-
20th November 2014, 06:25 PM
#11
Junior Member
Devoted Hubber
கமலஹாசனின் சினிமா வாழ்க்கை புத்தகமாகிறது. பிரசாத் பிலிம் அகாடமி முதல்வர் ஹரிகரன் இந்த புத்தகத்தை எழுதுகிறார்.
கமல் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை நடித்த படங்கள் பற்றிய விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது.
அவ்வைசண்முகி, அபூர்வ சகோதரர்கள், ஆளவந்தான், தேவர் மகன், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு வேடங்கள் ஏற்று நடித்தது. சினிமாவில் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள், வெற்றிகரமாக ஓடிய படங்கள் பற்றிய விவரங்கள். கேரக்டர்களில் நடிப்பதற்காக மேற்கொண்ட மெனக்கெடல்கள் போன்ற அனைத்து விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. விரைவில் இது ரிலீசாக உள்ளது.
இந்த புத்தகம் குறித்து கமலஹாசன் கூறும்போது, ஹரிகரன் சினிமா சம்பந்தமான என் தொழிலை நெருக்கமாக இருந்து பார்த்துள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் முழுக்க என் சினிமா வாழ்க்கை சம்பந்தமானதாக இருக்கும். தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இதில் இடம் பெறாது. சொந்த வாழ்க்கை பற்றி எழுதினால் சிலர் மனதை புன்படுத்த வேண்டி இருக்கும்.
அதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த புத்தகம் என் சினிமா வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றார்.
-
20th November 2014 06:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks