நடிப்பாற்றலை, வெளிக்கொண்டுவரும், புதிய அத்தியாயம். ! தீர்ப்பு 82 !
இதில் இடம்பெறும் முதல் திரைப்படம் நடிக பேரரசின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த முழுக்க முழுக்க கப்பலில் எடுக்கப்பட்ட திரைப்படம் சிரஞ்சீவி !!!
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks